http://i1170.photobucket.com/albums/...psc5f4d315.jpg
Printable View
கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா டெண்ட் கொட்டகையில் குமரிக்கோட்டம் ஒரு வாரம் ஓடி சாதனை. வெளியூர் சென்றுவிட்டதால் போட்டோ பதிவு எடுக்க முடியவில்லை
http://i57.tinypic.com/illfyp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
எ னக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – Hurdles; Obstacles – ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் காட்சிகள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
- காவியக் கவிஞர் வாலி .
தலைவரின் வெற்றி சின்னம். இந்த சின்னம் தான் இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப் பினர்களாக மாற்றியது . ஏன் நம் முதல்வரை முதல்வர் ஆக்கியது .
http://i1170.photobucket.com/albums/...psb8d64518.jpg
மக்கள் திலகம் எம்ஜியாரிடம்
விருது பெறும் ' மாண்டலின் ' சீனிவாசன் !
http://i60.tinypic.com/1zlggea.jpg
இன்று 11 வது திரி (பாகம் ) துவக்கிய திரு.யுகேஷ் பாபு
அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் .
தங்களுக்கு , இந்த திரியில் உத்வேகத்துடன்,விவேகத்துடன் ,
சுறுசுறுப்புடன் , பல அரிய புகைப்படங்களுடன், த்ரில்லிங்கான புள்ளி விவரங்களுடன் ,விரிவான செய்திகளுடன் பதிவுகள் மேற்கொள்ள புரட்சி தலைவரின்
நல்லாசியும், மூத்த நண்பர்களின் நல்லாதரவும், சக தோழர்களின் ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்கிற
நம்பிக்கையுடன் என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி. ஆர்.
பொதுநல சங்கம் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள் .
http://i60.tinypic.com/e04h3k.jpg
இன்று மக்கள் திலகம் திரியின் 11ஆம் பாகத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அருமை நண்பர் யுகேஷ்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1968 ஆண்டில் மக்கள் திலகத்தின் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய படங்கள்.
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
***************************
ரகசிய போலீஸ் 115
--------------------------------
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த படம் பந்துலுவின் ரகசிய போலீஸ் 115 வண்ணப்படம் . எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து வைத்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் என்று வந்த படம் .எம்ஜிஆரின்
ஸ்டைல் , உடைகள் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும்தீவிர ரசிகர்களாக மாற்றியது .11/1/1968ல் வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .
குடியிருந்த கோயில் - 15.3.1968
.................................................. .........
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் அசத்திய மாபெரும் வெற்றி படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின்
மாறுபட்ட நடிப்பு படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி . திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா கோலம்.
மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமை சேர்த்த படம் . ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாற்றிய படம் .வசூலில் புதிய வரலாற்றை உருவாக்கிய படம் .
ஒளிவிளக்கு - 20.9.1968
*********************************
ஜெமினியின் முதல் வண்ணப்படம் .மக்கள் திலகத்தின் 100 வது படம் .பிரமாண்ட படைப்பு .மக்கள் திலகத்தின் சிறந்த
நடிப்பில் , பிரகாசித்த படம். ஜெமினி தயாரித்த படங்களில் அதிக வசூல் , அதிக நாட்கள் என்று பல சாதனைகள் புரிந்த படம் .மறு வெளியீட்டில் இலங்கையில் மீண்டும் 100 நாட்கள் ஓடிய படம் . மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடிய படம்
1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தன என்றால் மற்ற 5 படங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டது .
தேர்த்திருவிழா - பொழுது போக்கு நிறைந்த படம் .
கண்ணன் என் காதலன் - இன்னிசை சித்திரம் .
புதிய பூமி - ரசிகர்களை ஆண்டார் .
கணவன் - புதுமையான படம்
காதல் வாகனம்- ரசிகர்கள் விரும்பிய வாகனம் ..
.
MAKKAL THILGAM MGR FLIMS DUBBED IN TELUGU LANGUAGE. SOME OF THE MOVIES NAME AND ADVT
THAYIN MADIYIL
TELUGU - ANTHULENI HANTHAKUDU
http://i60.tinypic.com/ekap2.jpg
NEERUM NERUPPUM
ANNA THAMMULA SAPADAM
http://i60.tinypic.com/swqseh.jpg
NADODI MANNAN
ANAGANAGA OKA RAJU
http://i58.tinypic.com/2mi23j4.jpg
ALIBABAVUM 40 THIRUDRGALUM.
ALIBABA 40 DONGALU
http://i60.tinypic.com/dw73hu.jpg
KODUTHU VAITHAVAL
ADHRUSTAVATHI
http://i61.tinypic.com/255uii8.jpg
NALLAVAN VAZHVAN
http://i57.tinypic.com/2lc1yjp.jpg
BHAGDADH THIRUDAN
http://i60.tinypic.com/256s8if.jpg
PUTHIYA BOOMI
http://i61.tinypic.com/5x4tj5.jpg
175th day function of Ayirathil Oruvan update.
http://mgrroop.blogspot.in/2014/09/1...unction-8.html
Director P.Vasu speech.
https://www.youtube.com/watch?featur...;v=d1t4ht9Sim0
மக்கள் திலகம் திரியின் 11வது பாகத்தை துவக்கியுள்ள திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/el4m75.gif
https://www.youtube.com/watch?v=R5N6...ature=youtu.be
திரு. பம்மல் சுவாமிநாதன் அவர்களை இன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்துவதோடு, மக்கள் திலகத்தின் சிறப்பு மலர்களை தொடர்ந்து வெளியிட்டு ‘இன்று போல் என்றும் வாழ்க’ என வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Idhaya Veenai Hindi Version "Love In Kashmir "
http://i60.tinypic.com/2r3czyt.jpg
சென்னை தொலைக்காட்சியில் வளரும் கலைஞர் நிகழ்ச்சி. ஒரு சிறுவன் ஒரு புதியதோர் வாத்தியத்தில் கர்நாடக இசையை இலகுவாகக் கையாண்டு கைத்தட்டல் பெறுகிறார். யார் இந்தச் சிறுவன் என்று அந்த நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்த அனைத்து உள்ளங்களும் ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி இந்தச் சிறிய வயதில் இத்தனை திறமையா என்று வியக்கின்றன. அதே சமயத்தில் தமிழகத்தின் முதல்வர் அவர்களும் இந்த நிகழ்ச்சியை தற்செயலாகப் பார்த்து வியக்கிறார். யார் இந்தச் சிறுவன் ? இவனது முகவரி என்ன? இவனைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவை என உடனடியாக சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக விசாரிக்கிறார். உடனடியாகவே தனது உதவியாளரைக் காரில் அனுப்பி அந்தச் சிறுவனை அழைத்து வரச் செய்கிறார். ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்பு என்றவுடன் சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் அளவில்லாத ஆச்சரியம். பிரமிப்புடனே அங்கு சென்ற அந்த இளம் மேதைக்கு தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டுகிறார் தமிழக முதல்வர்.
மற்றொரு சமயம் அரசு விழாவில் அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பணிக்கிறார். தமிழக முதல்வர் வரும் வரை அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் வந்து விட்டார் என்றவுடன் சிறுவன் நிகழ்ச்சியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறான். ஆனால் முதல்வரோ அந்தச் சிறுவனிடம் தன்னால் அவனது இசை நிகழ்ச்சி தடைபட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு நில்லாமல் தொடர்ந்து வாசிக்கச் சொல்லி ரசித்து மகிழ்கிறார். கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சி நடைபெற ஆவன செய்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை அரசவை கலைஞராக அறிவிக்கிறார். பின்னாளில் உலகம் முழுவதையும் தனது கைவிரல்களில் மயக்கி மாண்டலின் என்ற புதியதொரு இசைக்கருவியை இயக்கி தன்வசப்படுத்திய அந்தச் சிறுவன் தான் மாண்டலின் சீனிவாஸ். http://i58.tinypic.com/30hom1h.jpgஅண்மையில் தனது பூவுடலை உதிர்த்த இந்த இளம்மேதையை இனம் கண்டு உரிய அங்கீகாரம் அளித்து பாராட்டிய முதல்வர் நம் மக்கள் திலகம் , பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். 19/09/2014 அன்று இறைவன் திருவடியை அடைந்த மாண்டலின் சீனிவாஸ் அவர்களது புகழ் காற்றுள்ளவரை நீடிக்கும். இறவா இசையை வழங்கிய அந்த இளம் கலைஞருக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம்.
http://i62.tinypic.com/97qgpy.jpg
another image taken at the same time
http://i60.tinypic.com/25yvuk0.jpg
குறுகிய காலத்தில் பாகம் 10 முடிவடைந்து பாகம் 11ஐத் துவக்கியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நண்பர் யுகேஷ் பாபுவுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும்
அன்பும், பணிவும் கலந்த வணக்கங்கள்..!!
http://i1094.photobucket.com/albums/...8fc178fe4d.jpg
இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நல்கிய அன்புச்சகோதரர் வினோத் அவர்களுக்கும், கலைவேந்தன் சாருக்கும், கைபேசி மூலம் அன்பான வாழ்த்துக்களை வழங்கிய அருமைச்சகோதரர் சி.எஸ். குமார் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்..!!
http://i1094.photobucket.com/albums/...bacb4cca1f.jpg
பாகம் பதினொன்றில் பீடு நடைபோடும் மக்கள் திலகம் திரி மென்மேலும் வளர்ந்து பற்பல பாகங்களைக் கண்டு தொடர் வெற்றி காண வளமான வாழ்த்துக்கள்..!!
பேரன்புடன்,
பம்மலார்.
http://i1094.photobucket.com/albums/...bacb4cca1f.jpg
மக்கள் திலகம் திரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனியநண்பர்கள் திரு ராகவேந்திரன் மற்றும் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி .
http://i62.tinypic.com/5bwfwp.jpg
Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்