http://i1273.photobucket.com/albums/...vee6/107-1.jpg
Printable View
21.11.2012 அன்று பிறந்த நாள் காணும் திரு வாசுதேவன் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்.
திரு.வாசுதேவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாலைமலர் செய்திக்கு எனது மறுப்பு குறித்து தாங்கள் இடுகை செய்த விரிவான விளக்கத்திற்கும் அதனையொட்டிய வீடியோ பதிவுகளுக்கும் நன்றி. ராஜா தேசிங்கு எம்.ஜி.ஆர். அவர்களது திரைபடங்களில் மிக முக்கியமானதொரு இடத்தினைப் பெற்றுள்ளது. கலைஞானி கமலஹாசன் அவர்கள் கூட தனது மருதநாயகம் படம் பற்றிக் கூறும்போது மக்கள் திலகத்திற்கு ஒரு ராஜாதேசிங்கு, நடிகர் திலகத்திற்கொரு வீரபாண்டிய கட்டபொம்மன் எனக்கு மருதநாயகம் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் நடிப்பிலே மகுடம் பதித்த படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக தேசிங்கு எம்.ஜி.ஆரைக் காட்டிலும் தாவூத்கான் எம்.ஜி.ஆர் பல இடங்களில் பரிமளிக்கிறார். தந்தை யார் என்று அறியாது ஆவேசப்படும் போதும் சரி, தந்தையை அறிந்ததும் அவர் தன் தாயை வஞ்சித்தைக் கண்டு வெகுண்டெழும் போதும் சரி , மாறுவேடமிட்டு தம்பியின் அரண்மனைக்குச் சென்று பட்டயத்தைக் கவரச் செல்லும் போது தயங்கி தயங்கி அச்சத்துடன் நடந்து செல்லும் போதும் சரி , பல புதிய பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார். தேசிங்கும் ராணியைப் பிரிந்து நிற்கும் சோகத்தை ராஜகம்பீரத்துடன் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். அண்ணனின் சாவுக்கு தானே காரணமாகிவிட்டதை எண்ணிக் கலங்கும் போதும் தோழன் மகமத்கானை காணாமல் அவனை விட்டு வந்த குதிரையிடம் ஆவேசமாகப் பேசும் போதும் சரி டி.கே.ராமச்சந்திரனிடம் ஆவேசமாக பேசும் போதும் வெறியுடன் சிரிக்கும் போதும் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சிறப்பின் உச்சம் கடைசி கட்ட சண்டைக்காட்சியில் இரண்டு எம்.ஜி.ஆரும் மோதுவது. இதைவிட சிறப்பாக படம்பிடிக்க முடியாது. அதிலும் ஒரு எம்.ஜி.ஆரின் மார்பில் மற்றொரு எம்.ஜி.ஆர் வீழ்ந்து கிடப்பதும் இருவரது கைகளும் பின்னிப் பிணைந்திருப்பதும் அற்புதம். இவ்வளவெல்லாம் இருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறாமைக்குக் காரணம் மதுரைவீரனின் சாயல் அளவுக்கு அதிகமாக இருந்ததும் எம்.ஜி.ஆர் இருவரும் இறந்து போவதுவும். பத்மினி, பானுமதி, டி.கே.ராமச்சந்திரன், பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், என்ற பட்டாளம் முழுமையும் இரண்டிலும் ஒற்றுமை. கே.ஏ.தங்கவேலு, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மட்டுமே புதிது. குறிசொல்லும் பாடல், முகப்பு இசை (Title Music) ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா பாடலைப் போலவே கானாங்குருவி காட்டுப்புறா பாடல், இறுதியில் நாயகியருடன் இறப்பது போலவே அண்ணன் தம்பி இருவரும் இறப்பது என்று ஏக ஒற்றுமை. இன்று பார்க்கும் போது மாபெரும் பிரமிப்பை ஏற்படுத்தும் படம் ராஜா தேசிங்கு. அதிலும் மக்கள் திலகத்தின் குரல் வளம் மிகவும் கணீர் கணீர் என்று ஒலிக்கும் போது மயக்கத்தையே ஏற்படுத்துகிறது. முடிந்தால் அதன் உச்சகட்ட காட்சியை மட்டும் இடுகை செய்யவும். நன்றி.
இனிய நண்பர் ஜெய் சார்
ராஜாதேசிங்கு - மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பினை இரத்தின சுருக்கமாக விவரித்து தாங்கள் பதிவிட்ட விமர்சனம் மிகவும் அருமை .
உங்களின் பதிவினை பார்த்தவுடன் ராஜாதேசிங்கு படம் பார்த்தேன் .
வரிக்கு வரி நீங்கள் எழுதிய மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல் மெய்சிலிர்க்க வைக்கிறது .
மக்கள் திலகத்தின் ராஜாதேசிங்கு படத்தினை பார்க்கும் நிலையினை உருவாக்கிய உங்களுக்கு நன்றி ஜெய் .
esvee
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு மக்கள் திலகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளும்
பேராசிரியர் செல்வகுமார் - செயலாளர்
இறைவன் mgr பக்தர்கள் குழு .
பேராசிரியர் சிவகுமார் - சிமோகா .
திருப்பூர் ரவிச்சந்திரன்
c.s குமார் -ஆரணிரவி -ரவி -மோகன்குமார் -கணேஷ்
கஜநாத் சிங் -
பெங்களூர்
COUTESY - WIKIPEDIA
Production
http://i47.tinypic.com/fwsi2q.jpg
Gingee or Senji has a long history since 200 BC and over the years had been invaled and ruled by many dominant kingdoms. However, the one name that invariably crops up at any mention of Senji is that of Raja Desingu, who ruled the kingdom, albeit for a short period, with sagacity and valour in the 18th century. Over the years, the saga of Raja Desingu has been become an enduring and endearing part of Tamil folklore. Countless ballads, stories, puppet shows, dance, stage and street shows have been inspired by the tragic tale of this brave hero of Senji.
Adapted as a movie in 1936 by Rajeswari Talkies and was directed by Raja Chandrasekhar. The lead actors were T. K. Sundarappa, V. S. Mani, M. Lakshmi and K. R. Saradambal. The lyrics by Madurai Baskaradoss and music by M. Baluswami.
[edit]Plot
Swaroop Singh (O. A. K. Thevar) won the respect and loyalty of the people of Senji during his rule where Hindus and Muslims lived in peace and prosperity. A son was born to Swaroop Singh and his wife Rambai (Rushyendramani), whom they named Tej Singh pronounced as Desingu (MGR) in Tamil. Swaroop Singh has a secret wife called Jaan Bibi (Lakshmiprabha), and they have a son called Dawood Khan (MGR) who was a little older than Desingu. Fearing that Dawood might pose a threat to the succession of the throne in years to come, on the advice of his commander and close confidant Yusuf Khan (T. K. Ramachandran), Swaroop Singh persuades Jaan Bibi to leave Senji, taking little Dawood with her. Desingu who has integrity and courage grows up with his childhood friend, another brave young man called Mohammed Khan (S. S. Rajendran), and two are always inseparable.
At this juncture, the Sultan of Delhi (M. G. Chakrapani) offers to free any state coming under his dominion whose ruler manages to tame a wild horse in his stable. Hearing this in the intention to have a free kingdom, Swaroop Singh leaves to Delhi without letting know Rambai and Desingu. Despite trying very hard, he failed to tame the wild horse and imprisoned by the Sultan of Delhi. Upon hearing this, the minister (Karikkol Raju) informs Desingu who rushes to Delhi where he meets his uncle Bheem Singh’s (M. R. Santhanam) for advice. The dauntless Desingu manages to tame the stallion and ride it, to the loud cheers of the huge audience. Filled with admiration, the Sultan frees Swaroop Singh who had earlier failed in this endeavour and gives them a written proclamation of Senji’s independence. Desingu marries Ranibai (P. Bhanumathi) who is Bheem Singh’s daughter. Pandiyan (K. A. Thangavelu) who works in the horse stable comes along to Senji and works as assistant to Mohamad Khan’s father and falls in love and marries Sengkamalam (M. N. Rajam) who is also Mohamad Khan’s adopted sister.
Meanwhile, growing up as an illegitimate child, Dawood vows to rule Senji some day. But in her deathbed, Jaan Bibi extracts a promise from Dawood that he would not cause any harm to Desingu. Dawood goes to Arcot and wins the confidence of the Nawab when he rescues the Nawab’s infant son from being crushed under an elephant’s feet. The grateful Nawab appoints him as his general. When Dawood expresses his determination to subjugate Senji, the Nawab expresses his helplessness, stating that nothing could be done as long as Desingu has the written proclamation of Senji’s independence in his custody. It is around the same time that Desingu dismisses his general Yusuf Khan from service when he is caught trying to commit adultery molesting Sengkamalam. Abetted by the humiliated Yusuf Khan who has now turned traitor, Dawood makes use of his striking resemblance to Desingu and extracts the written parchment from the unsuspecting wife of Desingu.
When Mohammed Khan falls in love with the pretty Ayisha (Padmini), he anticipates no opposition from his parents for the match. However, he finds that his mother (T. A. Madhuram) and father (N. S. Krishnan) have each identified a girl of their own choice to be his wife. When he informs them that he has already chosen his life partner, his father proposes that they go the queen for an appropriate decision. Ranibai asks each of them to write down the name of the girl they have in mind, and then discovers that all 3 of them have written Ayisha’s name.
When the royal astrologer (P. G. Vengkadasalam) suggests that Desingu and Ranibai be separated for 3 years as an antidote for the inauspicious placement of their stars, Desingu pours scorn upon such beliefs. However, considering the welfare of Senji and heeding to his mother’s plea, Desingu is forced to consent to such separation. He carries on stolidly with his responsibilities as the ruler of Senji during the day.
The nawab od Arcot and Dawood Khan sents in (T. S. Balaiah) to meet Desingu to request Senji kingdom to pay tax. Desingu announces in agony that Senji would not bow to the Sulytanate of Delhi. Now that Senji had no proof of its independence, Arcot declares war on Senji for non-payment of taxes. Under the resolute leadership of Mohammed Khan, Senji emerges triumphant in warding off the Arcot forces. But even as Mohammed Khan fetches water to quench the thirst of a dying soldier of Arcot, Yusuf Khan shoots him from the back. And not satisfied with dastardly act, Yusuf Khan kills Mohammed Khan’s fiancée Ayisha who had come to the battlefield in search of her beloved. Wanting the brothers to fight against each other now, Yusuf Khan carries false reports to Desingu that it was Dawood who killed Mohammed Khan. Athirst with revenge for the death of his friend, Desingu rushes to the warfront and soon challenges Dawood to a duel. Dawood is hesitant to fight with his brother, and even advises Desingu that they could leave the fighting to their troops. But Desingu is no mood to listen and soon the brothers are engaged in a bitter duel. Handicapped by his oath not to harm Desingu, Dawood is soon vanquished and lies mortally wounded. Desingu’s delight is short-lived, for Yusuf Khan now informs him that Dawood is none other than his brother. Adding to his grief at the death of his friend, Desingu is horrified at having killed his brother, and in a moment of abject remorse, kills himself. The Nawab’s troops now enter the fort in victory, and Desingu’s brave wife Ranibai commits Sati.
[edit]Cast
Actor Role
M. G. Ramachandran King Desingu and Dawood Khan
S. S. Rajendran General Mohammed Khan
P. Bhanumathi Ranibai
Padmini Ayisha
O. A. K. Thevar King Swaroop Singh
Rushyendramani Queen Rambai
Lakshmiprabha Jaan Bibi
M. G. Chakrapani Nawab of Arcot
T. K. Ramachandran General Yusuf Khan
N. S. Krishnan
T. A. Madhuram
T. S. Balaiah
K. A. Thangavelu Pandiyan
M. N. Rajam Sengkamalam
M. R. Santhanam Bheem Singh
P. G. Vengakadasalam Royal Astrologer
Karikkol Raju Minister
[edit]Crew
Producer: Letchumanan Chettiar
Production Company: Krishna Films
Director: T. R. Raghunath
Music: G. Ramanathan
Lyrics: Udumalai Narayana Kavi, Thanjai N. Ramiah Doss & Kannadasan
Story: Kannadasan
Screenplay: Kannadasan
Dialogue: Makkalanban
Art Director: P. Angamuthu
Editing: V. B. Nadarajan
Choreograph: Vazhuvoor B. Ramaiah Pillai, P. S. Gopalakrishnan, T. C. Thangaraj & Chinni - Sampath
Cinematograph: M. A. Rehman
Stunt: R. N. Nambiar
Dance: Kamala Lakshman, Ragini and Kuchalakumari
[edit]Soundtrack
List of songs:
áadhi kadavuL ondREthaan by Seerkazhi Govindarajan
kaaNaankuruvi kaattuppuRa by Seerkazhi Govindarajan & P. Leela
iyalOdu isaipOlE by C. S. Jayaraman & P. Bhanumathi
vaazhga engaL ponnaadu by P. Leela & Jikki
pazhanimalai idumbankuLam by P. Leela
vanamEvum rajakumArA by Seerkazhi Govindarajan & Jikki
pOdappORaaru aNNE pOdappORaaru by P. Leela
kaadhalin bimbam endhan kaNNil aadudhE by P. Suseela
vandhaan paaru salangai saththam by Seerkazhi Govindarajan & P. Leela
paaRkadal alai mElE by M. L. Vasanthakumari
sarasaraaNi kalyaaNi by C. S. Jayaraman & P. Bhanumathi
mannavanE senji maNiviLakkE by Seerkazhi Govindarajan
சரச ராணி கல்யாணி
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி..........
புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா.........
கனியில் மேவும் ரச இனிமைப்போலே
இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
கனியில் மேவும்...
நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது.............
எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
எனை புகழ்ந்து.........
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய் ராணி
மனம்..........
நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
இணையான இருவரால் மலரும் நேசம்
அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் மலரும் நேசம்........
Pattukottai's lyrics and MGR
http://i50.tinypic.com/11hsdn8.jpg
MGR once referred ‘Pattukottai' as the most crucial person in catapulting his iconicity and took him to the masses. In fact, in one of MGR's iconic films in the late 50s, Nadodi Mannan, which was produced and directed by MGR himself under the banner Emgeeyar Pictures, ‘Pattukottai' had penned a song (Summa Kedandha Nilathai Kothi) which not only speaks about everyday travails of the peasantry and working classes, but also gives hope to them through the protagonist himself singing Naane Poda Poaren Sattam Podhuvil Nanmai Purindhidum Thittam Nadu Nalam Perum Thittam (I am going to draft laws that will bring welfare in general and also for the nation).
Songs like these, with their reproducibility and wider reach, gave the most important fillip to his popularity and “ideals.”These songs became the most effective form of communication with the masses and gave hope to his fans and followers.
Robert L. Hardgrave, the American scholar who studied his films and iconicity, has said, “What I believe is the most important aspect, is that MGR provided hope to a section of very poor and powerless people. Through his films, and various other advertising means, he appeared as somebody they felt they could trust and rely on, somebody that stood on their side.”
The songs of ‘Pattukottai' like Thayaththu Thayaththu from Mahadevi and Seermevum Gurupadham from Chakravarthi Thirumagal were rendered in dialogue mode and had so much of philosophical overtones with radical and atheistic tinges.
More songs of ‘Pattukottai' like Kuruku Vazhiyil Vazhvu Thedidum Kuruttu Ulagamada, Yetramunna Yetram Idhile Irukkudhu Munnetram, Chinna Payale Chinna Payale from Arasilangkumari and Thirudathe Papa from Thirudathe stood the test of time and made him to be identified as a revolutionary actor.
“His heart was a Tamil garden, where both self-respect theories and communist ideals bloomed.” It was Mr. Karunanidhi who built a memorial for the radical poet who died young.
MGR's charisma has always been a burning topic for social scientists who have tried to analyse the various ways and forms that were involved in the “construction” of his iconicity. Political Scientist Atul Kohli, for example, describes a scene from Madurai in 1984.
The AIADMK in Madurai was virtually indistinguishable from the name and image of MGR. City streets were dominated by larger-than-life posters of MGR, clad in his Tamil ‘lungi' and wearing the dark sunglasses that became his political trademark.
Gaudy posters, garlanded pictures, loud music from MGR's old films, and tapes of MGR's voice on loudspeakers were encountered throughout the city.
At meetings, he addressed the audience as “my blood brothers and sisters”, and managed to create an atmosphere of trust and friendship; his film image transcended various boundaries and still is ruling the roost among the masses.
courtesy - the hindu
மக்கள் திலகம் திரியில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் என் அன்புப் பரிசாக
மிக அரிய பேசும்பட நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...%20-2/11-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அந்தமான் கைதி - 1952......அந்தமான் காதலி ...1978.
வித்தியாசமான தலைப்பு .
மக்கள் திலகம் கதாநாயகனாக 1947 முதல்[ ராஜகுமாரி] நடிக்க துவங்கியவுடன் 1952 வந்த படம் அந்தமான் கைதி .
1952 தீபாவளி அன்று நடிகர்திலகம் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் பராசக்தி .
25 ஆண்டுகள் பின்னர் மக்கள் திலகம் தமிழக முதல்வர் ஆன பின் 1978 பொங்கல் அன்று வெளியான கடைசி படம்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .
நடிகர் திலகம் நடித்த படம் அந்தமான் காதலி அந்த நேரத்தில் வெளியானது .
அந்தமான் கைதி -----நடிகர்திலகம் கலை உலகின் .உள்ளே
1952
அந்தமான் காதலி - மக்கள் திலகம் கலை உலகின் வெளியே . 1978.
22-11-1957
makkal thilagam mgr in mahadevi released in 1957.
55th anniversary.
KODUTTHU VAITHAVAL
http://i47.tinypic.com/25u2kvl.png
வினோத் சார் எங்கே பிடித்தீர்கள் இந்தப் படங்களை மிகவும் அருமை. வாசு சாரின் கொடுத்துவைத்தவள் பேசும்படம் அட்டை மிக அபூர்வமானது. நன்றி.
மக்கள் திலகத்தின் திரைப்பட நிழற்படங்கள் பல வருடங்களாக சேமித்து வைத்தது . சில படங்கள் நண்பர் திரு குமார் அவர்கள் வழங்கியது . உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி ஜெய் சார்
மாட்டுக்கார வேலன் , கொடுத்து வைத்தவள் -மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் மிகவும் அருமை ரவிச்சந்திரன் சார் .
hi esvee !
http://<a href="https://www.youtube...._X7I18BeK0</a>
http://www.hindu.com/cp/2009/05/15/s...1550411600.htm
அஞ்சலி பிக்சர்ஸ் பூங்கோதை 1953 ( தெலுங்கில் பரதேசி )
எல். வி. பிரசாத் இயக்கத்தில் ஏ. நாகேஸ்வர ராவ் அஞ்சலி தேவி முன்னணியில்
சிவாஜி கணேசன் நாகேஸ்வராவுக்கு மகனாக நடித்தார்
அதே திரைக்கதையை அந்தமான் காதலியாக 1977இல் முக்தா பிலிம்ஸ் மீண்டும் எடுத்த போது
நடிகர்திலகம் தந்தை வேடம் ஏற்றார் ( சந்திரமோகன் என்ற நடிகருக்கு மகன் வேடம் தரப்பட்டது )
http://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY
Regards
அந்தமான் கைதியில் இடம் பெற்ற பாரதியாரின் பாடலுக்கு அற்புதமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் வீடியோ பதிவு மிகவும் அருமை tfmlover சார் .
நடிகர்திலகத்தின் பூங்கோதை - அந்தமான் காதலி -இது வரை கேள்விபடாத செய்தி .
நன்றி tfmlover
COURTESY- PRINCENSARMA- THIRAIMANAM
ஆயித்தில் ஒருவன்!
பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள் இல்லத்தில் மூன்று, நான்கு வீடியோ டெக்குகள் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருப்போம். வாடகைக்கு டெக் எடுத்து படம் பார்த்த காலம்.. ஆதலால் அன்றைக்கு(1980-ன் இறுதிப்பகுதிகளில்) அது நல்ல தொழில்!
தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படங்கள், தன்னை வியக்கவைத்த ஆங்கிலத் திரைப்படங்கள் என தொடர்ந்து தேடி எடுத்து, படங்களை (வீடியோ கேசட்டுகளை) வாங்கிவருவார் என் தந்தை. எனவே தினம் ஒரு திரைப்படம் எங்கள் இல்லத்தில் நிச்சயம். அப்படித்தான் பீம்சிங் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்கள், பழம்பெரும் திரைப்படங்கள்(சகஸ்ரநாமம் நடித்த 'போலீஸ்காரன் மகள்' போன்றவை), தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என நிறைய பார்த்துக் குவித்திருக்கிறேன்.
அதிலும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை பின்னாட்களில் சன் தொலைக்காட்சியின் துணைகொண்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' தலையாயது. எம்.ஜிஆரின் துள்ளல் பாவனைகளாலும், அவரது படங்களில் வரும் தத்துவப் பாடல்களாலும் எம்.ஜி.ஆர். படங்கள் பார்ப்பது என்றால் எனக்கு தனிப்பிரியம். என்னோடு அமர்ந்து ரசித்து, எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் இன்னொரு ரசிகை யாரென்றால், எம்.ஜி.ஆர். இறந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த என் இரண்டாம் தங்கை. அதிலும் இந்தப்படம் அவளுக்கு நிறைய பிடித்த ஒன்று. இன்னும் எம்.ஜி.ஆரின் ஈர்ப்பு நிலைத்திருக்கிறது என்பதற்கு அவளொரு சான்று. அதற்கு அவரது துள்ளல் நடிப்பு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். படத்தில் சொன்னதை எல்லாம் நிஜத்தில் செய்தாரா என்ற கேள்வி, அவரது அரசியல் பற்றிப் பேசும் போது எழுப்பப்பட வேண்டியது.
இருக்கட்டும். என்னதான் பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த படமாக இருந்தாலும், திரையரங்கில் வெளியாகியிருக்கிறது என்றால் பிரம்மாண்டமான ஆயிரத்தில் ஒருவனை பார்க்க மனம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
முதன்முறையாக எம்.ஜிஆர் படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு கடந்தாண்டு 'நாடோடி மன்னன்' மூலம் கிடைத்தது. இம்சை அரசனின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடி மன்னனும், உத்தம புத்திரனும் மீண்டும் திரையப்பட்டன. அதில் நாடோடி மன்னன் படம் வெளியாகி இரண்டு வாரம் முடியப்போன நிலையில், நானும் எனது நண்பர்கள் நால்வரும் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்த்தோம். 'தூங்காதே' பாடலுக்காகவும், எம்.ஜி.ஆர். வெளியிடும் 'உழுபவருக்கே நிலம் சொந்தம்; பிச்சை தடை செய்யப்படுகிறது' உள்ளிட்ட அறிவிப்புகளுக்காகவுமே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. (அப்போது தான் கலைஞர் அரசு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.) சிரிப்பு சத்தங்களும், கரவொலிகளும் 'நாடோடி மன்னன்' பழைய படம் என்பதை மறக்கடித்தன.
இந்நிலையில் இவ்வாண்டு வெளியீடாக 'ஆயிரத்தில் ஒருவன்'... 'Pirates of Caribbean' வெளியாகியிருக்கும் சமயத்தில்...
இன்றைய இளம் நாயகன், நாயகி நடித்து வெளிவரும் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம்! இரண்டு முன்னாள் முதல்வர்கள் நடித்த படமல்லவா?
அமைந்தகரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில் சென்று அமர்ந்தோம் ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு! 35 mm படத்தை முழுத்திரையில் திரையிடுவதற்காக பெரிதாக்கியிருக்கிறார்கள். அதை சினிமாஸ்கோப் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால் படத்தில் மேலும் கீழும் கொஞ்சம் கட் ஆகியிருந்தது. நாங்கள் போனது செவ்வாய்க்கிழமை; அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர் சென்றிருந்தபோது, மலர் அர்ச்சனை நடந்திருக்கிறது
படத்தின் கதையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை; 'கடற்கொள்ளைக்காரன்' என்ற தலைப்பில் சிவாஜிக்குத் தயாரான படம்தான் பின்னாளில் ஆயிரத்தில் ஒருவனாக எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்ததாகப் படித்த நினைவு!
படத்திற்கு என்ன கைதட்டல்! அதுவும் ஜெயலலிதா- எம். ஜி.ஆர். முதல் டூயட் பாட்டுக்கு, நம்பியாரின் அறிமுகத்த்துக்கு, எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கு என்று கைதட்டல் விழுந்து கொண்டேயிருக்கிறது என்னுடையதையும் சேர்த்து! எனக்குப் பிடித்த 'ஏனென்ற கேள்வி?' பாடல், 'அதோ அந்த பறவைபோல...'' பாடல் என குதூகல மனப்பான்மையோடு இருந்தேன்.
"நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!"
இந்த வசனத்திற்கெல்லாம் கைதட்டல் பின்னுகிறது.
"என்னம்மா! மருத்துவர்அய்யா நம்ம எண்ணத்தைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார்!" என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் அவரது தோழி (சேடிப்பெண்) கேட்கும்போது, நிகழ்கால அரசியல் நினைவுக்கு வந்து நகைப்பைத் தோற்றுவித்தது.
எம்.ஜி.ஆரின் காதலுக்காகவும், அவருடனான மணவாழ்க்கைக்கும் ஜெயலலிதா ஏங்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, ஏனோ ஜெயலலிதாவின் தனி வாழ்க்கையும் நினைவுக்கு வந்து கழிவிரக்கத்தைத் தோற்றுவித்தது. விருப்பமில்லாமல் திரைத்துறையில் நுழைந்து, பல சமயங்களில் தன் விருப்பத்திற்கு விரோதமான வாழ்க்கையில் தள்ளப்பட்ட ஜெயலலிதாவிற்கு இல்வாழ்க்கை அமைந்து மற்ற நடிகைகளைப் போல அமைந்திருந்தால் அவரது வாழ்க்கை வேறு வேறு திசைகளில் திரும்பி இருக்கக்கூடும்! அது சற்றே மனச் சங்கடத்தையும் தந்தது! மக்ழ்ச்சியாய் படம்பார்க்கப் போய் ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியில் வந்தேன். இந்த முறை படம்பார்த்துவிட்டு வழக்கமான துள்ளல் மனநிலை இல்லை - பூங்கொடியின் முடிவு 'ஜெ'க்கு நடக்காததை நினைத்து!
COURTESY- THIRAIMANAM
என் அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் பிடிக்கும். அதனால் எனக்கு எம்.ஜி.ஆர். பிடிக்கும். , அதனால் என் மகனுக்கும், அதனால் என் பேரபிள்ளைக்கும், அதனால் அவனுடைய பிள்ளைக்கும்.. எக்காலத்திலும் அனைவரையும் கவரக்கூடிய ஆற்றல் அவருக்கு, அவரின் பார்வைக்கு உண்டு... எல்லாம் உண்மை.!
ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், பார்வையிலும் ஆயிரம் அர்த்தங்களைக் காணலாம்.. ஆனால் அனைத்தும் ஒன்றையே குறிக்கும்.
அன்பு, கனிவு, பாசம், அரவணைப்பு(Love, gentleness, affection, warmth)
நீங்களே பாருங்களேன்..!!
Courtesy- thedivanta paathai
எனக்குப் பிடித்த நடிகர்கள் - எம்.ஜி. ராமச்சந்திரன் .
நடிகர்களில் கவர்ச்சி நடிகர் காலம் சென்ற திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்தான், அவரது அடிதடி சண்டைகளைவிட நான் விரும்பியது அவரது கவர்ச்சியான முக அழகு, அதுதான் அவரது ப்ளஸ், கட்டான உடல் வாகு உள்ளவர் என்றாலும்அழகிய முகமும் அவரது நிறமும் எல்லோரையும் கவரக் கூடியது. அவரது முகத்தில் காணப்படும் குழிகளில் விழாதவர் யாரும் இருக்க முடியுமா.
மிகவும் கஷ்டப பட்டு முன்னணிக்கு வந்த நடிகர்களில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும் ஒருவர், ஆனால் தான் கஷ்டப்பட்டதனால் மற்றவர் கஷ்டத்திற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களை யாராலும் மறக்க முடியாது.
அந்த கால கோடம்பாக்கத்தின் வீதிகளிலும் அவருடைய வீட்டருகிலிருந்த வீதிகளிலும் பண மழை தூவி கொண்டு காரில் போவார் என்று நான் கேள்வி பட்டதுண்டு. ஏழைகளை நேசித்த சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரனும் ஒருவர்.
தர்மம் தலை காக்கும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் திரு எம்.ஜி. ராமச்சந்திரன், அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்தும் உயிரிழக்காமல் பிழைத்து முதலமைச்சர் ஆனது அவர் செய்த தான தருமங்களாகத்தான் இருக்கும். அவரைத் தேடி போகும் ஒவ்வொருவரையும் வயிறு நிறைய சாப்பிட சொல்லுவார் என்றும் நான் கேள்விபட்டு இருக்கிறேன் அதற்க்கு காரணம் அவர் தன் வாழ்க்கையில் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் அதனால் அவர் பசியுடன் யாரும் தன் வீட்டிற்கு வந்து பசியுடன் திரும்பி போககூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்ததாக சொல்லுவார்கள்.
'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு மாத காலம்வரைகூட நுழைவுச் சீட்டு கிடைக்காமல் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதிக் கொண்டிருந்தது, அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்களே மீண்டும் மீண்டும் சென்று பார்த்ததால் எல்லா காட்ச்சிகளும் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது, திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் கூறும் விமர்சனத்தை கேட்டுவிட்டு போகத் துடித்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருத்தியாக எத்தனை நாட்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் காத்திருப்பது என்று ஒருமுடிவுக்கு வந்து இன்று எப்படியாவது பார்த்துவிடுவது என்று திரையரங்கத்தினுள்ளேச் சென்று பார்த்தால் நுழைவுச்சீட்டு கிடைக்கும் என்றே தோன்றவில்லை, அப்படிப்பட்ட கூட்டம், எப்படியோ இன்று நுழைந்து விடுவது என்று நுழைந்து கூட்டத்தில் நன்றாக சிக்கிக்கொண்டு விட்டேன், என் தாவணி யார் கையிலோ போய்விட்டது, எடுத்தவர் கொடுக்கட்டும் மெதுவாக என்று கூட்ட நெரிசலில் எப்படியோ நுழைவுச்சீட்டு பெற்று ஒரு வழியாக பார்த்துவிட்டு வந்த அந்த திரைப்படத்தை வாழ்வில் ஒருநாளும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு நுழைவுச் சீட்டுபெற்று வேறு எந்த திரைப்படத்தையும் பார்த்ததே இல்லை.
நான் எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய ரசிகை இல்லை, ஆனால் தமிழ்நாட்டின் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் அவரது திரைப்படங்களில் என்னதான் இருக்கிறது என்று நினைத்து திரையரங்குக்குச்சென்று பார்த்த சில திரைப்படங்களில் 'பெற்றால் தான் பிள்ளையா', 'ஆயிரத்தில்ஒருவன்', 'எங்க வீட்டுப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'அன்பே வா' இன்னும் பல திரைப்படங்களும் உண்டு. இவர் நடித்த திரைப்படங்களைவிட அந்த திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகள் பாடலின் எழுத்துகளும் மிகவும் நன்றாக இருப்பதோடு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற உணர்வைத் தூண்டக் கூடியவையாக இருக்கும்.
எம்.ஜி.ஆருடன் பானுமதியம்மா, சரோஜா தேவி, ஜெயலலிதா போன்றவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்களை நான் பார்த்து ரசித்ததுண்டு.
Coutesy- rudhranin paarvaiyil
மாறும் ரசனை....
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.
அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.
ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!
பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1
இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் zen. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.
http://i46.tinypic.com/219ui6s.png
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.
கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!
Courtesy - edhivarai -thiru ramasamy
http://i47.tinypic.com/2d003r6.jpg
எம்.ஜி.ஆர் கட்சியாகவே அறியப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு விரியத் தொடங்கியிருந்த அறுபதுகளின் பின்பாதியிலும் எழுபதுகளின் முன்பாதியிலும் பள்ளிப் படிப்பில் இருந்த நான், அவரது நூற்றுச் சொச்சம் சினிமாக்களில் 75 சதவீதம் படங்களைப் பார்த்தவன். அவரது அரசியல் வாழ்க்கைக்குக் காரணமாக இருந்த நாடோடி மன்னன், காஞ்சித் தலைவன், காவல்காரன், எங்கள் வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், நாளை நமதே ஒளி விளக்கு, இதயக்கனி போன்ற படங்கள் நிகழ்கால அரசியலைப் பேசிய படங்கள் இல்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழக அரசியலோடு சேர்த்துப் புரிந்து கொண்டு பார்த்து ரசித்த காலம் அது. அவர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய பின் வந்த நம்நாடு, நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை அவரது புதிய கட்சியின் நிலைபாட்டோடு பொருத்திப் பார்த்து ரசித்த காலமும் பள்ளிப் பருவக் காலம் தான். எனது பள்ளிப் பருவக் காலத்தில் எனக்குப் பிடித்த சினிமாவைத் தேர்வு செய்வதற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிக பிம்பம் காரணமாக இருந்தது என்பதைவிட அவரது அரசியல் பிம்பமே அதிகக் காரணமாக இருந்தது. அதிலும் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட பட்டுக் கோட்டைக் கலியாண சுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் வரிகளுக்கு வாயசைத்துக் கைகளை ஆட்டிய எம்.ஜி. ஆரின் பிம்பங்களைப் பார்ப்பதற்காகவே நான் அவரது ரசிகனாக இருந்தேன்; என் தலைமுறையில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததற்கு அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களும் அவற்றைக் காட்சிப் படுத்திய இயக்குநர்களின் திறமைகளுமே காரணங்களாக இருந்தன எனச் சொல்வது மிகையான ஒன்றல்ல.
COURTESY- EDHUVARAI - THIRU RAMASAMY என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.
http://i49.tinypic.com/ohlovq.jpg
கலையரசி என்னும் சினிமா நினைவில் இருக்கிறது என்றவுடன் அந்தப் படத்தின் கதைப்போக்கும், நிகழ்வுக் கோர்வைகளும், காமிராவில் காட்சித் துண்டுகள் பதிவு செய்யப்பெற்ற நுட்பங்களும், பதிவு செய்வதற்காக படப் பிடிப்புக் குழுவினர் செய்திருக்கக் கூடிய உழைப்பும், அதன் வழியே உருவாக்கப்பட்ட காட்சிகள் அடுக்கப்பட்ட முறையும், திரையில் விரிந்த காட்சியில் நடித்திருந்த நடிகர்களின் வெளிப்பாடும், அதன் வழி உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் நம்பகத் தன்மையும், நம்பகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் காட்சிகளுக்காக அமைக்கப்பெற்ற பின்னணிக் காட்சிகளும், இவையெல்லாம் உண்டாகும்போது அலுப்புத் தோன்றி விடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப் பெற்ற இசைக் கோர்வைகளும், அதன் வழி உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துநிலையும் என ஒரு திரைப்பட உருவாக்கத்தின் தொடர்புச் சங்கிலிகள் எல்லாம் இன்னும் தங்கி இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கலையரசி திரைப்படம் சார்ந்து இவற்றில் ஒன்று கூட எனக்கு நினைவில் இல்லை. நினைவில் இல்லை என்று சொல்வதைவிட இவை எவற்றையும் கவனித்து அப்போது படத்தைப் பார்த்தவன் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் நினைவில் இருப்பதெல்லாம் கலையரசி என்ற அந்தப் படத்தின் பெயரும் அதில் நடித்த நாயக நடிகர் எம்.ஜி.ஆர். என்பதும் மட்டுமே.
ரசிகன் (fan) என்பவன் ஒரு நடிகனின் பெயருக்காகவும் அந்தப் பெயர் உருவாக்கும் பிம்ப அடுக்குகளுக்காகவுமே தொடர்ந்து ரசிகனாக இருக்கிறான். பெயருக்காக ஒரு நடிகரின் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகன் அந்தப் படத்தின் வசனமோ, பாடலோ, காட்சியோ, இவைகள் இணைந்து உருவாக்கும் பிம்ப அடுக்குகளோ, அவனது வாழ்வின் பகுதியாக, நினைத்துக் கொள்ளத் தக்க ஒன்றாக ஆகும்போது அந்தப் படத்தை பிடித்த படமாகப் பட்டியலிட்டுக் கொண்டு மறக்காமல் வைத்திருக்கிறான். எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த சில படங்களை அதற்கு முன்பே நான் பார்த்திருந்தாலும், கலையரசி என்ற அந்தப் படம் தான் என் நினைவில் இருக்கும் படங்களில் ஆகப் பழைய படம். கலையரசி என்ற பெயரைச் சினிமாவாக நான் நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பறக்கும் தட்டுக் காட்சிகள் மட்டுமே. அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கக் காரணம் அன்று என்னைப் படம் பார்க்க அழைத்துச் சென்ற எனது பெரியம்மா மகனான அந்த அண்ணனோடு எனக்கிருந்த உறவும், கலையரசி என்ற பெயரோடு பின்னாளில் எனக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் முகமும் என்பது எனக்குள் இருக்கும் ரகசியம். அந்த ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.
விதிகளின்படி பார்த்தால் அந்தப் படம் பார்க்கப் போகும் போது எனக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் இரண்டணா தான். (ஒரு அணா என்பது 6 பைசாக்கள்) முழு டிக்கெட் தொகையான நான்கு அணாவே என்னிடம் இருந்தது. ஆனால், அந்த அண்ணனிடம் டிக்கெட்டுக்கான நாலணா காசு இல்லை. நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படம் பார்க்கப் போனோம். என்னிடம் இருக்கும் நாலணாவை அவரிடம் தந்து விட வேண்டும். அதற்கீடாக என்னைப் போகும் போதும், வரும் போதும் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படம் காட்டித் திரும்ப வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொண்டு என்னிடம் இருந்த நான்கு அணாவை அவரிடம் கொடுத்து விட்டு அவரது தோளில் உட்கார்ந்து கொண்டேன். தோள் மாற்றி தோள் மாற்றித் தூக்கிக் கொண்டு போனவர் டிக்கெட் எடுக்கும் இடத்தில் தூங்குவது போல நடிக்கச் சொன்னார். நானும் அவரது தலையில் சாய்ந்து தூங்குவது போலப் பாவனை செய்து படுத்துக் கொண்டேன். ”படம் பார்க்காமல் தூங்கும் சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, அரை டிக்கெட்டும் வாங்காமல் உள்ளே அழைத்துப் போய் கலையரசி படத்தை எனது காசில் பார்த்தார். திரும்ப வரும்போதும் அவரது கழுத்தில் என்னை உட்கார வைத்து இரண்டு கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். தரையில் கால் வைக்காமல் நள்ளிரவுக்குப் பின் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அந்தரத்தில் செய்த பயணத்தின் போது காற்றில் அசைந்த மரங்களின் உருவங்கள் எல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போலத் தோன்றின. கலையரசி படத்தில் பறக்கும் தட்டில் பயணம் செய்யும் பானுமதியைப் பிடிக்கத் தனது கைகளையே இறக்கைகளாகப் பாவித்து அசைத்து அசைத்துச் செல்லும் எம்.ஜி.ஆர் போல அவரது தோளில் அமர்ந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.
கலையரசி சினிமாவுக்குத் தோளில் வைத்துத் தூக்கிப் போன அந்த அண்ணனோடு சேர்ந்து ,எங்களூருக்குப் பக்கத்தில் இடம் மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் டூரிங்க் டாக்கீஸ்களில் பார்த்த படங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ள வில்லை. வாரத்துக்கு ஒரு படமாவது பார்த்து விடுவோம். நாற்பது வயதிற்குள்ளாகவே கேன்சர் நோயில் மரணத்தைச் சந்தித்த அவரிடம் தான் எனது பள்ளிப் பருவக் காதலியான கலையரசியைப் பற்றியும் பேசி இருக்கிறேன். நாடகக் குடும்பத்தைச் சேர்ந்த பாட்டுக்காரியான கலையரசியைப் பின்னாளில் சந்திக்க நேர்ந்ததும், விடலைப் பருவக் காதலில் விழுந்ததும் கூட அந்தப் படம் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதுதான் அந்த ரகசியம். எனது பிடித்தமான படங்களின் பட்டியலுக்குள் கலை அரசி என்ற சினிமா இடம் பிடித்த காரணம் போல , ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். திரைப்படம் என்னும் கலை மற்றும் வியாபாரம் சார்ந்த உருவாக்கங்களில் மட்டுமல்லாமல். எல்லா வகைக் கலைப்படைப்புகளையும் –படிக்க நேர்கிற இலக்கியப் படைப்புகளையும் அவரவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றித் தங்களின் மூளைக்குள் பதிவு செய்து வைத்துக் கொள்வதே தொடக்கநிலை ரசனையின் அடிப்படை. அந்தத் தொடக்கநிலை ரசனை சார்ந்த பிடித்தவைகளின் பட்டியலில் இருக்கும் பொதுக் கூறுகளையும் தனித் தன்மைகளையும் அளவுகோல்களாகக் கண்டறிந்து அக்கலைப்படைப்புகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும்போது ரசிகன் தேர்ந்த பார்வையாளன் என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான். தேர்ந்த பார்வையாளன் சொல்லும் காரணங்களும் அவற்றின் பின் இருக்கும் உணர்வெழுச்சிகளும் அல்லது தர்க்கங்களும் பலருக்கும் பொதுவானதாக மாறும் போது அல்லது தோன்றும் போது விமரிசன அளவுகோல்கள் உருவாகி விடுகின்றன. தேர்ந்த பார்வையாளன் விமரிசகன் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவி விடும் பாய்ச்சல் நடக்கும் வித்தை அப்படிப் பட்டதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் இருக்கும் விமரிசனக் குறிப்புகள் அல்லது மதிப்பீடுகள் அப்படி உருவானவையே தவிரத் தனியாகத் திரைப்படக் கலை சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்து உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவை அல்ல என்பதைச் சொல்ல நான் எப்போதும் தயங்குவதில்லை.