செந்தில்வேல் சார்,
உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் சிறப்பானவை. அதில் மேலும் சிறப்பானவற்றுள் மிகச்சிறப்பான வரிகள் இவை.
Printable View
முத்தையன்
மிகவும் குறுகிய காலத்தில் 7000 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் தங்களுடைய ஒவ்வொரு நிழற்படத்தின் பின்னாலும் உள்ள தங்களின் உழைப்பு பிரமிக்கவைப்பதாகும்.
குறிப்பாக நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
முத்தையன் அம்மு சார்!
https://pbs.twimg.com/media/Boio882IMAAAazK.jpg:large
தங்களது சாதனைப் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். உடல் வருத்தி 7000 பதிவுகள். உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு. தங்களது ரசனைக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள். உடல்நலத்தோடு உத்தமனின் படங்களை வழக்கம் போல உன்னதமாகப் பதிவுடுங்கள். நன்றி!
சில வார்த்தைகள் சேர்ந்த ஒரு வாக்கியத்தை, தன்னுடன்
நடிக்க வைப்பதென்பது நம்
நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த காரியம்.
"படிக்காதவன்" படக்காட்சி.
தாய்,தகப்பன் இல்லாத குறை
தெரியாமல் போற்றி வளர்த்த
தன் தம்பியர் இருவரையும்
பொறுப்பாய் பார்த்துக் கொள்ளுமாறு மனைவியிடம்
சொல்லி விட்டு வெளியூர் சென்று திரும்பும் நடிகர் திலகம், மனைவி வடிவுக்கரசி
தம்பிகளைக் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டிய கதை தெரியாமல், "தம்பிகளா..நான்
வந்துட்டேன்டா" என்று அழைத்தபடி உள்ளே வர..
அவர்களைக் காணாமல் மனைவியை விசாரிக்க..
மனைவி,மழுப்பலாய் "உங்க தம்பிங்க என் கூட சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டு
ஓடிட்டாங்க..!" என்று சொல்ல..
பொய் மனசை ஊடுருவிப்
பார்க்கும் ஒரு பார்வையுடன்
மனைவியுடன் பேசும் அந்த
வாக்கியம் உயிர் பெற்று நடிக்கத் துவங்குகிறது
"உன் கூட சண்டை போட்டுகிட்டு..வீட்டை விட்டு
ஓடிப் போற வயசா அவங்களுக்கு..?"
இந்த சிறிய வாக்கியத்தை
என்னமாய் அர்த்தப்படுத்துகிறார்.. ?
"உன் கூட சண்டை போட்டுகிட்டு.."-மனைவி சொல்லும் பொய்யை எள்ளல்
செய்யும் தொனி.,
"போட்டுக்கிட்டு" என்று சொன்ன பிறகு அவர் விடும் ஒரு மிகச் சிறிய இடைவெளியை,பொய் சொல்லும் மனைவி கூசிக் குறுகும் விதமாய்ப் பயன்படுத்துதல்..
"வீட்டை விட்டு ஓடிப் போற
வயசா அவங்களுக்கு?"-இதை
அவர் சொல்லும் போதே..
ஏதுமறியா அப்பாவி முகங்களுடன் இரண்டு சிறுவர்களை நமக்குக் காட்சிப்
படுத்துவது..
அட போங்கப்பா..!
அவர்..அவர்தான்!
திரு.முத்தையன் அம்மு சார்,
7000 பதிவுகளை சிறப்புடன், சிரமேற்கொண்டு பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
https://www.youtube.com/watch?v=-khK58F2pUU
ஏவி.எம். சரவணன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் மக்கள் தலைவர் உரையாற்றும் அபூர்வ காணொளி.
நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் தரவேற்றிய நண்பருக்கு.
ஊற்றெடுக்கும் கருத்துக் கோர்வையான நிழல்படப் பதிவுகளால் நடிப்பின் தங்கச் சுரங்கத்தை அரங்கேற்றிய முத்துச்சர பதிவர் முத்தையன் அம்மு அவர்களின் 7000 பதிவுச்சாதனை நடிகர்திலகம் புகழ்பாதையில் மலர்படுகையாக விரிந்து பறந்திட வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்!!
செந்தில்
https://www.youtube.com/watch?v=f2gQqwbeJRM
Prabhu 's interview about NT donations.
https://www.youtube.com/watch?v=jET42x9OQAc
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஒருவரைக் கூட மறக்காமல், மக்கள் திலகம் திரிக்கு வந்து நன்றி சொன்னதோடு, பொன்மனச் செம்மலின் கலக்கலான புகைப்படத்தை பரிசளித்திருக்கும் பண்புமிக்க நண்பர் பம்மல் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு பாசமிகு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்