பாடலாசிரியர் கம்பதாசன் அவர்களின் நினைவலைகளைத் தூண்டிவிட்டு விட்டார் வாசு சார். தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் கம்பதாசன். புதுவை அருகில் வில்லியனூர் அவருடைய சொந்த ஊர். இயற்பெயர் ராஜப்பா. 1939ல் வெளிவந்த வாமன அவதாரம் அவருடைய முதற்படம். கம்பதாசனுக்கு மிகப் பெரிய புகழ் ஈட்டிய பாடல், அருள் தாரும் தேவ மாதாவே என்கிற ஞான சௌந்தரி திரைப்படப் பாடல். இதே போல் மங்கையர்க்கரசி திரைப்படத்தில் இடம் பெற்ற பார்த்தால் பசி தீரும் பாடலும் இவரைப் புகழேணியில் ஏற்றி உச்சாணிக் கொம்பில் வைத்ததாகும். கண்கள் திரைப்படத்தில் இடம் பெற்று சந்திரபாபு பாடிய ஆளு கனம் ஆனா மூளை காலி பாடலும் இவருடைய யதார்த்த நடைக்கு பெயர் பெற்றது. எம்.ஜி.ஆர். நடித்த சாலி வாஹனன் திரைப்படத்திற்கு வசனம் பாடல்கள் கம்பதாசன். இவரைப் பற்றியும் இவருடைய பாடல்களைப் பற்றியும் மற்றும் அதிகம் அறியப் படாத கவிஞர்களைப் பற்றியும்
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்
என்கிற தலைப்பில் ஒரு தொடர் எழுதலாம் என எண்ணுகிறேன். தங்களுடைய கருத்துக்களைப் பொறுத்து இதனை செயல் படுத்த உத்தேசம்.
அது வரை
அருள் தாரும் தேவ மாதாவே
http://youtu.be/KRM0zm_aptg