நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் விஷயத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது சி.வி.ஆர். அவர்களே. இந்த விஷயத்தில் கோபால் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். அவரிடம் நேரிலேயே கேட்டிருக்கிறேன். தங்கள் படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் தோற்றம் வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி இளமையாகவும் தோன்றுகிறதே என்று கேட்டோம். சொல்லப் போனால் அவர் இதை ஊட்டி வரை உறவு படத்திலேயே செயல் படுத்தத் தொடங்கி விட்டதாக கூறினார். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருப்பதாக அவர் கூறினார். இதற்கென்றே அந்தக் காலத்தில் பல டிசைனர் புத்தகங்களை வாங்கிப் படித்ததாகவும் கூறினார். இதை விட பெரிய விஷயம், அனுபவம் புதுமை படத்தை நடிகர் திலகம் பார்த்து சி.வி.ஆர் அவர்களைப் பாராட்டியது தெரிந்த விஷயம். ஆனால் அவர் முதலில் பாராட்டியது அப்படத்தில் சி.வி.ஆர். பயன் படுத்திய காஸ்ட்யூம் தான். குறிப்பாக கனவில் நடந்ததோ பாடலில் முத்துராமன் அணிந்திருந்த உடைகளை நடிகர் திலகம் மிகவும் ரசித்ததாகவும் கூறியுள்ளார். அதே போல் ஊட்டி வரை உறவு படத்தில் எங்கெங்கு half sleeve எங்கெங்கு full sleeve போன்றவற்றையும் பார்த்து பார்த்து செய்ததாகவும் அதை நடிகர் திலகம் மிகவும் பாராட்டியதாகவும் கூறினார். இதனுடைய உச்சம் தான் சுமதி என் சுந்தரி. இப்படம் ஓடியதில் பெரும் பங்கு நாயக நாயகியரின் உடையலங்காரம். அதிலும் ஒரு காட்சியில் நான் ஒரு சந்தேகம் கேட்டேன். ஆலயமாகும் பாடல் இரண்டாம் முறை வரும் போது அலுவலகத்திற்கு நாயகன் கிளம்புவதாக வரும் போது முழுக்கையாகவும் வரும் போது அரைக்கையாகவும் இருக்கும். இதைக் கேட்ட போது சிவிஆர் சிரித்தார். தாங்கள் கேட்டது சரிதான். ஆனால் அதை நான் ஒரு சிம்பாலிக்காகத் தான் வைத்துள்ளேன். அது ஒரே நாளாக எடுத்துக் கொண்டால் தவறாகத் தோன்றும். ஆனால் பொதுவாகத் தான் அந்த இடத்தில் வைத்துள்ளேன் என்றார்.
இந்த கலர் கான்செப்டைத்தான் சி.செ. படத்தில் எத்தனை அழகு பாடலிலும் கடைப் பிடித்துள்ளார். அப்படிப் பார்க்கும் போது சிவிஆருக்கு முன்பிருந்த இயக்குநர்கள் இந்த கலர் கான்செப்ப்டைப் பயன் படுத்தியிருந்தால் இன்னமும் கூட அழகான தோற்றங்களில் நாம் நடிகர் திலகத்தை ரசித்திருப்போம்.
கோபால் சார், தங்களுடைய பதிவுகளை எல்லோரும் ரசிக்கிறார்கள் பார்க்கிறார்கள். எனவே தாங்கள் அதற்காக பிரத்யேக முயற்சி எடுக்க வேண்டாம். வம்பிற்கிழுக்கும் பதிவுகளைப் போட வேண்டாம்.
இந்த முதல் மரியாதை அமர்க்களத்தில் ராகுலின் அம்பிகாபதி, தில்லானா மோகனாம்பாள் பதிவுகள் கவனிக்கப் படாமல் போய் விட்டன. சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. அவ்வாறு இல்லை என்று நிரூபித்து அனைவரின் பதிவுகளையும் ஒரு சேர மதித்து அனைத்திற்கும் தங்கள் பதில் கருத்துக்களை எழுதுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
கிட்டத் தட்ட மூன்று நான்கு பக்கங்கள் கோபால் ஒருவருக்கே கோட்டா வாகி விட்டது.
சந்தோஷம் தானே கோபால்