https://www.youtube.com/watch?v=ao4lKDDA2O4
Printable View
இந்த ரஞ்சித் முன்னாலே யாரும் சிகரெட் பிடிக்க கூடாது under stand
https://www.youtube.com/watch?v=l0-q3zz9KVg
இங்கே இருந்து நிலவை தொடலாம் ஏன் அந்த கடவுளுக்கே கை கொடுக்கலாம்
https://www.youtube.com/watch?v=X6K8h_qsg7c
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை...
Good quality matters, not the quantity.
http://www.youtube.com/watch?v=-9x1dYO2V3Y
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை என்ற தொடர் தினமலரில் வெளிவந்து கொண்டு இருக்கிறது அதில் வாசகர்களின் கருத்தினை இங்கு நான் பதிவு செய்கிறேன் .
எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வதில் எம்.ஜி.ஆர். வல்லவர். அதே சமயத்தில் எதிர்பாராத சந்தர்பங்களில் வரும் வாய்ப்புகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் சகலகலா வித்தகர் என்று இந்த கட்டுரை உணர்த்துகிறது. ///மீன் கண் காட்சி பற்றி, கேள்விப்பட்டிருந்தேனே தவிர, நேரில் பார்த்தது இல்லை. கட்டணம் செலுத்தி, உள்ளே சென்றோம். அதன் உரிமையாளரிடம், 'இதைப் படமாக்க வேண்டும் பகலில் செய்து காட்ட இயலுமா?' என்று கேட்டோம். அதற்கு அவர், 'தனக்கு அதற்காக பணம் வேண்டாம் என்றும், காட்சி நடைபெறும் போதே படமெடுத்துக் கொள்ள இயலுமானால், எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று, சொல்லி விட்டார். மீன் சர்க்கசை நானும், சந்திரகலாவும், நாகேஷும் பார்ப்பது போல, படமாக்கினோம். நாய், புலி போன்றவை, நெருப்பு பற்ற வைத்த வளையத்திற்குள் பாய்வது போல், மீன் தண்ணீரிலிருந்து மேலே எழும்பி, அந்த வளையத்தின் வழியாக பாய்ந்து, மறுபுறம் தண்ணீருக்குள் விழும். இக்காட்சியையும், வேறு ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளையும் படமாக்கி, அங்கிருந்து புறப்பட்டோம்./// "சம்சாயி" என்ற பாடல் காட்சியில் இவைகள் வரும். அவ்வளவு சிறப்பாக எடுத்திருந்து இருப்பார். அங்கு இங்கு என்று போகிற இடங்களில் எல்லாம் கேமராவில் சுட்டதை படத்தொகுப்பு மூலமாக பாடலில் புகுத்தி...... வாவ்..... கிடைக்கிற கேப்புலே எல்லாம் எப்படி ஆப்பு அடிச்சு இருக்கிறார்...... அதனால்தான் வாத்தியார் அரசியலில் களம் இறங்கிய போது இவர் நம் பக்கம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று அண்ணாவும் நம்பினார், ஆருயிர் நண்பர் என்று சொல்லிகொள்பவரும் நம்பினார். நேரு மகளும் நம்பினார், வேலுப்பிள்ளை மகனும் நம்பினார்..... உன்னை நான் சந்தித்தேன் நீ "ஆயிரத்தில் ஒருவன்"....
ஒவ்வொரு சம்பவங்களையும் அழகு தமிழில் மக்களை கவரும்படியாக என்னமாய் விவரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள். ஒரே நாளில் இந்தத்தொடரை படித்துவிடவேண்டும் என்ற ஆவல் எனக்கு. வழி செய்யுமா தினமலர் ?
உண்மைதான் மகேந்திரன், அதனால் தான் எம்.ஜி.ஆர். படங்களில் திரைக்கதை தோய்வில்லாமல் சிறப்பாக இருக்கும். எல்லா கதைகளும் அடிப்படையில் நீதி நேர்மை கடமை என்று ஒரே மாதிரியாக இருந்தாலும் அதை விவரிக்கும் போது திரைக்கதையில் கவனம் செலுத்தி சுவாரஸ்யமாக மக்களுக்கு தந்து விடுவார். அவர் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் உப்பில்லாமல் சுவை குன்றி செய்திச்சுருள் படமாக இருந்திருக்கும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் மட்டுமே திரைக்கதை மூலமாகவும் தன் வசீகரத்தாலும் எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் ஒரு ஜனரரஞ்சகமான படத்தை தர முடியும். எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்ததினால்தான் என்னவோ கே.பாக்கியராஜ் கூட ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்க முடிந்தது....
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். தன்னை சுற்றி உள்ளவர்கள் எல்லோரிடமும் நம்பிக்கை வைத்துதான் உள்ளன்போடு பழகுவார். பொன்மனம் கொண்டவர் அல்லவா? ஆனால் அதே சமயத்தில் தன் நிழலை கூட Z+ Security பாதுகாப்புடன் தான் வைத்து கொள்வார்.....அதான் எம்.ஜி.ஆர். ( அவரின் மெய்காப்பாளர் ராமகிருஷ்ணன் மலேஷியா நேர்காணல் நிழழ்ச்சியில் சொன்னது ). "பாயும் புலியின் கொடுமையை, இறைவன் பார்வையில் வைத்தானே.....புலியின் பார்வையில் வைத்தானே- இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே - இதய போர்வையில் மறைத்தானே கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் - அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும் கைகளை தோளில் போடுகிறான்-அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான், கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான் போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை குடுத்தானே-இறைவன் புத்தியை குடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே - மனிதன் பூமியை கெடுத்தானே" என்று உண்மையை எடுத்து சொன்னவர் வாத்தியார். அப்படிப்பட்டவர் உணராமல் இருந்திருப்பாரா...... சொல்லுங்கள் சுந்தரம்........
ஒரு சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைவுக்கு பிறகு..... எதோ ஒருத்தர் இரண்டு பேர் விலகினால் அதை துரோகம் என்று கூறலாம் உங்கள் பாணியில் எட்டப்பன் என்று கூட சொல்லலாம். ஆனால் தலைமை மாறிய பிறகு அவரது விசுவாசிகள் அனைவருமே கட்சியிலிருந்து விலகி விட்டார்கள். இதில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை மட்டும் எட்டப்பன் என்று எப்படி கூற முடியும்? இன்னொரு விஷயம்: சென்றவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் மறவாமல் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழை பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்த சம்பவங்களை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அது ஆர்.எம்.வீ. யாக இருந்தாலும் சரி, பண்ருட்டியாராக இருந்தாலும் சரி, திருநாவுக்கரசாக இருந்தாலும் சரி, பாக்கியராஜாக இருந்தாலும் சரி...... எந்த கட்டத்திலும் இவர்கள் புரட்சி தலைவரை தாழ்த்தி தாங்கள் சார்ந்திருந்த புதிய கட்சி தலைமையை உயர்த்தி அது கருணாநிதியாக இருந்தாலும் சரி சோனியா காந்தியாக இருந்தாலும் சரி விஜயகாந்தாக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி பேசியது இல்லை........
எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.
ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது
1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.
வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.
அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.
வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது.
மற்றபடி-வள்ளலின் அனைத்து செயல்பாடுகளும், நிகழ்த்திய அற்புதங்களும் ஓர் அவதாரத்தின் தன்மையாகவே திகழ்ந்தன.
பூமியை வெட்டித் தங்கத்தைப் புதைத்தோம்!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக்கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், இதிகாசத் தலைவன் எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்.
அதனால்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!” என்றும்;
“இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம். ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்றெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றியே இதய வெளிப்பாட்டை எழுதிக் காட்டினார்கள் அறிஞர் பெருமக்கள்.
பொன்மனச் செம்மலின் யானை பலத்திற்கும், குணத்திற்கும் எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த நிகழ்வு இது.
அறுபதுகள் வரைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் நாடக மேடைகளிலும் மின்னிக் கொண்டிருந்தார்.
அன்று தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது அந்ந நாடக்க் குழுவிற்கு மட்டுமல்லாமல், மக்கள் திலகத்தின் அனைத்துக்ச் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கியவர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.
திருவாரூரில் மக்கள் திலகத்தின் நாடகத்தை நடத்த, ஆர்.எம். வீரப்பனிடம், தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன் என்பவர். ஆர்.எம். வீ. அவர்கள் புரட்சித் தலைவரிடம் விஷயத்தைக் கூற, புரடிச்த்தலைவரும் சந்தோசமாக தேதி தருகிறார். நாடகத்திற்கென்று சல்லிகாசு வேண்டாம். போக்குவரத்து செலவு மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் இதைக்கேட்டதும்,
ஆம்.எம்.வீக்கு மட்டுமல்ல தில்லையாடி சிவராமனுக்கும் அதிர்ச்சி. காரணம், வெளியூர் நாடகங்களுக்கு எம்.ஜி.ஆர் நாடக மன்றம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் நமக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லியிருக்கிறாரே மக்கள் திலகம். எப்படியோ தேதிகிடைத்துவிட்டதுஸ இதற்கான காரணத்தைக் கண்டுகொள்ளமுயற்சிக்கும் நேரமல்ல இது என்று அவசர அவசரமாக, ஆனந்தத்துடன் ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ அவர்களிடம் கொடுக்கிறார் தில்லையாடி சிவராமன்.
இருந்தும், இந்த இன்பச் சலுகையைத் தனக்கு மட்டும்மக்கள் திலகம் அளித்ததற்கான காரணத்தைத் தேடுகிறார் தில்லையாடி. பிறகுதான் தெரியவருகிறது தில்லையாடி சிவராமனுக்கு.
‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் போற்றுவதற்குரியவராகத் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். இன்றைய முதல்வர் கலைஞர் அவர்க்கின் அன்பையும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் நேசத்தையும் நிறைவாகப்பெற்று யிருந்தவர் என்பது ஊரறிந்த உண்மை.
ஒருசமயம் லாயிட்ஸ் ரோடு, முத்து முதலி தெருவில் உள்ள வீட்டில்மக்கள் திலகம் தங்கியிருந்த போது, அவரது நாடக் குழுவில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமன் வரவழைக்கப்பட்டார்.
தனது கம்பீரமான குரலில் பாடி மக்கள் திலகத்தைப் பரவசப்படுத்துகிறார் சிவராமன். அவரை ஒருநிமிடம் இருக்கச்சொல்லிவிட்டு உள் அறைக்ககுச் செல்கிறார் மக்கள் திலகம். அந்த நேரம்பார்த்து, அங்கு வேலை செய்யும் பசுபதி, தில்லையாடி சிவராமனை டீ சாப்பிட வெளியே அழைத்துச் சென்று, “இப்பொழுது எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவர் பிழைப்பில் நீங்கள் ஏன் மண் அள்ளிப்போடுகிறார்கள்?” என்று தில்லையாடி சிவராமனிடம் கேட்கிறார். அவ்வளவுதான்! தில்லையாடி அவர்கள் டீ சாப்பிட்ட கையோடு திரும்பிக் கூடப்பார்க்காமல் அப்படியேதன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
உள்ளே சென்ற வள்ளல்திரும்பி வந்தபோது தில்லையாடி சிவராமன் அங்கு இல்லை. பிறகுதான் தெரிய வருகிறது. தில்லையாடி சிவராமனின் இந்த மனித நேயம். மக்கள் திலகத்தின் மனதில் அப்படியே கல்வெட்டாய்ப் பதிவாகிப் போகிறார் தில்லையாடி சிவராமன்.
தில்லையாடி சிவராமனின் இந்த மனிதநேயத்தை மறக்காமல்நினைவல் வைத்துத்தான் இந்தச் சலுகை அளித்து கௌரவிக்க நினைத்திருக்கிறார் மக்கள் திலகம்.
திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, ‘தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன். அன்று, திருவாரூர் முழுவதும் மற்றும் திருவாரூரிலிருந்து வெளியூருக்குச் செல்லும், சக்தி விலாஸ் பஸ் கம்பெனியின் 150 பேருந்துகளிலும், இன்பக் கனவு நாடக விளம்பரம் காணப்படுகிறது.
நாடகம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன், திருவாரூர் ஜமானுதீன் அச்சகத்தில் தன் நேசத்துக்குரிய கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார் தில்லையாடி சிவராமன். அப்பொழுது தில்லையாடி மீதுகலைஞர் வைத்திருக்கும் அன்பின் மிகுதியால், “இந்த ஊர்ல நாடகம் போட்டு உன்னை லாபத்தோடு அனுப்ப மாட்டாங்க…” என்று அந்த ஊரில் நிலவரம் குறித்து, தில்லையாடி சிவராமனிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் தில்லையாடி.
அதிகாலையில் ப்ளைமவுத் காரில், திருவாரூர் வந்து சேர்கிறார் மக்கள் திலகம். கலைஞர் எச்சரித்துச் சொன்னது போலவே ‘புளிச்சகுடி கருணாநிதி’ என்பவரின் மிரட்டலால், சர்மா பங்களாவில் தங்கவேண்டிய மக்கள் திலகத்தை, பழக்கடை ராஜன் வீட்டில்தங்க வைக்கிறார் தில்லையாடி.
அது மட்டுமல்லாமல், நாடகம் துவங்குவதற்கு முன் புளிச்சக்குடி கருணாநிதி கலாட்டா செய்கிறார். தஞ்சை டி.எஸ்.பி. குழந்தைவேலு நிலைமையைக் கட்டுப்படுத்திகிறார்.
நடந்தது எதுவுமே மக்கள் திலகத்துக்குத் தெரியாமலேயே ‘இன்பக்கனவு’ நாடகம் முடிகிறது.
திருவாரூரில் நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து, சீர்காழியில்மக்கள் திலகத்தின் ‘அட்வகேட் அமரன்ய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தைப்பார்க்கத் தில்லையாடி சிவராமனும் செல்கிறார். தான் அமர்ந்திருந்த சேரில் சீர்காழி எம்.எல்.ஏ முத்தையாவை உட்கார வைத்துவிட்டு, தில்லையாடி சிவராமன் மேடைக்கே சென்று விடுகிறார்.
ஒரு காட்சியில் 250 பவுண்டு எடையுள்ள குண்டுமணியை அலேக்காகத் தூக்கிக் கீழே போடும் பொழுது, தவறித் தன் காலிலேயே அவரைப் போட்டுக்கொண்டு விடுகிறார். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வள்ளலின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. உடனே தில்லையாடி சிவராமன், டாக்டர் சம்பத்திடம் அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மக்கள் திலகத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
சென்னையிலும் சில மாதங்களாக சிகிச்சை தொடர்கிறது. செய்தி அறிந்த தில்லையாடி சிவராமன், ‘சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ்’ மூலம் ‘அட்ஜஸ்பல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து, அதை குமாரசாமி மூலம் மக்கள் திலகத்திற்குக்கொடுத்தனுப்பி இருக்கிறார். தில்லையாடி அவர்கள்தான் இதை வாங்கி அனுப்பினார். என்று விவரம் தெரியாத மக்கள் திலகம், ஷா பிரதர்ஸிக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
சில நாட்களுக்குப்பிறகுதான் இதை வாங்கிக்கொடுத்தவர் தில்லையாடி என்றும், அதற்கு விலையாக ஷா பிரதர்ஸிடம் வாங்கிக் கொடுத்த நண்பருக்குப் பத்து மூட்டை நெல் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது மக்கள் திலகத்துக்கு!
இந்த உண்மை தெரிந்த அடுத்த நிமிடமே தில்லையாடி சிவராமனை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கு, தன் லாயிட்ஸ் ரோடு இல்லத்திற்கு அழைத்து வரக்கார் அனுப்புகிறார் எம்.ஜி.ஆர் வரும் வழியில்தான் மக்கள் திலகம் அழைத்த காரணம் தில்லையாடி சிவராமனுக்குப் புரிகிறது.
மக்கள்திலகம் வாசலில் கார் நின்றது. காரில் இருந்தவாறே வெளியில் எட்டிப்பார்க்கிறார் தில்லையாடி. அங்கே ஹாலில் அண்ணா, சி.பி. சிற்றரசு, நடிகை சரோஜாதேவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தவுடன் தில்லையாடிக்குக் கூச்சம்…. மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ’150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள் வாங்கிக் கொடுத்ததற்காக அதற்கு விலையாக வெகுமதி பெறுவதா?’ என்று நினைத்த தில்லையாடி, காரைவிட்டு இறங்கியவுடன், மக்கள் திலகத்தின் வீட்டிற்குள் செல்லாமல், இரண்டாவது முறையும் தன் வீடு வந்து சேர்ந்துவிடுகிறார்
இப்படிப் பலமுறை தில்லையாடி சிவராமனின் உயர்ந்த பண்பைப்பாராட்டி, வாரிக் கொடுத்து மகிழ, தில்லையாடியைத் துரத்தி துரத்திப் பின் தொடர்கிறார் மக்கள் திலகம்.
ஆனால் மக்கள்திலகம் நிறைந்திருப்பதே போதும் என்று விலகி விலகிச்செல்கிறார் சிவராமன்.
சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ர் தமிழக முதல்வரான பிறகு, ஒருமுறை பூம்புகார் விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார். அப்பொழுது தில்லையாடியிலிருந்து பொறையார் வழியாகத் திருவாரூர் செல்ல பஸ் ரூட் வேண்டி- மனு ஒன்றை மக்கள் திலகத்திடம் சேர்க்கச் சொல்லி, அன்றைய எம்.எல்.ஏ வான விஜயராகவன்மூலம் கொடுத்தனுப்புகிறார் தில்லையாடி சிவராமன்.
மனுவைப்பார்த்த மக்கள் திலகம், அந்த நிமிடமே மாலைக்குள் பஸ்ரூட் விட உத்தரவு பிறப்பிக்கிறார். காலையில்மனுக்கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய நினைவே இல்லாமல் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன். மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த அந்த ரோட்டில், பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்து, சந்தோஷத்தல் திக்குமுக்காடிப் போகிறார் தில்லையாடி. அது மட்டுமில்லாமல் மறுநாள் வந்த தபாலில் உத்தரவு பிறப்பித்த நகலில் ‘காப்பி டூ சீப் என்ஜினியர், காப்பி டூ ஆர்.டி.ஓ. ‘காப்பி டூ தில்லையாடி சிவராமன்’ என்று வேறு குறிப்பிட்டுக் கௌரவித்து இருந்தது வேறு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அன்று மக்கள் திலகத்திடம் பொன்னோ, பொருளோ பெற்றிருந்தால், ஒருமந்திரியின் மனுவுக்குக்கிடைத்திருக்கும் மரியாதை தனக்குக் கிடைத்திருக்குமா என்று இன்னமும், மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் குடியிருக்கும் மக்கள் திலகத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன்
மக்கள் திலகத்தின் புதுமையான நிழற் படங்கள் - வீடியோ க்கள் - திரை அரங்கு படங்கள் - கட்டுரைகள் என்று ஒரே
இரவில் நண்பர்கள் 75 பதிவுகள் தொடர்ந்து பதிவிட்டு அசத்தியுள்ளார்கள் . பாராட்டுக்கள் .
நேற்று இன்று நாளை - திரைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நண்பர்கள் பதிவுகள் மிகவும் அருமை .
14.7 2014 - சபாஷ் மாப்பிளே - 53 ஆண்டுகள் நிறைவு
18.7.2014 - தெய்வத்தாய் - பொன்விழா ஆண்டு நிறைவு
படங்களை பற்றி அலசுவதற்கு தயாராகுங்கள் நண்பர்களே .
சென்னை - சரவணா திரை அரங்கம்
மக்கள் திலகத்தின் ''காதல் வாகனம் '' 1968ல் இந்த அரங்கில் படம் வெளியாகியது .
நம்நாடு
தலைவன்
தேடி வந்த மாப்பிள்ளை
ரிக்ஷாக்காரன்
சங்கே முழங்கு
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
பட்டிக்காட்டு பொன்னையா
பல்லாண்டு வாழ்க .
சரவணா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் - நம்நாடு -1969
மேலும் 100 நாட்கள் ஓடிய படங்கள்
ரிக்ஷாக்காரன்
பல்லாண்டு வாழ்க .
2012ல் இந்த அரங்கில் 15 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் 15 படங்கள் திரையிடப்பட்டது .
47 வது ஆண்டில் மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் - படம் நடை பெறுவது சிறப்பாகும் .
அதே போல் 47 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் இந்த அரங்கில் வந்ததும் பெருமைதானே .