Re: vairamuthu's freudian slip!
Quote:
Originally Posted by geno
(குறிப்பு: ஏப்பிரல் - மே 2009 -வாக்கில் வைரமுத்துவால் எழுதப்பட்டது - தினத்தந்தியிலும் இக்கவிதை மே 2009 -இல் வெளிவந்தது)
இனம் தின்னும் ராஜபட்சே
---------------------------------
சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?
வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!
அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே
ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்.
========================
சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து, அவருடைய "இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!
"அவரை" விளிப்பது பொருத்தமில்லை / பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.
இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.
இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.
இவருடைய தலைவருடன் அதிகாலைத் தொலைபேசிப் பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.
" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.
:clap: :clap: :clap:
பாட்டமி? பகுத்தறிவுக்கு இடிக்கிறதே!
Re: vairamuthu's freudian slip!
Quote:
Originally Posted by venkkiram
Quote:
Originally Posted by geno
சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து "அவருடைய இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!
"அவரை" விளித்து பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.
இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.
இவருடைய தலைவருடன் அதிகாலை தொலைபேசி பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.
" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.
மனதில் கொஞ்சமாவது ஈரம் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தன் கோபத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். இந்த கவிதை மட்டுமல்ல, விடை கொடு எங்கள் நாடே! என்ற ஆயுத எழுத்து படப் பாடலும் உண்டு.
உங்கள் தார்மீக கோபத்தினை ஈழத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த அப்துல் கலாமிடம் காட்டுங்கள். அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள். அதை விட்டு கலைஞர்களை, புலவர்களை "விருதுகளை திருப்பிக் கொடுங்கள்!" எனச் சொல்வதில் விவேகமே இல்லை. கமலிடம் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பதில் நச்சென்று சொல்லியிருந்தார். இப்போ ஞாபகம் வரமாட்டேஙுது.
விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.
Re: vairamuthu's freudian slip!
Quote:
Originally Posted by jaiganes
விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.
நன்றி. பிழை திருத்தி விட்டேன்.