இன்று (19/06/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "காவல் காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/213j5hi.jpg
Printable View
இன்று (19/06/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "காவல் காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/213j5hi.jpg
இன்று இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
http://i67.tinypic.com/11mf3b9.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு . சுந்தர்.
மக்கள் திலகத்தோடு நெருங்கிப்பழகியவரும் சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவருமான ஜேப்பியார் (85) சென்னையில் காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அவர் உயிர் பிரிந்தது. சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலைக்கழக வளாக வீட்டில் ஜேப்பியார் வசித்து வந்தார்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எஸ். ரவிச்சந்திரன்
https://s31.postimg.org/z5lozbw9n/IM...619_WA0004.jpg
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
இனிய நண்பருக்கு
நீண்ட நாளைக்குப்பிறகு தங்களை மையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இனிய நண்பர்கள் திரு எஸ்வி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கும் பெங்களுரு திரு குமார் சார் அவர்களுக்கும் திரு அக்பர் அவர்களுக்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன இந்த திரியின் நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள் !
வேறு கம்பெனி மாறியதால் அலுவல் வேலைகள் சற்று அளவிற்கு அதிகமாக உள்ளதால் முன்பு போல திரியை விஜயம் செய்யவோ தங்களுடன் உரையாடவோ முடியவில்லை. அனைவரும் அனைவரின் குடும்பத்துடன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.
திரு அக்பர், திரு யுகேஷ்பாபு பதிவுகள் பார்த்தேன். ரசித்தேன். அதில் தங்கள் எழுப்பி இருக்கும் சந்தேகத்தை விரைவில் தெளிவுபடுத்தும் பதில் அளிக்கிறேன்.
இன்று மணநாள் காணும் இந்த திரியின் மற்றும் மக்கள் திலகம் அவர்களுடைய பழம் பெரும் பழுத்த அனுபவசாலி, மக்கள் திலகம் அவர்களுடைய ஆத்மார்த்தமான முரட்டு பக்தர் அனைவரும் கூறும் பழகுவதற்கு இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை வாழ்த்த வயது பத்தாது ஆகையால் வணங்குகிறேன். தங்களுடைய சதாபிஷேகத்திர்க்கும் நான் வாழ்த்து சொல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Thankyou
rks
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி வாகை சூடிய “நினைத்ததை முடிப்பவன்”படத்தில் இடம் பெற்ற “கண்ணை நம்பாதே …உன்னை ஏமாற்றும்…”என்ற அற்புதமான பாட்டை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாய் மாற்றி கிண்டல் செய்து 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்தில் பாடல் காட்சி அமைத்துள்ள செயலைக் கண்டித்து மக்கள் திலகத்தின் அபிமானியும் மூத்த பத்திரிகையாளருமான அன்பு நண்பர் திரு மேஜர் தாசன் அவர்கள் தமது சினிமா பொக்கிஷம்.காம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.
“எனக்கு இன்னொரு பேர் இருக்கு”படத்தைப்பற்றி விமர்சனம் எழுத மனம் வரவில்லை.அதற்கு பதில் கோபம் தான் வந்தது..”மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி வாகை சூடிய “நினைத்ததை முடிப்பவன்”படத்தில் இடம் பெற்ற “கண்ணை நம்பாதே …உன்னை ஏமாற்றும்…”என்ற அற்புதமான பாட்டை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாய் மாற்றி கிண்டல் செய்து பாடல் காட்சியை எடுத்திருப்பது அயோக்கியத்தனமாகும்.இதன் மூலம் நூற்றாண்டு விழா காணவிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களையே அவமானப்படுத்தி விட்டீர்கள்.மரியாதையாக அந்த பாடல் காட்சியை நீக்கி விடுங்கள்..இல்லையேல் எம்.ஜி.ஆர்.ரசிகர்களை ஒன்று திரட்டி “சினிமா பொக்கிஷம்.டாட் காம்.”சார்பில் “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத் தயாரிப்பாளர்-இயக்குநர்-ஹீரோ ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்களின் வீட்டின் முன் போராடுவோம்….போராடுவோம். .போராடுவோம்……
https://s32.postimg.org/5cutewd6t/Ni...tippavan_3.jpg
அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு -
தங்களின் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன். தாங்கள் என் மீது கொண்டிருக்கும் அளவற்ற மதிப்புக்கும், பாசத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி !
தாங்கள் சேர்ந்திருக்கும் புதிய அலுவலகப்பணியில், சிறப்புக்கள் பல பெற்று, பதவி உயர்வுகள் பல காண, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். !
http://i68.tinypic.com/15qf4b4.jpg
எனது 39வது திருமண நாளையொட்டி, இத்திரியில் பதிவிட்டு வாழ்த்துக்கள் கூறிய நெறியாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்த, மக்கள் திலகத்தின் ஏராளமான அன்பர்களுக்கும், அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பர்களுக்கும், நேரில் வாழ்த்துக்கள் கூறிய அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், சென்னை மாநகரின் ஏனைய எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பினருக்கும், எனது உளமார்ந்த நன்றி !
பேராசிரியர் திரு செல்வகுமார் சார்
தங்களுடைய வாழ்த்திற்கு நன்றி என்று கூறுவது முறையல்ல..சகோதரர் என்று நீங்கள் உரைக்கும்போது சகோதரரின் ஆசீர்வாதமாக நான் காண்கிறேன் ! தங்களுடைய அடிமனதில் இருந்து வரும் இந்த வாழ்த்தின் மகத்துவத்தால் நிச்சயம் எனது உத்தியோகத்தில் சிறந்து விளங்குவேன் என்பது திண்ணம் !
அன்புடன்
rks
RARE STILLS AND UNRELEASED MOVIE STILLS.
http://i64.tinypic.com/2lkd2cm.jpg
THE HINDU - CINIMAPLUS -19/06/2016
http://i68.tinypic.com/8zlp1f.jpg
http://i63.tinypic.com/2zi1ye0.jpg
http://i64.tinypic.com/sqtrbd.jpg
குங்குமம் வார இதழ் -27/06/2016
http://i66.tinypic.com/dcsgk.jpg
http://i67.tinypic.com/2zrjq50.jpg
http://i67.tinypic.com/ngstn8.jpg
http://i64.tinypic.com/2mdq9m9.jpg
பேசுவது கிளியா பாடல் இடம் பெற்ற திரைப்படம் பணத்தோட்டம். இதழில்
தவறாக " தெய்வத்தாய் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது )
http://i63.tinypic.com/2lnt6h.jpg
தேவரின் 100 நாட்கள் ஓடிய படங்கள்
தாய்க்கு பின் தாரம் - 1956
தாய் சொல்லை தட்டாதே - 1961
தாயை காத்த தனயன் -1962
நீதிக்கு பின் பாசம் -1963
வேட்டைக்காரன் -1964
முகராசி-1966
1972 - நல்ல நேரம்
தேவர் எடுத்த படங்களில் அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது .
தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரைக் கவனித்தால், அவரது படங்கள் ஆரம்பத்தில் இருந்தே கிட்டத்தட்ட ஒரே வார்ப்புருவைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மொத்தமே பதினான்கே படங்களில்தான் பாகவதர் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அவற்றில் ஏழு படங்கள்தான் வசூல் சாதனைகளைப் புரிந்தன என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆனால், அந்த ஏழு படங்களைக் கவனித்தால் அவரது வெற்றியின் ரகசியம் புரியும். பாகவதரின் முதல் படமான 'பவளக்கொடி', ஒன்பது மாதங்கள் தமிழகத்தில் ஓடியதாக அறிகிறோம். அவரது வெற்றிகரமான நாடங்களில் ஒன்றை எடுத்துத் திரைப்படமாக இப்படி அளித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. சுப்ரமணியம். இதுதான் அவரது முதல் படமும் கூட. வெளியான ஆண்டு 1934. இப்படம் வெளியானபோது, ஸ்பாட்டிலேயேதான் நடிகர்கள் பாடி நடித்தனர். பவளக்கொடி என்ற இளவரசியைக் காதலிக்கும் அர்ஜுனனின் கதை இது (மேகமூட்டமாக வானம் கானப்படும்போதெல்லாம் நடிகர்கள் வேகமாக ஓடிச்சென்று உணவு உண்டனர். மேகம் கலைந்ததும் உணவுப்பொட்டலங்களை அப்படியப்படியே விட்டுவிட்டு நடிக்கத் திரும்பினர். அப்போதெல்லாம் அந்த உணவை உண்ணக் காகங்கள் குழுமும். இது படப்பிடிப்பைப் பாதித்தது. எனவே ஒரு ஆங்கிலோ இந்தியர் - ஜோ என்பவர் - காகங்களை விரட்டுவதற்காக துப்பாக்கி சகிதம் எப்போதும் அமர்ந்திருந்தார். இப்படத்தின் டைட்டில்களில் 'Crowshooter - Joe' என்ற வித்தியாசமான டைட்டிலைக் காணலாம்).
இப்படத்தின் பின்னர் பாகவதர் மிகவும் புகழ் பெற்றார். சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் ஆகிய அவரது படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடின. பெரும்பாலும் அவரது படங்களில், நல்ல இளைஞன் ஒருவன், விதிவசத்தால் காதலிலோ அல்லது சில சோதனைகளிலோ விழுந்து, தண்டிக்கப்பட்டு, பின்னர் மனம் திருந்துவான். இது அக்காலத்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதையமைப்பு. கூடவே கணீரென்ற குரலில் பாகவதர் பாடிய பல பாடல்கள் அவரது பிராபல்யத்துக்குக் காரணமாக அமைந்தன.
பாகவதரை விடவும் புகழ்பெற்ற எம்.ஜி.ஆர், ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரிதும் கஷ்டப்பட்டவர். 1936ன் சதிலீலாவதியில் சிறு வேடத்தில் அறிமுகமானாலும், எம்.ஜி.ஆரின் முதல் ஹிட், 1947ல் வெளியான ராஜகுமாரிதான். இதன்பின் 1950ல் வெளியான மந்திரி குமாரி எம்.ஜி.ஆரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக உயர்த்தியது. பின்னர் 1954ன் மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்கு மறக்கமுடியாத வெற்றிப்படமாகியது. இதன்பின்னர் வரிசையாகப் பல ஆக்ஷன் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல நாடோடி மன்னன் விளங்கியது.
அறுபதுகள் துவங்கும் வரை எம்.ஜி.ஆர் நடித்தது பெரும்பாலும் சரித்திர வேடங்களில்தான் என்பதை அனைவரும் அறியக்கூடும். சமூகப்படங்களில் நடிக்கத் துவங்கியபோது எம்.ஜி.ஆருக்கென்றே எழுதப்பட்ட தத்துவப் பாடல்கள் மற்றும் அவருக்கென்றே அமைக்கப்பட்ட காட்சிகள் (அநீதியைக் கண்டு பொங்குதல், தாய்/சகோதரி பாசம், குடி/புகைப்பிடித்தல் இல்லாத காட்சிகள், சண்டைகள், ஏழைகள்/மக்களுக்காகப் போராடுதல் இத்யாதி), எம்.ஜி.ஆரை மக்கள் நடிகராக மாற்றின. அவரை நடிகராகவும், எம்.ஜி.ஆரைக் கடவுளாகவும் மக்கள் பார்க்கத் துவங்கினர். இதனாலேயே பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராகவும் ஆக முடிந்தது.
courtesy - jannal
இன்று (22/06/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/121bnfd.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் இந்து நாளிதழில் வெளிவரும் எம்ஜிஆர் -100 தொடர் கட்டுரையை செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் . மேலும் குமுதம் இதழில் வெளியாகும் ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் . மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அவருடைய புகழ் பாடும் பதிவுகளை ஒரு சிலரே திரியில் பதிவிட்டு வருகிறார்கள் .
திரியில் உங்களுடைய பங்களிப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , கட்டுரைகள் , மட்டுமே இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
[/size][/b]
வள்ளல் ஒருவர்தான், உங்களால் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். என் அளவுக்கு உடலை உறுதியாக வைத்திருங்கள். உழைத்து வாழுங்கள். உண்மையாக இருங்கள். சத்தியத்தை நம்புங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இப்படி நடிப்பில் மட்டுமல்ல; நடப்பிலும் செய்து காட்டியவர். அதனால்தான் அந்தத் தலைவன் மீது அதிசயத் தக்க அதீத பக்தி செலுத்தினார்கள் என்று, அன்று கொச்சைப்படுத்தியவர்களெல்லாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது. [/B]
courtesy - net
RARE STILL
http://i67.tinypic.com/2hexa9h.jpg
நாளை (23/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/96j9xz.jpg
அன்பு நண்பர்களே
மாற்று திரியில் நமது மாசற்ற
தலைவரைப்பற்றி பதிவு செய்யப்பட்ட
எதிர்மறைக் கருத்துக்கள்
அனைத்தும் அத்திரியின்
நெறியாளரால் நீக்கப்பட்டு விட்டது.
அவருக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.
நமது திரியில் மாற்று திரி மற்றும் நமது திரி நண்பர்களால்
பதிவு செய்யப்பட்ட பதிவுகளும்
நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நமது நண்பர்கள் அனைவரும் நமது
பொன்மனச்செம்மலின் சாதனைகளை பதிவிடுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
மதுரை மீனாட்சி பாரடைஸில் கடந்த வெள்ளி முதல் (17/06/2016) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த " பறக்கும் பாவை " தினசரி 4 காட்சிகள் ,(4 நாட்கள் மட்டும் )
திரையிடப்பட்டது. அதன் புகைப்படங்கள் அனுப்பி திரியில் பதிவிட உதவிய
மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i63.tinypic.com/1z1ry9u.jpg