Quote:
Originally Posted by Sureshs65
The bottomline is that if people don't like Raja's voice, it is their loss. As Jai had mentioned in an earlier post, you cannot think of _anyone_ doing justice to those Tiruvasagam songs.
என்னதான் சொல்லுங்கள்.
திருவாசக இசைத்தகட்டில் இருக்கும் ஐந்து பாடல்களையும்
ராஜா மட்டுமே பாடாமல், சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, உன்னி கிருஷ்ணன், ஏசுதாஸ், சித்ரா இப்படி பலவிதமான பன்முகத்திறமையுள்ள பாடகர்களை பயன்படுத்தி இருந்தால் திருவாசகத்திற்கு தற்போது கிடைத்திருக்கும் வீச்சை விட நிச்சயம் அதிகமாக இருந்திருக்கும். எல்லா பாடலையும் ராஜாவா என்ற முகச்சுலிப்பு இன்னும் தமிழ் நாட்டில் வெகுஜன மக்களில் நிறைய பேருக்கு இருக்கிறது.
தமிழைக் கூட ஆங்கிலத்தில் எழுதி பாடும் பவதாரிணியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கொஞ்சம் சக பாடகர்கள் மீதும் காட்டியிருக்கலாம். ராஜா தனது குரல் மூலம் ஜஸ்டிஸ் செய்தார் என்பதெல்லாம் கண்துடைப்பு. மற்ற தொழில் முறை பாடகர்களுக்கு ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படாமல், ராஜா தனது குரலில் ஜஸ்டிஸ் செய்திருக்கிறார் என்று சொல்வதில் எந்த அளவுக்கு தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு பிச்சை பாத்திரம் மது பால கிருஷ்ணன் குரலில் நன்றாகவே வந்திருக்கிறது. எனக்கு ராஜாவின் ரமண மாலை பிச்சை பாத்திரத்தை விட மதுவின் குரல் பிடித்திருக்கிறது.
பவதாரிணியைப் போல எல்லோருக்கும் ஒரு வெளி இருக்கிறது. வள்ளுவன் சொன்னதுபோல,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
select a person with appropriate means to tackle the kind of job and entrust it for efficient management.