-
#அதிசயங்களின் #பிறப்பிடம்.........
திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாகத் தான் நிகழ்கின்றனவோ...!!!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’
சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.
விஜயா கம்பைன்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’
ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.
ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’.
சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.
தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.
இதில் என்ன ஒரு விசேஷம் எனில், எல்லா படங்களிலும் #ஹீரோ #நம்ம #வாத்தியாரு #தாங்க.........bsm...
-
சூப்பர், இதில் RR பிக்சர்ஸ் "பறக்கும் பாவை", ஜெயந்தி பிலிம்ஸ் முதல் வண்ணப்படம் "மாட்டுக்கார வேலன்", மேகலா பிக்சர்ஸ் "எங்கள் தங்கம்", நியோமணிஜெ புரொடக்ஷன்ஸ் "நீரும் நெருப்பும்", வள்ளி பிலிம்ஸ் "சங்கே முழங்கு", காமாட்சி ஏஜென்ஸிஸ் "நான் ஏன் பிறந்தேன்", உதயம் பிலிம்ஸ் "இதய வீணை", வசந்த் Creations "பட்டிக்காட்டு பொன்னையா", அமல்ராஜ் பிக்சர்ஸ் "நேற்று இன்று நாளை", கஜேந்திரா பிலிம்ஸ் " நாளை நமதே", ஒரியண்டல் பிக்சர்ஸ் "நினைத்ததை முடிப்பவன்", உமையம்பிக்கை பிலிம்ஸ் "நீதிக்கு தலை வணங்கு", சுப்புவின் "இன்று போல் என்றும் வாழ்க", முத்துவின் "மீனவ நண்பன்", லிஸ்ட்டில் இணைத்து கொள்ள வேண்டும்............Rmh
-
1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று..
பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனர்.
சிறிது நேரத்தில் tmx 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.
காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.
காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..
பாதுகாவலர்கள் புடைசூழ அலுவலகத்திற்குள் விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.
"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"
-என்று மாவட்ட ஆட்சியர்களிடமும், உயர் அலுவலர்களிடமும் , ஆலோசனை கேட்கிறார்.
அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.
காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..
"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.
இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.
அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.
கூறியவன் ஒரு எளியவன்தானே என்று நினைக்காமல், அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.
கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.
என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.
என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.
என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.
உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"
-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.
உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்..
ஒரு எளிய குடிமகன் வைத்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.........gdr
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்இனிய_சனிக்கிழமை #காலை_வணக்கம்..
புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த திரைப்படங்கள் பற்றிய தகவல்களை
அவர் நடித்த ஓவ்வொரு திரைப்படங்களையும் வரிசையாக பதிவிட்டு வரும் எனது இந்த புதிய தொடர் பதிவில் இன்று அவரது 26 வது படமான #குமாரி பற்றிய தகவல்கள் பற்றி காண்போம். ..
இயக்கியவர் ஆர்.பத்மநாபன்
தயாரித்தவர் ஆர்.பத்மநாபன்
கதை சா.கிருஷ்ணமூர்த்தி
இசை கே.வி.மகாதேவன்
ஒளிப்பதிவு டி.மார்கோனி
எடிட்டிங் வி.பி.நடராஜா முதலியார்
வெளிவந்த தேதி
11 ஏப்ரல் 1952
இளவரசி குமாரி, குதிரை சவாரி செய்வது பிடிக்கும் அவ்வாறு ஒருநாள் குதிரையேற்றம் செய்ய குதிரை வண்டியில் பயணம் செய்யும் போது, குதிரைகள் காட்டுக்குள் ஓடும்போது விபத்தை சந்திக்க நேர்கிறது.. விஜயன் என்ற மனிதனால் விபத்தில் இருந்து மீட்கப்படுகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள் மற்றும் இளவரசி அவருக்கு ஒரு பரிசு கொடுத்து, அவளுடைய அரண்மனைக்கு அழைக்கிறார்... ராஜா இளவரசியை திருமணம் செய்து கொள்ள விரும்பும்போது, ராணி சந்திரவலி தனது பயனற்ற சகோதரர் சஹாரானை திருமணம் செய்து கொள்ள சொல்லி விரும்பும்போது பிரச்சினைகள் எழுகின்றன. பல பரபரப்பான சம்பவங்களுக்குப் பிறகு, காதலர்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன இணைவதே கதை..
விஜயனாக புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்
மந்தாராவாக சேருகலத்தூர் சாமா
பிரதாப்பாக விஜயகுமார்
வல்லபனாக சோமு ஸ்டண்ட்
சஹாரனாக டி.எஸ். துரைராஜ்
புலிமூட்டை புலிமூட்டை ராமசாமி
விஹாரனாக சயிராம்
அமைச்சராக கோட்டாபுலி ஜெயரம்
அமைச்சராக ராஜமணி
அமைச்சராக ராமராஜ்
மணி சிங்காக கே.கே.மணி
சந்திரவலியாக மாதுரி தேவி
குமரியாக ஸ்ரீ ரஞ்சனி (ஜூனியர்)
ஜீலாவாக காந்தா சோஹன்லால்
கே.எஸ்.அங்கமுத்து
தாயாக
சந்திரிகாவாக சி. ராஜகாந்தம்
மங்களாவாக பத்மாவதி அம்மாள்
இப்படத்தை ஆர்.பத்மநாபன் தயாரித்து இயக்கியுள்ளார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.எம்.சந்தனம் ஆகியோர் கதை மற்றும் வசனங்களை எழுதினர். ஒளிப்பதிவை டி.மர்கோனி செய்ததும், வி. பி. நடராஜா முதலியார் எடிட்டிங் கையாண்டார். நடனத்தை சோஹன்லால் செய்தார்,
ஸ்டில் புகைப்படம் எடுத்தல்
ஆர்.என். நாகராஜ ராவ்.
இந்த படம் தெலுங்கிலும் ராஜேஸ்வரி என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது.
கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகள்
எம். பி. சிவம், டி.கே.சுந்தர வதியார் மற்றும் கு. சா. கிருஷ்ணமூர்த்தி.
பின்னணி பாடகர்கள்
கே.வி.மகாதேவன், ஏ.எம். ராஜா, ஜிக்கி, பி.லீலா, ஏ.பி.கோமலா மற்றும்
என்.எல்.கணசரஸ்வதி.
சோஹன்லால் நடனம் அமைத்தார்
ஜிப்சி நடனங்களும் இருந்தன.
ஜிக்கி ஆஃப்-ஸ்கிரீன் வழங்கிய ஒரு பாடல், ‘லாலாலி லாலீ… .. பிரபலமானது.
சுவாரஸ்யமான திரை கதை, புத்திசாலித்தனமான இசை மற்றும் மார்கோனியின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் எம்.ஜி.ஆர், செருகலாதர் சாமா மற்றும் பிறரின் அற்புதமான நடிப்பு இருந்தபோதிலும், குமாரி சிறப்பாக செயல்படவில்லை...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
*****************************
எம் ஜி ஆர் எடுத்தவுடன்கதாநாயகனாக உயரவில்லை
எம் ஜி. ஆர் !
எத்தனையோ
அவமரியாதைகளையும்,
அவமானங்களையும்
தாண்டியே அவரது
வெற்றிப் பயணம்
ஆரம்பமானது....
அன்றும், இன்றும்
கொண்டாடப்படும்
அவரின் ஆரம்ப கால
திரை வாழ்வினைப் பற்றிப்
பார்ப்போமா!......
********************************
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.
அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.
கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் அறிவர்.
அதேபோல், அமெரிக்க இயக்குனர் #எல்லீஸ் #டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.
எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு #புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.
அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய #டாக்கா #மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.
அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.
எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.
வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில் எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிக்கிறார்.
டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.
உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.
1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் பலித்து விடுகிறது.
அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.
உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.
எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.
“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.
“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.
நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.........Rosaiya
-
"நீதிக்கு தலை வணங்கு" புரட்சி தலைவரின் 128 வது படம். தவறு செய்தவன் யாராயினும் சட்டம் தண்டிக்க தவறினாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற நியாயத்தை உணர்த்தும் சிறந்த படம். முதலில் "யாரையும் அழ வைக்காதே" என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்கள். பின் தலைப்பில் அமங்கலம் வேண்டாம் என்று கருதி "நீதிக்கு தலை வணங்கு" என்று மக்களுக்கு
தர்மநீதியை அறிவுருத்தி நல்ல டைட்டிலாக மாற்றினார்கள்.
சுறுசுறுப்பாக வேகமாக செயல்படும் கல்லூரி மாணவனாக தோன்றி. ஆரம்பக்காட்சிகளில் படத்தின் விறுவிறுப்பை கூட்டுவார். பணக்கார கல்லூரி மாணவன் வேடம் தலைவருக்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்நது. பாடல்களும் மிக அருமையாக அமைந்தது. ஜாதி பிரிவினை வேண்டாம் என்று காய்கறி மூலமாக பாடியிருப்பது நல்லதொரு விளக்கம். 'இந்த பச்சைக்கிளிக்கொரு' பாடல் வரலட்சுமியின் குரலில் 'வெள்ளிமலை மன்னவா' பாடலுக்கு பிறகு எவர்கிரீன் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 'கனவுகளே' பாடல் தலைவரின் இளமைக்கு அதிஅற்புதமாக துள்ளல் நடையுடன் அமைந்த பாடல். அந்தப் பாடலுக்காகவே பலமுறை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
'எத்தனை மனிதர்கள் உலகத்திலே' பாடல் சோகமாக இருந்தாலும் கருத்துசெறிவுடன் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஆனால் க்ளைமாக்ஸில் எம்ஜிஆர் ரசிகர்கள் அவர் தண்டனை பெறும் காட்சியை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதே உண்மை. ரசிகர்களுக்கு சோகக் காட்சிகள் அவ்வளவாக பிடிக்காது. இந்தப்படத்தில் கொஞ்சம் அதிகமான சோகக் காட்சிகள் நிரம்பி இருந்ததால் திரும்ப திரும்ப பார்ப்பவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் படம் வெற்றிகரமாக ஓடியது. பொதுமக்களின் பார்வைக்கு படம் சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது.
1976 ன் பிளாக்பஸ்டர் படம்தான் "நீதிக்கு தலை வணங்கு." அய்யனுக்கு 1972 க்கு பின்னர் எந்த படமும் கைகொடுக்கவில்லை. 1976 ல் 6 படங்கள் வந்தும் அனைத்தும் குப்பைக்குள் போய் விட்டன. "உத்தமனை" மட்டும் வடக்கயிறு கட்டி மதுரையில் மட்டும் ஆஸ்தான தியேட்டரான நியூசினிமாவில் 100 நாட்கள் ஓட்டி களைத்தனர். ஆனால் புரட்சி தலைவருக்கோ ஆண்டுக்கு ஆண்டு பிளாக் பஸ்டர் படங்களாக
வந்து கொண்டிருந்தன. 1973 ல் "உலகம் சுற்றும் வாலிபன்",1974 ல்
"உரிமைக்குரல்" 1975 ல் "இதயக்கனி",1976 ல் "நீதிக்கு தலை வணங்கு" 1977ல் "மீனவ நண்பன்" என்று ஜெயக்கொடி இறுதிவரை பறந்து கொண்டே இருந்தது.
சென்னையில் 5 திரையரங்கில் வெளியாகி மொத்தம் 369 நாட்களில் ரூ13,10,697.30 வசூலாக பெற்று அரிய சாதனை படைத்தது. சென்னையில் நான்கே வாரத்தில் ரூ 651325.50 சாதனை வசூலாக பெற்று தமிழ் திரையுலகத்தை கலக்கியது. மதுரை சென்ட்ரலில் 100 நாட்கள் ஓடாமலே 86 நாட்களில் ரூ 409751.10 வசூலாக பெற்றது. மூக்கையனின் "பட்டிக்காடா பட்டணமா" 84 நாட்களில் அதே சென்ட்ரலில் பெற்ற வசூல் ரூ 371310.25 . ஆனால் படத்தை 182 நாட்கள் ஓட்டி விட்டனர்.
திருச்சியில் "நீதிக்கு தலை வணங்கு" 61 நாட்களில் பெற்ற வசூலை அகில இந்தியாவிலும் அசுர வெற்றி பெற்ற
"ஷோலே" ஹிந்தி திரைப்படத்தால் 70 நாட்களில் கூட நெருங்க முடியாமல் அடிபணிந்த கதை ஆச்சர்யத்தை தருகிறது. திருச்சி தஞ்சை மாவட்டங்களில் அய்யனின் 175 படமான "அவன்தான் மனிதனை" அலறவிட்ட கதை
மிகவும் அற்புதமானது.
அய்யன் படங்கள் 100 நாட்கள் ஓட்டியும் 2 லட்சம் கூட பெறாத படங்கள் அநேகமிருக்க "நீதிக்கு தலை வணங்கு" வின் சாதனை மகத்தானது. தமிழ்நாட்டில் சுமார் 30 அரங்குகளில் 50 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆண்டுக்கு ஆண்டு சாதனையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர். சென்னை தேவிகலா மகாராணி, சேலம் சங்கம், திருச்சி ஜீபிடர் என்று நான்கு திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியது. மேலும் பல ஊர்களில் வியத்தகு வசூலை பெற்று முன்னணி பெற்றது தனி சிறப்பாகும்..........ksr.........
-
"நான் பார்த்தா பைத்தியக்காரன்", பாட்டு கருத்துள்ள பாட்டு. நடிகர் கணேசனின் மூத்த பையன் ராம்குமார் பிஜேபில சேந்துட்டார். கணேசன் ரசிகர்களிடம் பலரிடம் அதுக்கு எதிர்ப்பு. இதுல உத்து பார்த்தா எதிர்ப்பு தெரிவிக்கிறவங்க பிஜேபிய பிடிக்காத வேற மதத்தை சேர்ந்தவங்களா இருப்பாங்க. இல்ல திமுககாரனா இருப்பான். ராமக்குமார ஆதரிக்கிறவங்க திருட்டு திராவிடம்னு சொல்ற கோஸ்டியா இருப்பாங்க. கணேசன் இருந்த காலத்திலேயே கணேசனுக்கே ஓட்டுபோடாம திமுகவுக்கு ஓட்டுபோட்ட ரசிகர்கள் நிறைய. கேட்டா கட்சி வேற. அரசியல் வேறன்னு அறிவு விளக்கம் சொல்லி கணேசனை காலி பண்ணாங்க. ஏற்கனவே அவங்களுக்குள்ளே ஒத்துமை இல்ல. இப்ப இன்னும் சிதற்றாங்க. சாதியாலயும் மதத்தாலயும் பிரிஞ்சுருக்காங்க. சரி. அதெல்லாம் இங்க எதுக்குய்யா சொல்றன்னு நீங்க கேக்கலாம். அதுக்குதான் இந்த தலைவர் பாட்டு. "பாதுகாவல் போர்வையிலெ ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ, ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ"... என்ன கருத்து பாருங்க. அன்னிக்கி தீயசக்திக்கு எதிரா தலைவன் பாடின பாட்டு இன்னிக்கும் பொருத்தமா இருக்குய்யா. இதெல்லாம் கேட்டு வளந்ததாலதான் நாம்ப ஒண்ணா ஒத்துமையா இருக்கோம். உலக்த்துல எம்ஜிஆர் ரசிகர் யாரா இருந்தாலும் சரி. நம்ம மதம் எம்ஜிஆர் மதம். நம்ம ஜாதி எம்ஜிஆர் ஜாதி..........rrn...
-
ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அணையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை ... லட்சியம்..ஆகும் ...#புரட்சித்தலைவர் காண வந்த #N.T.ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் . அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரேஅவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ...வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள், வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...
புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..
தமிழ்நாடு முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்பொழுதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது...
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்...
பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து.. .மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவானதுக்கு காரணம்...
நமது தெய்வம் #பொன்மனச்செம்மல்.........Png
-
எம் ஜி ஆர் , முகமது அலி மற்றும் மீன் குழம்பு
1980-ம் ஆண்டு !
அண்மையில் மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி., எம் ஜி ஆர் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார்
ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை போட்டி
20 ஆயிரம் பேர்களுக்கு மேல் மக்கள் கூட்டம் ! போட்டி நடந்துமுடிந்தது .
முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் கேட்டார் :
“எங்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.ரொம்ப சந்தோஷம்... உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் ..
அதைத் தருவதில்தான் எங்களுக்கு முழுமையான சந்தோஷம்..”
ஒரு முடிவுக்கு வந்த முகமது அலி ஒரு முதல் அமைச்சரிடம் போய் இதை எப்படிக் கேட்பது என்று கொஞ்சம் தயங்க ...
“ பரவாயில்லை .. எதுவானாலும் தயங்காமல் கேளுங்க..” என்றாராம் எம்.ஜி.ஆர்.
முகமது அலி கேட்டு விட்டார் : “சென்னையில் மீன் உணவு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் என்கிறார்களே... அது எங்கே கிடைக்கும்? "
சிரித்த எம்ஜிஆர் தகவல் அனுப்பினார் .
வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு ,
இறால் ஃப்ரை , சிக்கன் வறுவல், வெள்ளை சாதம் , பாயாசம் .... எல்லாம் வந்து சேர்ந்தது...!
அத்தனை வகைகளையும் மொத்தமாக ஒரு பிடி பிடித்த முகமது அலியிடம் , எம்.ஜி.ஆர்.
“நன்றாக சாப்பிட்டீர்களா..? திருப்தியாக இருந்ததா..?”" என்று கேட்க ,
முகமது அலி முழு திருப்தியுடன் தலையாட்டியபடி சொன்னாராம் : “ஓ...ரொம்ப ரசித்து சாப்பிட்டேன்..எந்த ஹோட்டல் சாப்பாடு இது..?”
எம்ஜிஆர் ஒரு புன்னகையோடு “என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் நீங்கள் ..உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடா..?”
முகமது அலி எதுவும் புரியாமல் எம்.ஜி.ஆரைப் பார்க்க,
தொடர்ந்த எம்ஜிஆர் : “எல்லாமே என் ராமாவரம் வீட்டில் வைத்து , என் மனைவி ஜானகியின் மேற்பார்வையில் ,
மணி என்பவர் உங்களுக்காகவே ஸ்பெஷலாகத் தயார் செய்தது..!”
நெகிழ்ந்து போய் எம்.ஜி.ஆரின் கைகளைப் பிடித்துக் கொண்ட முகமது அலி , : “ நான் இந்த உலகத்தில் எங்கே போனாலும் விதம் விதமான உணவைத் தர ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள் ..
அவை எல்லாமே சுவையானதுதான்...!
ஆனால் , நீங்கள் அளித்த உணவில் மட்டும் , சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்..
இதை என்னால் மறக்கவே முடியாது .. ”
முகமது அலி இப்படிச் சொன்னதும் , எம்.ஜி.ஆரும் நெகிழ்ந்துதான் போனார்
பின் குறிப்பு : இருவரின் பிறந்த தேதியும் ஜனவரி 17.........Bpng
-
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதன்மைகள்:-
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
*
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
நாடோடி மன்னன் சாதனை.
அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் நாடோடி மன்னன் தயாரித்தார்கள். 1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது.
நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில் தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படமும் இதுதான்...........bpng