எங்கே தேடி அலைவது நல்ல விஷயங்களை பார்க்க! அது தானே மனதை செம்மைபடுத்துகிறது.மனிதன் வாழ்வு தடம் புரளாமல் இருக்க.அங்கே தான் கலைகள் கை கொடுக்கின்றன! கலை என்றவுடன் சுலபமாக்குகிறது சினிமா! சினிமா என்றவுடன் நூறு சதவீதத்திற்கும் மேலே நடிகர்திலகம் சிம்மாசனமாய் வந்து அமர்ந்து விடுகிறார்.
கை நீட்டியவுடன் காசு போடு.அது இயலாதவர்க்கு செய்யும் உதவி.தமிழ் மண்ணில் கால் வைத்த குணசேகரனாய் முதல் படத்திலேயே செய்தார்.அந்த உதவும் குணம் சிவாஜி ரசிகனின் மனதில் படிந்து விட்டது.அதுவே இன்று வரை அன்னை இல்லத்தின் வாசலில் வருடக் கணக்கில் அன்னதானமாய் செய்ய வைத்து விட்டது.அந்த நல்ல விஷயம்தான் கலைஞன் விதைக்க வேண்டும்.சிவாஜியின் மாபெரும் ஆளுமை செய்தது அதுதான்.
தமிழ் மக்கள் பாசக்கார மக்களாம்.குடும்ப உறவுகளை கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..ராஜசேகரனாய் தங்கை மேல் பாசம் காட்டி நடித்தாலும் நடித்தார்.எத்தனையோ அண்ணன்கள் தங்கைகள் மேல் பாசம் பொழிந்து தள்ளி விட்டார்கள்.அது சினிமாவையே ஆட்டிப் படைத்து விட்டதுதானே! நிறைய குடும்பத்தில் இவை நடந்ததுதான்.அவையெல்லாம் மவுனமாக, மறைமுகமாக நடந்த புரட்சிதான் அது.சொந்த பாசத்தில் என்ன புரட்சி என்ற கேள்வி வேண்டாம்.அது இருப்பதை அதிகமாக்கிய ,உண்மையை சொன்ன ஒரு தூண்டுகோல் தான் பாசமலர் ராஜசேகரன்.
மூச்சுக்காற்றை தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று போனாலும் உழும் நிலத்தை விடக் கூடாது. உழவனின் தெய்வம் அது.அதைச் சொல்லவும் ஒரு பழனி வந்தார்.இன்று நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் எல்லாம் என்ன? தனி மனிதராய் கசங்கிய பழனியை பார்த்தால் தெரியும், ஒரு வேளை அரசுக்கு?
ஆயிரம் போராட்டங்களை ஒரு நல்ல சினிமா சொல்லி விடும்.ஆழ உள்ளிருந்து பார்த்த மனிதன் கையில் அதிகாரம் இருந்தால் ஒரு வேளை நல்ல பலன் கொடுக்கும்.ரசனையே இல்லாதவன் நாற்காலியில் இருந்தால் நல்ல பலனுக்கு எங்கே போக? ஆனாலும் விவசாயிகளின் ஆயிரம் கஷ்டங்களை அந்த ஒரு நல்ல படம் சொன்னது .
உளௌ நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள்...ஆனாலும்,எல்லை புரட்சியா, அண்டை நாட்டு யுத்தமா? மக்களெல்லாம் கொடி தூக்கி தேசபக்தியை நிலை நிறுத்துவார்கள்.
தமிழனின் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரமாய் திருப்பூர் குமரனும், பகத்சிங்கும், வஉசியும் குடி கொண்டிருப்பார்கள்.இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் எப்படி வந்தன? அவர் நடித்ததை பார்த்ததும் ஒரு காரணம் தானே! தமிழன் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி இருக்கிறது! அங்கேயெல்லாம் நடிகர்திலகம் மவுனமாயும், நிழலாயும் வாழ்ந்து வழி காட்டிக் கொண்டிருப்பார்!
நல்ல விஷயங்களை தேட சிவாஜி டிகௌஷனரி போதும்.ஆனால் அதை அகத்திலிருந்து உண்மையாக பாருங்கள்!
https://uploads.tapatalk-cdn.com/202...78e8c3e6f8.jpg
Sent from my vivo 1920 using Tapatalk