Originally Posted by
Sowrirajann Sri
நண்பருக்கு புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
அத்துடன் தாங்கள் இட்ட லிங்க் கண்டேன்...மிக மிக நன்றி..!
அதில் நீங்கள் கூறி இருந்ததை போல எங்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உள்ளது? என் கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை...
இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பொறுமையாக இன்றிரவு பார்கிறேன்.
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதியதை தாங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று எடுத்துகொண்டீர்கள என்று தெரியவில்லை.
முதற்க்கண் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் உங்களை போலவே ஒரு ரசிகர் அல்லாமல் எந்த ரசிகர் மன்றத்தையும் சேர்ந்தவர் அல்ல !
மதுரையும் அதன் சுற்றுபுறம் உள்ள முக்கால் வாசி திரை அரங்கு உரிமையாளர்கள் அவருடைய Family Friends காரணம் திரு.முரளி அவர்களுடைய பூர்விகம் மதுரை மற்றும் அவருடைய சுற்றமும் சூழலும் அவர்களை மூதாதையர்கள் காலத்திலிருந்து நன்கு பழக்கம் உள்ளவர்கள்.
ஆகையால், நடிகர் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் அல்லது மக்கள் கலைஞர் திரைப்படமாக இருந்தாலும் அல்லது காதல் மன்னன் ஜெமினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி..அதனுடைய வெளிவந்த தினம், கடைசி நாள் எப்போது, வசூலான தொகை எவ்வளவு முதல்கொண்டு அனைத்து விஷயங்களையும் தனக்குண்டான திரை ஆர்வத்தாலும், நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையிலும் தெரிந்துகொண்டு அதை குறிபெடுத்து வைத்துகொள்பவர். அதை எங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்பவர்.
பம்மலர் அவர்களோ, அணைத்து தினசரிகளில் வந்த ஆதாரபூர்வமான விளம்பரங்கள், அந்த திரை அரங்கில் ஒரு திரைப்படம் வெளி வருவதற்கு முன் என்ன திரைப்படம் எந்த தேதியில் வந்தது...எந்த தேதியில் எடுக்கப்பட்டது போன்ற நுணுக்கமான விவரங்கள் மற்றும் Revenue Departmentil உள்ள அவரது நண்பர்களின் உதவிகொண்டு, பழைய கோப்புகளிலிருந்து வசூல் தகவல்களையும் குறிபெடுத்து அதை பல நோட்டுபுதகங்களில் எழுதி பாதுகாத்து வைத்திருப்பவர். அதை மக்கள் திலகம் திரியில் அவர் பல மக்கள் திலகத்தின் திரைபடங்களுடைய அரிய தகவல்களை பகிர்ந்தும் இருக்கிறார் என்பது இங்குள்ள அனைவருக்கு தெரிந்தது...நாங்கள் அந்த ஆவணங்களின் காபியை பத்திரமாக பாதுகாத்தும் வருகிறோம். இது போன்ற சந்தர்பங்களில் அதை வைத்து இங்கு பகிர்ந்துகொளவும் செய்கிறோம்.
ஆதாரமற்ற பொய்யான அல்லது தவறான அல்லது வெறுமே கேள்விப்பட்ட தகவல்களை இன்றுவரை நான் எழுதியதில்லை.