Re visiting Dindukal election victory. The first victory to our beloved Puratchi Thalaivar MGR.
http://i125.photobucket.com/albums/p...pspzuozfis.jpg
http://www.mgrroop.blogspot.in/2015/...-by-mgr-2.html
Printable View
Re visiting Dindukal election victory. The first victory to our beloved Puratchi Thalaivar MGR.
http://i125.photobucket.com/albums/p...pspzuozfis.jpg
http://www.mgrroop.blogspot.in/2015/...-by-mgr-2.html
http://i125.photobucket.com/albums/p...ps8h55uhwe.jpg
Dissatisfaction of blood brothers over naming Mayadevar as the candidate.
http://www.mgrroop.blogspot.in/2015/...-by-mgr-2.html
http://s22.postimg.org/99uryg4m9/WP_20150925_001.jpg
Mr.Rajkumar - chennai is now at thiruvannamalai with makkal thilagam fans to attend the celebration on the occassion of makkal thilagam Mandram function. He came in the van fixed with the above banner.
ஒளிவிளக்கு சிறப்பு கட்டுரை அட்டகாசம் திரு.ஜெய்சங்கர் சார். நன்றி.
நேற்று முன்தினமே விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் முடியவில்லை.
சவுகார் ஜானகியிடம் அவரது கதையைக் கேட்டுக் கொண்டே கத்தியை நீ்ட்டி மடக்கியபடி இருக்கும் தலைவரின் ஸ்டைல். பின்னர், சவுகாரிடம் ‘நான் கெட்டவன்தான், ஆனா கேவலமானவன் இல்ல’ என்று ஐந்தே வார்த்தைகளில் தனது கேரக்டரை அலட்சியப் பார்வையுடன் விளக்குவாரே. அது ஒன்றே போதும்.
‘இந்த கிராமத்துக்கு நீ எதுக்கு வந்துருக்கேன்னு தெரியும்’ என்று தலைவரிடம் சோ அவர்கள் சொல்ல, அதற்கு தலைவர், நாக்கை லேசாக துருத்தி முன் பல்லால் கடிக்கும் பாவத்தின் மூலமே ‘திருடுவதற்காக வந்த விஷயத்தை கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்கும் நுட்பமான நடிப்பு.
திருடுவதை விட்டுவிட்டு, தான் உழைத்து சம்பாதித்து கிடைத்த நாணயங்களை திரு.மனோகர் எட்டி உதைத்ததால் அந்த காசுகள் அருகே உள்ள குளத்தில் விழும். மனோகரை தலைவர் புரட்டி எடுப்பார். அதற்கு முன்னதாக, குளத்தருகே ஓடி காசுகள் விழுந்த இடத்தை அவை திரும்பக் கிடைக்குமா? என்று தண்ணீரை ஏக்கமும் பரபரப்புமாக பார்க்கும் பரிதாபம். காசைப் பறிகொடுத்த ஏழை உழைப்பாளியின் மனநிலையை உணர்த்தும். காசு திரும்பக் கிடைக்குமா? என்ற பதைபதைப்புதான் முதலில் ஏழைக்கு தோன்றும். பிறகுதான் தட்டி விட்டவனுக்கு அடியெல்லாம். அதை அற்புதமாக காட்டியிருப்பார் தலைவர்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஆனந்த விகடனில் வெளியான கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். அதிலும் 5 மக்கள் திலகம் தோன்றும் பாடல் காட்சி மாஸ்க் ஷாட்டில் முழுமையாக எடுக்கப்பட்ட பின்னர், நன்றாக வந்திருக்கிறதா என்று ஆனந்த விகடன் ஆசிரியர் ரஷ் போட்டு பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஏற்பாடுகள் தொடங்கும் முன்பே, நள்ளிரவில் களைப்பாக இருந்த தலைவர், ‘பார்த்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று சொல்லுங்கள். நான் வீட்டுக்கு புறப்படுகிறேன்’ என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார்.
பாடலை பார்த்து விட்டு திருப்தியடைந்த விகடன் ஆசிரியர் அவர்கள், ‘‘பாடல் காட்சி நன்றாக வந்திருக்கிறது. எம்ஜிஆருக்கு போன் போட்டு சொல்லிடுங்கப்பா’’ என்று கூறியிருக்கிறார். அப்போது பின்னால் இருந்து, அவரது தோள் மீது விழுந்த கை தலைவரின் கை.
என்னவென்றால், புறப்பட்டு போவதாக சொல்லிய தலைவர், ஆர்வம் காரணமாக மீ்ண்டும் வந்திருக்கிறார். விகடன் ஆசிரியரை தொந்தரவு செய்யாமல் அவருக்கு பின்னாலேயே அமர்ந்து தானும் அந்த பாடல் காட்சியை பார்த்துள்ளார். அந்த அளவுக்கு தொழிலில் அக்கறை. ஆர்வம். இதை கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.
இப்படி எல்லாம் மையம் திரி வரப்போகிறது என்று யாருக்குத் தெரியும்? நண்பர்கள் தங்களிடம் அந்த பொக்கிஷம் இருந்தால் பதிவிட வேண்டும் என்று திரு.ஜெய்சங்கர் சாரைப் போலவே நானும் வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அபூர்வமான பொக்கிஷப்பதிவுக்கு நன்றி திரு.ரூப் குமார் சார். திண்டுக்கல் தேர்தல் கால நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி.
ஏற்கனவே, நான் ஒரு பதிவில் இந்திரா காங்கிரஸ் சார்பில் தலைவருடன் சமரசம் பேசி தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் தடுக்க முயற்சித்தபோதும் தலைவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தேன். அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது திரு.பக்தவச்சலம் அவர்களின் பேட்டி. உலகம் சுற்றும் வாலிபன் அந்நிய செலாவணி பிரச்சினையால் மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்துதான் திமுகவை தலைவர் உடைத்தார் என்றும் அதிமுகவை குட்டிக் காங்கிரஸ் என்றும் அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அந்நிய செலாவணி பிரச்சினை ஏதும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சராக இருந்த சதீஷ் அகர்வால் மாநிலங்களவையிலேயே அறிவித்தார்.
இது தொடர்பாக அப்போது வந்த பத்திரிகை செய்தியை பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் நமது திரியில் ஏற்கனவே வெளியிட்டார். (பாகம் 15, பக்கம் 386, பதிவு.3855) இந்திரா காங்கிரசின் வேண்டுகோளை மறுத்து தேர்தலில் அதிமுகவை போட்டியிடச் செய்ததன் மூலம் தலைவர் தனது தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். அதற்கு பக்தவச்சலம் அவர்களின் பேட்டியே சான்று.
அற்புதமான ஆவணப் பதிவுக்கு மீண்டும் நன்றி திரு.ரூப் குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் தலைவர் என்னமாய் உழைத்திருக்கிறார். பல கூட்டங்களில் பேசிவிட்டு சோழவந்தானுக்கு அவர் வந்தபோதே நள்ளிரவு 12 மணி ஆகியிருக்கிறது. பின்னரும், பல ஊர்களுக்குச் சென்று விடிய விடிய பிரசாரம் செய்துள்ளார். இதை பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. அப்போதெல்லாம் இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் கிடையாது. தலைவரின் அயராத உழைப்பும், அவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்தான் அவரது வெற்றிகளுக்கு அடிப்படை. அரிய ஆவணப்பதிவுக்கு நன்றிகள் ரூப் குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திண்டுக்கல் தேர்தலில் இரண்டாவது இடத்தை ஸ்தாபன காங்கிரசும் 4வது இடத்தை இந்திரா காங்கிரசும் பிடிக்கும் என்று பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் சரியாக கணித்துள்ளார். திமுக, அதிமுக பற்றிய கணிப்புகள்தான் மாறிவிட்டது. பாரபட்சமில்லாத உங்கள் பதிவுக்கு நன்றி ரூப் குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தலைவர் விழாவுக்காக சகோதரர் திரு.ராஜ்குமார் அவர்கள் அங்கு சென்றுள்ளார் என்பது திரு.ரவிச்சந்திரன் அவர்களின் பதிவில் இருந்து தெரிகிறது. திரு.ராஜ்குமார் சென்ற வேனில் தலைவரின் படங்கள் கொண்ட பேனரை கட்டி சென்றிருப்பதும், அதில் ‘விரைவில் தலைவரின் நூற்றாண்டு விழா’ என்பதை விளம்பரப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.
நமது நண்பர்கள், சகோதரர்கள் எந்த விழாவாக இருந்தாலும் நோட்டீஸ், போஸ்டர்கள் அச்சடித்தாலும் அதில் தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி இப்போதிலிருந்தே விளம்பரப்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 190 கி.மீ. தூரத்துக்கு இந்த பேனரை எத்தனை லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். இப்படி தொடர்ந்து நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தும்போது மக்கள் மனதில் இது பதியும். தலைவரின் படம் போதுமே மக்களின் கண்களை கவர்ந்திழுக்க. தானாகவே நூற்றாண்டு விழா பற்றிய வரிகளை படிப்பார்கள். சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
பதிவிட்ட திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள்.
தலைவர் நூற்றாண்டு விழாவை நாம் விளம்பரப்படுத்தினால்தான் உண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு ரூப் சார்
1973 திண்டுக்கல் இடைதேர்தல் நேரத்தில் வெளியான நவமணி இதழ்களின் ஆவணம் - மிகவும் அருமை .
திண்டுக்கல் இடைதேர்தல் முடிவு - இந்திய அரசியலில் மாபெரும் திருப்பத்தை உண்டாக்கியது உண்மை .
1972 அக்டோபரில் திமுகவிலிருந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் நீக்கியதும் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் , எம்ஜிஆர் ரசிகர்கள் , பொது மக்களின் பேராதரவு அலை சரித்திர புகழ் வாய்ந்தது . 1972ல் எம்ஜிஆர் ரசிகர்கள் எடுத்த சபதம்
1973ல் திண்டுக்கல் இடைதேர்தலில் முழு மூச்சுடன் உழைத்து வெற்றி கனியை பறித்தார்கள் .தேர்தலுக்கு முன் வந்த உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி , இடைதேர்தல் வெற்றி என்ற இரட்டை இலை விருந்து கண்டார்கள் .
1972ல் அக்டோபரில் நடந்தது தர்ம யுத்தம் .
1973ல் கிடைத்து வெற்றி சரித்திரம் .
யுத்தத்திலும் , சரித்திரத்திலும் தோற்றவர்கள் விரக்தியின் உச்சத்தில் சென்றார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் லட்சியம் வென்றது .
Today 11.00am Watch Sunlife Tv
http://i57.tinypic.com/33y4yv9.jpg
http://i61.tinypic.com/zlt6qe.jpg http://i57.tinypic.com/2lbddky.jpg http://i60.tinypic.com/2eb6fph.jpg
Today 8.00pm Watch Raj Digital Plus
http://i59.tinypic.com/2ecdy8j.jpg
http://i62.tinypic.com/15gc9sh.jpg http://i59.tinypic.com/k21eaf.jpg http://i57.tinypic.com/2a7999e.jpg
[size=7112 நாட்களே இன்னும் உள்ளது ....[/size]
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவங்க ..
இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவுமில்லை .
உறதியான தவல்கள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .
என்னுடைய அனுபவத்தில் .....
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சந்தித்த எதிர்பாராத ஏமாற்றம் - 1
1971 மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் தீபாவளி அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்தும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் . கிடைத்தது .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரட்டை வேடங்களில் வேடங்களில் சிறப்பான நடிப்பு .
மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் அனல் பறக்கும் சண்டை .
மக்கள் திலகம் அசோகன் - அசோகன் வாள் வீச்சு காட்சிகள் .
சிறப்பான ஒளிப்பதிவு
மெல்லிசை மன்னரின் பிரமாதமான ரீ ரெக்கார்டிங்
என்று ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தாலும் படத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமையவில்லை ,
மேலும் 1971ல் நடிகை ஜெயலலிதாவை மக்கள் திலகம் ரசிகர்கள் விரும்பாததற்கு சில காரணங்கள் இருந்தது .அந்த பாதிப்பு ராமன் தேடிய சீதை படத்திற்கும் கிடைத்தது . நீரும் நெருப்பும் எதிர் பார்த்த வெற்றி முதல் வெளியீட்டில் பெற முடியாமல் போனாலும் பின்னாட்களில் பல முறை திரை அரங்கில் வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டது .
திருவண்ணாமலையில் நேற்று மாலை (25/09/2015) வேட்டவலம் சாலை சந்திப்பில்
நடைபெற்ற நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் 50 வது ஆண்டு விழா,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள , சைதை ராஜ்குமார் தன் குடும்பத்தினருடன்
புறப்பட்டு வந்த வேனில் அலங்கரிக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்கள்
http://i59.tinypic.com/35i94rc.jpg
சைதை ராஜ்குமார் அவர்கள் , திருவண்ணாமலை நகரில் ஆங்காங்கே ஒட்டியிருந்த
சுவரொட்டியின் புகைப்படம்.
http://i57.tinypic.com/dg40o0.jpg
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
http://i59.tinypic.com/dg445h.jpg
http://i58.tinypic.com/73jsev.jpg
புகைப்படத்தில் திருவாளர்கள்:கோவை, துரைசாமி, திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலீல் பாட்சா, பெங்களூர் க. ந. பழனி மற்றும் பொதுமக்கள்.
http://i60.tinypic.com/dp8d34.jpg
புகைப்படத்தில் திருவாளர்கள்: சைதை ராஜ்குமார், ஹயாத் மற்றும் பொதுமக்கள்.
நிகழ்ச்சியில் முன்னதாக சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற "டிஜிடல் ஆயிரத்தில் ஒருவன் - மறுவெளியீட்டில் வெள்ளிவிழா தொகுப்பு பொதுமக்களுக்கு
பார்வையிட காண்பிக்கப்பட்டது
http://i57.tinypic.com/2ivbrqv.jpg
மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படம்.
http://i61.tinypic.com/vnntip.jpg
மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவப்படம் திறக்கப்பட்டபோது
குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அப்போது மேடையில் திரண்ட கழக முன்னணியினர்.
மற்றும் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
http://i62.tinypic.com/2wnvcrn.jpg
மேடையில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம் பேசுகிறார்.
அருகில் திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. கலீல் பாட்சா.
http://i61.tinypic.com/293tueb.jpg
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
http://i62.tinypic.com/2m2zyio.jpg
மின்னொளியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவம்.
http://i61.tinypic.com/4pyzoo.jpg
http://i61.tinypic.com/9az5gz.jpg
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.