http://i1065.photobucket.com/albums/...psmptmshk2.jpg
Printable View
http://i1146.photobucket.com/albums/...psyzxf3nnn.jpg
நிழற்படம் ...
நினைவுகளை மீட்டும்...
காலத்தைக் காட்டும்..
நேரத்தை ஓட்டும்...
உறவுகளைக் கூட்டும்...
எல்லாம் வல்லது..
ஆனால்..
நிழற்படம்..
மனிதனை அழ வைக்குமா...
ஆம்.. அழ வைக்கும்...
நிழற்படம்...
மனிதனை உணர்ச்சி வசப்படுத்துமா..
ஆம்.. உணர்ச்சி வசப்படுத்தும்..
நிழற்படம்..
உயிர் பெறுமா...
ஆம்... உயிர் பெறும்...
நிழற்படம்...
நம்மை ஓ..வென்று கதற வைக்குமா..
நிச்சயம் செய்யும்...
செய்வீர்கள்...
தான் காலடி பதித்து ஆடிப்பாடிய
தலத்தில்..
தானே சிலையாய் நிற்கும்..
அந்த உன்னதக் கலைஞனை
நினைத்தால்...
இந்த நிழற்படம்...
இதையெல்லாம் செய்ய வைக்கும்...
இதோ ...
நம் கண்ணீர் இந்த சிலையை
நனைப்பதும்..
அதில் அந்த சிலையும் உருகுவதும்..
அதில் உள்ள அந்த உயிர்
ஓடி வந்து நம்மைத் தேற்றுவதும்..
இதெல்லாம் நடக்கத்தானே செய்கின்றன...
இந்த வறண்ட பூமி
இந்தக் கோடையில்
தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்கின்றது..
நம்முடைய கண்ணீரால்...
Hearty Welcome to Mr.Jayakumar and request you to give more news about our Great Nadigar thilagam in this thread
C. Ramachandran
Hearty welcome to newbee Mr. Perumal Jai for his initiative and enthusiasm to participate and to contribute for the cause of NT in the days to come
senthil
Congrats Yukesh Babu. Almighty's blessings on your baby be showered.
senthil
Yugesh Babu,
Our Hearty Blessings to the new born. Congrats.
Dear Loganathan,
Pl.Accept my condolence for your irrepairable loss.
Our Hearty welcome to Jaykumar.
There is an article by Crazy Mohan in The Hindu - Tamil about his experience in watching the
movie of Nitchaya Tamboolam in Eros Theatre in Adyar as well as the award he received for the
movie of Aboora Sahaodarargal from NT.
Could anyone have the facility can reproduce the same here.
Regards
https://scontent.xx.fbcdn.net/hphoto...83&oe=557705BC
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
நமது மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் ரசிகரும் மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் சரவணன் அவர்கள் நடித்து வெளிவரும் இரண்டாவது திரைப்படம் சரித்திரம் பேசு படத்திற்கு மதுரை மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...51&oe=5576577B
For Vasu as well as everyone
http://tamil.thehindu.com/cinema/cin...cle7039111.ece
Gap filler Nostalgia : Aandavan Kattalai
The single most song sequence that has multiple answers to life's complications, egos and intricacies....the Poathimaram to Budhdhaa? The end point of color change in a titration process?
Pattinaththaar's karumbu?
Life ends ultimately as a groundnut peel?! Watch and perceive the moral taught by NT's superb action depiction at the end when he just peels off groundnuts....and pooh-poohs the husks!!
https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc
இன்னொரு பக்கம் என்ற தலைப்பில் வாசுகி இதழ் வாரம் ஒரு பிரபலத்தைப்பற்றி கட்டுரை வெளியிட்டது.அதில் நடிகர்திலகத்தைப்பற்றி அந்த இதழில் வந்த கட்டுரை
Paga1
http://i1065.photobucket.com/albums/...ps7mzh9vy8.jpg
Contd...
செவாலியே விழாவில் நடிகர்திலகத்தின் பேச்சு
http://i1065.photobucket.com/albums/...pscyemu3fu.jpg
http://i1065.photobucket.com/albums/...psxjtjbgtz.jpg
[emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574]
http://i1065.photobucket.com/albums/...pscuveca6e.jpg
[emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571]
சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தைப் பற்றி கூறுங்களேன்?
சிறு வயதில் எனக்குப் பிடித்த விளை யாட்டு, எந்தப் பேப்பரைப் பார்த்தாலும் எந்தக் காலி சுவரைப் பார்த்தாலும் முதல் காரியமாக அதில் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்கிற சதுரத்தை எழுதுவது தான். இந்த விநோத சதுரத்தை நீளவாக் கில், அகலவாக்கில் என்று எப்படி வாசித்தாலும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்றுதான் வரும்.
பெரியவனானதும் இந்த விளையாட்டு வேறு விதமாக தீவீர மானது. இரண்டு வாரங்கள் அடையார் ஈராஸ் தியேட்டரில் ஓடிய நடிகர் திலகம் சிவாஜியின் ‘நிச்சயத் தாம்பூலம்’படத்தை ‘மோகன் வந்தாச்சா... படம் ஆரம் பிக்கலாமா?’ என்று தியேட்டர் ஆப் பரேட்டர் கேட்கும் அளவுக்கு அத்தனை ஷோக்களையும் பார்த்தேன்.
‘படைத்தானே…’ என்று சிவாஜி சாரின் சோலோ பாடலை சக மாணவர்களு டன் விசிலடித்தபடி கண்டு மகிழ்ந்திருக் கிறேன். ஆமாம்! சிவாஜி சார் வாய் வழி யாக பாட்டோ, வசனமோ… வந்தால் அது ஜிலேபி போலத்தானே இனிக்கும்!
என் நண்பன் என்னை சீண்டுவதற்கா கவே ‘சிவாஜி ரொம்ப Over Acting’ என்பான். அதற்கு நான் ‘சிவாஜிக்குப் பிறகு Actin Over’ என்பேன். இதைப் பின்னாளில் பல இடங்களில் சொல்லி ‘கிளாப்ஸ்’ வாங்கியிருக்கிறேன்.
சிவாஜி பேசினாலும், சிவாஜியைப் பற்றிப் பேசினாலும் கிளாப்ஸ் வரும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த நடிகர் திலகம் கையால் ஒருநாள் நானும் விருது வாங்குவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. எப்போதுமே நினைக்காத கனவுதானே பலிக்கும்!
கமல் சாரின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் வெள்ளி விழா வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. எதையும் வித்தியாசமாக செய்யும் கமல் சார், தெலுங்கில் இருந்து நாகேஸ்வர ராவ், மலையாளத்தில் இருந்து மது, தமிழில் இருந்து சிவாஜி என்ற மூவர் அணியை மேடையில் கவுரவ விருந்தினர்களாக உட்கார வைத் தார். தோட்டாதரணி, பி.சி.ராம், பி.லெனின், வசனம் எழுதிய அடியேன்… இப்படி எல்லோருக்கும், சிறப்பு விருந்தினர்கள் தலா 6 பேர் என்கிற கணக்கில் விருது வழங்கினார்கள்.
‘நிச்சயத் தாம்பூலம்’ சிவாஜி சார் கையால் விருது வாங்க மனசுக்குள் திடமாக ‘நிச்சயித்து’ வாயில் போட்டிருந்த ‘தாம்பூலத்தை’ துப்பாமல் முழுங்கி டென்ஷனாக அமர்ந்திருந்தேன். கமல் சார் ‘குள்ள’ அப்புவாக வந்து கலைஞரிடம் தனக் கான விருதை வாங்கிச் சென்றார். பிறகு, நிகழ்ச்சியைத் தொகுத்தவர் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்களைத் தொடர்ந்து படிக்க, ஒவ்வொருவராக மேடையேறி அந்த மூவரில் ஒருவரிடம் விருதினை வாங்கிச் சென்றார்கள்.
‘கைக்கு எட்டிய சிவாஜி, ஜிலேபியாக விருது வழங்கி என் வாய்க்கு எட்டுவாரா?’ என்ற கனவில் வசனகர்த்தாவான அடியேன் விசனகர்த்தாவானேன். எந்த தெய்வத்தை வேண்டினால் என்னுடைய நேயர் விருப்பம் நிறைவேறும் என்று எண்ணியபடி மேடையில் அமர்ந்த கலைஞரைப் பார்த்ததும், ‘பராசக்தி’ நினைவுக்கு வந்தாள். அவளிடம் வேண்டிக்கொண்டேன். அப்புறமென்ன சிவாஜியை அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ சிவாஜிக்கு என்னை அறிமுகப் படுத்தினாள். அந்த சிங்கத்தின் கையால் அன்று விருது வாங்கியது என் அதிர்ஷ்டம்!
பிறகு சிவாஜியின் மைந்தர் பிரபுவுக்காக ‘சின்ன மாப்ளே’, ‘சின்ன வாத்யார்’, ‘வியட்னாம் காலனி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியபோது சிவாஜி சாரின் போக் ரோடு அன்னை இல்லத்துக்குச் செல்லும் பாக்யம் கிடைத்தது. அப்போது சிவாஜியை சந்தித்து சகஜமாக உரையாடு வேன். ஒவ்வொருமுறையும் பேச்சு முடியும்போது மறக்காமல் ‘தம்பி… நாடகத்தை விட்டுறாதீங்க!’ என்பார் நடிகர் திலகம். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... இந்துவே இந்துவே… தமிழ் இந்துவே..!’
This is not only a statement from the inner heart core of Malayaalam actor de facto NT on our acting demigod but also the verdict and endorsement by global cine goers who have grown up watching NT films!!
Madhu had taken to the footsteps of NT in many a Malayalam movies and he graced the NT film Bharatha Vilas as a token of respect to NT in the song sequence Indhiya Nadu en veedu!! He had also reproduced the acting style of NT in the Malayalam version of Vaazhkkai as Jeevitham!
https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4
Watch youthful Madhu with Sheela in the evergreen national award movie Chemmeen!
https://www.youtube.com/watch?v=b7JIfXxw6OU
கழுகார் பதில்கள்!
டி.பிரேம்குமார், கோயம்புத்தூர்6.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் உயர்ந்த விருதுகள் அளிக்காதது வேதனைக்குரிய விஷயம்தானே?
நடிகர் திலகம் என்ற பாராட்டைவிட சிவாஜிக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும். ரசிகர்கள் அளிக்கும் பட்டத்துக்கு இணையானது அல்ல, அரசாங்கம் அளிக்கும் பட்டங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருக்கிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்.’ அவரது குரலைக் கேட்கும்போது காது அதிர்கிறது. பார்க்கும்போது கண்கள் துடிக்கின்றன.
Thanks : Astrologer Krishnamoorthi
நான் படிக்கும் காலங்களில் சுமார் இருபது வயது வரைக்கும்,நடிகர் திலகம் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன்.வேறு யார் படமும் அதிகம் போகமாட்டேன்.
இப்போது நாப்பது வருடமாக சினிமா போவதில்லை
எதற்கு சொல்லுகிறேன் என்றால், அனுபவம் தெரிந்துகொள்ளவேண்டும். தாமரையில் நீர் எப்படி பட்டும் படாமலும் இருக்கிறதோ அதுபோல் நாம்,. இந்த உலகத்தில் பட்டும் படாமலும் இருந்தால் நமக்கு மன நிம்மதி வந்துவிடும்.
அந்த காலத்தில் குடும்ப பாங்கான சினிமா நடிகர் திலகம் அதுதான் ஒரு மனிதனை பல அனுபவத்தில் கொண்டு விடும். குடும்பம் பிரியாது. இப்ப உள்ள படங்களை பார்ஹ்தால் குடும்பம் பிரிந்துவிடும் அன்பர்களே.
ஆகவே, எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்ட தில்தான் இருக்கிறது.
எதையும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நாமதான் தவறாக வாழ்கிறோம் என்பதனை நாம் எப்போது புரிந்துகொள்கிறோமோ அப்போதே நமக்கு வெற்றிதான்..
https://www.facebook.com/tkmoorthiOnline
https://www.facebook.com/tkmoorthiOn...12026185561211
For our satisfaction ....we resort to say so many consoling statements as to why NT has not been conferred with any higher awards of Indian Government. Even as admirers and followers of NT like Sanjeev Kumar or Kamalahasan or Saaradha...were honoured multiple times...the thesaurus of global acting...the dictionary of acting traits...NT was ignored and insulted during his life time for obvious reasons that are open secrets. Even now our eyes got dried up...shameful people...shameless actions and horse-trades lobbies...digging in his own soil .... even though he had emerged out from his Heaven like a Phoenix proving his success and rerun value through the pride of Tamil Cinema KARNAN....do you expect these vision less eyes searching in darkness the existence of a black cat...can do justice to NT? NT deserves even though posthumous, a Bharath Rathna for having made this nation proud with his VPKB winning accolades abroad and for his indelible characterization of roles which cannot even be thought of by these so called Oscar winners hitherto. We all perish as mortals, but NT remains forever as an immortal icon towards whose feet these awards or honours should line up to get honoured in turn!!
senthil's personal opinion onlyQuote:
Even to understand the strength of ahimsa taught by our Mahaathmaa we needed a foreigner Attenborough to unearth the facts and figures culminating into an Oscar winning Movie Gandhi!! I am sure one day some one from a foreign soil will come to our solace to retrieve the latent talents of NT for a global projection leading to a life time Oscar for a foreign actor who is incomparable to any of his predecessors or footsteppers!! Hopes make us live!!! At that time these cats will also come out shamelessly!!
Today,I watched Iruvar Ullam in Kalaignar TV for the 36 th time. But it absorbs me totally even today .Even New Movies can not do this magic. Kudos to nadigarthilagam-Sarojadevi-Kalaignar-Prasad- K.V.Mahadevan-kannadasan-Lakshmi. Wah!!! What a masterpiece!!!
இருவர் உள்ளம்- 1963
நடிகர்திலகத்தின் நடிப்பில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
மலைகோட்டை திருச்சியில் அண்ணனின் வருகை.
APRIL 3rd ONWARDS - GAIETY - DAILY 4 SHOWS
ஏப்ரல் 3 ( GOOD FRIDAY ONWARDS ) முதல் திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா, லக்ஷ்மி, நாகேஷ், பாலையா, எம் என் நம்பியார் மற்றும் பலர் நடித்த இனிய பாடல்கள், சஸ்பென்ஸ் காட்சிகள் அடங்கிய சிறந்த குடும்ப சித்திரம் "தங்கைக்காக" திரையிடப்பட்ட உள்ளது.
1) அங்கமுத்து தங்கமுத்து பள்ளிக்கு போனாளாம்
2) உன்னை தேடிவரும் எதிர்காலம்
3) தாயின் முகம் இங்கு நிழலாடுது
4) அழகே நீ ஒரு கதைசொல்லடி
5) வெள்ளிகிழமை
6) எதையும் தாங்குவேன் தங்கைக்காக
ஆகிய இனிய பாடல்கள் நிறைந்த திரைப்படம்.
APRIL 3rd ONWARDS - GAIETY - DAILY 4 SHOWS
http://i501.photobucket.com/albums/e...pscatozqzx.jpg
http://i501.photobucket.com/albums/e...psit1bnymm.jpg
POSTER DESIGN - "DESIGN KING" MADURAI SUNDERRAJAN
தொடர்ந்து நடக்கும் கொலைகள்.....செய்வது யார்....?
உண்மை அறிய முயற்சிக்கும் FATHER ......அவரும் கொல்லபடுகிறார் !
கொலைகாரனின் அடுத்த இலக்கு யார் ?
கொங்கு மண்டலம் கோவை நகரில் ராயல் திரை அரங்கில் APRIL 3 onwards....விசாரிக்க வருகை தருகிறார் நமது சிறப்பு புலனாய்வு அதிகாரி திரு ஜான் !!
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA
http://i501.photobucket.com/albums/e...psyfm3fbkv.jpg
http://i501.photobucket.com/albums/e...psfbuve3bw.jpg
விடாதே....பிடி......!
http://i501.photobucket.com/albums/e...psmfnuvzem.jpg
என்னவோ போங்க. மறுபடி மறுபடி....
அவர் நினைத்தால் சிவாஜியின் உயரத்தைத் தொடலாம்....
இவர் நினைத்தால் சிவாஜியை நெருங்கலாம்.....
இவர்தான் சிவாஜியின் வாரிசு....
அவர்தான் சிவாஜியின் பெயரைக் காப்பாற்ற வந்தவர்.....
இன்னும் கொஞ்ச காலத்தில் சிவாஜியை பீட் செய்து விடுவார்....
மறுபடி மறுபடி புலம்பல்களுடன் கூடிய அலம்பல்கள்.
எத்தனை முறைதான் சொல்வது.
எவரும் எட்ட முடியா எவரெஸ்ட் சிவாஜி.
அந்த எவரெஸ்ட்டை.. யாருப்பா அது... டென்சிங் தொட்டான்.
இந்த நடிப்பு எவரெஸ்ட்டை எவர்தான் நெருங்க முடியும்.
அட நெருங்க வேணாம்பா... அண்ணாந்தாவது பார்க்க முடியுமா? எந்த அண்ணாத்தையாவது பார்க்க முடியுமாங்கிறேன்.
ஒரு பிரகஸ்பதி சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் ஒரு படத்துல அழுது அசத்தி இருப்பதாக எழுதுகிறார்.
அழுகைன்னா இன்னான்னு இவருக்கு தெரியாது போல இருக்கு.
அதைப் படிச்சுட்டு உண்மையாலுமே எனக்கு அழுகை வந்துடுச்சி
வெள்ளைக்காரன் கெடுத்து நிர்மூலமாகி உயிர் விட்ட தங்கையை தூக்கி வைத்து மடியில் கிடத்தி ஒரு அழுகை
தாயின் மடியில் மகனே என்று கூப்பிடச் சொல்லி ஆனந்தத்துடன் உயிர் விடும் போது ஒரு அநாதை அழுகை
தங்கையோடு சாகும் போது கை வீசம்மா என்று மெதுவாக ஆரம்பித்து குமுறி வெடிக்கும் அழுகை
ஓடிப் போன மகளின் புகைப்படத்தை நெஞ்சில் அணைத்து மனம் புழுங்கி அழும் அழுகை
மகள் கற்பை கயவர்களிடம் இழந்து கட்டாந்தரையில் கவிழ்ந்து உயிர் விட பனைமரம் ஏறி சாமுண்டி பகாசூரனாய் மாறி பதறி அழும் அழுகை
தங்கை கற்பிழந்து சுயநினைவிழந்து மருத்துவ மனையில் கிடக்க மருத்துவ அண்ணனாய் அவள் செய்த குறும்புகளை சக டாக்டரிடம் சொல்லி சொல்லி அழும் சிங்கார அழுகை
தம்பியின் காதலுக்கு தடை போட்டு அவனை சாய்த்த பண்ணையார் கும்பலை சுட்டு வீழ்த்திய கதை சொல்லி அழும் கம்பீரக் கதறல் அழுகை
வாழ்விழந்து வந்த தங்கை வாழாவெட்டியாய் உயிர்விட்டுவிட வாயில் துண்டை வைத்து அடக்கி அழும் ராஜபார்ட்டின் மௌன அழுகை
மனைவி இறந்தவுடன் காக்கி உடுப்பைக் கழற்றி வெறும் பனியனுடன் கதறி கலங்கி நம்மைக் கலக்கி வைக்கும் அழுகை
மாமா இறந்து போனதை மாலையுடன் புகைப்படத்தில் பார்த்து விட்டு அத்தையுடன் அழுது துடிக்கும் அய்யய்யோ அழுகை
25 வருடம் மனைவியைப் பிரிந்து அவள் வரைந்த ஓவியத்தை எதிர்பாராவிதமாகப் பார்த்து அவள் உயிரோடு இருக்கிறாள் என்றெண்ணி ஆனந்தத்தோடு அழும் திரிசூல அழுகை
துப்பு துலக்கும் அதிகாரி கன்வர்லால் வேடமிட்டு கயவர் கும்பலில் உள்ளே நுழைந்து அவர்கள் நம்பிக்கையைப் பெற அங்கு அந்தக் கும்பல் தன தங்கையை ஆட்டம் ஆடச் சொல்லி துன்புறுத்த ஒன்றுமே செய்ய முடியாமல் விழிகளை உருட்டி உள்ளூர அழும் அழுகை
செல்லமான தந்தையை வில்லன் பத்திரிக்கை கொடுக்கும் போது சுட்டுக் கொன்றுவிட பதறி அழுது பின் தாளாமல் அவர் நினைவுகளிலூம் மூழ்கி பழி வாங்கத் துடிக்கும் பயங்கர அழுகை
கௌரவம் போய் விட்டதே என்று மனைவியும் கூந்தலில் உள்ள பூக்களை ஒவ்வொன்றாக பிய்த்துப் போட்டுவிட்டு தன் முடிவைத் தெரிவிக்கும் சூசகமாக உள்ளார்ந்த அழுகை
அடப் போங்கய்யா...
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்காணும் ...நீங்கல்லாம் எத்தனை அழுகை அழுதிருக்கேள்?
சிவாஜியை நெருங்குகிறார்களாம்...அவர் சாதனையைத் தொட்டு விடுவார்களாம்.
நீங்களெல்லாம் அழுதா எவன் பார்ப்பான்? முகத்தை நேரே காட்டி அழ எந்த நடிகருக்காவது தில் இருக்கா?
அந்த மனுஷன் அழுதா அத்தனை பேரும் கதறுவான்யா.... கதறுவான்....மொத்த உலகமுமே கதறும்.
மத்த எந்த நடிகன் அழுதாலும் பாக்கிறவன் சிரிப்பான்யா...
அதான்யா சிங்கம்...
என்னவோ பெரிசா பேச வந்துட்டீங்க....
உங்களுக்கே என்னவோ போல இல்லை? சிவாஜியோட மத்தவங்கள இணைச்சி பேசறதுக்கு?
அவரை மாறி நடிக்க வேணாம்.. அவரை மாதிரி சும்மா நின்னு காட்டுங்க. நான் பீல்டுல நிக்கறதை சொல்லல... காட்சியில நிக்கறதை சொன்னேன்.
முடியாதுங்கறேன்...
இதுல சரிக்கு சமமா அவரோட இணைச்சி கம்பாரிசன் வேற.
உலக மகா நடிகருங்க எல்லாம் அவர் காலைத் தொட்டு வணங்கி பெருமை தேடிகிட்டாங்க.
'உன்னை மாதிரி என்னால நடிச்சுட முடியும் சிவாஜி... ஆனா அந்த கட்டபொம்மன்ல பொண்டாட்டிகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு சண்டைக்குப் போவியே! அப்போ கண்ணால தடவாம வாளை உறைக்குள் விருட்டுன்னு ஸ்டைலா போடுவியே.. அதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால செய்ய முடியாதுப்பா'...
அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட ஆஸ்கார் அவார்டு வாங்கின மார்லன் பிராண்டோ இவர் பாதம் பணிந்தானே... அந்த ஆளே எங்களுக்கு ஜூஜுபி...நீங்கல்லாம் எந்த மூலைக்கு.
வீண் ஆசை எல்லாம் வச்சி உடம்பைக் கெடுத்துக்காதீங்க. என்ன நான் சொல்றது?
முரளி! இதிலயாவது கை வைக்காம இருங்க. நான் யாரயும் குறிப்பிட்டு சொல்லல. பொத்தம் பொதுவாத்தான் சொல்லி இருக்கேன். அதுக்குள்ளே கத்தரிக்கோலை எடுத்து சாணை பிடிச்சி வைக்காதீங்க.
என்ன சரியா?
திரு பட்டா அவர்களே...
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். ஆயிரமும் உண்மையாகிவிடுமா என்ன ?
நடிகர் திலகம் அவர்களின் உயரத்தை முதலில் கணிக்க முடியுமா இவர்களால் ?
தன்னடக்கம் உள்ளவர்கள் நடிகர் திலகம் நிழலை பார்க்க நினைக்கிறன் என்று வேண்டுமானால் கூறலாம். நடிகர் திலகத்தின் சாதனையில் ஒரு சதவிகிதத்தில் ஒரு சதவிகிதம் கூட கனவிலும் எவராலும் நினைக்கவோ நெருங்கவோ முடியாது ! இப்பொழுது இருப்பவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் ..தங்கள் பொழைப்பை ஓட்டுவதற்கு இப்படி ஏதாவது அபத்தமாக காமெடியாக பேசுவார்கள்...!
அழுதுனடிக்கறவன் எல்லாம் சிவாஜி மாதிரி அசத்தி இருக்கார்னு சொன்னா......லொடுக்கு பாண்டி கூட ஒரு படத்துல அழுது நடிச்சுருக்காரு...அதுக்காக ?
Rks
இப்பொழுது சன் லைப் தொலைகாட்சியில்
இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
மாறுபட்ட மூன்றுவேட நடிப்பில் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி சிறந்த வெற்றிகண்ட
தமிழ் திரையுலகின் முதன் முதலில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திரை காவியம்
"தெய்வ மகன்" ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.
http://i501.photobucket.com/albums/e...psjglurlqt.jpg
http://i501.photobucket.com/albums/e...psbpbnqv05.jpg
rks
இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று...நடிகர் திலகம் அவர்கள் பிரெஞ்சு அரசாங்க தூதுவருடன் கை குலுக்கும் முறை.
நாம் பொதுவாக பார்க்கும் கைகுலுக்கல் முறையல்ல இது. இந்த விருது கொடுப்பவரும் பெறுபவரும் மாவீரன் நெப்போலியன் கை குலுக்கும் முறையில் கை குலுக்குகிறார்கள் !
மன்னர் கை குலுக்கும் பாணி கூட தெரிந்து வைத்திருக்கும் நமது நடிகர் திலகம் !
தான் அழாமல் பார்ப்பவரை கதற வைப்பதிலும் நடிகர்திலகத்திற்கு ஈடு இணையில்லையே!
https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA
https://www.youtube.com/watch?v=rR3CCJRjA2U
[quote name="senthilvel" post=1216829]http://i1065.photobucket.com/albums/...pseecad3br.jpg[/QUOTE]
இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று...நடிகர் திலகம் அவர்கள் பிரெஞ்சு அரசாங்க தூதுவருடன் கை குலுக்கும் முறை.
நாம் பொதுவாக பார்க்கும் கைகுலுக்கல் முறையல்ல இது. இந்த விருது கொடுப்பவரும் பெறுபவரும் மாவீரன் நெப்போலியன் கை குலுக்கும் முறையில் கை குலுக்குகிறார்கள் !
மன்னர் கை குலுக்கும் பாணி கூட தெரிந்து வைத்திருக்கும் நமது நடிகர் திலகம் ! !
இது போன்ற சிறு விஷயங்களையும் கூர்ந்து கவனித்து எழுத பேச முடிவதை பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களிடம் மட்டுமே காணமுடிகிறது.
Shooting Spot....
http://i1065.photobucket.com/albums/...psw6yqv5xe.jpg
நடையழகு
Sivaji style: http://youtu.be/raZFhvVItI0
மக்களை முட்டாளாக்கிய திராவிட கட்சிகளின் நாத்திக கொள்கையை நிர்மூலமாக்கிய நடிகர் திலகத்தின் திருவிளையாடல் !
http://i1303.photobucket.com/albums/...ps7440feaa.jpg