¦¿ïº¢¨É ¿¢¨Ä ¿¢Úòоø.
¸¢¨Ç¾¨É §Å¦ÃýÚ ÁÂí¸¢É÷.
¸¢¼ôÀ¨¾ô ÀÈôÀ¾¡ö ¿¢¨Éó¾É÷;
«¨Ä¸¢È ¦¿ïº¢¨É ¿¢Úò¾¢É¡ø
«¨ÉòÐõ ÅÂôÀÎõ ¾¢Õò¾Á¡ö.
þÚ츢 ¸ðÊÉ¢ø ¦¿¡Úí¸¢Îõ;
þÇ츢 ¸ðÊÉ¢ø ¾Ç÷ó¾¢Îõ;
ºÃ¢ôÀ¼ì ¸ðθ ÁÉò¾¢¨É;
º¡ö׸û þÄ¡Áø ÁÄ÷ó¾¢Îõ.
Printable View
¦¿ïº¢¨É ¿¢¨Ä ¿¢Úòоø.
¸¢¨Ç¾¨É §Å¦ÃýÚ ÁÂí¸¢É÷.
¸¢¼ôÀ¨¾ô ÀÈôÀ¾¡ö ¿¢¨Éó¾É÷;
«¨Ä¸¢È ¦¿ïº¢¨É ¿¢Úò¾¢É¡ø
«¨ÉòÐõ ÅÂôÀÎõ ¾¢Õò¾Á¡ö.
þÚ츢 ¸ðÊÉ¢ø ¦¿¡Úí¸¢Îõ;
þÇ츢 ¸ðÊÉ¢ø ¾Ç÷ó¾¢Îõ;
ºÃ¢ôÀ¼ì ¸ðθ ÁÉò¾¢¨É;
º¡ö׸û þÄ¡Áø ÁÄ÷ó¾¢Îõ.
நான் அப்புறம் தெரியமாட்டேன்!
அவன் வரும்வரை
நானிருப்பது
தேன்மலர்களில் நீர்த்துளிகளாய்!
்!
நாள்தோறும் நடப்புகளை
ஒலிபரப்பில் செவிமடுத்து
மாள்வோரின் கணக்கைத்தான்
மனம்கொண்ட பொழுதில்நா(டு)
ஆள்வோர்தாம் அறிந்தாய்ந்தே
அமைதிக்கு வழிகாண
மீள்வாரோ கிளியேநீ
மிழற்று.
Hope springs eternal in human breast!
Well said Madam. Thanks.Quote:
Originally Posted by pavalamani pragasam
கொடிய விலங்குகள் கொல்தொழிற் காட்டில்
விடிய விடிய விழித்துக் --- கடிகாவல்
முன்கொண்டு தாமே முனைப்போடு வாழ்ந்திட்ட
வன்மைசேர் காலத்தில் மாண்டோரும் --- பன்மையோர்!
ஒண்மை அறிவியல் ஓச்சும் அரசுயர்
தன்மை உடையவிந் நாளிலே -- புன்மைசேர்
குண்டுகளால் துன்பக் குறுநேர்ச்சி தம்மினால்
பண்டுபோல் மாண்டோரும் பல்லோராம் --- என்றுமே
மாளவே பற்பல காரணங்கள் அல்லாமல்
மாளுதலில் மாற்றமென் றொன்றில்லை --- கேளுமே!
போவ துறுதி! புதுப்புதுக் காரணங்கள்!
நாவில் தவழ்சொல்லும் நல்லதே -- மேவினோ,
ஆவதோர் குற்றமும் ஆங்கில்லை நோவதேன்?
கூவுக தேவனின் பேர்.
போடும் படையலுக்குப் பொங்கும் முறைவேறு;
கூடும் விழவுக்கு வேறுமுறை --- நாடுங்கால்
பொங்கல் பலவிதமே; பொன்னான பண்டிகைப்
பொங்கலுக் கீடில்லை போ!
arumai
நன்றி பிரபா.Quote:
Originally Posted by Shakthiprabha
kavithaich chAralil nanaihirOm nAn~gaL.
tavarAmal mummAri pozhivadu ingutAn - kavinmigu
sollAl, adanin 'mayyak' karuthAl,
nalladOr viLaichal peTROmE.
(PS -'mayya(m)' - our web site).
V.Annasamy
Quote:
Originally Posted by V.Annasamy
கவிதைச் சாரலில் நனைகிறோம் நாங்கள்
தவறாமல் மும்மாரி பொழிவது இங்குதான் -- கவின்மிகு
சொல்லால் அட நின் "மையக்" கருத்தால்
நல்லதோர் விளைச்சல் பெற்றோமே!
சுவைத்துப் பாராட்டியமைக்கு நன்றி வி.அ. அவர்களே.
'valai'yil kavithai maaligaL
kaalai mudal maalaivarai,
kalai maNaththuDan valamvara,
kalaiya maRukkiradu palauLLam.
pookkaLpOl siRappumihu vaNNangaLil
paakkaLum piRakkiradu minnalgaLaay;
tEkkamilaa neerOTTam pOnDrE.
aakkamihu paDaippugaL paNNuvOM.
-va-
தமிழ் எழுத்துக்களில்:Quote:
Originally Posted by V.Annasamy
வலையில் கவிதை மாலைகள்
காலை முதல் மாலை வரை;
கலை மனத்துடன் வலம்வர
கலைய மறுக்கிறது பலவுள்ளம்;
பூக்களைப்போல் சிறப்புமிகு வண்ணங்களில்
பாக்களும் பிறக்கின்றன மின்னல்களாய்;
தேக்கமிலா நீரோட்டம் போன்றே
ஆக்கமிகு படைப்புகள் பண்ணுவோம்.
சரிதானா?
நன்றாக இருக்கிறது. வரிகளில் கவிதை நயம் வெளிப்படுகிறது. நிறைய எழுதுங்கள் என் பாராட்டுகள்.
it is kalai maNaththuDan (moondru suzhi Na like in vaNakkam)
kAlai mudal mAlaivarai (together). This poetry has 3 sentences for each line.
thanks for the tamizhAkkam, which gives a better thAkkam (impact). I do not have tamil font, though I am fond of doing so.
Also I want to highlight, in this poetry, both kalai and mAlai have been used to indicate two different meanings, as everybody would have noticed.
Again thanks for the appreciation.
va
உங்கள் கவிதையில் "மணம்"தான் கமழ்கின்றது.
என் விரல்கள்தாம் "மனம்" நாடிச் சென்றுவிட்டன -- அவை தட்டச்சில் தவழும்போது.
கவனித்துக்கொண்டேன்.
விளக்கம் சிறப்பானது.
நன்றி.
மேலும் எழுதுங்கள் -.....
நலமா என்று உசாவிய நண்பருக்குப் பாடியது.
================================================
நலமே நலமறிய ஆவல்;கேட் டீரெப்
புலமேநீர் போய்விட்டீர் பின்பு ---பலநாளும்
வாய்திறந்து நற்சொல் வழங்காது நின்றார்முன்
நீர்தாம் நெறிசிறந் தீர்
நாளும் நலமே விரும்பிடும் நண்பர்கள்.
கொளுத்தும் வெயிலிடையே குளுகுளு சொற்கள்.
எளிதான பாக்கள் எழிலாய் கோலமிட
களிப்புற்றது 'மையமே', இவ்வையமும் தான்.
san-thikkum vELai
n-alamA enavinavi,
mun-thik koLalthAn
muzuvathum ANiyalpu;
thOziyarO punnakaippAr;
thoddoLirum kaNkaLumE;
vAziyena vAzththAtha vAzththu.
சந்திக்கும் வேளை
நலமா எனவினவி
முந்திக் கொளல்தான்
முழுவதும் ஆணியல்போ?
தோழியரோ புன்னகைப்பார்;
தொட்டொளிரும் கண்களுமே!
வாழியென வாழ்த்தாத வாழ்த்து.
அத்தி பூத்ததோ
நன்றி Mdm.Quote:
Originally Posted by pavalamani pragasam
தெளிவாய்த் தெரியாத கண்கள்
அரைக் குருடு!
ஒளியே இல்லாத கண்கள்
முழுக் குருடு!
மலிவாய்க் கிடடாத எண்ணெய்
அதுவும் "குருடு!"
எளியோர்க்கு உதவ இயலா
நிதிவல்லோர் தாமும் குருடே!
அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!
வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!
குருட்டு உலகில் குருடு காரணம்
கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.
நிலைமை மாறுமோ?
துன்பம் தீருமோ?
nandraga irikkirathu. bold aakkaptta varigaLai mattum nagaichuvaikaaga serkapattatheninum rasikka mudiyavillai.Quote:
Originally Posted by bis_mala
//nandraga irikkirathu. bold aakkaptta varigaLai mattum nagaichuvaikaaga serkapattatheninum rasikka mudiyavillai.//
" ' குரூடு ' எண்ணெய் மலிவாய்க் கிட்டவில்லை" என்பதில் நகைச்சுவைக்கு இடமில்லை என்று கோடி காட்டிய நண்பருக்கு நன்றி. நகைச்சுவைபோல் தோன்றினாலும் அவல நிலையைக் காட்டுவதே இக் கவிதை.
கவிதையை வாசித்ததற்கும் என் நன்றியும் வணக்கமும்.
மொழிநூல் அறிஞர் அகத்தியலிங்கம்
தமிழ்த்தொண்டால் விரிந்தபுகழ் அடைந்த செம்மல்
தஞ்சையிலே பல்கலையில் தலைமை ஏற்றார்
அமிழ்தமொழிப் பெருமைதனை உலகம் காண
அயர்வின்றி உழைத்திட்ட அறிவின் மேலோர்்;
கமழ்தருமோர் மொழியறிவுக் கலையை, வெல்லும்
கணிப்புடைய கருத்துகளை எடுத்துச் சொன்னார்
இமிழ்கடல்சூழ் உலகிலகத் தியலிங்கம் போல்
இனியொருவர் இல்லைஇது துயரம் தானே.
ஓபாமா
கறுப்பினத்தார் மிசையிருந்த காய்தல் மாறிக்
கணித்ததொரு பொருத்தம்போல் ஏற்றுக் கொண்டு,
பொறுப்பினிலே குடியரசின் மேலோன் ஆகப்
புகுத்திவிடப் பொதுத்தேர்தல் மேவச் செல்லும்
மறுப்பரிய ஓபாமாவின் ஏற்றம் போற்றி
மதிப்புரைகள் மலிந்துவரும் மாண்பில் ஞாலம்
விருப்பினுடன் ஈடுபடும் ; வேறு பாடு
வேருடனே களைவுற்று வீழ்ச்சி காணும்.
ஒரு தோட்டத்துப் பூ.
தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
தொட்டிட வந்தாய் தோழி
காற்றென அசைத்தாள் என்னைக்
காத்தனள் கொஞ்சநேரம்;
ஆட்டமோ என்னைக்கண்டே
அசையாதே என்றவாறு
பூட்டினாய் விரல்கள் என்மேல்;
பூவெனைப் பறித்தேவிட்டாய்!
வருடினாய் விருப்பம்போலே
வகைகெட மாட்டிக்கொண்டேன்
நெருடினாய் நிமிர்த்திமோந்து
நேர்ஒரே முத்தம்தந்தாய்!
குருடனே என்றேவையக்
கொதித்திட வலிமையில்லை.
மருள்தரக் கசக்கிப்பின்னே
மாய்ந்திடக் களைந்திடாதே!
உலவத் துணை
இனிய தென்றல் வீசி எனைத்
தாலாட்டுதே...
என் தனிமை இன்பத்திற்கு அது
ஒரு மெருகூட்டுதே.
காணும் அழகு அனைத்தையும்
நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன்
சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும்
மனமே நிலைத்து நின்றேன்.
அன்னை இயற்கையின் அழகினில் களித்திட
இன்னொரு துணையும் வேண்டுவதோ?
என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ!
துணையும் வேண்டுமெனில்
துணை நீ மெல்லிய பூங்காற்றே....
உலவிடுவேன் உன்னுடனே.
நிலவிடும் தனிமை மாறாமலே.
தென்றலுக்கோர் சிறப்பான
மென்மையுண்டு. இளமையோடு அன்று
அலர்ந்த நல்ல
மலர்போலே.
உலவத் துணையாக மெல்லிய பூங்காற்று வரின் இனிமையாகத்தான் இருக்கும்.
கரியமிலக் காற்றுடன் கைகோர்த்த உவர் உலாத் தனிமையும் ஏதோ ஒரு இன்பத்தையே அளிக்கிறது.
குறிஞ்சி நிலத்துக்குக் குடிபெயர்ந்து குளிர் பூங்காற்றுடன் உலா வந்த இன்பம் கிட்டியது தங்கள் கவிதையில்.
நன்றி.
Poem featured in Bannari Mariamman Engg.College magazine (published in Ananda Vikatan)
" தாய் " - சிறு குறிப்பு வரைக
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
' குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே '
என்றார் அண்ணன்
' எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !
rangan, in this thread bis_mala posts her kavithaikaL. There is another thread for
what 'sharing what you enjoyed reading' where I have already posted the kavithai you have quoted! :)
Oh! very sorry.Quote:
Originally Posted by pavalamani pragasam
BTW, where can I find that thread ? Link pls.
:ty:Quote:
Originally Posted by pavalamani pragasam
காகிதத்தால் ஆனதொரு நூலென் றாலோ
கைதவழும் கண்படிக்கும் போதில் ஓடிப்
போகுமென அஞ்சிடவே வேண்டா நாமும்
பொழுதெல்லாம் வாசிப்போம் நெஞ்சம் துள்ளும்;
ஆகுமொரு நல்லிணையம் தன்னில் ஒன்றை
ஆர்வமுடன் நாம்படித்துக் கொண்டி ருக்க,
நோகவது போய்மறைந்தே மாய மாகி
நுகர்வழியும் போக்கதனை நோக்கு வீரே!
மிக்க சரியாய் சொன்னீர்கள்! சேமிக்க மறந்து பட்ட துயர் கொஞ்சமல்ல! அகராதியின் பக்கங்கள் நைந்து போன நிலையிலே-கிட்டதட்ட 40 வருட பயன்பாட்டில்- அத்தனையும் நோகாமல் நொடியில் கிடைக்குது கணிணியிலே! நவீன தொழில் நுட்பம் வாழ்க!
ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Happy NY 2009 to Madam P.P and all our forum staff and friends..
அவ்வண்ணமே ஆகுக!
புத்தாண்டே வருக!
புத்துணர்ச்சி தருக!
மன்றம் மகிழ்வாகுக!
உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.
புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.
நம்பிக்கையுடன் காத்திருப்போம்Quote:
Originally Posted by bis_mala