aana,
I am not able to change poll :|
(you can take this topic reg women and post something related to the discussion abotu women and their nature)
Printable View
aana,
I am not able to change poll :|
(you can take this topic reg women and post something related to the discussion abotu women and their nature)
March 19th
___________
க்ருபா தன் சம்பளப் பணத்தை அவன் பெற்றோரிடம் சமர்ப்பித்து, அவர்களுக்கும் செலவிற்கும் உதவிவிட்டு, மிச்ச வருமானத்தில் குடும்பம் நடத்துவதே போதுமானது என்று அவன் மனைவி கூறுகிறாள். இப்படிப்பட்ட பெண்ணே பூஜிக்கத் தக்க நல்ல பெண்மணி வகையைச் சேர்ந்தவள்.
யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.
படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about rightiousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.
மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.
இதுவரை பஞ்சவடியும் மனுவையும் குறிப்பிட்ட சோ, பெண்களிலும் மிக நல்ல பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுவதாக முடித்தார்.
(வளரும்)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
வளரட்டும்
As usual nice write up SP :clap:
Anbukathir, Good analysis :thumbsup:
நன்றி திருமாறன்.
// நண்பர்களே, என் மகளுக்கு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால், சில நேரங்களில் தொடரை முழுமையாக பார்க்க முடியவில்லை. 20ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட தொடர் அரைகுறையாகத் தான் பார்க்க நேர்ந்தது. நேற்றைய தொடரை முழுவதும் பார்க்க இயலவில்லை. நேற்றைய தொடரின் விடியோ சுட்டியைப் பார்த்து என்னால் இயன்ற உரை எழுதுகிறேன்.
இந்த பதிவில், கதையோட்டத்தை மட்டும் இரண்டே வரியில் முடித்துவிடுகிறேன்.
//
Random updates
___________
க்ருபாவின் மனைவி, தன் புகுந்து வீட்டு மனிதர்களிடம் மிகுந்த அன்பு ஆதரவும் கொண்டு பாசத்துடன் நடந்து கொள்வதோடு மட்டுமின்றி, தனிக்குடித்தனத்தில் ஈடுபாடின்றி, கூட்டுக்குடித்தனம் வாழ ஆசைப்படுகிறாள். இது பற்றி தன் மாமியாரிடம் வேண்டுகோள்விடுக்கிறாள்.
சமையல் மாமி தன் கணவருக்கு நகைகளை அளித்து அவர் மகளின் கல்யாணத்திற்கு உதவி செய்கிறாள். யாருடைய நகைகள் என்பது இன்னும் மர்மமான விஷயம். யாருமற்ற வீட்டில் பூட்டாத அலமாரியை மாமி, சஞ்சலத்துடன் பார்வையிடுகிறார். இதை மட்டுமே வைத்து நாம் மாமியைத் தவறாய் எடை போட்டு விட முடியாது. என்ன ஆயிற்று என்று பொருத்திருந்து பார்ப்போம். என்றாலும், பாசமும், பிணைப்பும், தேவையும் எந்த ஒரு நல்ல மனிதனையும், குறிப்பாக, மனத்தை தன் கட்டுக்குள் வைக்காத சாமான்யனை பிறழச் செய்ய முடியும் என்பது நினைவில் கொள்ளத் தக்க பாடம்.
(இதன் அடுத்த பகுதியில், கதையை அறவே விடுத்து, வெறும் விவாதங்களைப் பற்றி மட்டும் எழுத நினைக்கிறேன்)
(வளரும்)
March 23rd
_________
நாதன் அஷோக்கிடம் மனம் திறந்து பேச எத்தனித்து, சில கேள்விகள் எழுப்புகிறார். "ஏண்டா நீ மத்தவா மாதிரி இருக்க மாட்டேன்கிற" என்கிற ரீதியில் வருத்தம் தோய்ந்த கேள்விகள். அதற்கு அசோக் அளிக்கும் தெளிந்த பதில்கள்.
எதை நீங்க சந்தோஷம் என்று சொல்கிறீர்கள்? இந்த material / உலக விஷயங்களைத் தாண்டி யோசிக்க மாட்டாது நீங்கள் எல்லோரும் அதிலையே ஊறிப்போயிருக்கிறீர்கள். இந்த உடல் நித்தியம் அல்ல. matter என்பது condensed spirit (for the want of right word, I stick to english). ஆன்மா என்பது பால் போல் தூய நிலை என்றால், matter என்பது condensed milk போன்றது ( good explanation).ஆனந்தம் என்பது மகிழ்ச்சி நிலை அல்ல. ஆனந்தம் என்பது ஷாந்தம் என்ற நிலை. க்ருத யுகத்தில், பிருகு, தம் தந்தை வருணனிடம், உண்மையான ஆனந்தம் என்பதை எப்படி அறிவது எனக் கேட்க, வருணன், பிருகுவை தபஸ் செய்யச் சொல்கிறார். இந்த இந்திர்யங்களும், சரீரமும்தான் எல்லாவற்றையும் உணருகிறது, இதுவே ஆனந்தம், நிரந்தரமானது எனக் கண்டுகொண்டு வருணனிடம் தாம் கண்டதை உரைக்கிறார். இன்னும் கொஞ்சம் தவம் செய்" என்று மறுபடியும் அனுப்பி வைக்கிறார். இவ்விடத்தில் நாம் அறியவேண்டியது ஒன்றுள்ளது. உலகம் என்பது மாயை எனச் சொல்வது relative அபிப்ராயம், ஆனால் உலகமும் அதன் மகிழ்ச்சியும் முற்றிலும் தவறு என்பது அல்ல. இந்த விதமான உலகமயமான ஆனந்தம் தவறு என்பதல்ல. அதனாலேயெ பிருகு "சரீரமும் இந்திரியமும் இன்பம்" என்று சொல்லும் போது "அது தவறு, இன்னும் தவம் செய்" என்று சொல்லவில்லை வருணன். "இன்னும் தவம் செய்" என்று மட்டுமே சொல்கிறார். மேலும் தவம் செய்த பிருகு, உண்மை ஆனந்தம், ப்ராணனில் இருப்பதாக உணார்கிறார், பின் படிப்படியாக, அவர் நிறைவான ஆனந்த (ஷாந்த) அனுபவத்தை உணர்வதாக தைத்ரிய உபநிஷத் எடுத்துரைக்கிறது. (Initially ashok mentions thaithriya upanishad, later when he finishes off in next episode, he says isha upanishad :? As per my knowledge this story is depected in thaithriya upanishad, I aint sure why they mention isha upanishad later in the conversation)
அப்படிபட்ட நல்ல நிலையை விடுத்து உலக விஷயங்களை என் மனம் நாடவில்லை என்கிறான் அஷோக். நீங்கள் கூறியபடியே எனக்கு உலகை அனுபவிக்கும் வயது என்றே வைத்துக் கொண்டாலும், தர்ம நியாயப்படி, உங்கள் வயதுப்படி நீங்கள் எல்லாவற்றையும் துறக்கவேண்டும். நீங்கள் ஏன் செய்யவில்லை எனக் கேட்கிறான். பந்தம் பாசம் என்பதெல்லாம் ஒரேடியாக விட்டுவிடக்கூடியதல்ல. படிப்படியாகத் தான் விட்டுவிடமுடியும் என நாதன் பதிலளிக்கிறார்.
இராமக்ருஷ்ணருக்கு பொன்முடிப்பை பரிசாக கொண்டு சென்ற பக்தரிடம், அதை கங்கையில் போட்டு விட உத்தரவிடுகிறார் இராமக்ருஷ்ணர். ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி குளத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார் பக்தர். சேர்க்கும் போது கண்ணும் கருத்துமாய் எண்ணிச் சேர்க்கிறானென்றால், மனிதன் துறக்கும் போதும் எண்ணித் துறக்கிறானே என்கிறார் இராமக்ருஷ்ணர். சங்கல்பம் செய்யும் ஒருவன் எண்ணிச் செய்கிறான். சமர்பணம் செய்யும் மனிதனோ, பலனையோ பணத்தையோ எண்ணுவதில்லை.
அஷோக்கின் ஜாதகத்தை பரிசீலிக்கும் ஜோசியர், இந்த ஜாதகக் காரனுக்கு கல்யாணம் குடும்பம் போன்ற ப்ராப்தி இல்லை. இது மஹான்களின் ஜாதகம். ஜாதகருக்கு வாக்கு பலிதம், ஏற்படும். தாமரை இலைத் தண்ணீரையொத்து பாச பிணைப்பின்றி இருப்பவன். ஆன்மீகத் தேடல் சிறுவயதிலேயே தொடங்கிவிடும். அர்ஜுனனுக்கு எப்படி பூர்வ புண்யங்கள் சேர்ந்து ஒரு பிறவியில் விஸ்வரூப தரிசனத்தையே பெற முடிததைப் போல் இவனுக்கும் பூர்வ புண்ய ஸ்தானம் மிக பலமாக இருப்பதால், இயற்கையிலேயே ஞானம் நிரம்பப் பெற்றிருக்கிறான். இவன் வாழ்வில் பல ஆச்சரியங்களும், அமானுஷ்யங்களும் நடைபேறும். இந்த சுடர் வெகு சீக்கிரம் பிரகாசிக்கும், அப்போது உலகிற்கு இந்த மஹானின் ஒளி புலப்படும் என்கிறார். ஆன்மீகப் பாதையை நாடுபவனுக்கு குரு இருத்தல் அவசியமானது என்பதல்ல, சிலர் "ஸ்வயம் ஆச்சார்யா"ர்களாக இருப்பர்.
அதன் பிறகு "குரு" என்ற சொல் எத்துணை புனிதமானது என்று விளக்குகிறார் சோ. 'வாத்தியார்', 'ஆச்சார்யர்', 'உபாத்யாயர்' என பல சொற்கள் இவற்றை குறிப்பிடுபவன என்று நாம் நினைத்தாலும், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறு.
வாத்தியார் எனும் சொல், அத்யாபகர், உபாத்தியாயர் போன்ற சில சொற்கள் மருவி வந்ததன் விளைவு. அத்யாபகர், உபாத்யாயர் என்றால் வேதங்களை கற்பிப்பவர். தற்காலத்தில், கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் என எதைக் கற்பித்தாலும், அவரை வாத்தியார் அல்லது உபாத்தியாயர் என்றே அழைக்கிறோம்.
ஆச்சார்யர் என்பவரோ, தாம் கற்பிப்பதை நடைமுறையில் கடைபிடிப்பவர். குருதஷிணையாக மாணவர்கள் எது கொடுத்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, குருகுலத்தில் வழி நடத்துபவர்.
சிறந்த குரு என்பவரோ, மௌனத்தினாலேயே பாடங்களைக் கற்பிப்பவர். முதல் குரு தக்ஷிணாமூர்த்தி என்பவரை நாம் கடவுளாய் வரிக்கிறோம். ஆலமரத்தடியில் சீடர்கள் அமர்ந்திருக்க, குரு என்பவர், மௌனமாய் அமர்ந்திருக்கிறார். அந்த மௌனத்தின் மொழியிலேயே சீடர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்கின்றன. அப்பேற்பட்டவர் குரு.
(வளரும்)
Today's episode was good!
Looking forward to Cho's explanation for Palm Leaves Astrology :yes:
Even though I've experienced this and know about this astrology, Cho's explanation would shed more lights on this :yes:
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
சமர்ப்பணம்
March 24rd
__________
நாதனின் சஹோதரி செல்லம்மா, வசுமதியிடம், அவர்களின் குலதெய்வத்தை காண உடையாளூர் வந்து போகுமாறு அழைப்பு விடுக்கிறாள். குலதெய்வத்துக்கு செய்ய வேண்டிய ப்ரீதி செய்தாலே, வினை அத்தனையும் அகன்று, அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றமும் நிம்மதியும் ஏற்படும் என அபிப்ராயப்படுகிறாள். பொதுவாகவே நம் மனைகளிலும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இறை என்பது ஒன்று, i.e. பலவாய் காட்சி தரும் ஒருவன் என்பதே உண்மை என்றிருக்கும் போது, குலதேய்வத்தை தனியாய் ப்ரீதி செய்வது முரண்பாடாக தோன்றுகிறது என்று சிலர் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்து மதத்திற்கே உரிய ஒரு விஷயம், இறைவனை பலவகையாய் உருவகப்படுத்தியிருப்பது. இதன் உள்ளர்த்தமோ, தாத்பர்யமோ, பலவாய் அவனே தோன்றியிருக்கிறான். ஒரு ஷக்தியே பலவாய் தோன்றும் இயல்புடையது என்பதை புரிந்து கொள்ளவே. நம் எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ப இறை எந்த வடிவத்திலும் நம் முன் வரலாம். (நீங்கள் அறியாததொரு மனித வடிவில் வந்து உங்களுடன் உரையாடி, குழப்பம் தீர்த்துவிட்டும் போகலாம்). எல்லாவற்றிற்கும் காரணம் நம்பிக்கை. தொடங்கிய கேள்விக்கு வருவோம்.இறை ஒன்றாய் இருக்க, எந்த தெய்வத்திற்கு பிரார்த்தித்தால் என்ன? குலதெய்வத்திற்கு மட்டும் தனி அங்கீகாரம் வேண்டுமா? எனும் சந்தேகம் எழும்புகிறது.
காலகாலமாய் மூதாதையர்கள், குறிப்பிட்ட குலத்தை, குடும்பத்தை சேர்ந்தவர்கள், தனிப்பட்ட தெய்வத்திடம் தம் பாரத்தை, நம்பிக்கையை, பக்தியை செலுத்திவந்திருக்கின்றனர். அதனாலேயே அக்குடும்பத்துக்கு, ஏதுவான sanctity or purity அந்த இடத்தில் அந்த தெய்வத்தின் உருவகத்தில் உருவாகி இருக்குக்கூடும் என்பதை justifiable விளக்கமாக கருதலாம். மேலும் வேண்டுதல், ஸ்லோகங்கள், குலதெய்வம் போன்றவை நம்பிக்கை, ஒழுங்கு முதலியவற்றை வளர்க்க உதவுகின்றன.
பர்வதம் சகிதம் நாதம் குடும்பம் உடையாளூருக்கு செல்கிறது. அங்கு நிலவும் அமைதி அத்தனை பேர் மனதையும் கொள்ளை கொள்கிறது. கும்பகோணம் சென்று கோவில் தரிசனம் செய்து, அஷோக்கிற்கு நாடி ஜோதிடம் பார்க்குமாறு செல்லம்மா கூற, மறுத்துக்கூறும் அஷோக்கை வலுக்கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்கின்றனர்.
கும்பகோண க்ஷேத்திரத்தின் தனிப் பெருமை சொல்லி மாளாது. கோவில்கள் பல அமையப்பெற்றிருக்கும் திருத்தலம். மேலும், எப்பேற்பட்ட பாவங்கள் செய்தாலும், காசிக்குச் சென்றால் அவன் பாவம் தொலையும் என்பது நம்பிக்கை. காசியிலே செய்யும் பாவங்களைக் கூட, கும்பகோணத்தில் தொலைக்கலாம் என்பது பெரியவர்கள் கூற்று.
நாடி ஜோதிடத்தைப் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலகோடி வருடங்களுக்கு முன்பே ஓலைச்சுவடியில் இன்னாரின் பிறப்பு, எதிர்காலம், கணித்து வைத்திருக்கின்றனர் ரிஷிகள். அவரவரகள் முன் ஜன்மமும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்ந்த நாடி ஜோதிடரை நாடிச்சென்று படிக்கும் ஜோதிடம் ஆகையால் 'நாடி ஜோதிடம்'. எல்லாருக்கும் ஓலைகள் கிடைத்துவிடுவதில்லை. யாருக்கு பார்க்கவேண்டிய ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும். அஷோக், தன் ஓலைச்சுவடி கிடைக்காது, கிடைத்தாலும், முன் ஜன்மத்தை பற்றி தெர்ந்து கொள்ள இயலாது என்று கூறுகிறான்.
மேலும், எத்தனையோ பிறவிகள் ஜன்மங்கள் எடுத்துவிட்டதன் அறிகுறி நம் வாழ்வின் தடயங்களில் நிறைந்துள்ளது. மிருகமாய் பிறந்திருந்ததால் தான் இரை தேடுகிறோம். நரியின் தந்திரமும், யானையின் பலமும் ஒவ்வொரு மனிதனிடமும் இப்படிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. ஆதி மனிதனாகப் பிறந்திருந்ததால் தான் இன்னும் இருட்டைக் கண்டு பயம் கொள்கிறோம், இதில் சென்ற பிறவிகளைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என கூறுவது something to really ponder upon.
(வளரும்).
பி.கு: க்ருபாவின் வீட்டில் சேர்ந்து இருப்பது தன் மகளுக்கு முதலில் சரிபட்டு வந்தாலும், பின் சலிப்பு தட்டலாம் என க்ருபாவின் மாமியார் ருக்மிணி சாம்புவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து தன் எண்ணத்தை முன் வைக்கிறாள்.
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
இவ்வளவு கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்தாலே சில வேளை துன்பம்தான் மிஞ்சலாம்.
அத்துடன் போன பிறவி ஞபகமும் வந்தால் ..
வேண்டவே வேண்டாம்