Style of Makkal thilagam MGR
https://www.youtube.com/watch?v=Wu_2npFoJWg
https://www.youtube.com/watch?v=kuik...ature=youtu.be
பாசம் படத்தில் மக்கள் திலகம் அதன் ரீமேக் மஞ்சி சேடு படத்தில் என்.டி.ஆர்.
Printable View
Style of Makkal thilagam MGR
https://www.youtube.com/watch?v=Wu_2npFoJWg
https://www.youtube.com/watch?v=kuik...ature=youtu.be
பாசம் படத்தில் மக்கள் திலகம் அதன் ரீமேக் மஞ்சி சேடு படத்தில் என்.டி.ஆர்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18
12.12.2015ல் திரு கலியபெருமாள் துவக்கிய திரி மிக குறுகிய நாட்களில் [ 22] 4000 பதிவுகளை நிறைவு செய்து , இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-19 திரு ஜெய்சங்கர் துவக்கி வைத்துள்ளார் .
இனிய மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய தருணத்தில் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
இனிய நண்பர் திருஎம்ஜிஆர் பாஸ்கரன் அவர்களுடைய 600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -20 தாங்கள் தொடங்க உள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்க இன்னும் 13 நாட்களே உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த இல்லத்தையும் , தோட்டத்தையும் அதிமுக சார்பாக புதுப்பிக்க
உள்ளது என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது .
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கென ஒரு இல்லமும், மேல்நிலைப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளி சேர்த்து வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மிக அதிக அளவிலான கனமழை கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பெய்தது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில இடங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த பெருமழை வெள்ளத்தின் போது ‘டாக்டர் எம்.ஜி.ஆர் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி’ வளாகத்தின் முதல் மாடி வரை வெள்ளநீர் புகுந்து விட்டது. அதன் காரணமாக, அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மொட்டை மாடிக்குச் சென்று, தங்களைக் காப்பாற்றும்படி உதவி கோரினர். இது பற்றிய தகவல் எனக்கு கிடைத்தவுடன் நான், தலைமைச்செயலாளர் மற்றும் அரசின் ஆலோசகர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் சிக்கியுள்ள இல்ல மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டேன்.
அதன்படி, இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கியிருந்த மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். அவர்கள் சத்யா ஸ்டூடியோவில் தங்கவைக்கப்பட்டனர். சத்யா ஸ்டூடியோவில் அவர்கள் தங்கி இருந்த 5 நாட்களுக்கும் சுமார் 100 பேருக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள எனது இல்லத்தில் இருந்து உணவு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அந்த இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டது.
டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் லதா ராஜேந்திரன் தற்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குழுக் காதொலிக் கருவி, எப்.எம். காதொலிக் கருவி, மென் பலகை மற்றும் எல்.சி.டி. ஆகியவை மிகவும் பழுதடைந்துவிட்டன என்றும், அவை புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கணினிகள், அலுவலக அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள் ஆகியவை சேதமடைந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். இதுவன்றி, மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, குளிர்பதனப் பெட்டிகள், ஸ்டவ்கள் ஆகியவையும் புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சுவர், உட்புறச் சாலை, முன்வாயில் போன்ற கட்டமைப்புகளும் இந்த இல்லத்தில் சீர் செய்யப்பட வேண்டும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரால் நடத்தப்படும் டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எனது கடமை என நான் கருதுகிறேன். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு செய்யப்படும் நன்றி கடனாகவே நான் கருதுகிறேன்.
எனவே, டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி முழுவதையும் சீர்செய்வதற்கு தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
congratulations jai sankar sir started thalaivar thread no 19
எம் ஜி ஆர் மன்றங்கள் சாதனை
1.மக்களால் தலைவராக ஏற்று அமைத்த மக்கள் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
2.இந்திய பிரதமர் திறந்து வைக்ககும் பெருமை பெற்றது எம் ஜி ஆர் மன்றம்
3.திராவிட இயக்கம் ஆட்சி அமைக்க ஆணிவேராக இருந்தது எம் ஜி ஆர் மன்றம்
4.அஂஇஂஅஂதிஂமுஂகஂவின் அஸ்திவாரம் எம் ஜி ஆர் மன்றம்
5.எம்ஜிஆர் ஆட்சியில் அமர்த்தியது
எம் ஜி ஆர் மன்றம்
6.நீதி நேர்மை ஒழுங்கு வீரம் கொண்டவர்கள் எம் ஜி ஆர் மன்றத்தவர்
7.உலகின் பலபாகங்களில் செயல் படும் ஒரேமன்றம் எம் ஜி ஆர் மன்றம்
8.வரும் தலைமுறையினரையும் கவரும் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
9.அயல் நாட்டில் வளர்ந்து வரும் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
10. உலக அதிசய எம் ஜி ஆர் புகழ் காப்பதும் கொள்கை காப்பதும் எம் ஜி ஆர் மன்றங்கள்
HOPE... MAKKAL THILAGAM THOTTAM WILL GET NEW LOOK.
http://i67.tinypic.com/2utqf6o.jpghttp://i66.tinypic.com/14akck5.jpghttp://i66.tinypic.com/zjf4gz.jpghttp://i66.tinypic.com/2v2tysl.jpg
26th FEB-1974
திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.
திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழக்த்தலி புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!
1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!
நாடும் ஏடும் பாராட்டின!
புதவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!
தற்காலிக வெற்றியல்ல!
”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது.
இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”
– இந்து நாளேடு
சாதாரணமாக எண்ணிவிட முடியாது!
”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாக்க் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”
– இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு
பெருமிதப்படும் வெற்றி
”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”
– ‘மெயில்’ நாளேடு
உறுதிப்படுத்துகிறது!
‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.
இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”
– டைம்ஸ் ஆப் இந்தியா
தேசிய விளைவுகள்
”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப் படுத்துகின்றது!”
– இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு
மகத்தான வெற்றி
”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணு பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”
-ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு
நல்ல சக்தி – புதிய தொடக்கம்!
”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர்அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”
– ‘பேட்ரியட்’ நாளேடு
நிலைத்து நிற்கும்!
அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”
-டெக்கான் ஹெரால்டு’ நாளேடு
புதுவை காட்டும் உண்மை!
”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.
புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”
– நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு
இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.
Blast from the past: Nallavan Vaazhvaan (1961)
http://i66.tinypic.com/11135mu.jpg
Star cast: M.G. Ramachandran, Rajasulochana, M.R. Radha, M.N. Nambiar, E.V. Saroja, D. Balasubramaniam, Lakshmiprabha, Lakshmirajam, C.T. Rajakantham, S. Rama Rao, M.N. Krishnan, R.M. Sethupathi, Seethalakshmi
Nallavan Vaazhvaan is a crime thriller written by C. N. Annadurai, based on the story by Na. Pandurangan. The movie is about a man (MGR), who gets sent to prison by a lecherous man (M. R. Radha), on false charges. M. R. Radha plays the role of a womaniser who is after two women: his clerk’s (D. Balasubramaniam) daughter, E.V. Saroja, and Rajasulochana (who is in love with MGR and is soon to marry him). MGR then escapes from police custody and the inspector, who’s after him (M. N. Nambiar) is in love with E.V. Saroja. How MGR eventually proves his innocence and emerges victorious is what Nallavan Vaazhvaan is about.M. R. Radha excelled in his role as the villain. He stole the show with his characteristic dialogue delivery (written by Aringnar Anna). The fight scenes in the climax between him and MGR, that were shot under water by the talented G. Durai, received a lot of accolades. were shot well by cinematographer G. Durai. The film was produced and directed by noted filmmaker P. Neelakantan under his home banner, Arasu Pictures. The director, incidentally, has directed MGR in as many as 17 movies, with most of them turning out to be hits.
Music was by T. R. Pappa, with lyrics by K.D. Santhanam, A. Maruthakasi, M. K. Athmanathan and Kavi Rajagopal. The film also saw Vaali writing two songs in an MGR movie for the first time. After this, he went on to write many more for the star, with some of them becoming all-time hits.
The choreography was by P. S. Gopalakrishnan and G. Devarajan, while the production was supervised by Mohan Gandhi Raman, who was a close associate of Pa. Neelakantan before becoming a director himself.
Music was a positive for this film, out of the eight songs, some, like the duet ‘Kutrala aruviyile…’, turned out to be big hits. Another duet with peppy lyrics and a catchy tune ‘Adichirukku Nallathoru Chance-u’, filmed on Saroja and her lover (Nambiar), sung by A. L. Raghavan and S. Janaki, became a hit too. Saroja’s Bharatanatyam dancing in this song was quite appreciated. For Nambiar, the role of a lover was a marked difference from the usual villain roles.
Despite the interesting story, good dialogues by Anna and good performances by MGR, Rajasulochana, M. N. Nambiar, and E. V. Saroja, the film ran only for 80 days at the box office.
Remembered for: The music of T. R. Pappa, and good performances by MGR, M. R. Radha, and Nambiar.
Keywords: MGR, M.G. Ramachandran, Rajasulochana, M.R. Radha, M.N. Nambiar, E.V. Saroja, Tamil film Nallavan Vazhvaan
courtesy - the hindu .