http://i64.tinypic.com/29fxc6.jpg
http://i67.tinypic.com/eikphs.jpg
Printable View
http://i66.tinypic.com/wleqde.jpg
சாத்தூர் EPS DTS அரங்கில் வெள்ளி முதல் (19/07/19) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
வெள்ளி முதல் (19/07/19) திருச்சி கெயிட்டியில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i63.tinypic.com/2960nl0.jpg
தங்கத் தலைரால் மட்டுமே தமிழகத்தில் திராவிட ஆட்சி 1967 ல் மல்ர்ந்தது........... அது இன்று வரை தொடர தலைவரின் இரட்டை இலை சின்னமே காரணமாகும்.2019 வரை தொடர்வதுக்கும் ...தலைவரின் உண்மையான மக்கள் சக்தியே ( தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே) காரணம். மீண்டும் தலைவரின் ஆட்சியை , ஊழலற்ற ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றால் புரட்சித்தலைவரை முன்னிலை படுத்திய எங்கும் தலைவர் பெயர் சொன்னால் தான் வாழ்வு! ...மறைத்தால் நாளைய வரலாறு ( தேர்தல்) பதில் கூறும். இது தான் சத்தியத்தின் உண்மை.......... Thanks...
இந்த வாரம் மதுரை - சண்முகா A/C dts., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அவர்களின் "ஆயிரத்தில்ஒருவன்", கோவை - சண்முகா dts புரட்சித்தலைவரின் "நேற்றுஇன்றுநாளை" செங்கோட்டை - ஆனந்தா dts, மக்கள்திலகம் எம்.ஜி ஆர்., அவர்களின் "அடிமைப்பெண்", திருச்சி - கெயிட்டி பாரதரத்னா எம்.ஜி.ஆர் ., அவர்களின் "குடியிருந்தகோயில்", படங்கள்(காவியங்கள்) வெற்றிப்பவனி... இது புரட்சித்தலைவருக்கு மட்டுமே இதுசாத்தியம் ... திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள்... திரைப்பட விநியோகஸ்தர்கள் ...கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும்... மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ...மதுரை.எஸ் குமார்........... Thanks...
மக்கள் திலகத்தின் பக்தர் மதுரை
ம சோ நாராயணன் இன்று காலமானார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய
வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
பாசத்திற்குரிய இதயங்களே... மக்கள் திலகம் அவர்களின் உயிருக்கு உயிரான அபிமானி, பக்தர் மற்றும் "நல்லநேரம்" இதழாசிரியருமான ம. சோ. நாராயணன் இன்று 21-07-2019 ஞாயிற்று கிழமை இறைவனடி சேர்ந்தார்... அவர் தம் குடும்பத்தினருக்கு நம் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்... சென்னை இறைவன் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் சங்கம் சார்பில் சென்னை திரு ஆர்.லோகநாதன் அவர்கள் அன்னாரின் புகலுடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.........
புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் அவர்களுக்கே தம் வாழ்நாளை அர்ப்பணித்து செம்மலின் புகழ் காக்கும் கோடான கோடி தொண்டர்களில் ஒருவரான "நல்லநேரம்" இதழ் ஸ்தாபகர், ஆசிரியர் திருவாளர் ம. சோ.நாராயணன் சென்னை லுகாஸ் tvs நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று மதுரையில் குடியிருந்த காலம் நோய் வாய்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் பலனன்றி இன்று காலமானார்... அவருடைய அன்பு மனைவிக்கும்... மகன் மற்றும் மகள்களுக்கும் நம் தோழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் பூத உடலுக்கு சென்னை "ஆயிரத்தில் ஒருவன்" இறைவன் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் குழு சார்பில் திரு. லோகநாதன் அவர்கள் இன்று மாலை இறுதி சடங்கில் மலரஞ்சலி செலுத்தினார்...........
கோவையில் கடந்த 2 மாதங்களாக தலைவர், மக்கள் திலகம் காவியங்கள் ...தொடர்ச்சியாக ...திரையிடப்பட்டு வசூலில் சராசரியாக தலா ரூ.1 லட்சம் வரை சாதனை படைத்துவருகிறது. வருடத்தில் சுமார் 280 நாட்கள் ...இங்கு தலைவர் காவியம் மட்டுமே அதிகமாக திரையிடப்படுகிறது.தமிழகம் முழுவதும் இதே வெற்றித்தகவல்தான்........... Thanks mr.Samuel...
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் 22-07-1954 வெளியானது. குமார வீரன் மலைக்கள்ளன் அப்துல் ரஹீம் என்ற மூன்று விதமான கேரக்டரில் எம்ஜிஆர் அவர்கள் அற்புதமாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ய1950 முதலே புரட்சி நடிகர் முதலிடத்திற்கு வந்தாலும்... பின்னர் 1954 அம் ஆண்டு " மலைகள்ளன்" .. தமிழ்த் திரையுலகில் முதல் இடத்திற்கு இந்த படம் மூலம் வந்தார். கடைசி படம் வரை அவர் தான் கலை உலகின் நிரந்தர... முதல்வர்!........ Thanks...
தெய்வப்பாடகர் வெங்கல குரல் திரு. டி.எம். சௌந்தர்ராஜன் மலைக்கள்ளன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்திற்கு குரல் கொடுத்து எம்ஜிஆர் ரசிகர்களை நெகிழவும்... மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க வைத்தார்....... Thanks...
பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி...அவர்கள் நடிப்பும் டி்எஸ்.துரைராஜ் பேச்சும் அருமை !
Malaikkallan (transl. Thief of The Hills) is a 1954 Indian Tamil-language action film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was an astounding success. It ran more than 140 days in Chennai and all other major cities.[3] It was the first Tamil film to win a President's Silver Medal.[4][5] Directed by
S. M. Sriramulu Naidu[1]
Produced by
S. M. Sriramulu Naidu
Screenplay by
Mu. Karunanidhi
Story by
Namakkal Kavignar Va. Ramalingam Pillai
Starring
M. G. Ramachandran
P. Bhanumathi
Sriram
M. G. Chakrapani
Music by
S. M. Subbaiah Naidu
Cinematography
Sailen Bose
Edited by
Velusami...... Thanks...
அன்றே திரையுலக வசூல் வித்தகர்... சக்கரவர்த்தி மக்கள் திலகம் சிறந்த நடிப்பை வழங்கிய " மலைகள்ளன்" ... தென் கிழக்கு ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கம் அரங்கில் 20 வாரங்கள் ( மற்ற திரையரங்கம் எனில்) 225 நாட்களுக்கு சமம்... பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது...
S. M. Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to produce and direct a movie based on it, in 6 languages- Tamil (Malaikkallan with MGR), Telugu (Aggiramudu with N. T. Rama Rao),[12] Malayalam (Thaskaraveeran with Sathyan), Kannada (Bettada Kalla with Kalyan Kumar) and Hindi (Azaad with Dilip Kumar) and Sinhalese (Surasena).[1]
Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages....... Thanks...
The First film won National Film Award for Best Feature Film in Tamil - President's Silver Medal in 1954 at 2nd National Film Awards.[14]......... Thanks...
எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.
இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்........ 1954 அம் வருடம் தமிழில் மிகவும் அதிக வசூல் கண்ட காவியம்...
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்....... Thanks...
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்........ Thanks...
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் சாதாரணமாக எழுதியிருந்தார்... Thanks...
தினம் ஒரு சிந்தனை: 1130
(22/07/2019 - திங்கள்)
புகழில் வளர்ந்துள்ள மனிதர்களை அவர் பின்புலம் அறியாமல் கேவலமாய் விமரிசனம் செய்வதும், அவர்களைப் பற்றி தவறாக பேசுவதும் சில மனநோய் மனிதர்களின் வாடிக்கை. செவி வழிச் செய்தி, யாரோ ஒருவர் சொன்ன அழுத்தமான பொய்யை வைத்து பேசித் திரிபவர்களை பேடிகள் என்றால் அது தவறில்லை. பேசுமுன் சரியான தகவல் அறிந்து பேசுக. அதுவே சான்றோருக்கு அழகு.
- கவிஞர் கர்டோசா........புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களை பற்றி சிலர் அறியாமல் சில நேரம் (அறியாதது போல்) பேசுவதும், எழுதுவதும்.....அவர்களுக்காக மேற்கண்ட சிந்தனை பதிவு...
வருகின்ற 26 - 07 - 2019 வெள்ளிக்கிழமை முதல்... சென்னை - அகஸ்தியா 70MM சூப்பர் டீலக்ஸ் தினசரி 2 காட்சிகள்... அகில உலக திரைப்பட வசூல் சக்கரவர்த்தி கோடியில் ஒருவர் அளிக்கும் "ஆயிரத்தில் ஒருவன்"......... Thanks...
தனது சாதனையை தானே வெல்லும் தலைவர்! 2019 ல் (ஜனவரி- ஜூலை) மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள் கோவை நகரில் திரையிடப்பட்ட விபரம்..17.1.2019 நினைத்ததை முடிப்பவன்( நாஸ்) 20.1.2019 குடியிருந்த கோயில்( ராயல்) 29.1.2019 முகராசி ( ராயல்) 3.3.2019 பறக்கும்பாவை(ராயல்)22.3.2019 பெரிய இடத்துப்பெண்( ராயல்) 31.5.2019 உழைக்கும் கரங்கள்( சண்முகா) 7.6.2019 ரிக்சாக்காரன் ( சண்முகா) 14.6.2019 பணக்கார குடும்பம்(சண்முகா) 30.6.2019 இதயவீணை ( சண்முகா) 12.7.2019 அடிமைப்பெண்( சண்முகா)19.7.2019 நேற்று இன்று நாளை( சண்முகா) 25.7.2019 தாய்க்குத் தலைமகன்( சண்முகா) வருகிற 2.8.2019 நினைத்ததை முடிப்பவன்( டிலைட்) 7 மாதத்தில் அதிக திரைப்படங்கள் திரையிடப்பட்ட காவியங்கள் ஒரே நடிகப்பேரரசர் புரட்சித்தலைவரின் காவியங்களே. சாதனை தொடர்கிறது... வருகிற 2.8.2019 கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன் வெற்றி வெளியீடு( கோவை நகரில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 7 வது தடவையாக நினைத்ததை முடிப்பவன் திரையிடப்படுகிறது)......... Thanks mr.Samuel...
சத்துணவு திட்டம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டது, இத்திட்டத்தின் நீட்சி தான் சத்துணவு திட்டம் என மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்:
அறுபது ஆண்டுகளல்ல. தொடக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த போதே (எண்பது எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்) ஒரு சில பள்ளிகளில் இலவச மதிய உணவு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு.
ஆனால் உலகமே வியந்து பாராட்டும் வகையிலும், மற்றவர்கள் நாமும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளத்தில் தோன்றுகிற வண்ணமும், இதை நிறுத்தி விட வேண்டும் என்று எண்ணுகிற கல்நெஞ்சம் கொண்ட கயவர்கள் தொடர்ந்தே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதும் தாயுள்ளத்தோடு புரட்சித் தலைவரால் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப் படுத்தப்பட்ட சத்துணவு திட்டம் ஒன்று தான். அதற்கு ஈடு இணை கிடையாது. இதை ஏற்க மறுப்பவர்கள், பொறாமை எண்ணம் கொண்டவர்கள் வாயடைத்து போய் விக்கித்துத்தான் நிற்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள திட்டம் தீட்டினர், வள்ளலோ, ஏழை எளிய மக்களின் ஏக்கம் தணிய செய்ய முடிந்த அனைத்தையும் தன்னலமின்றி செய்து முடித்தார்.
மற்றவர்கள் கொண்டு வந்த திட்டங்களெல்லாம் நிறைவடையாமல் இடையிலேயே கைவிடப்பட்டது. அதை சிலாகித்து பேசும் பொறாமை எண்ணம் கொண்டவர்கள், இன்று வரை உலகமே மனிதாபிமானத்தின் உச்சமாக மதிக்கின்ற தலைவரின் சத்துணவு திட்டத்தை ஏற்க மறுத்து வருவது அவர்களது குரூரமான எண்ணத்தைத் தான் ப்ரதிபலிக்கிறது. அவர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். இந்தத் திட்டத்தின் நீட்சி தான் புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்ளும் அற்ப பதர்களே, அதிகாரத்தில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டுவது பெரிதன்று, ஆனால் அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஓரளவேனும் பூர்த்தி செய்யாத பட்சத்தில் அது தோல்வியடைந்த அனைவராலும் கைவிடப்பட்ட திட்டம் என்று தான் கருதப்படும். ஆனால் உச்ச நீதிமன்றம் முதற்கொண்டு உலக அரங்கில் பல மனித வள மேலாண்மை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்புகளால் ஒருமித்த பாராட்டை பெற்ற திட்டம் என்று ஒன்று உலகளவில் உண்டு என்றால் அது பொன்மனச்செம்மலின் குழந்தைகள், மாணவ மாணவிகளின் பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டம் ஒன்று தான்.
2004-05 காலகட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பதிப்பில் இத்திட்டத்தைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியது. அப்போது புனாவிலிருந்து அதை தமிழில் மொழி பெயர்த்து இதயக்கனி இதழுக்கு அனுப்பியிருந்தேன். அக்கட்டுரையை ஆசிரியர் திரு விஜயன் அவர்கள் முதற் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தார். அதில் காணப்பட்ட வைர வரிகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பொன்மனச்செம்மலின் உயர்ந்த எண்ணத்தை இவ்வுலகிற்கு பறை சாற்றியதே, பொறாமை பிடித்த நயவஞ்சக கூட்டம் அதற்கு என்ன பதிலுரைக்கப் போகிறது, அவை:
தமிழ்நாட்டில் பட்டினிச்சாவுகள் நடந்தேறுகின்றன என்பதை மறுக்கவில்லை. ஆனால் உலகமே அஞ்சுகின்ற ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மிகவும் குறைவான அளவில் காணப்படுகிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, இதற்கு எம்ஜிஆர் அவர்கள் அறிமுகப் படுத்திய சத்துணவு திட்டம் தான் காரணம் என்று பட்டயம் கொடுத்தனர். காசு கொடுத்து வாங்கப்பட்ட தம்பட்டம் அல்ல, தானாக வந்த மிகப்பெரிய பட்டம், அங்கீகாரம். நல்லவேளை, அவர்களும் இந்தத்திட்டம் இத்திட்டத்தைப் பார்த்து தொடங்கப்பட்டது என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள பஞ்சாப், தில்லி போன்ற மாநிலங்களில் கூட ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே அனைத்து மாநிலங்களிலும் புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட மறக்கவில்லை............. Thanks...
175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்ட அடிமைப் பெண்! 50-வது ஆண்டு! - Dinamani - https://www.dinamani.com/cinema/spec...m-3202693.html....... Thanks...
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
1.சத்துணவு திட்டம்(01-07-82 முதல் அமுல்படுத்தப்பட்டது.
2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன. எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
பகுதி 3 தொடர்ச்சி
31.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
32.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
33.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
34.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
35.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
36.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
37.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
38.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
39.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
40.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி5
41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
தொடரும்-............ Thanks...
புரட்சி தலைவருக்கோர் புகழ்சேர்க்கும் புதுமை விழா, தலைவரை பற்றி அரிய தகவல்களை தெரிந்துகொள்ள வாருங்கள் வரும் ஆகஸ்டு 10ம்தேதி , 2019...புதுவையை நோக்கி, தலைவருடன் பழகியவர்கள், உடன் பணியாற்றியவர்கள், மற்றும் பிரபலமானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள், அனைவரும் வந்து பார்த்து, கேட்டு மகிழுங்கள்.
#உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்உலகம்நமதுஎன்றுசிந் துபாடுங்கள்....... Thanks mr. Hussain...
மக்கள் திலகத்தின் மங்கா புகழுக்காக தன் வாழ்நாளில் ஒரு பகுதியை அர்பணித்தவரும். பல மாவட்டங்களில் அனேக தலைவர் பக்தர்களின் நன்கு அறிந்தவரும்.தன் கம்பீர குரலால் தன் ஆசானின் வெற்றி தலைப்புகளை ஓங்கி ஒலிக்க செய்த அமரர் ம.சோ.நாராயணன் அவர்களுக்கு தங்க திரு முகத்தை முழுஅளவில் அதிக காட்சிகளில் நமக்கு தரிசனம் தந்து பக்தர்களின் வேண்டுதலுக்கு வரம்அளித்த அற்புத ஆசான் புரட்சி தலைவரின் ஆயிரத்தில் ஒருவர் ஞாயிறு 28.07.2019.மாலை காட்சி நடைபெற்ற அகஸ்தியா திரையரங்கம் உள்ள சென்னையில் மதுரைவீரருக்கும்.... மதுரை மைந்தனுக்கும் மலரஞ்சலி.. நிகழ்ச்சி தலைமை அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம்.ஒத்துழைப்பு.கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை.முன்னிலை.திவ்யாபிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம்.ஆதரவு நல்கியோர் பிற சில அமைப்புகள். தொகுப்பு.ஷிவபெருமாள்............. Thanks...
புரட்சித்தலைவரின் என்அண்ணன் ஞாயிற்றுக்கிழமை 28-07-2019 மாலைக்காட்சி ரூபாய் பதினேழாயிரத்து நானுறைத்தான்டியது சாதனைத்தலைவனின் வெற்றியில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும் மதுரை எஸ் குமார்........ Thanks...
கோவையில் நூற்றாண்டு கடந்தும் சாதனை படைக்கும் "டிலைட்" ! 1914ம் ஆண்டு கோவையில், 'வெரைட்டி ஹால்' என்ற (இன்றைய டிலைட் ) திரையரங்கு கட்டப்பட்டு, 'வள்ளி திருமணம்' திரையிடப்பட்டது. இதுவே தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் திரையரங்கு. கோவையில் தொடர்ந்து பல தியேட்டர்கள் நிறுவப்பட்டு இவை கலைக்கூடங்களாக மட்டுமில்லாமல், மக்களின் கவலை போக்கி, கனவுகளை வளர்க்கும் கூடமாகவும் பெருகின. ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த சினிமா தியேட்டர்கள் தமிழகத்தில் படிப்படியாக அழியத் துவங்கின.தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நகரமாக விளங்கிய கோவையில் பழமையான திரையரங்குகள், புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் எல்லாம் இன்றைக்கு குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதில், ஒரே ஆறுதல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் தியேட்டர் ஒரு நுாற்றாண்டை கடந்து இன்றும் இயங்கி வருகிறது. இந்தநிலையில், சில நாட்களாக தியேட்டரில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து மீண்டும் புதுப்பொலிவுடன் 31.07.2019 அன்று கோலாகலமாக தொடங்குகிறது.02.08.2019 முதல் தித்திக்கும் காவியம் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள "நினைத்ததை முடிப்பவன் " காவியம் திரையிடப்படுகிறது. 4.8.2019 ம்தேதி புரட்சித்தலைவரின் பக்தர்கள் விழா கொண்டாடி சிறப்பிக்க உள்ளனர்......... Thanks...
சிவராமன், பத்திரிகையாளர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்ற நெல்லை கண்ணன் வந்திருந்தார்.
அவர் எம்ஜிஆர் பற்றி கூறியது புதிய செய்தியாக இருந்தது .
ஒரு முறை எம்ஜிஆரை சந்தித்த நெல்லை கண்ணன் அவரிடம் இரண்டு தமிழ் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறியிருக்கிறார். எம்ஜிஆர் அவர்களை அழைத்து வரும்படி நெல்லை கணணனிடம் சொன்னார்.
நெல்லை கண்ணன் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு எம்ஜிஆரிடம் போனார். ஏதேனும் உதவி செய்வார் அவர்கள் சிரமத்திலிருந்தும் மீள்வார்கள் என்றுதான் நெல்லை கண்ணன் நினைத்தாராம்.
அவர்களது அதிகபட்ச எதிர்பார்ப்பு ஓரிரு லட்சங்கள் தான்.
அவர்களை சந்தித்த எம்ஜிஆர் , அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு சூட்கேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட தாம்.
நன்றி கூறி திரும்பி வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் ஒவ்வொருவருக்கும் 20 லட்ச ரூபாய் இருந்ததாம்.
அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய தொகை.
திரும்ப அவர்கள் இருவரும் திருநெல்வேலி பக்கமுள்ள தங்கள் சொந்த ஊருக்கு போனார்கள்.அங்கு அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.
முதல்நாள் அதிகாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு வந்து பேசி சென்றிருக்கிறார்கள் .சில தகவல்களையும் பெற்று சென்றிருக்கிறார்கள்.
கூடவே அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டை அவர்கள் பெயரில் ரிஜிஸ்டர் செய்து சொந்தமாக்கும் வேலையும் துரிதமாக நடந்து கொண்டிருந்தது.
ஒரு மனிதர் இப்படியா உதவி செய்வார் ...ஒரு மனிதரால் இப்படி உதவி செய்ய முடியுமா என வியந்து போனாராம் நெல்லை கண்ணன்.
அவர்தான் மனிதர் .அவர் மனிதநேயர் .என்று பிரமித்ததாக கூட்டத்தில் பேசும்போது நெல்லை கண்ணன் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.
முத்தாய்ப்பாக நெல்லை கண்ணன் சொன்னது தான் இப்போதும் எனது மனதில் நிற்கிறது....
ஒருவருக்கு உதவி செய்யும்போது அப்போதைக்கு போதுமான உதவி மட்டும் செய்து விட்டு ஒதுங்கி கொள்ள கூடாது. அவர் அதற்குப் பிறகு இன்னொருவரிடம் சென்று உதவி கேட்காத அளவிற்கு ஒட்டுமொத்த உதவி செய்து விட வேண்டும். அதுதான் உண்மையான உதவி...
அப்படி செய்தவர் எம்ஜிஆர்............ Thanks...
நான் ஆணையிட்டால் !
_________________________
கதாநாயகன் எப்படி இருக்க வேண்டும் ? என்று உலகத்திற்கே பறைசாற்றியவர் மக்கள் திலகமாகத்தான்
இருக்க முடியும் அவரை கவனித்தால் உண்மை விளங்கும் !
காதல் என்றொரு சிலைவடித்தேன் அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே காவலன் வாழ்வில் பாதியும் நானே !
இவ்வரிகளில் தேவி அவர்கள் கதவை மூடி வலக்கையில் சாய்ந்தவாரே உச்சரிப்பார் மக்கள் திலகம் கதவை திறக்க தேவி அவர்களின் ஏக்கப்பார்வை...
மீண்டும்,மீண்டும் கேட்கத்தூண்டும் சுசிலா அவர்களின் இனிமைக் குரல்!
மொத்தத்தில் ஏக்கத்துடன் கூடிய
ஏகோபித்த பாடல் !........ Thanks...
புரட்சித்தலைவரைப்பிடிக்காதவரகளாலும்புகழப்பட்டவர்நம ்இதயதெய்வம்,கல்கண்டுபுத்கத்தின்ஆசிரியர்தமிழ்வாணன்த லைவரைத்தாக்குவதையேகொள்கையாகக்கொண்டவர்அவருடையகல்கண் டில்ஒருவர்உலகிலேயேகவர்ச்சியான,அழகானவர்யார்என்றுகேள ்விகேட்டிருந்தார்அதற்குஅவர்கொடுத்தபதில்என்னவென்றால ்,இதற்குநீங்களோ,நானோபதில்சொன்னால்தவறு,யாரெல்லாம்அழ குஎன்றுநீங்கள்நினைக்கிறீர்களோஅவர்கள்அனைவர்போட்டோவை யும்ஒருஹாலில்பரப்பிவைத்துதவழும்குழந்தையைஅங்குவிட்ட ுவிடுங்கள்,அந்தக்குழந்தைதவழ்ந்துகொண்டேபோய்ஒருபோட்ட ோவைப்பார்த்தவுடன்அந்தமுகத்தைப்பார்த்துக்கொண்டுஅங்க ேயேநின்றுவிடும்அதுதான் எம்.ஜி.ஆர்என்றுஎழுதினார்இதைவிடதலைவரின்அழகைப்பற்றிய ார்சொல்லமுடியும்இதைகல்கண்டுபுத்தகம்15பைசாவாவா க இருந்தபோதுநானேபடித்ததுசுமார்40ஆண்டுகளுக்குமேல்இருக ்கும்...... Thanks...