The posters could be much better quality .. Karnan posters were awsome
Printable View
The posters could be much better quality .. Karnan posters were awsome
28.07.2013 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரம்
http://i1146.photobucket.com/albums/...psc27050dc.jpg
இந்திய திரையுலக கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் வரலாற்றில் புதிய மைல்கல்....இது வரை இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பான டிரைலர் வெளியீட்டு விழா ... என்று அனைவரும் ஏகோபித்த பாராட்டுக்களைத் தெரிவிக்கும் வண்ணம் இன்று நடைபெற்ற பாச மலர் நவீன மயமாக்கல் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தேறியது. திரையரங்கினுள் எங்கு பார்த்தாலும் மக்கள் நிரம்பி வழிந்த சிறப்பு.. வார வேலை நாளின் முதல் நாளில் வேலை நேரத்தில் நடைபெற்ற ஒரு விழா... அதுவும் சென்னையின் மிகச்சிறந்த திரையரங்க வளாகங்களில் ஒன்றான சத்யம் வளாகத்தில் ... என்றால் இதனுடைய மேன்மையைப் புரிந்து கொள்ளலாம். தொடர்ந்து வரும் பல பதிவுகளில் நண்பர்கள் இவ்விழாவினைப் பற்றிக் கூறுவார்கள் என எதிர்பார்ப்போம்.
http://www.chennaivideo.com/wp-conte...85-659x439.jpg
Paasamalar is evoking expectations as the black and white magnum opus of its time. If properly aired through TV trailers no doubt it will be in parallel rails with Karnan resuming the status of NT as the Box Office giant with an evergreen rerun value, once again!
இளைய திலகம் பிரபு அவர்களுடனும் திருமதி தேன்மொழி அவர்களுடனும் உரையாடிக் கொண்டிருப்பவர் பீம்சிங் அவர்களின் புதல்வி.
http://i2.wp.com/www.kollytalk.com/w...asamalar-9.jpg
http://i0.wp.com/www.kollytalk.com/w...samalar-66.jpg
மேலே உள்ள படத்தில் - இடமிருந்து வலமாக
அமர்ந்திருப்போர் - திருமதி விஜய சாமுண்டீஸ்வரி, திருமதி எல்.ஆர்.ஈஸ்வரி, திரு ஆரூர்தாஸ், டாக்ட்ர் திருமதி கமலா செல்வராஜ், திருமதி கே.ஜமுனா ராணி,
நின்றிருப்போர் - திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம், திரு பிரபு, திருமதி மதுவந்தி அருண், திரு ஒய்,ஜி.மகேந்திரா, திரு கே.வி.பி.பூமிநாதன், பிம்சிங் அவர்களின் புதல்வி, திருமதி தேன்மொழி கோவிந்தராஜன், திரு ராம்குமார்.
இதில் திருமதி.சாவித்திரி அவர்கள் புதல்வி தானே அமர்ந்திருப்பது. சில நாட்களுக்கு முன் அவர் தன்னுடைய தாயாரை ஒருவரை தவிர யாரும் உதவவில்லை என்று கூறியதாக படித்த ஞாபகம்.
அது உண்மையிலயே உண்மையான தகவலாக இருந்தால் இந்த விழாவிற்கு வந்திருப்பாரா ? என்னதான் தன்னுடைய தாயார் மற்றும் தந்தையார் நடித்திருந்தாலும் ?
ஒன்று புரிகிறது !
ஏன்தான் இந்த அளவுக்கு ...அதாவது இட்டுகட்டி, இல்லாததை பொல்லாததை எல்லாம் தரம் தாழ்ந்து, பொய் புளுகும் அளவிற்கு காழ்புணர்ச்சியுடன் நடிகர் திலகத்தின் மீது சேற்றை வாரி இறைகிரார்களோ தெரியவில்லை. இவரிடம் மட்டும் மற்றவர்களுக்கு ஏன் இந்த வயிதெரிச்சல் புரியவில்லை !
அப்படி என்ன கெடுதல் செய்துவிட்டார் மனிதர் இவர்களுக்கு ?
என்றுமே மனம் வீசும் பாரிஜாத பாசமலர் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை வெகு கோலாகலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
சத்யம் வளாகம் காலையிலே களைகட்ட தொடங்கி விட்டது. சாதரணமாக இது போன்ற விழாக்கள் சத்யம் வளாகத்தில் நடைபெறும்போது விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே அரங்கத்தினுள்ளில் ஆட்களை அனுமதிப்பது வழக்கம். ஆனால் இன்று காலை 9 மணிக்கு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலையில் 8 மணி முதலே வந்து குவிந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் 8.30 மணிக்கு முன்பே மக்களை அனுமதித்து விட்டனர். விழா தொடங்கும் முன்னரே அரங்கத்தில் அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்டன. மேலும் சாரி சாரியாக உள்ளே ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட அரங்கின் பல்வேறு பாகங்களில் சுமார் 200-250 பேர் விழா நடைபெற்ற நேரம் முழுக்க நின்று கொண்டே விழா நிகழ்சிகளை கண்டு களித்தனர். அதில் கணிசமான அளவு பெண்களும் இருந்தனர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
விழா மேடையை அல்லது மைக்கை அதிக நேரம் [தொகுத்து வழங்கிய ஒய் ஜி எம்மை விட] பிடித்துக் கொண்டது வழக்கம் போல் வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசினார். பேச முடியாமல் இடையிடையே மூச்சு திணறல் இருந்த போதினும் அதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தார். ஒரு சில விஷயங்கள் நெகிழ்ச்சியாக இருந்த போதும் பெரும்பான்மையான விஷயங்கள் அவர் ஏற்கனவே தினத்தந்தியில் பாசமலர் பற்றி எழுதியவைதான். வசனங்களைப் பற்றி குறிப்பிடும் போது நான் வசனத்தில் compromise செய்துக் கொள்வதில்லை. அதுவும் சிவாஜிக்கு எழுதும் போது compounded மற்றும் double compounded sentences தான் எழுதுவேன் என்று குறிப்பிட்ட ஆரூர்தாஸ் அதற்கு உதாரணமாக தெய்வமகன் படத்தில் மகன் கண்ணன் தந்தை சங்கரை சந்திக்கும் காட்சியை குறிப்பிட்டார். வசனத்தை முழுக்க சொல்லி விட்டு அதை நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதையும் சொன்னார்.
"குட்டி விகாரமாக பிறந்தது என்பதற்காக அதை ஒதுக்கி விடும் மிருகத்தையோ" இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "மலர் அழகாக இல்லை என்பதற்காக அதை உதிர்த்து விடும் கொடியைப் பற்றியோ நான் கதைகளில் கூட படித்ததில்லையே." இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை ஒதுக்கி விட்டிங்களே நீங்களும் விகாரமாதானே இருக்கீங்க உங்களை உங்க அப்பா ஒதுக்கிட்டாரா" [இன்னும் ஒரு வரி இருக்கிறது] அப்படின்னு நீளமா வண்டி ஓட்றே என்று கேட்டாராம் நடிகர் திலகம். இதை குறிப்பிட்டு ஆரூர்தாஸ் சொன்னார் படிப்பறிவு இல்லாதவர்தான், ஆனா ஒரு தமிழாசிரியரான நான் எங்கே இடைவெளி விடுகிறேன் எங்கே நிறுத்தாமல் செல்கிறேன் என்பதை வசனத்தை ஒரு முறை கேட்டே சொன்னவர் அவர். அண்ணனுக்கு தமிழின் ஆழமும் தெரியும் அகலமும் தெரியும் என்று குறிப்பிட்ட போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஆமோதித்தது.
தான் எழுதிய சிவாஜி வென்ற சினிமா சாம்ராஜ்ஜியம் புத்தகம் சிற் சில மாற்றங்களுடன் புதிய பதிப்பாக வெளிவந்திருப்பதை குறிப்பிட்டு அதன் ஒரு பிரதியை கையொப்பமிட்டு நடிகர் திலகத்தின் புதல்வியார் தேன்மொழி அவர்களுக்கு வழங்கினார்.
ட்ரைலர் வெளியீடும் நிகழ்வாக ஒரு ரீல் சுருள் அடங்கிய பெட்டியை சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு வெளியிட சகோதரிகள் கமலா செல்வராஜ், விஜய சாமுண்டீஸ்வரி, தேன்மொழி மற்றும் பீம்சிங் அவர்களின் புதல்வி [சுசீ?] ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். [எங்கிருந்தோ ஒரு ரசிக கண்மணியின் குரல்" பாச மலர் பெட்டி வாழ்க", அரங்கம் சிரித்து கைதட்டி மகிழ்ந்தது].
இனி ட்ரைலர் பற்றி. வெளிவந்த போது 35 mm-ல் வெளியானதை சினிமாஸ்கோப்-ற்கு நவீன தொழில் நுட்ப உதவியுடன் மாற்றியிருக்கிறார்கள். அந்த restoration வேலையை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். Black அண்ட் White படத்தின் depth மற்றும் quality சற்றும் குறையாமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகவே உழைத்த பிரசாத் லேப் technicians இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்தனர். அதே போன்று படத்தை master copy யிலிருந்து re-edit செய்த பீம்சிங்கின் மகனும் எடிட்டருமான B.லெனினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
படத்தின் காட்சிகளை அவர்கள் கோர்த்திருக்கும் விதமே லெனினின் வித்தையை பறை சாற்றியது. உதாரணமாக சிவாஜி ஜெமினியிடம் அவளுக்காக நான் என்னவெல்லாம் கனவு கண்டிடிருக்கேன் தெரியுமா என்று சொல்ல என்னவெல்லாம் என்று ஜெமினி கேட்க உடனே மலர்களை போல் பாடல் காட்சியில் ஒரு சில வரிகள், நான் உன்னை லவ் பண்றேன் என்று ஜெமினி சொல்ல அப்படினா என்று சாவித்திரி கேட்க உடனே யார் யார் யார் அவள் யாரோ வரிகள்.நான் உன் மேலே நிறைய அன்பு வைச்சிருக்கேன் என்று சொல்லும் ஜெமினியிடம் எங்கண்ணனை விடவா என்று சாவித்திரி கேட்க இப்படி ஒரு தங்கைகாக ஒரு அண்ணன் என்ன வேண்டும்மானாலும் செய்யலாம் என்ற வசனம், சிவாஜியிடம் அவர் கல்யாணத்தைப் பற்றி சாவித்திரி பேச நமக்கு வரும் பட்டத்து ராணி யாரோ என்று அவர் கேட்க உடனே பாட்டொன்று கேட்டேன் M .N.ராஜம், இந்த கல்யாணம் நடக்காது என்று சிவாஜி சொல்ல இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும் என்று நம்பியாரிடம் சாவித்திரி சொல்லும் காட்சி இப்படி நிறைய சொல்லலாம்.
பாக்டரி காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். இருவருக்கும் இடையே நடக்கும் வாதப் பிரதிவாதக் காட்சியை நாம் முழுமையாக காணும்போது ரசித்திருப்போம். ஆனால் இந்த ட்ரைலரில் சடாரென்று நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழும் ராஜசேகரன் I am the sole proprietor of this concern. I can do whatever I want என்று முழங்கும்போது அரங்கம் ஒரு வினாடி ஸ்தம்பித்து பின்னர் அதிர்ந்தது.
துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, வாராய் என் தோழி பாடலில் வரும் அந்த வெட்கம் கலந்த ஒரு அண்ணனின் தலை குனியல், தன் முதலிரவன்று தங்கை அவள் கணவன் போட்டோவை திருப்பி வைத்து விட்டு வரும் அந்த சிங்கத்தின் காதல் பார்வை, நம்பியார் வீட்டு பார்ட்டியில் cool drink கிளாஸ்-ஐ எடுத்துக் கொண்டு thank you சொல்லும் அந்த sophistication, இவை எல்லாமே வினாடி நேரத்தில் மின்னி மறைந்தாலும் கண்ணிலேயே இன்னும் நிற்கிறது.
பிறகு மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. முதலில் எங்களுக்கும் காலம் வரும் பாடல். அதில் இறுதியில் "நெஞ்சில் ஒரு வஞ்சமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சம் இல்லா வாழ்வினிலே தோல்வியும் இல்லை" என்று டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட இங்கே நடிகர் திலகம் காலை அகற்றி கை இரண்டையும் விரித்து வாயசைக்க காது செவிடாகும் கைதட்டல். அடுத்த பாடல் பாட்டொன்று கேட்டேன். நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு கேட்க வேண்டுமா? அதிலும் அந்த பியானோவில் கைகள் விளையாட அவர் காட்டும் முகபாவங்கள், இங்கே ஆரவார அலப்பரைகள்.
இறுதியாக இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாடல் மலர்ந்தும் மலராத. இதை பற்றி நான் விவரிக்க தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான் அத்தை மகளை மணம் கொண்டு வரி, நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகைப்படத்தின் முன்னே நின்று சாவித்திரி பாடும் மாமன் தங்கை மகளான வரி, தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பெரிய கார்பெட்டில் படுத்துக் கொண்டே கண்ணின் மனி போல வரியின் போது காட்டும் போஸ். ஒரே அமர்க்களம்தான்.
மனதுக்கு நிறைவான ஒரு காலைப்பொழுது. மற்ற சில மனதுக்கு நிறைவான விஷயங்கள், தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதை, ட்ரைலரில் யாரையும் விட்டு விடாமல் [K.P.கொட்டராகராவின் கதை, ஆரூர்தாசின் வசனம், கண்ணதாசன் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை] என்று டைட்டில் போட்டது.
வெளியே வந்தபோது எப்போது ஆகஸ்ட் 15 வரும் என்றுதான் அனைவரின் மனத்திலும் சிந்தனை ஓடியிருக்கும்.
அன்புடன்
பாசமலர் டிரைலர் வெளியீட்டு விழா - நிழற்படங்கள் தொடர்ச்சி... நன்றி சம்பந்தப் பட்ட இணைய தளத்திற்கு
http://mimg.sulekha.com/tamil/pasama...ictures060.jpg
http://mimg.sulekha.com/tamil/pasama...ictures057.jpg
தயாரிப்பாளர் மோஹன் ஆர்ட்ஸ் திரு கே.மோகன் அவர்களுடன் திரு ராம்குமார் கணேசன்
http://mimg.sulekha.com/tamil/pasama...ictures056.jpg
http://mimg.sulekha.com/tamil/pasama...r-stills03.jpg
சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி-எல்.ஆர்.ஈஸ்வரி
http://mimg.sulekha.com/tamil/pasama...ar-pics034.jpg
இயக்குநர் ஏ.பீம்சிங் அவர்களின் புதல்வியுடன் பிரபு கணேசன்
http://mimg.sulekha.com/tamil/pasama...ar-pics030.jpg
http://mimg.sulekha.com/tamil/pasama...ar-pics028.jpg
http://mimg.sulekha.com/tamil/pasama...-stills016.jpg
பாச மலர் டிரைலர் வெளியீட்டு விழா வீடியோக்கள்
http://youtu.be/-rHTAgV2HDM
Part 1
http://youtu.be/G1sMcK2i0Hg
என்றைக்கும் வாடாமலரான "பாசமலர்" திரைக்காவியத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பற்றிய ராகவேந்தர் அவர்களின் நிழற்படத் தொகுப்பும், முரளி அவர்களின் விரிவான விளக்கமான விழா வர்ணனைக் கட்டுரைப் பதிவும் மிக மிக அருமை. முரளி சார் அவர்கள் விழாவின் எந்த ஒரு நிகழ்வையும் விடாமல் அழகாகப் பதிவு செய்திருக்க, ராகவேந்தர் சார் அவர்களின் நிழற்படத்தொகுப்பு அப்பதிவுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
நிழற்படத்தொகுப்பின் சிறப்பம்சமாக இதுவரை விழாக்களில் பார்க்காத மோகன் ஆர்ட்ஸ் திரு மோகன் அவர்கள், திருமதி விஜய சாமுண்டீஸ்வரி, இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகள், மற்றும் திருமதி தேன்மொழி ஆகியோர் கலந்து சிறப்பித்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தேன்மொழி அவர்களைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.
முன்பெல்லாம் சாந்தியில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வெளியாகும்போது முதல்நாள் மாலைக்காட்சிக்கு திருமதி கமலாம்மா கணேசன் , திருமதி அலமேலு சண்முகம், திருமதி பத்மாவதி வேணுகோபால், திருமதி சாந்தியக்கா, திருமதி ராம்குமார், திருமதி புனிதவதி பிரபு, திருமதி தேன்மொழி ஆகியோர் ஒரு பெரிய வேனில் சாந்தி தியேட்டரில் வந்து இறங்குவார்கள். இவர்கள் வருகையை எதிர்பார்த்திருப்பது போல, இவர்கள் வந்ததும் ரசிகர்கள் ஒரு பெரிய பட்டாசு சரத்தைப் பற்றவைக்க, அந்த வெடிசத்தத்தை கேட்டு சிரித்தவாறு அவர்கள் உள்ளே செல்ல, அவர்களை மாப்பிள்ளை வேணுகோபால் உள்ளே அழைத்துச்செல்வார். பின்னர் ராம்குமாரும் பிரபுவும் நண்பர்களுடன் கார்களில் வந்து இறங்குவார்கள். என்ன கண்கொள்ளாக் காட்சி அவையெல்லாம். நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பட வெளியீடும் 'சாந்திகோயில்' திருவிழாதான். எந்த ரசிகனுக்கு கிடைக்கும் இந்தபபேறு?.
நடிகர்திலகத்தின் எந்த ஒரு விழாவானாலும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும் நகைச்சுவை தென்றல், நாடக செம்மல் திரு ஒய். ஜி. மகேந்திரன் அவர்களையும் அவரது புதல்வி திருமதி மதுவந்தியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியின்போது ஒய். ஜி. எம்மை பேட்டி கண்டவர் "நீங்கள் சிவாஜியின் ரசிகர் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூற, இடைமறித்த மகேந்திரன் "தவறு, நான் சிவாஜி ரசிகன் அல்ல" என்று கூறியவர் சற்று இடைவெளி விட்டு, "நான் சிவாஜி வெறியன்" என்றார். "இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?" என்று காம்பியர் கேட்க, "ரசிகன் என்பவன் அவர் நடிப்பை ரசித்துவிட்டுப் போய்விடுபவன். ஆனால் வெறியன் எந்நேரமும் அவரையே நினைத்துக்கொண்டிருப்பவன். நான் அந்த ரகம்" என்றார். கேட்டுக்கொண்டிருந்த நமக்கு சிலிர்த்தது.
விழாவில் கலந்துகொண்ட எல்.ஆர். ஈஸ்வரி, டாக்டர் கமலாசெல்வராஜ், திரு ஆரூர்தாஸ், ஜமுனாராணி ஆகியோருக்கும் பாராட்டுக்கள். (அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த பி.சுசீலா, எம்.என்.ராஜம், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பது தெரியவில்லை).
டிரைலர் வெளியீடு வெற்றியடைந்ததுபோல, பாசமலர் திரைக்காவியமும் அமோக வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அசத்தலான பதிவுகளுக்கு நன்றிகள்...
நன்றி கார்த்திக்.
பாசமலர் update. சென்னையில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட சத்யம் மற்றும் சாந்தி அரங்குகளோடு இப்போது கமலா திரையரங்கமும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்.
அன்புடன்
murali sir.
Glad news. 1972 golden year for NADIGAR THILAGAM evergreen Flashing old memories in the early morning in your own style very nice. incidently it is a golden year for me too. during the release of raja I appeared for written test followed by interview in april PP release. july i joined the bank dharmam enge release time.like that so many things, which made me like anand VV release time.
let us hope pasamalar will create a unique record.
நமது கோவை நண்பர் ISO Nagaraj அவர்கள் அனுப்பியுள்ள நிழற்படம்.
http://i1146.photobucket.com/albums/...psfce1bbb4.jpg
நன்றி நாகராஜ் அவர்களே
My write-up as part of school of Acting and relevant to pasamalar.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-48
Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.
1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .
பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.
பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.
அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.
கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.
இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.
ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.
நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.
படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.
பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -
இனி முழுக்க அதில்தான் புகுவேன்.
கோபால் சார்
அருமையான திறனாய்வு... தற்போதைய தலைமுறைக்கு புதியதாகவும், கடந்த காலத் தலைமுறைகளுக்கு சரியான வகையிலும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அண்ணன்-தங்கை பாசம் என்பதோடு நில்லாமல், அதனைத் தாண்டிய பல்வேறு பரிணாமங்களில் பாசமலர் படத்தின் சிறப்பை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நவீனமயமாக்கலில் உருவாகியுள்ள பாசமலர் திரைப்படத்தின் டிரைலர் நம் பார்வைக்கு
http://youtu.be/aWLswO0xSkE
Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .
நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.
ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.
ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.
ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.
விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.
மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)
பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.
நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.
இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.
சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.
நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.
ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .
ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.
ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.
தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.
வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.
தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.
செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.
தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஓட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .
இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.
a write up in The Hindu, today's edition (04.08.2013) on Pasa Malar
Link for the page: http://www.thehindu.com/features/cin...?homepage=trueQuote:
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
CHENNAI, August 3, 2013
A paean to sibling love
Malathi Rangarajan
http://www.thehindu.com/multimedia/d...j_1539758g.jpg
http://www.thehindu.com/multimedia/d...g_1539757g.jpg
With the digitally restored version of Paasa Malar, starring Sivaji Ganesan and Savithri, all set to be re-released on August 15, Malathi Rangarajan takes a look at what the children of the legends associated with the classic feel
His oeuvre remains untouched by time! His films are now revived at regular intervals and attired in digital grandeur and DTS finery, they turn up trumps! Sivaji Ganesan continues to reign supreme as a name to reckon with in Tamil cinema. Paasa Malar, next in the fray, was a major hit in all the centres, when it was released for the first time on May 27, 1961. Till this moment, it is an unparalleled paean to sibling affection!
“More than half a century has gone by, but the overwhelming response from the young crowd that thronged the recent trailer release event shows that Sivaji Ganesan still rules,” says KVP Boominathan, who is releasing Paasa Malar in cinemascope. “Sound has been enhanced to match the latest in DTS.” An ardent devotee of the thespian, Boominathan is also the head of the All India Sivaji Ganesan Fans’ Association. Is it being transformed into colour? “No. The output, we were told, may not be up to expected levels. If the result isn’t worth it, the effort would come to nought. But as the first black and white film refurbished with the latest technology, it will be a treat.”
The present generation may find certain segments melodramatic… “On the contrary, I know for a fact that an incredible number of youth is waiting to watch Paasa Malar on the big screen. Y.Gee. Mahendra, a diehard fan of Sivaji, anchored the trailer release, but his daughter Madhuvanthi, who co-hosted the event, is equally a Ganesan admirer,” is Boominathan’s defending stroke.
“Films such as Paasa Malar should wean youngsters away from today’s trend, which mostly has boy-girl love as subjects, as though no other sentiments exist. It’s sad that they think it is the be-all of life. But in Paasa Malar the brother allows his sister to marry the man she’s in love with, though he’s poor, because to him her happiness is primary,” he adds.
The film may have been released before he was born, but Ganesh Kotarakara, son of the late K.P. Kotarakara, the storywriter of Paasa Malar, knows quite a lot about the film. “Paasa Malar holds the record for having been made in the most number of languages, including Sinhala. The Hindi version, Rakhi, won the Filmfare Award for Best Storywriter for my dad. His inspiration, he would tell us, was his elder sister,” he says.
A moving story
“Paasa Malar was a moving story and I’m extremely happy to have been a part of it,” says M.N. Rajam, who played the wife of Sivaji Ganesan in it. “It showed that without love and affection, life means little.” When she signed the film with Sivaji and Savithri in pivotal roles, did she think she would have scope to perform? “I knew it would fetch me a good name and it did. It was a well-etched role of an understanding wife and a committed doctor.” What saddens Rajam is that neither Sivaji Ganesan nor Savithri, or for that matter its director Bhimsingh are alive to see the sheen that has been lent to their film. “They will be remembered as long as Tamil cinema lives,” she says. The song, ‘Varayo En Thozhi,’ from Paasa Malar catapulted L.R. Easwari to the zenith of fame. “Such melodies never die,” says the singer. “The composers of the day were great singers too. If T.K. Ramamurthy gave life to tunes on his violin, M.S. Viswanathan would sing them for us. Even if we could bring out 25 per cent of it, the song was a hit. Like this one was. We could add nuances here and there and MSV would encourage us if he found them suitable. Paasa Malar is a film that’s a class apart in music, acting and storyline,” says Easwari.
Mention his dad, and actor Prabhu begins to speak with unbridled energy. “I was a small boy when Paasa Malar came out. But I know the impact it made. People began seeing Sivaji Sir [that’s how he refers to his father] as a member of their family. Do you know he sported a tuxedo in the film?”
Prabhu had once asked him about his high eyebrows in the early part of Paasa Malar and the same drooping in the latter part. “Have you noticed the clowns in a circus? Their eyebrows are drawn high as a symbol of joy and gay abandon. So I sported such a look. With prosperity come problems and I thought drooping eyebrows would be apt,” explained his dad.
Boominathan plans to release it in at least 70 theatres. Recently, Karnan proved Sivaji’s staying power. Paasa Malar could do it again.
Thank you, The Hindu and Malathi Madam.
இந்த கணத்தில் இந்தியாவில் இருக்க முடியாத சோகம் என்னை வாட்டுகிறது. இது வெளியாகும் தினத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியை பகிர முடியாத சோகம் ,வாழ்க்கையில் பெற்ற வெற்றிகளை கேள்வி குறியாக்கி என்னை துக்கத்தில் ஆழ்த்துகிறது.
இது வரை வெளிவந்த தகவல்களின் படி, சென்னை சாந்தி, சத்யம், பிவிஆர், கமலா, பாரத் ஆகிய திரையரங்க வளாகங்களில் பாச மலர் வெளியிடப் படுவது உறுதியாகி யுள்ளது. வெளியூர் தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. தெரிந்த வரையில் கோவை தர்ஷனா மற்றும் சத்யம் குழும திரையரங்குகளில் வெளியாகலாம்.
இம்மாத [ ஆகஸ்ட் 2013 ] இதயக்கனி சினிமா ஸ்பெஷல், பாசமலர் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சிவாஜி ரசிகர் கரங்களிலும் அவசியம் தவழ வேண்டிய சிறப்பிதழ். தவறாமல் வாங்கிப் படியுங்கள்.
http://i1146.photobucket.com/albums/...psb0c30b6f.jpg
Paasa Malar Digital Rerelease gaining rapid momentum.
In Chennai, the movie is scheduled for release at Shanti, Sathyam Complex, Agasthiya, Kamala, PVR, S2 (Perambur). May be one or two more.
சிவாஜி எட்டடி பாய்ந்தால் அவரது ரசிக கண்மணி திரு கோபால் அவர்கள் 16 அடி பாய்கிறார்
திருச்சிராப்பள்ளி நகரில் சுவற்றில் வரையப் பட்டுள்ள பாச மலர் வரவேற்பு வாசகங்கள்.
http://i1146.photobucket.com/albums/...ps78741b1e.jpg
http://i1146.photobucket.com/albums/...pse742a1b2.jpg
http://i1146.photobucket.com/albums/...ps327ff395.jpg
http://i1146.photobucket.com/albums/...ps194772bb.jpg
http://i1146.photobucket.com/albums/...psd41df774.jpg
அமைப்பு - திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம்
இந்நிழற்படத்தை நமக்கு அனுப்பியுதவிய திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் மற்றும் திரு அண்ணாதுரை அவர்களுக்கு நம் உளமார்ந்த நன்றி.
நன்றிகள் G krishna ,வேந்தர்.
திரைக்கதையமைப்பு கொட்டாரக்கரா. இந்த நுண்ணியமான மருமக்கள் தாயத்தின் பெரும் பங்கு அவரையே சாரும். ஆருர்தாஸ் அதிர்ஷ்டசாலி மட்டுமே இந்த பட வாய்ப்பு பெற்றதில்.
An imagination on how the ads would look on bullock cart in those days for the magnum opus Paasa Malar
http://i1146.photobucket.com/albums/...psbb0d85ab.jpg
http://i1146.photobucket.com/albums/...ps70c77488.jpg
Latest ad for Paasa Malar
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...37310063_n.jpg
நேற்று சன் லைப் சேனலில் மிஸ்ஸியம்மா திரைப்படம் ஓடி கொண்டு இருந்தது சாவித்திரி கொள்ளை அழகு ஒல்லி உடல் பாச மலர் சமயத்தில் பூச ஆரம்பித்து திருவிளையாடல் போது உப்பி இறுதியில் எலும்பு கூடாக மாறியது ஏன் எல்லாம் விதியின் திருவிளையாடல் தானா ஏன் 1980 கால கட்டங்களில் சாவித்திரி அவர்களை காப்பாற்ற யாரும் முயற்ச்சி எடுக்க வில்லை இன்று ஆரூர் தாஸ் அவர்கள் தின தந்தி பத்திரிகையில் சாவித்திரி இல்லை என்றால் ஆரூர் தாஸ் இல்லை என்று எழதுகிறார் ஆனால் சாவித்திரி அவர்களின் இறுதி நாட்களில் என்ன செய்தார் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமது உடன் பிறவா சகோதரர்களான உங்கள் இடம் பகிர்ந்து கொள்கிறேன் யாரும் தவறாக என்ன வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
என்றும் அன்புடன்
க்ருஷ்ண
An imagination on how the ads would look on bullock cart in those days for the magnum opus Paasa Malar
http://i1146.photobucket.com/albums/...psbb0d85ab.jpg
http://i1146.photobucket.com/albums/...ps70c77488.jpg
எண்ணியல் முறை நவீன மயமாக்கலில் பாச மலர் மறு வெளியீடு காண இருப்பதை யொட்டி சென்னை சாந்தி திரையரங்கில் பாச மலர் திரைப்படத்தின் பேனர் வைக்கப் பட்டுள்ளது. அதனுடைய நிழற்படம் நம் பார்வைக்கு.
http://i1146.photobucket.com/albums/...ps893bf3bd.jpg
http://i1146.photobucket.com/albums/...ps01a49c8a.jpg
Adv. Reservation from 2morrow
Shanthi,18-8-13 sunday evening show rs 80.00 and rs 60.00 tickets sold out...............nt rocks again
Why there is no update on Pasamalar? We know only abt Chennai. What abt the other centres?
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி பாசமலர் தமிழகத்தில் சென்னை நீங்கலாக இதர ஊர்களில் வெளியாகும் திரையரங்குகளின் விவரங்கள்
தஞ்சை ஜி.வி.காம்ப்ளெக்ஸ்,
கும்பகோணம செல்வம்,
புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதாம்பாள்
சேலம் – ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளெக்ஸ்,
கிருஷ்ணகிரி ஆனந்த்
மதுரை அலங்கார்,
திண்டுக்கல் சோலைஹால்,
ராஜபாளையம் மீனாட்சி,
விருதுநகர் ஸ்ரீராம் சதீஷ்குமார்
This list is not exhaustive. More centres may be added depending on the availability
Thank you Ragavendhar Sir.
Looks like another unprofessional distribution .. Not even a talk among common audience
ஜோ,
படம் வெளியாகும் இதுவரை அறிவிக்கப்பட்ட திரையரங்குகளின் பட்டியலை வைத்து சொல்கிறீர்களா இல்லை வேறு ஏதேனும் காரணத்தினால் இப்படி குறிப்பிடுகிறீர்களா என்பது தெரியவில்லை. ஆனால் உண்மை நிலை வேறு. படம் வெளியாவதைப் பற்றிய awareness மக்கள் மத்தியிலே நிச்சயம் இருக்கிறது.
கர்ணன் போல் வசந்த மாளிகை போல் 72 முதல் 80 திரையரங்குகள் வரை முன்னரே ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் தலைவா படத்தின் வெளியீட்டு தேதி தெரியாமல் அரங்க உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பமே.
9-ந் தேதி வெளிவர வேண்டிய படம் இதுவரை வரவில்லை. 15 வரும் என்றார்கள். இப்போதும் அதுவும் இல்லை என்றாகி விட்டது. 16-ந் தேதி வெள்ளிக்கிழமையென்றாவது வெளியிட வேண்டும் என்ற தீவிர முயற்சி நடப்பதாக கேள்வி. இந்த சூழலில் பெரும் தொகை MG கொடுத்திருக்கும் அரங்க உரிமையாளர்கள் ஒரு வேளை 16-ந் தேதி படம் வெளி வந்துவிட்டால் தங்கள் அரங்குகளை அதற்காக free-யாக வைத்திருக்க விரும்புகிறார்கள். அந்த காரணத்தினாலேயே பல அரங்குகளிலும் பாச மலர் படத்தை வெளியிட ஆவல் இருப்பினும் இந்த காரணத்திற்காக தயங்குகிறார்கள். இதற்கு ஒரு சரியான உதாரணம் சென்னை வடபழனி கமலா திரையரங்கம். அந்த வளாகத்தில் இரண்டு screens இருக்கின்ற போதும் கொடுத்திருக்கும் MG தொகை பெரிது என்பதால் இரண்டு அரங்குகளையும் free -யாக கமிட் செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.
இதையும் மீறி கோவை மாநகரிலே அர்ச்சனா, சாரதா, கனகதாரா மற்றும் சத்யம் (Brook fields) என்று நான்கு அரங்குகளில் வெளியாகிறது. திருப்பூரில் இரண்டு அரங்குகளில் வெளியாகிறது. சேலத்தில் ARRS multiplex தவிர கீதாலயா அரங்கிலும் வெளியாகிறது.
நெல்லையில் கணேஷ், நாகர்கோவிலில் வசந்தம் பாலஸ், தூத்துக்குடி KSPC [அல்லது ராஜ்], கோவில்பட்டி AKS மற்றும் தென்காசி நகரிலும் வெளியாகிறது.
மதுரை மாநகரில் அலங்கார் தவிர மதி திரையரங்கிலும் [வெள்ளி முதல்] வெளியாகிறது. திருச்சி மாநகரில் மட்டுமே சரியான அரங்கு அமையவில்லை. காரணம் அங்கே இப்போது ரிலீஸ் திரையரங்குகளே 5 மட்டும்தான் இருக்கிறதாம். தலைவா இந்த வாரம் வெளியாகுமா என்பது தெரியாததனால் புதிய அரங்குகள் கமிட் செய்ய தயங்குகின்றனர். அங்கே பாலஸ் திரையரங்கில் வெளியாகும் பாச மலர் அநேகமாக வெள்ளி முதல் மற்றொரு அரங்கிலும் வெளியாகும் என்றே தெரிகிறது.
இனி பொது மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பற்றி தெரிந்து கொள்ள சென்னை மாநகரில் இன்று தொடங்கிய முன்பதிவை பார்த்தாலே தெரிந்து விடும். சத்யம் அரங்கில் வியாழன் முதல் நான்கு நாட்களில் வியாழன் மற்றும் ஞாயிறு அரங்கு நிறைந்து விட்டது. மாலை நிலவரப்படி வெள்ளி மற்றும் சனி almost full. PVR-ல் இரண்டு காட்சிகள். இரண்டும் full. வில்லிவாக்கம் AGS அரங்கிலும் அதே நிலைமை. Fame National, Inox மற்றும் மாயாஜால் அரங்குகளிலும் நல்ல enquiry என்று கேள்வி. இந்த அரங்குகளில் டிக்கெட் அனைத்தும் book செய்வது பொது மக்கள்தான். நமது ரசிகர்கள் சாந்தியில்தான் குழுமுவார்கள். சாந்தியிலே ஞாயிறு மாலைக் காட்சிக்கு ஏராளமான பேர் வந்து கேட்டுப் போவதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
நிலைமை மேலும் சிறப்படையும் என்ற நம்பிக்கையில்
அன்புடன்