Originally Posted by
mr_karthik
நாளை (26.06.2013) வாழும் நாள்வரை உத்தமனாக வாழ்ந்து காட்டிய (நடித்துக் காட்டிய அல்ல) ஒரிஜினல் உத்தமனின் ""உத்தமன்"" திரைக்காவியத்தின் 38-வது ஆண்டு உதயம்.
அதனையொட்டி......
பம்மலார் அவர்கள் தனது பொக்கிஷ விளம்பரப் பதிவுகளைத் தந்து அசத்துவார்கள் என்றும்,
நெய்வேலியார் அவர்கள் நிழற்படங்கள் மற்றும் அரிய தகவல் களஞ்சியங்களைத் தந்து அதிர வைப்பார்கள் என்றும்,
ராகவேந்தர் அவர்கள் படம் வெளியான காலத்தில் சாந்தியில் நிகழ்ந்த நினைவேடுகளைத் தந்து அசர வைப்பார்கள் என்றும்,
முரளியார் அவர்கள் மதுரை நிகழ்வுகளைத் தந்து மகிழ்விப்பார்கள் என்றும்,
கார்த்திக் (நான்தான்) படவெளியீட்டின் முதல் நாளன்று வடசென்னை கிரௌன் அரங்கின் அளப்ப்ரைகளை பதிவிடுவான் என்றும்,
கோபாலர், சௌரியார், மற்றும் அனைவரும் தங்கள் பங்களிப்புகளை அள்ளித்தந்து அதம் புரிவார்கள் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...