Belated birthday wishes to "aavana thilagam" pammalar
yours friendly
sivajidhasan
Printable View
Belated birthday wishes to "aavana thilagam" pammalar
yours friendly
sivajidhasan
வரும் வியாழகிழமை அதாவது பக்ரித் தினம் முதல் 24-09-2015 கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நமது நடிகர் குல சாம்ராட் நடிகர் திலகம் இரு வேடங்களில் பட்டையை கிளப்பிய கெளரவம் திரைப்படம் திரயிடபடுகிறது.
]https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...a3&oe=5692E88B
வெகுவிரைவில் அதனை தொடர்ந்து கோவை ராயல் திரை அரங்கம் மற்றும் கோவை டிலைட் திரை அரங்கங்களில் கீழ் கண்ட திரைப்படங்கள் திரையிட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் !
http://i501.photobucket.com/albums/e...ps75856727.jpg
http://i501.photobucket.com/albums/e...pscaedd8a1.jpg
http://i501.photobucket.com/albums/e...ps21763e16.jpg
சங்கம் வளர்த்த மதுரையில் நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்ட்ரல் திரை அரங்கில் நடிகர் குல சாம்ராட்டின் உத்தமன் திரைப்படம்
http://i501.photobucket.com/albums/e...ps3kfh62yp.jpg
October 2 முதல் திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சிபொங்க தெரிவித்து கொள்கிறேன்
RELEASING WITH PRIDE by MADURAI SIVA MOVIES !
சிவாஜி ரசிகன்
http://i1065.photobucket.com/albums/...psw4mhqgqa.jpg
ஒரு நடிகனின்படம் வந்து அது சிறப்பான பேரைப் பெற்றுமேலும் சில படங்கள் வந்து அதுவும் நல்ல பெயரைப் பெற்றும் அந்த நடிகனின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு ஒருவன் அந்த நடிகனின் நடிப்புக்கு ரசிகனாகிறான்.ஒரு நடிகனுக்கு ரசிகனாக ஒருவன் ஆகும் நிலை பொதுவாக இப்படித்தான் இருக்கும்.
முதல் படத்திலேயே படம் பார்ப்பதற்கு முன் பொதுப்பார்வையாளனாக தியேட்டருக்குள் நுழைந்துபடம் முடிந்து வெளியே வரும் போது ஒரு நடிகனின் ரசிகனாய் வந்த அதிசயம் நடிகர்திலகத்திற்கு மட்டுமே இருந்திருக்கும்.பராசக்தி ரிலீஸான முதல் காட்சியிலேயே உருவான சிவாஜி ரசிகர்கள் எத்தனைபேரோ?
அன்று தொடங்கிய ரசிப்பு இன்று வரை மாறவில்லை.சொல்லப்போனால் அந்த ரசிப்பு இன்னும்பல மடங்கு அதிகரித்தே உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத நடிப்பு அவருடைய நடிப்பு.
ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு அனுபவம் அவரது படங்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கிடைக்கிறது.அது போக,20வயதில் ரசித்த நடிப்பு 30வயதில் வேறொரு கோணத்தில் வியக்க வைக்கிறது.40வயதில் அதுவே வேறொரு கோணத்தில் ரசிக்க வைக்கிறது. 50வயதில் மற்றொரு பார்வையில் ரசிப்பை மேம்படுத்துகிறது.இப்படியே இறுதிவரை யோசிக்க வைத்துக்கொண்டே வைத்திருக்கும்.
அவருடைய படங்களை 20வயதில் பார்க்கும்போது அவருடைய நடிப்பை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அந்த நடிப்பை மற்றவர்களின் ரசனையோடு நம்முடைய ரசனையையும் சேர்த்துப் பார்த்து பரவசம் அடைவோம்.அப்போது நாம் சுயமாக சம்பாதிக்க தொடங்காத காலகட்டங்கள்.அந்த வயதில்பெரும்பாலும் பிறரைச் சார்ந்தே இருப்போம்.மற்றவர்கள் சொல்லக்கேட்டும் விமர்சனங்கள் படித்தும்நம்முடைய ஈடுபாடும் சேர்ந்து அந்த நடிப்பு வியக்க வைத்திருக்கும்.
பின் 30வயது எனும் போது நாம் சம்பாதிக்க ஆரம்பித்திருப்போம்.நமக்கு என்று ஸ்டேட்டஸ் வந்து விடும்.அப்போது நமக்கு சுய சிந்தனை 20வயதை விட மேம்படிருக்கும்.அந்த காலகட்டங்களில் அவருடைய நடை உடை பாவனை களில் மனம் லயிக்கும்.நமக்குள்ளும் அவரைப் போன்றே ஆடைகள் உடுத்திக்கொள்ளவும்,அங்க அசைவுகளை வெளிப்படுத்தவும் ஆசை வரும்.அதை செய்கையிலும் எத்தனையோ ரசிகர்கள் பின்பற்றியுள்ளனர்.
40வயதில் குடும்ப உறவுகள் அதிகரித்த காலகட்டம்.மேலும் பக்குவப்பட்ட மனது.உள்ளத்து உணர்ச்சிகள்,முக பாவனைகளைஉணர நம்முடைய அனுபவங்கள்கை கொடுக்கும்.
பல படங்களில் கணவன் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவருடைய நடிப்பை பாருங்கள்.அந்த அந்நியோன்யமான நடிப்பு திருமணத்திற்கு முன்பு விடதிருமணமாகிய பின்புநாம் ரசிக்கும் ரசனையை அதிகமாக்கி விட்டிருக்கும்.நுணுக்கமான அவரின் நடிப்பு பாவனைகள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
"பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே "பாடலைஅப்போதும்,இப்போதும்
எப்படி உணர்ந்தீர்கள் நினைத்துப் பாருங்கள்
இது போன்ற விஷயங்கள் மற்ற நடிகர்களுக்கும் பொருந்தும் தானே? என்று கேள்வி எழலாம்.ஆனால் இது போன்ற நடிப்புகளை யார் செய்திருக்கின்றனர் என்று அடுத்த
கேள்வியும் வருகின்றதே.
ரசிகர்களில் கடவுள் பற்று கொண்டவர் இல்லாதவர்என்று இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும்இருக்கலாம்.கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட நாத்திகவாதிகளையே தன் கடவுள் வேட நடிப்பை ரசித்து ஏற்றுக்கொள்ளச்செய்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே உண்டு.
சிவாஜியை ஒருவர் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நிலையிலிருந்து சற்றும் இறங்கி வந்ததாக எந்த சிவாஜி ரசிகரும்
சரித்திரத்தில் இல்லை
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்,பெரும் பதவியில் இருப்பவர்கள்,மெத்தப்படித்தவர்கள்,கல்வி போதிப்பவர்கள,அரசுத்துறைகள் போன்று பல உயர்ந்த துறைகளிலும் இருப்பவர்கள்சிவாஜியின் நடிப்புக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.சிவாஜியின் படங்கள் பாச உணர்வுகளையும், பண்பாட்டையும்,தாய்நாட்டின் மீது பக்தியையும் ஊட்டுகின்றன என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் சொல்ல தயங்குவதில்லை.சிவாஜி ரசிகர்கள் என்பதிலே பெருமை கொள்கின்றனர்.
பாசமலர் படம் எத்தனை அண்ணண்களை தங்கைககளிடம் பாசத்தை அதிகரித்தது.காவல்துறையில் பணிபுரிந்த எத்தனை யோ பேருக்கு
தங்கப்பதக்கம் spசௌத்ரீ முன்னுதாரணமாக விளங்கினார்.பல பிராமண குடும்பங்கள்தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு
பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரை உதாரணம் காட்டி அறிவுரை
செய்தவைகள் ஏராளம்.இவையெல்லாம் ஒரு சிறு துளியே.
எனது நடிப்புக்கு ஒருவர் ரசிகரானால்
அவர் இறுதி வரை எனக்கு மட்டுமே ரசிகராகவே இருப்பார்-
இது நடிகர்திலகத்தின் வேதவாக்கு.
கர்ணனுக்கும்,கட்ட பொம்மனுக்கும்இன்றும்பழைய
திரைப்படங்களுக்கு வரும் கூட்டங்களே இதற்கு சாட்சி.எந்தவித பிரதிபலன்கள் இன்றியும் கட்சி, அதிகாரங்கள் எதுவுமின்றியும்சொந்தபணத்தில் செலவுகள் செய்து இன் றும் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் பெரும் ஆளுமை செய்து வருகிறார்கள்.
63 வருடங்களாக இந்த ஆளுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இனிமேலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
சிவாஜி ரசிகர்கள் எல்லா வகையிலும் சிறந்தவகையில் செயல்பட்டு வருகிறார்கள்.இப்போது வரும் இளைஞர்கள் கணிணி,இன்டர்நெட் போன்ற துறைகளில் படிக்கும்போதே
அனுபவங்கள் பெற வாய்ப்பிருக்கிறது.ஆனால் உத்தேசமாக 1970 க்கு மேல் பிறந்த ரசிகர்களுக்கு அந்த பயிற்சி எப்படி கிடைத்திருக்கும்?ஆனாலும் 60 வயதிற்கு மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள் கூடஇன்றும் இன்டர்நெட்,போட்டோ ஷாப்,போன்றவைகளில் வியக்கத்தக்க செயல்களை செய்து வருகின்றனர்.
ஒரு சிவாஜி ரசிகன் மற்ற நடிகர்களின்பத்து ரசிகர்களுக்கு சமம்.
சமுதாய பங்களிப்புகள் மட்டுமல்ல விவாதங்கள்,பட்டிமன்ற பேச்சுகள்,
மேடைப்பேச்சுகள்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றிலும்
சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டுவெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.
63வருடங்களாக எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும்,சோதனைகள் வந்தாலும்
அரசியல் கட்சிகளால் ஆதாயம் கிடைக்கா விட்டாலும்ஏறு முன்னேறு என காட்டாற்று வெள்ளமாய் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிவாஜியையும் சரி,சிவாஜி ரசிகர்களையும் சரி எத்தனையோ பேர் ஏமாற்றினாலும்,
சிவாஜியும்.,சிவாஜி ரசிகர்களும் யாரையும் ஏமாற்றியதில்லை.
சிவாஜி ரசிகன் காரணம் இன்றி எந்த நடிகரையும் அவரின் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய விரும்புவதில்லை.முதல் கல் எதிரணியிடம் இருந்து வந்தாலொழிய.உலகத்திலேயே சிறந்த நடிப்புக்கு நாம் ரசிகனாக இருக்கிறோம்,அந்த நடிப்பை உள் வாங்கவே இந்த ஜென்மம் போதாது, ,அதையே சதா சிந்திக்கும் மனம், பிறகெப்படி அடுத்தவரின் கல்லடிகளை கவனத்தில் கொள்வது என்ற சிந்தனையே காரணம்.
சிவாஜி ரசிகர்களின் சாதனைகள் பெரும்பாலும் உலகிற்கு தெரிவதில்லை.சிவாஜிக்கு செய்யும் செயல்களை அவன் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றிஆத்ம திருப்தியுடன் செய்து அவற்றிலே ஆத்மதிருப்தியும் அடைந்து விடுதலே காரணம்.அந்த நடிப்புக்கு அவன் செய்யும் மரியாதை வேறு யாரையும் பெரிதாக எண்ணவிரும்புவதில்லை.
கடவுளை வணங்கிணாலும்,சிவாஜி என்று வரும்போது கடவுளை விட சிவாஜியை வணங்கும் ரசிகர்கள் ஏராளம்.
சிவாஜிக்கு அவமரியாதை யை மற்றவர்கள் செய்யும்போது கூட தங்களின் எதிர்ப்பை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில்அறவழியில் ஊண்ணாவிரதம்.,வன்முறையில்லாத போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.அதனால்தான் சிவாஜி ரசிகர்களுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் உள்ளது.
சிவாஜி ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.எந்த ஒரு செயலானாலும் இறுதி வரை போராடும் குணம் கொண்டவர்கள்.
சிவாஜி ரசிகன் என்று கூறிக்கொள்வதில் சிவாஜி ரசிகர்கள்
பெருமை கொள்கின்றனர்.
De-Addiction சிகிச்சை தேவையில்லாத ஒரே Addiction சிவாஜி மட்டுமே...
முத்தையன் அம்மு,
நான் எந்த புகைப்படத்தை மனதில் கற்பனை பண்ணுவேனோ ,அவை நிஜமாகவே வந்து விழும்.உங்கள் கற்பனை,எடிட்டிங் நேர்த்தி,உழைப்பு அலாதி. நான் உங்கள் ரசிகன். 7000 கடந்ததற்கு என் மனபூர்வ வாழ்த்துக்கள்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கூடல்மாநகர் மதுரையில் வசூல்சக்கரவர்த்தி நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக அக்டோபர் 2 முதல் மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது. அனைவரும் வருக - மக்கள்தலைவரின் ஆசி பெறுக.
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...eb&oe=5664BE59
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
Mr Senthilvel
It is true that Sivaji Rasigan will die as Sivaji Rasigan only.
அருமை...செந்தில்வேல் சார்.
திரு.ராகவேந்திரா சார் இதே திரியில் கொஞ்ச காலத்துக்கு
முன் சொல்லியிருந்ததைப்
போலவே உங்கள் எழுத்தின்
மேன்மை கூடிக் கொண்டே
போகிறது.
காலகாலமாய் தனக்கு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிற மாபெரும்
கலைஞன் நம் நடிகர் திலகம்.
தலைவனின் புகழ் காக்கும்
பல கோடி சிவாஜி ரசிகர்களின்
இதயத்தில் இதம் சேர்க்கும்
உன்னதமான பதிவு...உங்களுடையது.
"என்னை ரசிப்பவன்,இறுதி வரை எனக்கே ரசிகனாயிருப்பான்" என்று
அய்யன் உரைத்த சொல்
எத்தனை சத்தியமானது!?
பார்த்த படத்தையே கொஞ்சகாலம் கழித்து திரும்பப்
பார்க்கையில் வேறு விதமான
பரவசங்கள் கிடைப்பது..
பழைய வயசில் நமக்கிருந்த
ரசனை, காலம் செல்லச் செல்ல
மேம்படுவது...
இவையெல்லாம் ஒவ்வொரு
சிவாஜி ரசிகனுக்கும் அன்றாடம் நிகழ்கிற அதிசயங்கள்.
சரியான வார்த்தைகள் கிடைக்காத, கிடைத்தாலும்
சொல்லத் தெரியாமல் போன
என் போன்ற கோடிக்கணக்கான
ரசிகர்களின் ஒற்றைக் குரலாய்..
நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.
"உங்கள் திரைப்படம் காண
திரையரங்கத்தினுள்
நுழைகிறவன்
மூன்று மணி நேரம் கழித்து
வெளியேறுகிறான்..
உங்கள் ரசிகனாக"
-என்று நான் கூட ஒரு கவிதை
எழுதியதுண்டு.
சிவாஜி ரசிகன் ...
நன்றி மறவாதவன்.
சிவாஜி ரசிகனைப் பெருமை செய்த சிவாஜி ரசிகனுக்கு
அவன் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறான்.
நன்றி..
செந்தில்வேல் சார்!