Hai PR annaa...
unga ezhuththukkal enga aalunga... enga oorkkaarenga pEchcha kEkkraaplayE irukkungaNNe...i am very happy
Printable View
Hai PR annaa...
unga ezhuththukkal enga aalunga... enga oorkkaarenga pEchcha kEkkraaplayE irukkungaNNe...i am very happy
டியர் பிரபு ராம்,
தேவர் மகன் பற்றிய, குறிப்பாக 'பெரிய தேவர்' பற்றிய உங்களது ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடர் பிரமிப்பூட்டுவதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. சாதாரணமாக மேலோட்டமாகப் பார்க்கப்பட்ட விஷயங்களுக்குள் கூட எவ்வளவு அற்புத உணர்வுகள் புதைந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டும் உங்கள் முயற்சியும் அவற்றை எழுத்துருவில் வடித்து தரும் பாங்கும் நிச்சயம் பாராட்டுக்குரியது. தியாகத்துக்கும் சேவைக்கும் தயங்கும், ஒதுங்கும் எந்த ஒரு சமுதாயமும் எந்த ஒரு இனமும், அதன் பலனை அனுபவிக்கின்ற நேரத்தில் அந்நியப்பட்டு நின்றுள்ளன என்பது காலம் காட்டும் வரலாறு. இளைய மகனை நினைத்து பெருமை கொள்ளும் அதே பெரிய தேவர் மனதில் முள்ளாய் தைக்கும் உணர்வுகள்தானே, அவரைப்பற்றி குறிப்பிடும்போது "அவர் உரம் வாங்க போகலே, சொரம் வாங்கப்போயிருக்காரு. முன்னெல்லாம் ராத்திரியில மட்டும்... இப்போ ராத்திரி பகல் எந்நேரமும்" என்ற வார்த்தைகள், ஒரு தந்தையின் மனத்தில் தைத்துள்ள முட்களால் பீரிட்டெழும் குருதி தோய்ந்த வார்த்தைகள் எனக்கொள்ளலாமா?. அதற்கு சக்தியின் தரப்பிலிருந்து வெளிப்படும், வார்த்தைகள்ற்ற அதே சமயம் வருத்தம் பூசிய மௌனம். நம் மனத்தின் கடைசி ஆழம் வரை சென்று தொடும் உணர்வுகள். இப்படி எத்தனையோ சாத்தியக்கூறுகள், முறையாக பயன்படுத்தப்படாமல் தூசி மண்டிப்போக விட்டது படைப்பாளிகளின் அசிரத்தை கலந்த அலட்சியமா, அல்லது அவற்றுக்கு கம்பளம் விரிக்கத் தயங்கிய மக்களின் மனோபாவமா?. எப்படியாயினும், உண்மையான கலைஞனை தரம் கண்டுகொள்ள, மக்கள் விழித்திருந்த நேரம் குறைவு என்ற உங்களின் வாதம் நூறு சதவீதம் ஏற்புடையது என்பதில் எந்த வித ஐயமுமில்லை. உங்களின் ஆராய்ச்சி இன்னும் ஏராளமான அத்தியாயங்களுக்கு தொடரவேண்டும், அதைப்படித்து மகிழ எங்களைத் தயாரித்துக்கொண்டு விட்டோம்.....
Superb write-up PR :thumbsup: :notworthy:
அன்புள்ள பிரபு,
சில விஷயங்களை பாராட்டும் போது அது ஆங்கிலத்தில் க்ளிஷே என்று சொல்லுவோமே, அப்படி தோற்றமளித்தாலும் சரி, மனதிலிருந்து வருபவற்றை எழுதி விட வேண்டும் என்று நான் நினைப்பேன். அதனால்தான் சபை மரியாதை என்று கொள்ளப்பட்டாலும், ஜோதியில் ஐக்கியமாவது போல தோன்றினாலும், பரஸ்பரம் மதுரைக்காரர்கள் முதுகு சொறிந்து கொள்கிறார்கள் என்று தள்ளப்பட்டாலும் சரி, இந்த தொடர் அற்புதம்.
உங்களை பற்றி ஜோ ஒரு பத்தி எழுதியிருக்கிறார் என்றால் கண்ணன் ஒரு வரி எழுதியிருக்கிறார். இரண்டையுமே நான் வழி மொழிகிறேன். முழு உண்மை.
ஒரு திரைப்படத்தில் பல்வேறு கலை வடிவங்கள் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றன என்பதை பெரும்பாலோர் கவனிப்பதில்லை. குறிப்பாக ஒரு நடிகன் அந்த கதையில் தன் கதாபாத்திரத்திற்கு நீதி புலர்த்துகிறானா என்பதை கூட புரிந்து கொள்ள இந்த மாதிரியான அலசல்கள் தேவைப்படுகின்றன.
ஒரு யுக கலைஞனிடம் (மீண்டும் க்ளிஷே?), அந்த காமதேனுவிடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சக படைப்பாளிகள் கேட்டு வாங்கியது சாதாரண வரங்களே என்பதில் எல்லோருக்கும் வருத்தமே. அந்த பட்டு துணி சமயங்களில் மேசை துடைக்க பயன்பட்டது என்பதும் உண்மை. சாரதா சொன்னது போல யார் குற்றம் என்று சொல்வது?
இதை சொல்லும்போது கேள்விப்பட்ட ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. நாயகன் வெளியான நேரம். நடிகர் திலகத்திற்காக ஒரு சிறப்பு காட்சி. படம் பார்த்து விட்டு காரில் வரும் போது நடிகர் திலகம் கூட இருந்தவரிடம் கேட்ட கேள்வி (ஆதங்கம்?) " எனக்கு ஏன்டா யாருமே இந்த மாதிரி ஒரு கதை சொல்லலே?"
எப்படி கூகிள் மூலமாக பலரையும் தமிழ் எழுத வைத்தீர்களோ அது போல திரைப்பட அலசல்களையும் நல்ல தமிழில் எழுத பலருக்கும் இது தூண்டுகோலாக அமையும். வாழ்த்துக்கள்.
தொடருங்கள். காத்திருக்கிறோம்.
அன்புடன்
பெரிய தேவர் - 4
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.
'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.
படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.
புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.
பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.
ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.
தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:
"நீ எப்பிடி செய்வே ?"
"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."
"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.
தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.
"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.
ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.
தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !
(தொடரும்)
பி.கு:
பக்கத்தூர் பத்து மல் என்று காட்டுகின்ற வழிகாட்டி
இரண்டடிக்குள் முடிந்துவிடும் திறம் மிகு திறனாய்வாய்
எப்போதோ படித்த கவிதை வரிகள். திறம் மிகு திறனாய்வு அப்படித் தான் இருக்க வேண்டும். பத்து மைல் என்பதை பத்து மைல் நீள வழிகாட்டிப் பலகை வைக்கக் கூடாது. ஆனால் இப்படமும், சிவாஜியின் நடிப்பும் சுருங்க மறுக்கின்றன. என்ன செய்ய !
Thank You sarna_blr, saradha_sn, LM and Mr.Murali.
:exactly: Couldn't have put it better.Quote:
Originally Posted by saradha_sn
I would largely blame the unimaginative filmmakers for those ordinary films in Sivaji's bad phases. George Bernard Shaw once said of the writer GK Chesterton: "The world is not thankful enough for Chesterton."Quote:
Originally Posted by Murali Srinivas
Similarly there were some filmmakers who used Sivaji without the slightest comprehension of the kind of talent they are dealing with.
It is a such a satisfying experience to watch such talent being put to great use. Makes on rave about it in multiple chapters :-)
[/quote] I would largely blame the unimaginative filmmakers for those ordinary films in Sivaji's bad phases. George Bernard Shaw once said of the writer GK Chesterton: "The world is not thankful enough for Chesterton."
Similarly there were some filmmakers who used Sivaji without the slightest comprehension of the kind of talent they are dealing with.
It is a such a satisfying experience to watch such talent being put to great use. Makes on rave about it in multiple chapters :-)[/quote]
டியர் பிரபு,
மகத்தான பணியினை செய்து கொண்டிருக்கிறீர்கள். கடந்த வாரம் தான் நான் முரளிசாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடைய நீண்ட நாள் கடமையாக நான் நினைத்திருந்து, நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் ஆரம்பிக்க யத்தனித்துள்ள காரியத்தை நீங்கள் தொடங்கியுள்ளீர்கள். இதை விட சிறப்பாக இன்னொருவர் நடிகர் திலகத்தின் பெருமைகளை செய்ய முடியுமா என்பது ஐயமே. என் உளமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தற்பொழுது புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ள நம் இணைய தளத்தில் இதற்கென்றே பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பதிவு உங்களுடைய இந்த போஸ்டிங்குடனுக்கான இணைப்புடன் தொடங்குகிறது என்பதை சொல்லிக்கொள்ள விழைகிறேன். மென்மேலும் தங்களுடைய பதிவுகளைப்படிக்க ஆவலாயுள்ளேன்.
ராகவேந்திரன்.
நடிப்பு என்பதற்கு பலர் பல்வேறு பரிமாணங்களைச்சுட்டிக்காட்டியபோதும், இவரைப்பொறுத்தவரை அது இரண்டு பரிமாணக்கூறுகளின் சங்கமமாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது என்பது தாழ்மையான எண்ணம்.Quote:
Originally Posted by Prabhu Ram
ஒன்று பாத்திரத்தின் தன்மையை அறிந்து அதை கற்பனையில் உருவகம் செய்து, அதற்கு வடிவம் கொடுத்து உலவ விடுவது. இன்னொன்று, தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை உள்வாங்கி அதை தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் முறையான வடிவில், சரியான அளவில் பதியவைத்து, மேலும் மெருகேற்றி வெளிக்கொணர்வது.
கற்பனையில் வடிவமைப்பது மற்றும் உள்வாங்கி வெளிப்படுத்துவது என்ற இரண்டின் கலவைதான் இவரது அடிப்படைதன்மையாக இருந்துள்ளது என்பது என்னுடைய பணிவான கருத்து. (முரண்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்தலாம், யாரும் கருத்தாள்வதில் வல்லுநர்கள் அல்ல. யானைக்கே அடிசறுக்கும் என்று நம் முப்பாட்டன் சொல்லியிருக்க என்போன்ற பூனைகள் எம்மாத்திரம்).
முரளி சொன்னது போல, பட்டுத்துணியை மேசை துடைக்கப் பயன்படுத்தியதில் முக்கிய, மற்றும் முழுப்பங்கு வகித்தவர்கள் யார்?. வெளியில் இருந்து இவரை நாடி வந்தவர்களா?. இல்லை, உடனிருந்தே இவரது மூச்சுக்காற்றை சுவாசித்துப் பழகிய நண்பர்கள் குழாம்தான். எப்போதோ ஒரு முறை சொன்னதை (சொன்னேனா?) மீண்டும் சொல்வதில் தவறில்லை என்பதாலும் அதற்கான இடம், பொருள் இங்கு கூடி வருவதாலும் சொல்கிறேன். சுமார் பத்து பேர் கொண்ட மகளிர் அணியாக அவரை அன்னை இல்லத்தில் சந்தித்தபோது, கேட்கவேண்டும் என்று பல நாட்களாக நினைத்திருந்தவற்றை கேட்டு பதில்களை அவர் வாயிலாகவே பெற்றுக்கொண்டிருந்தபோது என்னிடமிருந்து வெளிப்பட்ட கேள்விதான் இது.
"அண்ணே, 'அன்பே ஆருயிரே' போன்ற படங்களில் எல்லாம் நீங்கள் நடிக்கத்தான் வேண்டுமா?"
(எந்தக்கேள்வியையும் தைரியமாக கேட்டு பதில் பெறமுடியும் என்று என்று நான் கண்டு கொண்டவர்களில் இவரும் ஒருவர். மற்ற இருவர் கலைஞானி கமல், மற்றும் புரட்சித் தமிழன் சத்யராஜ்). சரி அதற்கு அவர் பதில் என்ன..?
"என்னம்மா கேட்கிறே. நான் என்ன அதுமாதிரிப்படங்களில் நடிக்கணும்னு ஆசைப்பட்டா நடிசேன்?. இல்லே பணம் கிடைக்கிறதுங்கிறதுக்காக மட்டும் நடிச்சேனா? இயக்குனர் திருலோக் என்னுடைய நீண்டகால நண்பர். நான் அதுல நடிக்கணும்னு கேட்டார். நண்பனுக்காக ஒத்துக்கிட்டேன். நல்லா எடுப்பார்னுதான் நினைசேன். என்ன பண்றது, நாம ஒண்ணு நினைச்சா அது வேறு மாதிரி போயிடுறது. கடைசியில பழி முழுக்க என் தலை மேலே. என்னை என்ன செய்ய சொல்றே?. நண்பனைப் பகைச்சுக்க முடியுமா?"
ஆக, பட்டுத்துணி மேசை துடைக்கப் பயன்படுத்தப்பட்டது எப்படீன்னு புரியுதா?. மேசை துடைத்தவர்களில் முக்தா உள்பட பலருக்கும் பங்குண்டு. அதனால்தான் நல்ல பாத்திரங்கள் தனக்கு கிடைக்காமல் போகும்போது இவரது ஆதங்கம் தன்னையுமறியாமல் வெளிப்படுவதுண்டு. நாயகன் பற்றி முரளி சொன்னதும் அந்த வகைதான்.
இடைச்சொருகலுக்கு மன்னிக்கவும்.
தமிழ் சினிமாவின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு சன் தொலைகாட்சி தினம் இரவு 10.30 மணிக்கு "முத்தான திரைப்படங்கள்" என்ற தலைப்பில் பழைய திரைப்படங்களை ஒளிப்பரப்பி வருகின்றது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படத்திற்கு பதிலாக இன்று இரவு அனைவருக்கும் பிடித்த " தில்லானா மோகனாம்பாள்" ஒளிப்பரப்பாகிறது.
அன்புடன்
Ithuvum oru Idai cherugal :
"I could see many copies of NT's biography in landmark here. When I was in chennai few weeks back (official visit), the situation was same in landmark. It must be one of their best sellers. Too bad that I haven't got a copy for me. Should buy a copy for me soon ?"