[QUOTE=vasudevan31355;1073844]வெற்றிக்கு ஒருவனில் பிடித்தவை
VERA ENNA PUTCHUDHUNGO ?
Printable View
[QUOTE=vasudevan31355;1073844]வெற்றிக்கு ஒருவனில் பிடித்தவை
VERA ENNA PUTCHUDHUNGO ?
Neyveliyaar.....phone pannunga
டியர் கார்த்திக் சார்,
தங்களின் வெற்றிக்கு ஒருவன் திரைப்பட ரிலீஸ் அனுபவங்கள் வழக்கம் போல அருமை. வாசுதேவன் சார் குறிப்பிட்டதைப் போல தங்களின் memory power - great.
நான் கிராமப் பகுதியில் இருந்ததால், அருகிலிருக்கும் டூரிங் திரையரங்கில் திரைப்படம் ரிலீசாகி குறைந்தது 6 மாதங்களுக்குப் பிறகுதான் வரும். அதனையே புதிய திரைப்படம் மாதிரி கண்டு மகிழுவோம். புதிய படம் ரிலீஸ் செய்யும் திரையரங்குகள் (பட்டுக்கோட்டை & தஞ்சாவூர்) என் ஊரிலிருந்து தொலைவில் இருந்ததால் சிறுவயதில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
1980 க்குப் பிறகுதான் ரிலீஸ் ஆன படங்களை ரிலீஸ் ஆன ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளிப் படிப்பின்போது exam முடிந்தவுடன் எல்லாம் வெளியூர் சென்று திரைப்படங்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டது. அப்போது சில திரைப்படங்களை முதல் நாள் பார்த்திருக்கிறேன்.
அப்போது திரையரங்கு வாயிலில் கற்பூரம் ஏற்றுபவர்களையும், கலாட்டா (அலப்பரை) செய்பவர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர்களுடனேயே கலந்துகொண்டிருக்கிறேன்.
முதன் முதலில் ரிலீஸ் அன்றே நான் பார்த்த நடிகர்திலகத்தின் திரைப்படம் கல்தூண். (1981). அதன்பிறகு, சங்கிலி, தீர்ப்பு, வெள்ளை ரோஜா போன்ற சில படங்களை முதல் நாள் திரையரங்கில் கண்டு களித்திருக்கிறேன்.
சென்னை வந்தபிறகு இங்குள்ள ரசிக ஜோதியில் ஐக்கியமாகி பல திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். பல ஞாயிற்றுக் கிழமைகளை நடிகர்திலகத்தின் மறுவெளியீடுகளில் பாரகன், பிளாசா, மேகலா என்று கொண்டாட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன்.
ஆனாலும், நடிகர்திலகம் திரையுலகில் கோலோச்சிய 1960 - 70 களில் திரையரங்க அனுபவங்களை மிஸ் பணிவிட்டோமே என்று நினைப்பதுண்டு. என்னுடைய இந்தக் குறை தங்களுடைய பதிவுகளின் மூலம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி.
என்னைப் போன்ற பிற்பகுதிகளில் (1980-களின் இறுதியில்) வந்து சென்னையில் செட்டில் ஆனவர்களுக்கு தங்களுடைய சென்னை திரையரங்க அனுபவங்கள், மற்றும் அதனையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள் சுவாரசியமாகவும், பொக்கிஷமாகவும் இருக்கின்றன.
தங்களைப் போன்றே, திரு.ராகவேந்தர் சாரின் சென்னை திரையரங்க அனுபவங்கள், கோபால் சாரின் பல ஊர் திரையரங்க அனுபவங்கள், வாசுதேவன் சாரின் நெய்வேலி, கடலூர் திரையரங்க அனுபவங்கள், முரளி சாரின் மதுரை திரையரங்க அனுபவங்கள் மற்ற நண்பர்கள் குறிப்பிடும் இதர ஊர் திரையரங்க அனுபவங்கள் உண்மையிலேயே மனதிற்கு ஆனந்தமாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது. இத்தகைய பதிவுகளை அளிக்கும் அத்துணை உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் வெற்றிக்கு ஒருவன் திரைப்பட அனுபவங்கள் மற்றும் பாடல் காட்சி இணைப்புகள் அருமை.
1959 ஆம் வருடம் வீரபாண்டிய கட்டபொம்மன் ரிலீசின்போது, நடிகர்திலகம் அவர்களால் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்டு, பின்னர் தஞ்சைப் பெரிய கோவிலில் வளர்ந்து வந்த வெள்ளையம்மாள் யானை இன்று (14-09-2013) காலை மரணமடைந்ததாக தஞ்சை மாவட்ட சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் திரு.சதா வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.. வெள்ளையம்மாளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
http://i1234.photobucket.com/albums/...psec8d34c1.jpg
டியர் வாசுதேவன் சார்,
வெற்றிக்கு ஒருவன் பதிவுக்கான தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சதீஷ் அவர்களின் ஸ்டில்கள் என்னை பழைய நினைவுகளுக்குள் தள்ளியதுபோல, எனது பதிவும் தங்களை பழைய நினைவுகளை அசைபோட வைத்ததில் மகிழ்ச்சி. எனது பதிவுகள் தங்களுக்கும் தங்கள் கடலூர் நண்பர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் சந்தோஷம். (என்ன செய்வது, ஜாம்பவான்களின் அசுரப்பதிவுகளுக்கு மத்தியில் இதுபோன்ற அனுபவப்பதிவுகள் மூலம்தான் என்னை நிலைப்படுத்திக்கொள்ள முடிகிறது). அடிஷனலாக தாங்கள் அளித்திருக்கும் ஸ்டில்கள் நன்றாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் ஸ்ரீபிரியாவை நாங்கள் கொஞ்சம் மோசமான, கொச்சையான அடைமொழி வைத்து குறிப்பிடுவது வழக்கம். அனாடமி சம்மந்தப்பட்டது. அந்தப்பெயர் எவ்வளவு பொருத்தம் என்பதை இப்படமும் நிரூபித்தது. (அன்றைய ‘பொல்லாதவன்’, அன்றைய ‘பில்லா’ படங்களும்).
'வெற்றிக்கு ஒருவன் படத்தின் 'ஹை-லைட்' காட்சிகளை அழகாக வரிசைப்படுத்தி சிறப்பு சேர்த்து விட்டீர்கள். ஒவ்வொரு பாயிண்ட்டும் காட்சிகளை நன்கு நினைவூட்டுகின்றன. மேஜரின் ரோலையும் தலைவர் செய்திருந்தால் படம் துவக்கத்திலிருந்தே எடுப்பாக அமைந்திருக்கும் என்பது உண்மை. சில நல்ல ரோல்களை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியடைபவர் தலைவர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
அந்த அட்டகாசமான டைட்டில் காட்சிதான் ரொம்ப எதிர்பார்க்க வைத்தது.
‘நடிகர்திலகத்தின் திரை நாயகியர்’ வரிசையில் வைஜயந்திமாலா பற்றிய சிறப்புப் பதிவு மிக அருமை. இணைந்து நடித்தது மூன்றே படங்கள் என்றபோதிலும் தாங்கள் கவரேஜ் சிறப்பாக உள்ளது. தேன்நிலவு படத்தில் வரும் 'காலையும் நீயே மாலையும் நீயே' பாடல் ஒளிபரப்பானால், தலை போகிற வேலையானாலும் ஒத்திவைத்துவிட்டு பார்த்துவிட்டு செல்வது என் வழக்கம். வைஜயந்தியின் நளின நடன அசைவுகளும், ஏ.எம்.ராஜாவின் அமுதக்குரலும், ஜானகியின் ஹம்மிங்கும் அப்படி கட்டிப்போட்டுவிடும். வெற்றிக்காவியமான 'இரும்புத்திரை'யில் நடிகர்திலகம்-வைஜயந்தி ஜோடி மிக மிக அற்புதம்.
தலைவர் அபூர்வமாக ஜோடி சேர்ந்தவர்களுடன்தான் அற்புதமாகப் பொருந்தியிருக்கிறார் என்பதற்கு வைஜயந்தியும் ஒரு உதாரணம் (இந்த வரிசையில் ஜமுனா, விஜயநிர்மலா, பாரதி, பத்மப்ரியா) .
இடைவெளி விட்டாலும் தொடர்களைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. சண்டைக்காட்சிகளும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்....
சிவாஜி கணேசன் பரிசளித்த தஞ்சை பெரிய கோவில் யானை மரணம்
தஞ்சாவூர்: நடிகர் சிவாஜிகணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு தானமாக வழங்கிய யானை வெள்ளையம்மாள் உடல் நலமின்றி இன்று காலை உயிரிழந்தது. தஞ்சை பெரிய கோவில் பெண் யானை வெள்ளையம்மாள், 63, வயது. வயதாவிட்டதால் கடந்த 8 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தது. இதனால் யானைக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால் படுத்தப்படுக்கையாக இருந்தது. கால்நடை மருத்துவர்கள், கோயில் யானைக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை அளித்து வந்தனர்.
எனது புதிய பறவை மீள் பதிவை பாராட்டிய கார்த்திக், ராகவேந்தர் சார், சதீஷ், கே.சி.எஸ் , கண்பட் ,வாசு, ஆதிராம் அனைவருக்கும் நன்றி.
வாசு சார்,
உங்களின் நாயகியர் தொடரில் ,வைஜயந்தி மாலாவுடன் ,நடிகர்திலகம் அற்புத பதிவு. அந்த சிறு வயது infatuation சொல்லும் காட்சியையும் சேர்த்திருக்கலாம். வைஜயந்தி நடித்திருக்க வேண்டிய பிற படங்கள்- புதிய பறவை (பாடகி),தில்லானா மோகனாம்பாள்,இரு மலர்கள்,இரு துருவம்.
வெட்டிக்கு ஒருவன் - superb .
கார்த்திக் சார்,
உங்கள் ஸ்டார் தியேட்டர் அனுபவங்கள் என்னை கல்லூரி நாட்களுக்கு இழுத்து செல்கிறது. எனக்கு யாரையும் அறிமுகம் இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாந்தி வந்து அரட்டை கேட்டு சாந்தி பெறுவேன்.(1976-1984)
சதீஷ்,
புதிய பறவை அற்புத புகை படங்களுக்கு மிக மிக நன்றி. தொலைபேசி அழைப்புக்கும்.
Joe சார்,
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்கள் எல்லோருமே sportive . குடும்பம் போல அடித்து கொள்வோம்.சேர்ந்து கொள்வோம். தலைவர் ஒருவர்தானே?
முரளி,
புதிய பறவை lead கொடுத்ததற்கு நன்றி. கணேசன்(கோபால்) பிடிக்க போய் கிருஷ்ணனாய்(கோபால்) முடிந்ததை சொல்லுங்கள். வைணவர் பிடித்தால் கிருஷ்ணனாய் தானே முடிய வேண்டும்?
கே.சி.எஸ்.- ஓஹோ நீ சின்னஞ்சிறுவன். சுவையான பதிவுக்கு நன்றி.
டியர் சந்திரசேகர் சார்,
வெற்றிக்கு ஒருவன் பதிவுக்கு பாராட்டுக்கு நன்றி. தங்களின் பள்ளிப்பருவ திரையரங்க அனுபவங்களையும் சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை விட திருவாரூர், நாகப்பட்டினம் தங்களுக்கு அருகில் உள்ள நகரம் என்று நினைக்கிறேன். ஆனால் அவற்றில் புதிய படங்கள் அப்போது ரிலீஸ் ஆவது இல்லை, . அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாயவரம் நகரங்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும். அவற்றில் ஓடிமுடிந்த பிரின்ட்கள்தான் மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர் நகரங்களுக்குக் கிடைக்கும். ஓகோவென்று ஓடும் படங்கள் இங்கே வர பல மாதங்கள்கூட ஆகும் என்று நினைக்கிறேன். தாங்கள் சுவையான பதிவுக்கு நன்றி.
தாங்கள் அடுத்த பதிவில் மனம் கனக்கவைக்கும் செய்தியைத் தந்துள்ளீர்கள். வெள்ளையம்மாள் என்ற யானை, கோயிலுக்கு தன்னைப் பரிசளித்த நம் தலைவரைத் தரிசிக்க இறுதிப்பயணம் மேற்கொண்ட தகவல் நெஞ்சை நெகிழ வைத்தது. மரணத்தின் கொடிய பிடியில் இருந்து தப்பியவர் யார் என்று தேற்றிக்கொள்வோம். வேறென்ன முடியும்?....