Life of Pi படம் இன்னும் பார்க்க வில்லை. அதில் ஒரு காட்சியில் வசந்தமாளிகை போஸ்டர் இடம் பெறுவதாக அறிகிறேன். நண்பர்கள் யாராவது பார்த்திருந்தால் விளக்கவும்.
Printable View
Life of Pi படம் இன்னும் பார்க்க வில்லை. அதில் ஒரு காட்சியில் வசந்தமாளிகை போஸ்டர் இடம் பெறுவதாக அறிகிறேன். நண்பர்கள் யாராவது பார்த்திருந்தால் விளக்கவும்.
உறவுகள் எல்லோரும் வசந்தமாளிகை கொண்டாட்டத்தில் மூழ்கிக்கி இருக்கின்றீர்கள் போல் தெரிகிறது சந்தோசம்
அப்படியே கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பதிவிட்டு எங்களையும் கவனிங்கப்பா
We are eagerly waiting for the very attarctive, valuable, informative posts of Thiru Pammalar and Thiru Murali Srinivas.
a trial - NT's VASANTHAMALIGAI POSE in 3D. view with 3d glasses and give your opinion
http://i872.photobucket.com/albums/a...da/ntvm3d1.jpg
Raghavendra-ji: Just checked with 3D glass at home. Sorry to say that there was no effect. Something is missing.
28-01-2012 தேதியிட்ட பழைய சித்ராலயா இதழ் ஒன்றை இன்று காண நேர்ந்தது. அதில் வசந்த மாளிகை பற்றிய ஒரு குறிப்பு. ஜனவரி 19,1972 புதன் அன்று படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. எப்படி கெளரவம் படத்திற்கு பூஜை போட்டவுடன் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டதோ அதே போல் இந்த படத்திற்கும் முதலில் படமாக்கப்பட்ட காட்சி என்ன தெரியுமா? வாணிஸ்ரீக்கு திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் அங்கே வாணிஸ்ரீயை ஆசிர்வதிக்க வரும் நடிகர் திலகம் மண்டபத்தின் பின் வாயில் வழியாக வருவாரே, அந்தக் காட்சியும் தொடர்ந்து தன காலில் விழுந்து வணங்கும் வாணிஸ்ரீயை கண்ணீர் மல்க அவர் ஆசிர்வதிக்கும் காட்சி ஆகியவைதான் முதலில் படமாக்கப்பட்ட காட்சிகள். முதல் நாளிலேயே அந்த lead scene to climax-ஐ எப்படி பண்ணியிருக்கிறார்? வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் நண்பர் ஜோ சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. நடிகனுக்குத்தான் வரிசை கிரமம் எல்லாம். நடிப்பிற்கு ஏது வரிசை?
Dedicating this to Gopal !
அன்புடன்
1972 ஜனவரி 19 புதனன்று வசந்த மாளிகை பூஜை! ஜனவரி 26 புதனன்று ராஜா ரிலீஸ்! பிப்ரவரி 2 புதனன்று ராஜ ராஜ சோழன் பூஜை!
Could u pls inform about the release date of the movie Mr Murali Sir
வாசுதேவன் சார்,
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து வரிவிலக்கு அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவிடம் ஸ்கிரிப்ட் முதலியவற்றை பக்காவாக சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்.படத்தை பார்த்த பிறகு குழுவினர் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கும் சான்றிதழில் கையொப்பமிடுவர். ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அதை சுட்டிக் காட்டி அவற்றை நீக்கவோ மாற்றி அமைக்கவோ பரிந்துரை செய்வர்.
வசந்த மாளிகை திரைப்படம் இன்று குழு உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக எந்த ஆட்சேபனைகளுமின்றி கையொப்பம் இட்டனர் என தெரிய வருகிறது. ரிலீஸ் தேதியை பொறுத்தவரை டிசம்பரில் இல்லை. கும்கியின் பிரம்மாண்ட வெற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இன்று வெளியாவதாக இருந்த இரண்டு புதிய படங்களின் ரிலீஸ் தேதியை கூட தள்ளிப் போடவைத்துள்ள சூழலில் இந்த மாதம் நல்ல அரங்குகள் கிடைப்பது கடினம் என்பதாலும் ஜனவரி மாதத்தில் வெளியிடலாம் என நினைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இன்றைய நிலவரப்படி அநேகமாக நமக்கு ராசியான ஜனவரி 26 அன்று வெளியாகலாம். இந்த மாத இறுதியில் இதைப் பற்றி சரியாக தெரிய வரும் என சொல்கிறார்கள்.
அன்புடன்
Thanks for the update Mr Murali Sir