Quote:
கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. “மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும்” வசனங்கள்
பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன்
..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்கள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
செம்பன்குஞ்சு – கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா – ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி – சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.
அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)
செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..
அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்
பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்
முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்