( 17 )
அவரவர் வீட்டுப்
பூஜையறையிலிருக்கும்
சிவன் சாமிப் படம்,
சிவாஜி சாமி போல்
இல்லையென்பதால்
மாற்ற வேண்டுமென்று
குழந்தைகள்
தீர்மானித்துக் கொண்டன.
Printable View
( 17 )
அவரவர் வீட்டுப்
பூஜையறையிலிருக்கும்
சிவன் சாமிப் படம்,
சிவாஜி சாமி போல்
இல்லையென்பதால்
மாற்ற வேண்டுமென்று
குழந்தைகள்
தீர்மானித்துக் கொண்டன.
( 18 )
குழந்தைகளை,
ஒரு கண்டிப்பான ஆசிரியர்
போல் மிரட்டவில்லை..
நடிகர் திலகத்தின்
கடவுள் நடிப்பு.
தின்பண்டம் வாங்கி வரும்
அன்பு மிக்க தாய்மாமனை
நெருங்குவது போல்
மகிழ்வாய்
நெருங்கச் செய்தது.
( 19 )
திருவிளையாடல்
பார்த்த போது...
ஆண்கள்,
புகை மறந்தனர்.
பெண்கள்,
அடுத்த பெண் மீது கொண்ட
பகை மறந்தனர்.
( 20 )
ரசிப்புடனான
ஒரு பார்வையை...
தரிசனமாக்கியது,
நம் சிவாஜி பெருமானே!
( 21 )
நாரதன் கனி கொடுக்க,
"இன்று உனக்கு
வேறு இடம்
கிடைக்கவில்லையா?"
என்று கிண்டலாகக்
கேட்கிறார்...
மனிதன்
இயல்பாகக் கேட்கும்
தொனியிலேயே.
மனிதரின்
இயல்பான தொனியை
மகேசனுக்கும்
பொருந்தச் செய்த
மகா ஆச்சரியம் அது.
( 22 )
மனைவி பார்வதி
உரிமையுடன்
சுட்டிக் காட்டிய
உண்மைக்காக
அடி வயிற்றிலிருந்து
சத்தம் எழுப்பிச்
சிரிக்கிறார்.
அதிர வைக்கும்
சத்தம்தான்.
ஆனால் யாருக்கும்
அதிர்ச்சியில்லை.
சிரிப்பிலும்
வியக்க வைக்கிறார்,
நடிகர் திலகம்.
( 23 )
நாரதன் கொடுத்த கனியை
பார்வதியிடம்
கொடுத்து விட்டு,
"ஆளை விடு"
என்பது போல்
பாவனை காட்டுகிறார்.
கடவுளாக நடித்தால்
இறுக்கமாகவே
நடிக்க வேண்டுமென்கிற
இலக்கணம் உடைத்த
அற்புத பாவனை.
( 24 )
ஞானப்பழம்
கொடுக்காத கோபத்தில்
பிள்ளை முருகன்
கோபித்து நடக்க,
"பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு
என்பதற்கு உதாரணம் காட்டி
விட்டுப் போகிறான்.. உன்
மகன்." என்கிறார்.
ஒரு தகப்பனுக்கே உரிய
பாசத்தோடும், வேதனையோடும் சொல்லுகையில்,
கடவுளுக்கும் வேதனைகள்
உண்டென்று உணர்த்துகிறார்.
( 25 )
என்னதான் வேதனை
இருந்தாலும், ஆணுக்கே
உரிய கம்பீரத்துடன் "டஸ்"
என்று முருகன் முன்
தோன்றி அறிவுரை சொல்லுவார்.
அவர் நிற்கும் தோரணையே,
"நான் உனக்கு அப்பன்டா"
என்று சொல்லும்.
திரு.ஆதவன் ரவி சார்,
நடிகர்திலகத்தைப் பற்றிய தங்களுடைய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மனதைத் தொடுவதாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.