http://i63.tinypic.com/2vi4iec.jpg
Printable View
#புரட்சித்தலைவர் நடித்த படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு எனவென்றால்..
அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு.
அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டுதான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி #ஜெயலலிதா-வைப் பார்த்து #எம்ஜிஆர். பாடிய பாடல்.
'ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார்' என்பதை முதலில் கணித்ததும் #மக்கள்திலகம்-தான்.
ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும்.
‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வருவதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார்.
எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார்.
என்ன நடந்தது என்பதை இந்த நாடு கண்டதுதானே. அவர் ஓர் தீர்க்கதர்சி...... Thanks wa.,...............