Quote:
Originally Posted by Punnaimaran
And why don't the judges who have made these observations advise their children to engage in premarital / extra-marital 'consensual' sex for a start?
:shock:
அவர்கள் அதை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்களா என்ன? திருமணத்துக்கு முன் உறவு என்பது நல்லது என்றோ ,வரவேற்கத்தக்கது என்றோ அல்லது அனைவரும் பின்பற்றினால் நல்லது என்றோ நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களா என்ன? :roll:
இது தனிமனித ஒழுக்கம் (அதைக்கூட யார் வரையறுப்பது? ) சார்ந்தது தவிர வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் இணங்கி உறவு கொள்ளுவது
சட்டப்படி குற்றமாக்க முடியாது என்று தானே சொல்லுகிறார்கள் ? இதில் என்ன தவறு ? :roll:
தார்மீக ஒழுக்கம் ,தனிமனித கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்கும் சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே ? தாயை மதிக்க வேண்டும் என்பது தார்மீகம் ,ஒழுக்க விதி ..அப்படி தாயை மதிக்காதவனை தனிப்பட்ட முறையில் நாம் மனதளவில் தள்ளி வைக்கலாமே தவிர , குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் அடைக்க முடியுமா? :wink: