http://oi64.tinypic.com/30a6t15.jpg
நன்றி H O S
Printable View
http://oi64.tinypic.com/30a6t15.jpg
நன்றி H O S
நடிகர்திலகத்தின் பெயரால் சமூகப்பணி ஆற்றிவரும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன், தொடர் அன்னதான நிகழ்ச்சியை ஞாயிறுதோறும் நடத்தி வருகிறது. அதைத்தொடர்ந்து, கோடை வெயிலில் மக்களின் தாகந்தணிக்கும் பொருட்டு இன்றுமுதல் ( ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 108 தினங்களுக்கு, தோராயமாக ஆகஸ்ட் 15, 2019 வரை மதியம் 12 மணியளவில், நீர்மோர், பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கிட முடிவு செய்து " சிவாஜி திருநாவுக்கரசர் நீர்மோர்ப் பந்தலைத் " திறந்துவைத்தனர்.
இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் முதல் உபயதார...ராக இருந்து நீர்மோர் வழங்கியோர் சென்னை #இதயவேந்தன்சிவாஜிமன்றத்தினராவர். இன்று இதயவேந்தன் சிவாஜி மன்றம் துவங்கி 35 வது ஆண்டு துவக்கநாள் என்பது கூடுதல் செய்தி.
இவர்களுடன் மற்றுமொரு உபயதாரராக இன்றைய நீர்மோர் வழங்குதலுக்கு உபயக்கரம் நீட்டியவர் #திருமதிரேவதிசண்முகம் அவர்கள். இவர், அமரர் #கவியரசர்கண்ணதாசன் அவர்களின் புதல்வியாவார். இவர், நீர்மோருடன் பானகமும் வழங்கியிருந்தார்.
இரு உபயதாரர்களுக்கும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் குழுவின் சார்பாக நன்றி.
இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பொது மக்களுடன், சென்னை வாழ் 'சிகர' மன்றத்தின் இதயங்களான திரு. RS. சிவா, திரு.ஏழுமலை, திரு. தணிகாசலம் மற்றும் அவர் துணைவியார், திரு. குமார், திரு. பாண்டியன், திரு.OS. லிங்கம், திரு.பாலாஜி, திரு. நந்தகுமார், திரு. கோவாராஜேந்திரன் , சதீஷ் நாராயணன் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு, நாளை அன்னதானத்துடன் மோர் வழங்கலும் நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைய தினம் நீர்மோர் வழங்கிய நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக...
அன்புடன்... வான்நிலா விஜயகுமாரன்.
http://oi63.tinypic.com/4hwkmc.jpghttp://oi68.tinypic.com/wko9av.jpghttp://oi63.tinypic.com/1zznaqs.jpghttp://oi65.tinypic.com/a0dleg.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.