:clap:
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீசைக்கார முண்டாசுக்கவிஞர் சொல்லியிருக்கிறார்!
Printable View
:clap:
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீசைக்கார முண்டாசுக்கவிஞர் சொல்லியிருக்கிறார்!
பூனை எலிபிடிக்கும் -- ஆனால்
புன்கொசு நம்மைக் கடிக்குமன்றோ
ஆனை பளுசுமக்கும் - ஆயின்
ஊளை நரிநமக் கென்னசெய்யும்?
பண்பு நெறியில் பரிவே அனைத்துக்கும்
மண்புக்கு மாயும் வரை.
Notes
புன்கொசு = புன்மை+ கொசு, இழிந்த கொசு
மண்புக்கு மாயும் வரை = till one is buried or till one's life ends.
தின்னவரும் புலி தன்னையும் வணங்கு, அது அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் 'என்றல்லவா' முண்டாசுக் கவி சொல்கிறார்! அவர் தத்துவத்தின் எல்லைக்கே போய்விட்டார்.
யானைதான் உணராமல், அவருக்கும் உலகுக்கும்
பாதகம் செய்துவிட்டது. அதையும் மன்னித்துவிடு என்பவர் அவர்.
m Post subject: So sad, you went away, leaving behind your beautiful voice
http://www.mayyam.com/hub/viewtopic....r=asc&start=15
காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!
ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்
காட்டில் = பாலக்காட்டில்,(கேரளா).
காட்டிற்குள் ஏகி = இடுகாடு அல்லது நன்காட்டிற்குள் சென்று.
பிற = மற்றோரின் குரல்கள்
கணையைக் கதிமாற்றிவிட்ட குருவி
தனக்கு வந்ததைப் பிறனுக்கு அம்பாக்கி மாற்றிவிடும் தந்திரசாலிக் குருவியைப் பற்றிய வரிகள் இவை:-
அந்த மரத்திலொரு குருவி -- நான்
அறியா ஒலியினில் பாடியதே!
அந்தி மயக்கினிலே நழுவி -- மனம்
அங்கு கவனத்தில் ஓடியதே.
என்ன இசையிது சொல்வாய் --- என
யானும் ஆவலொடு கேட்டுநின்றேன்;
உண்ணப் பூச்சிபுழு கொல்வேன் --அவை
ஓலம் இட்டவொலிப் பாட்டென்றதே.
தனது செயலைப்பிறர் மேலே-- போடும்
தந்திரம் உனக்கும் வந்ததுண்டோ?
மனிதர் என்பவரைப் போலே -- சென்று
மாறும் அடிச்சுவடு முந்தியுண்டோ?
முந்தி = முன்பு?
சரி!
நன்றி
அருங்காட்சி
தமிழ்மொழியின் அமிழ்தணுக்கள்
தரணியெங்கும் வளர்ச்சிபெற்று,
அமைவுடனே அருங்காட்சி
அளிப்பதனால் களிக்குமனம்.
எமதுவழித் தோன்றலென
இனிமைதவழ் தொனிதெரிய,
நிமையமொன்று தவறிடாமல்
நேர்படக்கொண் டாடிடுவோம்.
விளக்கம் pls...Quote:
Originally Posted by bis_mala
Meaning for the lst stanza:-Quote:
Originally Posted by kirukan
தமிழ்மொழியின் அமிழ்தணுக்கள் = தமிழ்ப் பேச்சும் எழுத்தும் ஆகிய மொழியுருவின் உள்ளமைந்து கிடக்கும் அணுக்கள் அல்லது மேலும் பகுக்கவியலாத நுண்துகள்கள்,(சொற்களின் சிதறல்கள்) அமுதுபோலும் இனியவை; இந்த நுண்துகள்கள் - phonetics, phonology, morphology and syntax என்ற பெரும் பகுப்புகளுள் பரந்து கிடக்கின்றன.
தரணியெங்கும் வளர்ச்சிபெற்று,- இவை உலகின் வேறு மொழிகளிலும் சென்று பரவியுள்ளன. பரவி வளர்ச்சி பெற்றுள்ளன.
அமைவுடனே = பல நல்ல அம்சங்களுடனே;
அருங்காட்சி = ஆய்வாளர்கட்கு, இவைபோலவேறெங்கும் காண இயலுமோ என்று வியக்கும்படியான தோற்றங்களை,
அளிப்பதனால் = தருவதனால்;
களிக்குமனம். = என் மனம் களிக்கின்றதே! என்றவாறு.
From here, please see whether you are able to understand the 2nd stanza.
Happy reading.
பல் போய்விட்டதோ
பல் போய்விட்டதோ
இனி என்ன பவிசு
சொல் போய்விட்டதோ
இனி என்ன சொகுசு?
எல் ஒடிந்த கால்
அதற்கென்ன தவிசு?
நெல் விளைக்காத மண்
சரியான தரிசு!
எல் - என்பு, எலும்பு என்பவற்றின் அடிச்சொல். எனவே எலும்பு என்பதன் கடைக்குறை.