சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில், 3.9.2010 வெள்ளிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் உன்னத காவியமான "உத்தமபுத்திரன்" திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது.
அன்புடன்,
பம்மலார்.
Printable View
சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில், 3.9.2010 வெள்ளிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் உன்னத காவியமான "உத்தமபுத்திரன்" திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது.
அன்புடன்,
பம்மலார்.
கோவை டிலைட் திரையரங்கில், 4.9.2010 சனிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, வாழ்வியல் திலகத்தின் காலத்தை வென்ற காவியமான "வசந்த மாளிகை" வெளியாகி வெற்றி வாகை சூடி வருகின்றது. அரங்கில், கலையுலக சக்கரவர்த்திக்கு பேனர்கள் வைக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று 5.9.2010 ஞாயிறு மாலைக் காட்சிக்கு, நமது நல்லிதயங்களின் ஆரவாரங்களினால், அந்தப் பகுதியே களை கட்ட உள்ளது.
இதே டிலைட் திரையரங்கில், இதயதெய்வத்தின் 83வது ஜெயந்தியை முன்னிட்டு, வருகின்ற 1.10.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை" வெளியாக உள்ளது.
இந்த இனிக்கும் தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள லக்ஷ்மி திரையரங்கில், வரும் 17.9.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".
அன்புடன்,
பம்மலார்.
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், நாளை 24.9.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சொக்கநாதரின் "சொர்க்கம்".
அன்புடன்,
பம்மலார்.
#63 pammalar
http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
Senior Member Veteran Hubber
Join DateSep 2009LocationChennaiPosts3,294Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngThanks (Given)0Thanks (Received)2Likes (Given)0Likes (Received)6
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 24.9.2010 வெள்ளி முதல் 30.9.2010 வியாழன் வரை ஒரு வார காலத்திற்கு, தினசரி 4 காட்சிகளாக, 'நசநச' என்று பெய்த மழையையும் மீறி, சக்கை போடு போட்டுள்ள ஸ்டைல் சக்கரவர்த்தியின் "சொர்க்கம்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்). பழைய பட மறுவெளியீடுகளில் இது மலைக்க வைக்கும் சாதனை.
"சொர்க்க"த்தை திரையிட்டவருக்கு பூலோகத்தில் 'சொர்க்கம்' என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ!
பெருமிதத்துடன்,
பம்மலார்.
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், இன்று 19.11.2010 வெள்ளி முதல் தினசரி 3 காட்சிகளாக, சாதனைத் திலகத்தின் "புதிய பறவை".
அன்புடன்,
பம்மலார்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், 26.11.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, தேசிய திலகத்தின் "தியாகம்" திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது.
அன்புடன்,
பம்மலார்.
திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில், நேற்று 30.11.2010 செவ்வாய் முதல், மூன்று நாட்களுக்கு மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரையிடப்பட்டு அமோக வரவேற்பு பெற்று வருகின்றது.
இத்தகவலை எமக்களித்த சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
"அடாது மழை பெய்தாலும் விடாது வித்யாபதியை வரவேற்போம்"
தற்பொழுது திண்டுக்கல் நகரின் என்.வி.ஜி.பி. திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலைமகளின் மானுட வடிவமான நமது நடிகர் திலகத்தின் "சரஸ்வதி சபதம்" திரையிடப்பட்டு, கடும் மழையிலும் வசூல் மழை பொழிந்து, பெரும் வெள்ளத்திலும் மக்கள் வெள்ளத்தை பெற்று ஜெயக்கொடி நாட்டி வருகிறது.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
பழனி தாலுகாவில் உள்ள புதுஆயக்குடி என்கின்ற சிற்றூரில் இருக்கும் கோமதி டூரிங் டாக்கீஸில், நேற்று 13.12.2010 திங்கள் முதல், தினசரி 2 காட்சிகளாக, கலையுலக மன்னர்மன்னனின் 286வது திரைக்காவியமான "மன்னவரு சின்னவரு" திரையிடப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பப்ளிசிடிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், அர்ஜுனும், சௌந்தர்யாவும் வட்டங்களுக்குள் சிறிதாக இருக்கிறார்கள். அதே சமயம் அந்த போஸ்டர்களில் நமது நடிகர் திலகம் Full Standingல் பெரிதாக, பிரதானமாக காட்சியளிக்கிறார்.
இனிக்கும் இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.