-
"#எம்ஜிஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”
''நான் பிறந்தது ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில்தான்.
ஆனால், வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்த ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என் வாழ்க்கையின் அழகான நாட்கள்.
சலவைத் தொழிலாளர்கள் அதிகம் வசிச்சதாலும், சலவைத் துறை இருந்ததாலும் இது வண்ணாரப்பேட்டை ஆச்சுங்கற கதை ஊருக்கேத் தெரியும். இன்னைக்கு இது கட்பீஸ் ஜங்ஷனா மாறிடுச்சு!.
வண்ணாரப்பேட்டையின் புழுதி பறக்கும் தெருக்களுக்கும் எனக்கும் அப்படி ஓர் அந்நியோன்யம் உண்டு.
ஆதம் சாகிப் தெருவுல ஆரம்பிச்சு ராமநாயக்கர் தெரு, ஆண்டியப்ப முதலித் தெரு, பேரம்பாலு செட்டித் தெரு, நாராயண நாயக்கர் தெரு, ராமானுஜர்கூடம் தெரு, சண்முகராயன் தெரு, கைலாயச்செட்டித் தெரு, பசவையர் தெருன்னு என் கால்படாத தெருக்கள் இங்கே இல்லை.
சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இருக்கிற கார்ப்பரேஷன் நடுநிலைப் பள்ளியில் படிச்சேன்.
படிப்பு, பாட்டு, பேச்சு எல்லாத்துலயும் முதல் இடம் எனக்குத்தான். பின்னாடி கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியிலும் சர் பி.டி.தியாகராயர் கல்லூரியிலும் படிச்சேன்.
அந்த காலேஜுக்கு டிரஸ்டியா இருந்த எம்.ஜி.ஆர்., பிரின்சி பாலுடன் மீட்டிங்குக்கு வருவார்.
அங்க இருந்த அரங்கத்துல 'இன்பக் கனவு’ நாடகம் நடக்கும். அப்போ ஸ்டேஜுக்குப் பின்னாடி இருந்து வந்து எம்.ஜி.ஆரைத் தொட்டுப் பார்த்திருக்கேன்.
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ராயபுரம் பிரைட்டன் தியேட்டர்ல 'மலைக் கள்ளன்’,
பாரத் தியேட்டர்ல 'தாய்ச்சொல்லைத் தட்டாதே’, 'குடும்பத் தலைவன்’, 'தாய்க்குப் பின் தாரம்’,
கிருஷ்ணா தியேட்டர்ல 'நாடோடி மன்னன்’,
கிரவுன் தியேட்டர்ல 'பணம் படைத்தவன்’னு ஓடி ஓடி எம்.ஜி.ஆர். படங்களைப்பார்த்து வளர்ந்தேன்.
அதே மாதிரி பிரபாத்தியேட்டர்ல பார்த்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’,
மகாராணி தியேட்டர்ல பார்த்த 'காட்டு ரோஜா’வும் மறக்க முடியாது. 'காட்டு ரோஜா’ படம் பார்க்க 35 பைசா டிக்கெட்டு எடுக்க எகிறிக் குதிச்சு, பல்லு ஒடைஞ்சு ரத்தம் வழியுது. ஆனாலும் படம் பார்த்துட்டுதான் திரும்பினேன்.
இன்னைக்கு கிருஷ்ணா, கிரவுன், பிரபாத் தியேட்டர்கள் இல்லை. பாரத், மகாராணி எல்லாம் இருக்கு. பிரைட்டன் தியேட்டர் ஹை-ட்ரீம்ஸா மாறிடுச்சு."
- கலைபுலி எஸ்.தாணு.........
-
நான் ஒரு துணை நடிகன்....என்னை போன்றவர்களுக்கு பட வாய்ப்புக்கள் வரும் வராமலும் இருக்கும்.
மக்கள் திலகத்துடன் நான் நவரத்தினம் போன்ற படங்களில் நடித்து உள்ளேன்...ஒரு முறை அவர் முதல்வர் ஆக இருந்த நேரம் எனக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் எனது குழந்தைகளுக்கு கல்வி செலவுகளுக்கு பணம் தேவை பட...
யாரிடம் போய் கேட்க என்று ஒரே குழப்பம்....
ஏன் எம்ஜிஆர் அண்ணன் இடம் கேட்க கூடாது...மற்றவர்கள் உதவினால் அது கடன். அவர் கொடுத்தால் அது கொடை என்று தொலைபேசியை எடுத்து தொடர்பு கொள்ள....
என் நல்ல நேரம் அவரே அதை எடுத்து பேச நான் விவரம் சொல்ல மறுநாள் காலை அவர் வீட்டுக்கு வர சொன்னார்......
எனது அன்றைய தேவை 250 ரூபாய்கள் மட்டுமே....நான் மறுநாள் போய் வீட்டில் காத்து இருக்க...அரசு அதிகாரிகள்...அமைச்சர்கள்....கட்சிக்காரர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.....
அனைவரும் அவரை பார்த்து பார்த்து சென்று கொண்டு இருக்க எனக்கு இன்று என்னை எங்கே அவர் பார்க்க இனி யாரிடம் போய் உதவி கேட்க என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.
அன்று தான் பள்ளியில் பரீட்சை பணம் செலுத்த கடைசி நாள்.
அப்போது நானே எதிர் பார்க்காமல் என்னை நோக்கி வந்த தலைவர் சார்ந்த மாணிக்கம் அண்ணன் என்னை தனியாக அழைத்து இந்த கவரை உங்களிடம் முதல்வர் கொடுக்க சொன்னார் என்று சொல்ல..
நான் நடப்பது நிஜமா அல்லது கனவா என்று நம்பாமல் வாங்கி கொண்டு ஒரு ஓரம் ஆக போய் அந்த கவரில் நான் கேட்ட தொகை இருக்குமா என்று பார்த்தேன்.
ஆமாம் இருந்தது பத்து மடங்கு அதிகம் ஆக..
என்னால் என்னையே நம்ப முடியவில்லை.
ஆன நேரம் ஆகட்டும் அதான் பணம் இருக்கே என்று நான் அவரை பார்க்க காத்து இருக்க.
கோட்டைக்கு கிளம்பி வந்த அவரை பார்த்த உடன் என் கண்கள் குளம் ஆக நான் இருகரம் கூப்பி வணங்க.....என்னை அருகில் அழைத்து நமக்கு துன்பங்கள் வரும் போகும் அதை பற்றி கவலை கொள்ளாமல் நாம் உழைத்து கொண்டே இருக்கும் எண்ணத்தில் நிலைத்து நிற்க வேண்டும்..... என்று என் காதில் மட்டும் சொல்லி சிரித்தார்....
எனக்கு அவர் அன்று செய்த உதவி அடுத்த சில மாதங்களுக்கு போதும் ஆனதாக இருக்க ....அந்த மாதம் முதல் அடுத்து அடுத்து பட வாய்ப்புகள் எனக்கு குவிந்தன.....
அடுத்த சில மாதங்களில் நலிந்த நடிகர் நடிகை திரைப்பட துறை சார்ந்த அனைவருக்கும் நடந்த ஒரு விழாவில் அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஆளுக்கு ஒரு தங்க மோதிரம் அரசு முத்திரை உடன் கொடுக்க பட்டு உடன் நிதியும் தனியாக வழங்க பட்டது...
உலகில் ஆயிரம் உதவி செய்பவர்கள் வரலாம் போகலாம் ஆனால் இனி ஒருவர் புரட்சிதலைவர் போல எண்ணம் அறிந்து உதவி செய்பவர் இனி பிறப்பது கடினம் என்கிறார் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன்............
-
#பிறந்துகொண்டிருக்கும் #எம்ஜிஆர் #பக்தர்கள்
MY LAST YEAR FB MEMORY
Ram Manohar Bokkisa Digital Analytics, Movie Buff, Aspiring Entrepreneur ANDHRA PRADESH
#மேற்கண்ட #ஆந்திரஇளைஞரின் #எம்ஜிஆர் & #என்டிஆர் குறித்த கருத்துக்களின் தமிழாக்கத்தைப் பதிவு செய்துள்ளேன்.......
வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் மனதில் எந்த அளவு எம்ஜிஆர் ஆக்ரமித்துள்ளார் என்பதற்கு இது பெரும் சான்று. இத்தனைக்கும் அந்த இளைஞன் எம்ஜிஆரைப் பார்த்திருக்கக்கூட மாட்டார். இது என்டிஆர் அவர்களைக் குறைகூறும் பதிவல்ல. எம்ஜிஆர் எந்தளவு மக்களின் மனதில் இன்றளவும் தன்னிகரற்று விளங்குகிறார் என்பதற்கான மீச்சிறு உதாரணமே...
இதைப் பதிவு செய்யும் போது எனக்கு ஏற்பட்ட பரவசநிலையை வெறும் வார்த்தைகளினால் கூற இயலாது...
எம்ஜிஆர் பக்தனாக இருக்க நாம் எத்தனை ஆண்டுகாலம் தவம் செய்தோமோ? எம்ஜிஆர் பக்தி நமது அடுத்த பிறவியிலும் தொடரவேண்டும் என்பதே நான் இறைவனிடம் கேட்கும் வரம்...
இதோ அந்த சிறப்புமிக்க பதிவு
--------------------------------------------------------------------
என் தாய் மொழி தெலுங்கு. நான் ஆந்திராவில் இருந்து வருகிறேன்.
எம்ஜிஆர் மற்றும் என்டிஆர், இருவரும் நடிப்பு மற்றும் பிற அம்சங்களில் தங்கள் சொந்த முயற்சியில் உயர்ந்தவர்கள். ஆனால், எம்ஜிஆரைப் பொறுத்தவரை, தனது சொந்த கட்சியை துவக்கி தைரியமாக கோலோச்சியவர். முதன்முதலில் இந்தியாவில் ஒரு நட்சத்திர நடிகர், முதல்வரான பெருமையைப் பெற்றவர். என்.டி.ஆரும் முதல்வரானார். ஆனால் அவர் முதலாமிடம் இல்லை. எம்ஜிஆர் தான் முதல்வராக வேண்டுமென்று மக்கள் நியமித்தனர். ஆனால் என்.டி.ஆர் அப்படி அல்ல.
எம்ஜிஆர் பல பிரபலமான சமூகநலத் திட்டங்களைத் தொடங்கினார், இது இந்தியா முழுவதும் பல அரசியல்வாதிகளாலும், என்.டி.ஆராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்பட்டது.
என் வாழ்நாளில் எந்த வீட்டிலும் என்டிஆரின் ஒரு புகைப்படத்தையும் நான் பார்த்ததில்லை...
ஆனால் எம்ஜிஆரின் புகைப்படங்கள், வீடுகள், கடைகள் மற்றும் பிற இடங்களில் நான் நிறையப் பார்த்து மெய்சிலிர்த்துள்ளேன். இன்றும் அவரது பிறப்பு அல்லது இறப்பு ஆண்டு விழாவில், பலர் அவரது புகைப்படங்களை தங்கள் வீடுகளுக்குள் வைத்து ஆராதிக்கின்றனர் என்பது உலகில் யாருக்குமே கிடைக்காத சிறப்பு.
என்.டி.ஆருக்காக இறக்கத் தயாராக இருக்கும் ஒரு நபரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை.
ஆனால் எம்ஜிஆருக்காக இன்றளவும் தங்களின் உயரையே கொடுக்கத்துணியும் மக்களை தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் பார்க்கிறேன்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பெரும்பாலான இடங்களில் என்.டி.ஆர் முறைகேடுகள் செய்ததாக வழக்குகள் உள்ளன. ஆனால் அத்தகைய வழக்குகள் எம்.ஜி.ஆரிடம் இல்லை.
எம்ஜிஆர் மறையும் வரை முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். ஆனால் என்டிஆர் விஷயத்தில் அப்படியில்லை.
நான் ஒரு விவாதத்தை தொடங்க விரும்பவில்லை ஆனால் எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்து தான் என்.டி.ஆ ரிடம் பிரதிபலித்தது..........BSM...
-
மக்கள் திலகம் ரசிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு அவரின் திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற தானை தலைவரின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்கள்..
எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...
உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...
1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...
நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்
எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...
திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.
108 அடி உயர கட் - அவுட்...
உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: என் அண்ணன், அரங்கு சேலம் அலங்கார்.
தலைவர் இயக்கிய திரைப்படங்கள்...
1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...
செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,
எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...
திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்
எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...
தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்
எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...
திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள்...
திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா
வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...
100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் (என் தங்கை, உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...
முதன் முதலில் தணிக்கையில் a சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
சிறந்த தமிழ் நடிகர் - ரிக்க்ஷாக்காரன்.........
-
ருசி கண்டறியாத பசி தீராத வயதில்...!
எழுத்தாளர் மாலனின் வலைப்பூவிலிருந்து....
தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.
அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.
ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.
அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனம். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.
lஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையில சோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்தது அவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%.
Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !
Ithayakkani S Vijayan...
-
1983 டிசம்பர் மாதம்.. இன்று போல் கடும் மழையால் பாதிக்கப்பட்டது தஞ்சை,
நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை காண தமிழக முதல்வர் #எம்ஜிஆர் வருகிறார்..
காட்டு மன்னார் கோவில், கோட்டைப் பட்டினம் போன்ற பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், பின் மதிய உணவுக்காக அறந்தாங்கி நெடும்சாலைத்துறை பயணியர் விடுதிக்கு வருகிறார்.
அவருடன் அன்றைய அமைச்சர்கள் திருநாவுக்கரசு, திருச்சி சௌந்திரராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வருகிறார்கள்.
முதல்வர் கூட வந்தவர்கள் சாப்பிட பின் மற்ற அரசு அதிகாரிகள், ஓட்டுனர்கள் இரண்டாம் பந்தியில் சாப்பிட உக்கார்ந்தனர்.
அப்போது திடீரென முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்து அடுத்த பகுதிகளை பார்க்க புறப்படுகிறார்.
மற்றவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அன்றைய கற்பூர சுந்தர பாண்டியன் ias அவர்கள் விவரத்தை தயங்கியபடி முதல்வரிடம் சொல்கிறார்.
வாத்தியாரும் சிரித்துக்கொண்டே தன் அறைக்கு திரும்புகிறார். சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடம் 'அவசரம் வேண்டாம் முதல்வர் தன் அறைக்கு திரும்பி விட்டார். பொறுமையாக சாப்பிட்டு வாருங்கள்' என்ற விவரம் சொல்லபட்டு அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர்.
முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்து தன் காரில் ஏறாமல் அடுத்து இருந்த ஒரு காவல்துறை அதிகாரி காரின் முன் போய் நின்று கொண்டு அந்த காரின் ஓட்டுனரை அழைத்து
'சாப்பிடீர்களா?' என்று கேட்க
அவரும் 'ஆமாம்' என்று சொல்ல
'இங்கே வாருங்கள்' என்று அவரை அழைக்கிறார்.
அவர் பதறி நம்மவர் முன் வந்து நிற்க, யாரும் எதிர்பாராவண்ணம் அவர் கையை எடுத்து தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து அவர் சாப்பிடத்தை உறுதி செய்து கொள்கிறார் ஏழைகளின் ஏந்தல், எம்ஜியார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன பின்னும் கூட அடுத்தவர் பசிக்கு முக்கியத்துவம் கொடுத்து 'நாம் தான் சாப்பிட்டு விட்டோமே எவன் எப்படி போனால் என்ன' என்று நினைக்காத அவரின் இந்த குணம்தான் இன்று வரை அவர் புகழ் நிலைத்து நிற்க காரணம் ஆகிறது.
ஒரு முதல்வர் தனக்கு கீழே உள்ளவர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்த விதம் அலாதியானது.
இன்றும் புயல் பாதித்த பகுதிகளில் பல நாட்களாக தன் குடும்பம் பிள்ளை குட்டிகள் அனைவரையும் விட்டு விட்டு அல்லும் பகலும் உழைத்து கொண்டு இருக்கும் நல்ல மனம் கொண்ட மின் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் அனைவருக்கும் #புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம்
#அம்மா அவர்களின் சார்பாக
நன்றிகள்...
நன்றி: நெல்லை மணி
படம்: 13.12.1978 அன்று சேதமடைந்த படகுகளையும் மண்டபம் பகுதியில் பார்வையிடும் முதல்வர்...மக்கள் திலகம்.........
-
"சகல கலா வல்லவர்", நமது எம்.ஜி.ஆர். !
சொல்கிறார் 1958 காலகட்டத்தில் மக்கள்திலகத்திற்கு உடையலங்காரம் செய்தவர் !!
நாடோடிமன்னன்,மர்மயோகி,தாய்க்குப்பின்தாரம்,கலை அரசி போன்ற படங்களுக்கு நமது தலைவருக்கு உடை அலங்காரம் செய்தவர் பி.சி.பிரான்சிஸ் என்பவர்.அவர் அப்போதே சொன்னாராம்,சினிமா பற்றிய அனைத்து விஷயங்களும் எம்.ஜி.ஆருக்கு தெரியும் என்பதோடலல்லாமல் ஒப்பனை,உடை போன்றவற்றிலும் ஞானம் உள்ள அவர் ஒரு சகலகலா வல்லவர் என்று.
உடைகள் பற்றிய டிசைனை அவரே பென்சிலில் போட்டுக்காட்டுவாராம்.என்ன துணி வாங்கினால் உடை சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை சொல்வாராம்.அதே போல் ஒப்பனையிலும் புதுப்புது ஆலோசனைகள் சொல்வாராம்.
அருமை பக்தர்களே,நமது தலைவர் இன்றைய சூழல் சினிமா வரை அவரே சகலகலா வல்லவர்.அவர் அரசியலில் கோலோச்சிய காலத்தில் ஒரு சொத்து கூட வாங்காத ,ஓர் ஊழல் வழக்கும் இல்லாத சகல கலா வல்லவர், வித்தகர்.........nssm
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி ..............
(19/02/21 முதல் )
----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மூலக்கடை ஐயப்பாவில்* நேற்று இன்று நாளை தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.ராமு, மின்ட்.
ஏரல்* சந்திராவில் ( நெல்லை மாவட்டம் ) நம் நாடு - தினசரி 3காட்சிகள் .
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும் #இனிய_வெள்ளிக்கிழமை_காலை #வணக்கம்...
புரட்சி தலைவர் படங்களின் வரிசையில் இன்று அவரின் நடிப்பில் வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் பற்றி காண்போம்...
ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் தயாரித்தார்
கு. சா. கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை
எம்.ஜி.ராமச்சந்திரன்
திக்குரிசி சுகுமாரன் நாயர்
பி.கே.சரஸ்வதி
எம்.எஸ். திரௌபதி
கே.சரங்கப்பணி
டி.எஸ். பாலையா
இசை g. கோவிந்தராஜுலு நாயுடு சினிமாடோகிராபி வி.கிருஷ்ணன்
எடிட்டிங் மாணிக்கம்
அந்தமான் கைதி என்பது இந்திய சுதந்திரம் மற்றும் பிரிவினையை கையாளும் கதை. இந்த கதையை டி.கே.சண்முகம் மேடையில் இருந்து தழுவி சினிமாவாக எடுத்தனர் மேலும் அந்தமான் கைதி மிகவும் வெற்றிகரமான நாடகம்.
#சகோதரியின்_வாழ்க்கையை #சொர்க்கமாக #தன்னுடைய_வாழ்க்கையை #நரகமாக்கி_கொண்ட_ஒரு
#சகோதரனின் #கதை_தான்_இந்த_அந்தமான்_கைதி..
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் தலைவர் நடராஜ்
(எம். ஜி. ராமச்சந்திரன்) மாமா பொன்னம்பலம்
(கே. பொன்னம்பலம் தனது தந்தையை எவ்வாறு கொலை செய்தார், தனது தாயின் சொத்துக்களை எவ்வாறு மோசடி செய்தார் மற்றும் அவரது சகோதரி லீலாவை (பி. கே. சரஸ்வதி) திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினார் என்று நடராஜ் கூறுகிறார். நடராஜ் வேட்டையாடி மாமாவைக் கொன்றுவிடுகிறார், இது அவரது கதையைச் சொல்ல சிறையில் இறங்குகிறது.
1947. தொலைதூர கராச்சியில் குடியேறிய தனது மைத்துனர் சிதம்பரம் பிள்ளையின் சொத்துக்கள் மற்றும் செல்வங்களுக்கு பொன்னம்பலம் பிள்ளை தன்னை உதவுகிறார். பொன்னம்பலம் அவரது கையால் ஜம்பு மற்றும் நீதிமன்ற எழுத்தர் முனியாண்டி ஆகியோரால் உதவுகிறார். சிதம்பரம் பிள்ளை வீடு திரும்பி பொன்னம்பலத்தை கேள்வி கேட்கத் தொடங்கும் போது, அவர் கொல்லப்படுகிறார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், சிதம்பரம் பிள்ளை குடும்பம் கராச்சியில் இருந்து தப்பிக்க முடிகிறது. அவரது மனைவி, மகன் நடராஜன் மற்றும் மகள் லீலா ஆகியோர் தங்கள் சொந்த ஊரை அடைகிறார்கள், சிதம்பரம் பிள்ளை இறந்து கிடப்பதைக் காண மட்டுமே. அவர்கள் இதயமற்ற பொன்னம்பலத்தால் விரட்டப்படுகிறார்கள். ஒரு நேர்மையான இளைஞர் பாலு, அவர்களின் அவலத்தால் தூண்டப்பட்டு, அவர்களுக்கு தனது வீட்டில் தங்குமிடம் அளித்து, லீலாவைக் காதலிக்கிறார். பொன்னம்பலத்தின் காமத்திற்கு பலியாகிய வள்ளிகண்ணுவிடம் பரிதாபப்பட்ட நடராஜன் விரைவில் காதலுக்கு மாறுகிறார்.
ஜம்பூ நடராஜனை மோசமான குற்றச்சாட்டில் கைது செய்து, லீலாவை பொன்னம்பலத்துடன் திருமணம் செய்து கொள்வதில் வெற்றி பெறுகிறார். லீலா ஒரு பேயால் வேட்டையாடப்படுவதாக நடித்து, கட்டாய திருமணத்தை முடிப்பதை ஒத்திவைக்கிறார். ஆனால் ஜம்பு தனது பாசாங்குகளைப் பார்த்து, அவளைத் துன்புறுத்துவதற்கு தைரியமாக இருக்கிறான். லீலாவை அவளது சோதனையிலிருந்து காப்பாற்ற பாலு விரைகிறான், ஆனால் அவன் அவள் வீட்டை அடைந்ததும் லீலா கிழிந்து காயமடைவதைக் காண்கிறான், பொன்னம்பலம் இறந்து கிடந்தான். பாலு மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறது
விறுவிறுப்பாக போகும் இந்த திரைப்படம் வெற்றி பெற்ற ஒரு அருமையான திரை காவியம் ஆகும்
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
ஒரு சமயம் 1978 ஆம் வருடம் இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் உருவான ஒரேவானம் ஒரே பூமி படப்பிடிப்பு ஜப்பான் நாட்டில் நடைபெற அங்கு ஒரு பாடல் காட்சி எடுக்கும் போது இடைவேளையில் நடிகர் ஜெய்சங்கர், மற்றும் கே.ஆர். விஜயா ஓய்வாக அமர்ந்து கொண்டு இருக்க.
பக்கத்தில் இருந்து ஒரு ஜப்பானியர் தலைமையில் ஒரு 6 பேர் கொண்ட குழுவினர் வந்து இருவருக்கும் வணக்கம் சொல்லி நீங்கள் இந்தியாவில் தமிழக நடிகர்களா என்று கேட்க.
ஜெய்சங்கர் ஆமாம் சொல்லுங்கள் என்ன விஷயம் என்று கேட்க அவர் நாங்கள் சீன ஸ்டண்ட் நடிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு...
எப்படி இருக்கிறார் உங்கள் எம்ஜிஆர் என்று கேட்க ஜெய்யும் கே.ஆர்.விஜயாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்ள.
அந்த ஜப்பானியர் அவர் உங்கள் மாகாண முதல்வர் ஆகிவிட்டாராமே... நல்ல செயல் உங்கள் மக்களுக்கு நன்றி சொல்லுங்கள் நாங்கள் சொன்னதாக என்று சொல்ல.
அதுசரி உங்களுக்கு இவை எல்லாம் எப்படி தெரியும்...அதற்கு அவர் இதே இடத்துக்கு அருகில் இருந்த எக்ஸ்போ அரங்கில் அன்று ஒரு சண்டை காட்சியில் எங்கள் குழுவினர் ஒரு ஹெலிகாப்டரில் தொங்கி கொண்டு சண்டை போடும் காட்சிகள் எடுக்க பட்டு கொண்டு இருந்த போது அதில் மேலே தொங்கி கொண்டு நடித்தவர் பேலன்ஸ் தவறி...
500 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மண்டை உடைந்து அங்கேயே துடிதுடித்து இறந்து போனார்...அங்கே முழுவதும் ஒரே கூச்சல் அலறல்....
பக்கத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்து கொண்டு இருந்த உங்கள் எம்ஜிஆர் உடனே தன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஓடி வந்து தன் மேக்கப் உடன் கீழே இறந்து கிடந்த அந்த ஸ்டண்ட் நடிகரை தூக்கி உயிர் பிழைக்க முயற்சி செய்தார்.
அந்த நடிகரின் உடல் அருகே சென்ற 7 பேரில் அவர் ஒருவர்...அவரை அறியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்ததை நாங்கள் பார்த்தோம்.
அந்த நடிகரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் வரை வந்து மலர் சூடி மரியாதை செய்தார் அவர்...எங்கள் பட நிறுவனம் கிட்டே கூட வரவில்லை..அவர்களை பொறுத்த வரை அது ஒரு விபத்து..
ஆனால் உங்கள் எம்ஜிஆர் அவர்களின் மனிதாபிமானம் எங்கள் நெஞ்சை பிழிந்தது... எங்கோ பிறந்த ஒரு பெரிய நடிகர் எங்கள் நாட்டு துணை நடிகருக்கு வருந்தியது இந்த உலகில் வேறு எங்கு நடக்கும்.
அன்று முதல் அவரை பற்றிய செய்திகளை நான் சேகரித்து வைத்து உள்ளேன்...அவரது அந்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பெரு வெற்றி பெற நாங்கள் வேண்டாத நாட்கள் இல்லை....எங்கள் குழு உங்கள் முதல்வருக்கு வாழ்த்துக்கள் சொன்னதை மறக்காமல் அவரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி கண்கள் பனிக்க விடை பெற.
உறைந்து போனார்கள்..நடிகர் ஜெய்யும் , நடிகை கே.ஆர்.விஜயாவும் மற்றும் அந்த பட குழுவினரும்..
அவர்கள் மட்டுமா எங்கு சென்றாலும் தன் தனி முத்திரை பதித்து மக்கள் நெஞ்சங்களில் குடி இருக்கும் உண்மையான உலகம் சுற்றிய வாலிபர் ரசிகர்களும் இந்த நிகழ்வை படித்து உறைந்து போவது திண்ணம்.
அந்த ஒரேவானம் ஒரே பூமி படம் 1979 இல் வெளிவந்தது....bpn