Quote:
வசந்த் டிவியின் புதிய நேரடி ஒளிபரப்பு போட்டி நிகழ்ச்சி ``காசு மேல காசு'' இந்த நிகழ்ச்சிகள் மொத்தம் 4 ரவுண்டுகள் உண்டு.
முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.1,000. இரண்டாம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.2,000. மூன்றாம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.4,000. நான்காம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.10,000. போட்டியில் முதல் மூன்று ரவுண்டுகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றவர், நான்காவது ரவுண்டில் தோற்றுப்போய்
விட்டால், அவருக்கு முதல் மூன்று ரவுண்டுகளில் வெற்றி பெற்றதற்கான எந்த பரிசும் வழங்கப்பட மாட்டாது.
முதல் ரவுண்டிலோ, இரண்டாவது ரவுண்டிலோ அல்லது மூன்றாவது ரவுண்டிலோ வெற்றி பெற்றவர் மேற்கொண்டு அடுத்த ரவுண்டை தொடர விரும்பவில்லை என்றால், கடைசியாக எந்த ரவுண்டில் வெற்றி பெற்றாரோ அந்த ரவுண்டிற்கான பரிசு தொகையை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து அவர் விலகிக் கொள்ளாம்.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.