பதிவின் எண் - 2070
நமது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிகமாக misuse செய்யப்படும் வார்த்தை என்னவென்றால் சாதனை என்ற வார்த்தைதான். அதிலும் சினிமா உலகில் இது மிகவும் அதிகமாக புழங்கும் ஒன்று. ஆனால் அது பயன்படுத்தப்படும் பின்புலத்தையோ அல்லது என்ன லாஜிக்கில் சொல்லப்படுகிறது என்று பார்த்தோம் என்றால் ஒன்றுமே இருக்காது. அந்த காலத்திலேயே ஒரு வருடத்தில் ஒரே ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்து விட்டு அது 100 நாள் ஓடியது, அதனால் அது பெரிய சாதனை என்று மார்தட்டுகிறார்கள். பழைய நாட்களிலே இந்த அள்ளி விடுதல்கள் ஆரம்பித்து விட்டன. சரி இப்போது எதற்கு அந்த கதை என்கிறீர்களா? சொல்கிறேன்.
54 வருடங்களுக்கு முன் இதே தேதியில் உத்தம புத்திரன் வெளியாகியிருக்கிறது. அந்த விவரங்களைப் பார்த்துவிட்டு தொடர்ந்து அந்த வருடம் [அதுவும் 1958] வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்தபோது பளிச்சென்று ஒரு உண்மை தாக்கியது. யார் யாரோ சாதனை என்கிறார்களே இதை விடவா என்று தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இதோ
முதல் படம் -உத்தம புத்திரன் - வெளியான நாள் - 07.02.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை- காசினோ
மதுரை - நியூ சினிமா
மைசூர் - லட்சுமி.
இரண்டாவது படம் - பதிபக்தி - வெளியான நாள் - 14.03.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை - கெயிட்டி
மதுரை -கல்பனா
திருச்சி - ஜுபிடர்
கோவை - கர்னாடிக்.
மூன்றாவது படம் -சம்பூர்ண ராமாயணம் -வெளியான நாள் - 14.04.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
மதுரை - ஸ்ரீதேவி (165 நாட்கள்)
திருச்சி -சென்ட்ரல்
சேலம் -ஓரியண்டல்
கோவை - டைமண்ட்
தஞ்சை- யாகப்பா.
நான்காவது படம் - பொம்மை கல்யாணம் -வெளியான நாள் - 03.05.1958
ஓடிய நாட்கள் - 6 வாரங்கள்
ஐந்தாவது படம் - அன்னையின் ஆணை - வெளியான நாள் - 04.07.1958
ஓடிய நாட்கள் - 84 நாட்கள்
மதுரை & திருச்சி
ஆறாவது படம் - சாரங்கதாரா - வெளியான நாள் - 15.08.1958
ஓடிய நாட்கள் - 6 வாரங்கள்
ஏழாவது படம் - சபாஷ் மீனா - வெளியான நாள் - 03.10.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்கு
சென்னை - காஸினோ [119 நாட்கள்]
எட்டாவது படம் - காத்தவராயன் - வெளியான நாள் - 07.11.1958
ஓடிய நாட்கள் - 84 நாட்கள்
மதுரை - சிந்தாமணி
ஆக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த 1958-லியே நடிகர் திலகத்தின் எட்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் 4 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன, இரண்டு படங்கள் 84 நாட்கள், மீதம் இரண்டு படங்கள் 6 வாரங்கள் ஓடியிருக்கின்றன.
அது மட்டுமா இந்த 1958-ல்தான் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் ஒரே கதாநாயக நடிகர் நடித்து வெளியான முதல் மூன்று படங்களுமே 100 நாட்கள் ஓடியது என்ற சாதனையை செய்தன நடிகர் திலகத்தின் படங்கள்.
ஒரே வருடத்தில், இந்த 1958-ல்தான் ஒரே கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகம்தான்.
[பிறகு 1964-ல் ஒரே வருடத்தில் முதன் முதலாக ஒரே ஹீரோவின் 5 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை படைத்ததும் நடிகர் திலகம்தான்.
அதன் பிறகு 1972-ல் ஒரே வருடத்தில் முதன் முதலாக ஒரே ஹீரோவின் 6 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை படைத்ததும் நடிகர் திலகம்தான்].
அது போல் 1958-ல் ரிலீஸ் தியேட்டரில் highest theatrical run என்ற பெருமையையும் தாக்க வைத்துக் கொண்டதும் நடிகர் திலகத்தின் சம்பூர்ண ராமாயணம்தான். மதுரை ஸ்ரீதேவி - 165 நாட்கள்.
ஆக சாதனை என்றால் இது சாதனை! இதுதான் சாதனை!
அன்புடன்