http://4.bp.blogspot.com/-yfiCshKOjU...00/mgr+vnj.jpg
Printable View
http://s18.postimg.org/hh1nw2tmh/IMG...118_WA0036.jpg
Courtesy - face book
http://s12.postimg.org/ugbtt2igt/FB_...ed_Picture.jpg
Courtesy - Mr.Dhanasekaran
மலரும் நினைவுகள்
1967 - தமிழ் நாடு சட்டசபை தேர்தல்.
" சூரியன் உதிச்சதுங்க..."
1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
வெகுஜனங்களின் உயிர்நாடிப் பிரச்னையாக அப்போது நிலவிய அரிசி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை திமுக கிளறி விட்டது. 'ஒருரூபாய்க்கு மூன்று படியரிசி' என்று அண்ணா வாக்குறுதி வேறு அள்ளி வீசினார். மேலும், உணர்வுப் பிரச்னையாக 1965ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலபேர் பலியான விவகாரத்தையும் திமுக கையில் எடுத்துக் கொண்டது.
' காமராஜர் அண்ணாச்சி; கடலைப் பருப்பு விலை என்னாச்சி ' - ' பக்தவச்சலம் அண்ணாச்சி ; அரிசி விலை என்னாச்சி ?' - ' கூலி உயர்வு கேட்டான் அத்தான் ; குண்டடிப்பட்டு செத்தான் ' என்றெல்லாம் ஜனரஞ்சகமாக கோஷங்கள் வேறு.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றிவிட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, 'மக்கள் திலகமாக' அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும்போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக. (இத் தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்)
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார்25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். 'படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயேதோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்தது.
courtesy- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்
தேர்தல் சமயத்தில், எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியிருந்தாலும் அதற்கு முன்பே அவர் திரையில் செய்த பிரச்சாரங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க தவறவில்லை.
முன்னதாக, 67 தேர்தலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் ' அரசகட்டளை ' என்ற படத்தை உருவாக்கியிருந்தார். 1966 துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், ராஜா ராணி - புரட்சிக்காரன் கதை தான். இப்படத்தின் நோக்கமே மறைமுகமாக ஆட்சியாளர்களை (காங்கிரஸ் அரசை) கடுமையாக விமர்சிப்பதும் தாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ' தேனும் பாலும் ஓடும் ' என்று மக்களுக்கு சொல்வது தான். வசனங்களும்
பாடல்களுமாக படம் முழுக்க அரசியல் பிரச்சார நெடி.
குறிப்பாக, அனல் பறக்க " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா.." என ஆரம்பிக்கும் பாடலை சொல்லலாம். இப்பாடலை வழக்கமான கவிஞர் வாலிக்குக் கொடுக்காமல் திராவிட இயக்க அபிமான கவிஞர் முத்துக்கூத்தன் என்பவரைக் கொண்டு எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர்.
" தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே - நீ பகை வென்று
முடிசூட வா.
மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்
குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ;
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ. (ஆடி வா..)
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ - அதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ.
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ (ஆடி வா..) "
என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆட்சியை கடுமையாக எதிர்த்தும், திமுக
தொண்டர்களின் கட்சி உணர்வை தட்டியெழுப்புவதுமாக இப்பாடல் வரிகள் அமைந்தன. (ஆனால், இப்படம், தாமதமாக முடிந்து ரிலீஸ் ஆவதற்குள் தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பையே ஏற்றுக் கொண்டு விட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தால் படத்தில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வசனங்கள் திரையில் ஒலித்து
திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான
சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்
கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். "அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி..." என்று தொடங்கும். அதில்:
" அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.
அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.
இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே
இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே..."
" நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை "
இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்
பூமியே புதிய பூமி " (புதியபூமி- 1968)
இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்
கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :
" கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி."
" கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்"
" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே - நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே - நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே.."
ஒளிவிளக்கு ' (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி
.
" வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.
கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க - இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க..." ( நம்நாடு - 1969)
இந்த 'நம்நாடு' படம் மாமூல் எம்.ஜி.ஆர். ·பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். = சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரை. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் 'துரை' என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில சுருக் வசனங்கள்:
" பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க."
" யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. "
" குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு 'ஆகட்டும் பார்க்கலாம்'னு சொல்லிட்டு
போயிடறாரு "
courtesy- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்
மலரும் நினைவுகள்
1971 - தமிழ் நாடு சட்டசபை தேர்தல்.
மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க தமிழகம் தயாரானது. தங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான மக்களின் 'ரியாக்ஷனை' எதிர்பார்த்து திமுகவும் - ' சிண்டிகேட் & இண்டிகேட் ' என்று இரண்டாக உடைந்த நிலையில் காங்கிரசும் தேர்தலுக்கு ஆயத்தமாயின.
அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி தலைமையிலான ' இண்டிகேட் ' என்றும் இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்ட காங்கிரஸ் அணி , திமுகவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துக் கொண்டது. ஆனாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் 'இண்டிகேட்' போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவளித்தது. எதிர்புறம், காமராஜ் தலைமையிலான 'சிண்டிகேட்' காங்கிரஸ் ( இது 'பழைய காங்கிரஸ்' எனவும் 'ஸ்தாபன காங்கிரஸ்' என்றும் அழைக்கப்பட்டது) திமுகவை எதிர்த்து நின்றது.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சினிமாவில் இரு துருவங்களாக இருந்து வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் அரசியல் களத்திலும் மல்லுக்கு நின்றனர்.
திமுகவுக்காக எம்.ஜி.ஆரும், ' சிண்டிகேட்' டுக்காக சிவாஜியும் பிரச்சாரம் செய்தனர். இருதரப்பு ரசிகர்களும் அரசியல்ரீதியாகவும் மோதிக் கொண்டனர்.
கடைசியில் தேர்தல் முடிவு , கருணாநிதி தலைமையிலான திமுகவின் செல்வாக்கை வெளிச்சமிட்டு காண்பித்தது. காமராஜர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசுக்கு அதிர்ச்சித் தோல்வியை தந்து, 184 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1971 மார்ச் 15ம் தேதி கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். பரங்கிமலைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் எம்ஜிஆர் .
அரசியல் அரங்கில் மு.க.,வின் செல்வாக்கு வளர்ந்திருந்தது போல் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், எவரும் எட்டிப் பிடிக்க முடியாதபடிக்கு சினிமாவிலும் அதைச் சார்ந்து திமுக கட்சியிலும் வளர்ந்து வந்தது.
courtesy- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்
மலரும் நினைவுகள்
1977 - தமிழ் நாடு சட்டசபை தேர்தல
கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !
1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.
எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடிய
வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.
ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !
எம்.ஜி்.யாரைப் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். ஆனால் அவரை பிடிப்பதற்கான அந்த பிடிப்பின் ஆழம் மட்டும் அனைவருக்கும் ஒரே அளவிற்கு இருப்பதால்தான் அவர் மறைந்து 28 வருடங்களுக்குப் பிறகும் அவரின் புகழும் சரி அவரை விரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் சரி கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.
comments by sakthivel.
இன்றும் மக்கள் திலகம் என்ற அந்த மஹா மனிதன் M G R , என்ற அந்த மக்களின் மனம் கவர்ந்த நடிகர் வயது கடந்து இன்றும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியம் இல்லை, ஏன் என்றால், ஒரு வள்ளல் தனம், அள்ளி கொடுப்பது, யாரை கண்டாலும் முதலில் நலம் விசாரிப்புடன் சாப்பிட்டிர்களா என்ற பழகிய தன்மை, இப்படி நல்ல மனிதன் மிக சிறந்து [ ஒரு ஹீரோ எப்படி திரையில் இருக்க வேண்டும் [ என்பதை ஆணி அடித்தர்போல உணர்த்தியது, இன்றைய பொறிக்கி,குடிகார,ரவுடி ,கத பாத்திரம் ஏற்று நடிக்கும் பெரும்பாலான அயோக்ய பொறிக்கி ஹீரோக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம், இன்னொரு எந்த ஸ்டார் நடிகரும் இப்படி வர மக்களே அனுமதிக்க மாட்டார்கள், எம்ஜியார் என்ற இந்த சிறந்த ஹீரோவை இன்றைய ஹீரோக்கள் தாண்ட முடியாது.
comments by sherif
உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள்...........அனால் இன்னும் ஒரு நூற்றாண்டு காலதிர்கவது மாறாமல் இருக்க போவது எம் ஜி ஆர் அவர்களின் தாக்கம்..............இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்........இவர் போலே யார் என்று ஊர் சொல்ல வேண்டும்....
comments by alagesan.
புதுச்சேரியில் புரட்சித்தலைவர்.................
http://i65.tinypic.com/30df51x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/sy0cqh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/spyqyx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/2hciyxs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/23vdopu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/2lucduw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/i1du79.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i66.tinypic.com/f9r502.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/zygcbr.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/j6jyhc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/f0ynx1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/zukya1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/sc589s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i66.tinypic.com/2yxrawy.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/r7lky1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/2m3p894.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/be61cg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/2e1d940.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i66.tinypic.com/eqpn2x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/25a6p9u.jpg
http://i65.tinypic.com/25a6p9u.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/2z8rtx4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/261m7fa.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/28helok.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/15887x0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/dze83r.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i66.tinypic.com/33agx6x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/deqzj7.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/24bubk5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/23iuekn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/16apu2x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i66.tinypic.com/v5zn9g.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்