செந்தில்வேல் சார்,
பி.எம்.பார்க்கவும்.
Printable View
செந்தில்வேல் சார்,
பி.எம்.பார்க்கவும்.
//ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)//
//முதல் போட்டோவில் இருப்பது மார்க்கண்டேயனின் வாரிசுகள்... இரண்டாவதில் பெருசு ஈயடிக்கும் வில்லன் போல தெரிகிறது. சின்னது யாரோ ? கன்னட வாரிசா ?//
சின்னா!
தலையில் கேப் போட்டுக் கொண்டு சூர்யா. அவரின் இடது பக்கத்தில் வழக்கம் போல கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பவர் தம்பி கார்த்தி. இதைத்தான் மார்கண்டேயன் வாரிசுகள் என்று மதுண்ணா குறிப்பிட்டுள்ளார்.
பக்கத்து போட்டாவில் 'நான் ஈ' வெற்றிப்படத்தின் பிரதான வில்லன் சுதீப். (முக ஜாடை அப்படியே இருக்கிறதே) அவர் பக்கத்தில் நிற்கும் குட்டிப் பையன் கன்னட சூப்பர் ஸ்டார் வீரப்பன் புகழ் ராஜ்குமாரின் புதலவர், கன்னட உலகின் பிரதான நடிகர் புனித ராஜ்குமார். இதைத்தான் மதுண்ணா கன்னட வாரிசு என்று சொன்னார்.
http://www.top10cinema.com/dataimages/22274-a.jpghttp://www.indiancinemagallery.com/i...jkumar-304.jpg
இதை சரியாக சொல்லலாமல் உமக்குத் தலை சுற்றியதால் உம்மை ஆறாவது வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு கிளாஸ் இறக்கம் செய்கிறேன்.:)
செந்திவேல் சார்,
'கைராசிக்காரன்' பாடல்கள் பலமுறை கேட்டாலும் அலுக்காதவை. 'நிலவொன்று கண்டேன்' எப்போதும் என் வாய் முணுமுணுக்கும் பாடல். அதே போல 'சில்க்'கும் பிரபுவும் பாடும் 'தேன் சுமந்த முல்லைதானா' பாடலும் பிடிக்கும். அருமையான பாடலை அளித்துள்ளீர்கள். 'இளையதிலக'த்தின் பாடல்கள் பல எனக்கு ரொம்பப் பிடித்தவை. அது பற்றி நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!
அதிலும் பாலா
'பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது
பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது
தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக் கண்டு'
என்று பாடுவது
ஓஹோ!
https://youtu.be/P9W6bu9_omk
கலர் பாடல்கள் தொடர்ச்சி
1)மஞ்சள் முகமே வருக
2)கூந்தல் கருப்பு
3)பச்சை மரம் ஒன்று
4)பச்சைக்கிளி முத்துச்சரம்
கோபு
பேபி ராணியுடன் 'சித்தி'க்குப் பிறகு பத்மினி கொஞ்சி மகிழும் பாடல் 'குழந்தைக்காக' படத்தில். சுசீலா அம்மாவின் ஸ்வீட் குரலில் இதமாய் ஒலிக்கும். குறிப்பாக,
'பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தது அவன்தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே'
அப்புறம் கேப் விட்டு, கேப் விட்டு அந்த குரல் அமிர்தமாய் இன்பம் தருமே!
முத்துரதம் ஏறும்
நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம்
நட்சத்திரமாகும்
பூமாலை வெண்மேகமே!
இவ்வளவு அருமையான பாடலில் ஆரம்பத்தில் குழந்தைக்கு அன்னமூட்டும் பத்மினி மேலாடை சரிய போஸ் தந்து நிற்பது யாரைத் திருப்திபடுத்த என்று தெரியவில்லை.:) இந்தப் பாடலுக்கு இது நல்லாயில்லை.
https://youtu.be/Q1pb7zfCaag
இதே போல இயக்குனர் பத்மினியை மிக அற்புத பாடலான 'தொட்டுப் பாருங்கள்....ஜோடிப் பூவைப் போலக் கன்னங்கள்' (எனக்குப் பைத்தியமான பாடல். சுசீலா அம்மாவின் இன்னொரு அற்புதம். 'வாட்டம் உண்டு இங்கே! தோட்டக்காரன் எங்கே?' 'தொட்டுப் பா.........ருங்கள்' என்று 'பா' வை ஒரு இழு இழுப்பார் பாருங்கள். ஈடு இணை செய்ய முடியாத பாடகி) பாடலில் கவர்ச்சியாட்டம் போட வைத்து ராமதாஸ், மேஜர், மனோகர் இவர்களுடன் பார்வையாளர்களை சேர்த்து சந்தோஷப்பட வைத்திருப்பார்.
எது எப்படியோ இரண்டு பாடல்களும் கேட்க கேட்க அவ்வளவு சுகம். கேட்பவர்கள் கேட்டு விடுங்கள். பார்க்கிறவர்கள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருங்கள்.:)
https://youtu.be/03ninGnTUAg
'தை மாத மேகம்' பாடல் போலவே 'தை மாதப் பொங்கலிட்டு' என்று சுசீலா பாடும் பாடல் ஒன்று உண்டு. 'நிலவே நீ சாட்சி' என்று நினைக்கிறேன். வீடியோ கிட்டுமா?
வாசு.. குழந்தைக்காக ரெண்டு பாட்டுமே அழகு.. அப்படி ஒன்றும் விரசமாகத் தெரியவில்லை.. நன்றி..
தைமாதை ப்பொங்கலிட்டு தேடினால்.. தைப்பொங்கல் பாட்டு த் தான் கிடைக்கிறது..தீர்த்தக் கரை தனிலே ச்ண்பகப் புஷ்பங்களே போட்டாச் தானே..
அடடா.. மார்க்கண்டேயர் என்றவுடன் நினைவுக்கு வந்திருக்க வேண்டும் இல்லையே. நான் ஈ சுதீப் சாயலெல்லாம் நான் பார்க்கவில்லையே நன்றி செண்பகப் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்ததற்கு.. அஸ்வினி.. ஆனந்தக் கும்மி தானே..?
எந்தக் காதல் பாட்டானாலும் எஸ்.பி.பி தான் வருகிறார் அந்தக்க் காலப் பாட்டுக்களில்.. நீர் திட்டினாலும் பரவாயில்லை..ஒரு பாட் போட்டுக்கட்டா..அத்தியாயத்துக்கு செலக்ட் செய்து எடுத்துவைத்திருந்த பாடல்களில் 80 பர்சண்ட் எஸ்.பி.பி.
நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..
ஊட்டி வரை உறவு இன் இந்தப் பாட்டு படத்தில் வராதாமே..எனக்கு நினைவிலில்லை..
https://youtu.be/vXr9_eFiuDc
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு
ஜிங்கிச்சா ஜிங்கிச்சா செகப்புக்கலரு ஜிங்கிச்சா
மஞ்சள் வெயில் மாலையிலே
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
அழகிய செந்நிற வானம் – அழகிய பாடல் போட்டாச் ?
https://youtu.be/wDiwXWkMU0M
ரெண்டு பேருமே யார்னு தெரியலை...