Shakthi you are doing tremendous job :notworthy:
My best wishes :thumbsup:
Printable View
Shakthi you are doing tremendous job :notworthy:
My best wishes :thumbsup:
sp nga....ahaaaa what a beautiful read.....thank u!....:-)
binglyguy.....enga oorila varum thaan nenaikaren....but dont have it....i am not a tv person ;-)
i prefer reading sp avangalin write ups.. :mrgreen:
:clap: :2thumbsup: :notworthy:Quote:
Originally Posted by suvai
Amazing ....Quote:
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
- பெரியாழ்வார்
this reminds me of a line from the song ..... "nambi kettavar evaraiyyA" written by pApanAsam sivan ....
......... anDru syalazhindala marupozhudu sivan peyar naavil vaaraadE
aadalinaal manamE inDrE shiva naamam sollippazhagu
:notworthy:Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
"இறக்கும் நேரம் நான் வியாதியில் வீழ்ந்து விட்டால் அங்கு உன்னை நினையேனோ மாட்டேனோ, ஆதலால் நாராயணா, அப்போதைக்கு இப்போதே உன் பெயரை சொல்லி வைத்தேன், நீ கணக்கில் வைத்துக்கொள்"
- பெரியாழ்வார்
அந்த மஹானுக்கு நன்றி கூறி, மேலே கூறிய வரிகளைக் நினைவு கூர்ந்து, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்து, இறைவனை தினமும் வணங்குவோம்.
:notworthy: :notworthy:
suvai, bg, aana :ty:
and thanks all for bearing my delayed posts too.
"sthitaprajna" meaning one 'standing' (sthita) in 'wisdom' (praj~nA); a man of steadiness and calm, firm in judgement, contented. The name given by the Bhagavad Gita to one who is Self-realised (Courtesy : advaita.org)Quote:
Originally Posted by Shakthiprabha
can a common man (preferably a gruhasthan) practice "sthitaprajna" ?
could "sthitaprajna" be a practice?
To my knowledge,Quote:
Originally Posted by bingleguy
It is a state of maturity or evolvement, defintely comes with practice too, but one should have the right mindset inbuilt to set his goal in this path(we can give credit to previous karma here). Ofcourse I think anybody can strive in this path, then, why not gruhastha?
Dear all,
Long gap again...due to exams followed by holidays :oops: :ashamed: I wont be available online next week too :( Forgive me...I shall come back and post COVERING EVERY TOPIC..but at my own speed. :ashamed: sorry and thanks.
செயலின் விளைவுகள் கர்மயோகியை கட்டுப்படுத்துவதில்லை என்று படித்தோம். கேட்டோம். உணர்ந்தோம். ஆயினும் அதன்படி நடக்க ஏறக்குறைய நம்மில் பலரால் இயலுவதில்லை. அஹம் கட்டுப்படுத்தபடாததால், அது கட்டுண்டு உடம்பினுள் உழலும் இந்த ஜீவன் மட்டுமே 'நான் என்ற நினைப்பில் செயல்களை செய்கிறது. செயலுக்குறிய விளைவும் இலக்குக்குறியவனை மட்டுமின்றி, செய்தவனையும் பாதிக்கிறது. இத்துடன் நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் தொடர் விளைவுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.
வீட்டில் சண்டையிட்டு வந்த முதலாளி தன் இயலாமையின் வெளிப்பாடை கோபத்தின் மூலமாக வேலையாளிடம் காண்பிக்கிறான் என்பது நகைச்சுவை துணுக்காக மட்டுமின்றி மனோவியல் விதிப்படியும் சரியாகிறது. சிறு செயல் முதல் பெரிய மகத்தான செயல்கள் வரை அனைத்திற்கும் விளைவுகள் உண்டு. அடி முடி அறியமுடியாத படி விளைவுகள் நடைமுறை வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தனிப்பட்ட ஒரு மனிதனின் நிலைமைக்கு காரணம் இன்னார் அல்லது இன்ன செயல் என கூறிவிடுகிறோமே தவிர, அவனின் செயலுக்கோ நிலைமைக்கோ, புரிந்தும் புரியாததுமாய் பல பிரபஞ்ச தொடர் நிகழ்ச்சிகளும் காரணம் ஆகின்றன. அவரவர் வினைப்பயன் என்றும் இதை சொல்லக் கேட்கிறோம். நன்மை பயக்கும் ஒருவரின் செயல் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொழுது, சில நேரம் நன்றி நவில்கிறோம், பல நேரம் மறந்தும் விடுகிறோம். அதே நேரத்தில் நமக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் நடைபெறும் செயல்களை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. ஒவ்வாத செயல்களை செய்தவனை 'வினை-விதைத்தவன்' என்ற நோக்க்கத்துடனேயே அணுகுவதால், அவனிடம் பெரும்பாலும் அன்பு துளிர்ப்பதில்லை. செயல்கள் அனைத்துமே தொடர் நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பே, அதுவும் நம் விதிக்கு உட்பட்டே நடைபெறுகிறது என்ற தெள்வு பிறந்தால் எவ்வித மனக் கசப்பும் பிற ஒருவரிடம் ஏற்படுவதில்லை. அப்படியே ஒருவன் தீங்கு இழைத்தாலும் அதை மன்னிக்கும் பக்குவம் வந்துவிடும்.
தவறிழைப்பது மனித இயல்பாகவே இருந்தாலும், அதனை பெருந்தன்மையோடு மறப்பதும் மன்னிப்பதும் தெய்வ குணமாகவே கருதப்படுகிறது. மன்னிக்க முடியாத குற்றம் ஒருவன் புரிந்து விட்டால் அவன் கதி என்ன? அப்படிப் பட்ட கொடும் செயலும் மன்னிக்கப்பட்டு விட வேண்டுமா? எதைத் தான் மன்னிப்பது என்ற வரையறை வகுக்கப்பட வேண்டுமா? இவ்விஷயத்தை குறித்த சர்ச்சை மஹாபாரத்தத்தில் த்ரௌபதி-யுதிஷ்டிரர் இடையே எழுகிறது. "எப்படிப்பட்ட தவறை எவர் செய்திருப்பினும் மன்னிக்கும் குணம் க்ஷத்திரிய லக்ஷணமே அல்ல" என்று வாதிடுகிறான் பீமன். "எதையும் எப்பொழுதும் மன்னிக்கும் குணமுடைய ஒருவன் அரசாண்டால், மக்களும், மற்றவரும் அவனை எளிதாக மதிப்பிட்டு விடக் கூடுமாகிறது. பிரஹலாதன் தன் பேரன் மஹாபலியின் சந்தேகத்தை போக்கும் பொருட்டு, ராஜ குணம் பொருந்தி அரசாள்பவனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்குகிறான். எதையும் எப்பொழுதும் எளிதில் ஜீரணித்து மன்னித்து விடுபவனை மற்றோரும், உற்றோரும் ஏன் பணியாட்களும் கூட ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை என்று ப்ரஹ்லாதன் கூறுகிறான்" என்று எடுத்துக்காட்டுகிறாள் த்ரௌபதி. ஒருவன் தெரியாமல் தவறிழைத்தால் அவன் மன்னிக்கப்படவேண்டியவன். தவறினை சுட்டிக்காட்டி மன்னிக்கவேண்டியதே தர்மம். இரண்டாம் முறையும் அவன் தவறிழைத்தால் அவன் தண்டனைக்கு உரியவனே என்று வாதிடுகிறாள்.
அதற்கு பொறுமையின் இருப்பிடமாம் தர்ம புத்திரரின் விடை அவரின் முதிர்ச்சி நிலைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. "மன்னிப்பே உலகத்தில் சிறந்ததும், மேன்மையானதும், கீர்த்தியளிக்க வல்லதும் ஆகும். அதை விட சிறந்த மேன்மையான விஷயம் இன்னொன்றில்லை. ஒவ்வொருவரும் பதிலுக்கு பதில் விரோதமும் பேச்சும் வளர்த்து விட்டுக்கொண்டிருந்தால், அது முடிவற்று நீண்டு கொண்டே இருக்கும். எந்த ஒரு விரோதமும் முடிவுக்கு வர மன்னிப்பும் பொறுமையும் அவசியம். மன்னிக்கும் செயல் பிரம்மத்துக்கு ஈடானது. அதுவே சத்தியம்."
இப்படி ஒரு பதில் அளிக்க எப்பேர்பட்ட பரந்த மனம் படைத்திருக்க வேண்டும்!
'தவறிழைப்பது மனித குணம். அதை மன்னிப்பது தெய்வ குணம்!'
Take your own timeQuote:
Originally Posted by Shakthiprabha
as long as the whole thing covered - its Ok
good luck - exam
take care
Thanks
Quote:
Originally Posted by Shakthiprabha
கால நேரத்திற்கு அப்பாற்பட்டு ஊழல்கிறது பொய்மையும் கபடமும். இரட்டைகளான துக்கம் சுகம், புகழ்ச்சி, இகழ்வு என்பதைப் போல், சத்தியத்தின் இரட்டையான பொய்மையும் தன் பணியைத் தொடர்ந்தவண்ணமிருக்கிறது. பிறரை ஏமாற்றி தன் ஜீவனத்தை நடத்தும் இழி நிலைக்கு பாபச் சுமை அதிகம். அதிலும் புனிதனைப் போல் வேடமிட்டு ஏய்ப்பது மிகப் பெரிய பாபம். ஜடை முடி தரித்தலும், காவியுடையும் பெரும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவை. அவற்றை தவறாக பயன்படுத்துபவன் மூடன். அந்த பாபத்தின் வீர்யம் அறியாதவன். இவர்களைப் பற்றி ஆதிஷங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
" ஜடிலோ முண்டி லுஞ்சித கெஷ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹூதர நிமிதம் பஹுக்ருத வேஷ: "
-பஜகோவிந்தம்
சடை முடி வளர்ப்பதும், மொட்டையடிப்பதும், காவியுடை அணிவதுமாய் பல வித வேடம் அணிந்து மூடர்கள் வயிற்றை வளர்க்கிறார்கள். அவர்கள் கண் இருந்தும் குருடர்கள்.
வேடமணிந்த சிலரோ சித்து வேலைகள் செய்தும் பெருவாரியான மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்கின்றனர். சாமான்யர்களால் எப்படி சித்து வேலை செய்ய முடியும்? அப்படியெனில் அவர்கள் சித்தர்களின் பாதையில் பயணிப்பவர்களாகத் தான் இருக்க வேண்டும். "சித்தி" அடைந்தவுடன் மோக்ஷமோ, முக்தியோ கிடைப்பதில்லை. அவர்கள் முற்றும் துறந்த சன்யாசி, ஞானி ஆகிவிடுவது இல்லை. உண்மையான சித்தர்களும் யோகிகளும் சித்தி அடைவதை தன் இலக்காக கொள்ளுவதில்லை. அது ஒரு நிலை மட்டுமே. அதைத் தாண்டி தம் பயணத்தை தொடர்ந்த வண்ணமிருப்பர். அவர்கள் ஒழுக்கம் தவம் மூலம் பல ஷக்திகளைப் பெறுகின்றனர்.
சித்தி பெற்றதும் கூட அஹம் மட்டுப்படாமல் அந்த ஷக்திகளைக் கொண்டு ஏய்க்கும் வேலையில் ஈடுபட்டால் அவர்கள் தம் பாதையினின்று வழுவி விழுந்து விடுகின்றனர். அதைத் தாண்டி செல்பவனே உண்மையான யோகி. பெயர் பெற்ற பதிணென் சித்தர்களைத் தவிரவும் நிறைய சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அஷ்ட மஹா சித்திகள் எனும் எட்டு சித்திகள் கை வரப் பெறுபவன் சித்த நிலையில் இருப்பவனாக கருதப்படுகிறான். அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ரபத்தி, ப்ரகாமீயம், ஈசாத்வம், வசித்வம் என்பன அவை.
அணிமா: அணுவை விட சிறிய உருவம் எடுப்பது / ஆக்குவது
மஹிமா: மலையைக் காட்டிலும் பெரிய உருவம் கொள்வது / ஆக்குவது
லஹிமா: காற்றை விட மென்மை ஆகுவது / ஆக்குவது
கரிமா: மெல்லிய ஆனால் சுமக்க முடியாத கனமான உருவம் கொள்வது /ஆக்குவது
ப்ராப்தி: எண்ணிய பொருள் கையில் வரவழைப்பது
ப்ராகாமீயம்: எந்த வடிவமும் எடுப்பது
ஈசாத்வம்: தேவர்களும் வணங்கக் கூடிய தன்மையை பெறுவது.
வசித்வம்: கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவற்றை அடக்கும் ஷக்தி கைவரப் பெறுவது.
இவற்றையெல்லாம் அடைந்த ஒருவன் அகங்காரத்தை கட்டுப்படுத்தாமல், ஆசைகள் கொண்டு திரிந்தால் அவன் முயற்சி அனைத்தும் வீண். ஆசைகளை அடக்குவதே யோகத்தின் உயரிய நிலை. அஹத்தை மட்டுப்படுத்துதலே ஞானத்தின் முதல் கட்ட நிலை.
"அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆஷா பிண்டம்"
-பஜகோவிந்தம்
உடல் தளர்ந்து விட்டது, பல் விழுந்து, முடி நரைத்து, கையில் கோலின் துணையின்றி இருக்கும் ஒருவனுக்கும் ஆசை விட்டபாடில்லை.
ஆண் / பெண், முதியவன் / இளையவன், சில சித்தர்கள் / சாமான்யர்கள் என பலரையும் ஆட்டுவிக்கிறது ஆசை!
:clap: :clap: sp nga.....
well written in simple language about Mannipu & Aasai.....thank u nga!!
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
எங்கேயோ உதைக்கிறது :- )
nandri aana :)Quote:
Originally Posted by aanaa
puriyala...edhaanum thappa ezhuthittena :?
:oops: pardon me everybody. I am busy with some functions and again would be out of station for quite sometime. Please pardon me. I shall update regularly once the month of june commences :bow: :oops:
ஏன் என்று தெரியாமலே பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் முந்தைய தலைமுறையோடு போயிற்று. இப்பொழுதெல்லாம் பகுத்து அறிவதனால் சில மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். அதே நேரத்தில் தேவையான, அறிய, நல்ல விஷயங்களை கோட்டையும் விட்டு விடுகிறோம். அதைப் பற்றி அறிந்து கொள்ளவும் எத்தனிக்காமல், எல்லாவற்றையும் "பத்தாம்பசலித் தனம் அல்லது மூட நம்பிக்கை" என்று ஒதுக்குகிறோம். எந்த விஷயத்தையும் சொல்லப்பட்ட நோக்கம் தெரிந்து கடைபிடித்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
'வீட்டில் மஹாபாரதம் ஓதினால் அல்லது படித்தால் வீட்டிற்கு ஆகாது' என்ற கூறுவதுண்டு. ஆனால் மாஹாபாரத்திலேயே அதனை படித்தல் புண்ய காரியம் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதையை சிரத்தையுடன் கேட்பவன், படிப்பவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் உட்பட பலகோடி தோஷங்களும் இல்லாதொழியும் என்று குறிப்பிடுகிறார். அறம் வளர்க்கும் நல்ல பிராமணனுக்கு பசு தானம் செய்வதை விட, மஹாபாரதம் படித்தல் புண்ய காரியம் என்கிறது பாரதம். இத்தனை விளக்கங்கள் வியாக்கியானங்கள் தாண்டியும் பலரும் பாரதத்தை வீட்டில் படிப்பதில்லை.
ராமாயணம் புனித நூல் என்றால் மஹாபாராதம் ஏன் வீட்டிற்கு ஆகாது? கிருஷ்ணின் கீதோபதேசம் படம் மனையில் இருத்தல் சுபீக்ஷம் என்றால், ஏன் மஹாபாரதம் படித்தல் உகந்ததாக கருதப்படவில்லை? எந்த ஒரு செயலுக்கும் சம்பிரதாயத்திற்கும் மனையிலும், சுற்றுப்புறத்திலும், நல்லிணக்கமும், நல்லெண்ணம், பரிவு, தயை, நன்னடத்தை முதலியன புகட்டுவதே நோக்கமாக இருக்கும். மஹாபாரதக் கதைகள் த்ரேதாயுகத்தின் முடிவில் நடை பெற்றதால், தர்மத்திற்கு புறம்பான கதைகள் நிறையவே நடைபெற்றுள்ளன. சூதாட்டமும், மனையாளை பணயமாக வைத்து சூதாடுவதும், பல கதாபாத்திரங்களின் குணங்களும், நடத்தையும், பொதுவாக மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்படியாய் அமையவில்லை. வஸ்த்ரபரணமும், ஜெயிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டதால் சில நேரங்களில் யுத்த நீதிகளும் கூட மீறப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் படிக்கும் சாமான்யன் மனதில் குழப்பமும், நேர்மைக்கு புறம்பான கதைகளும் மனதில் பதியுமே அல்லாது தர்ம நியாயங்கள் முரண்பட்டு நிற்பதால் அவனுக்கு நன்மை அதிகம் விளையும் வாய்ப்பில்லை. இராமாயணத்தில் பக்தி, பொறுமை, தயை, ஒழுக்கம் முதலியன அதிகம் காணப்படுவதால் அதனைப் மிகப் புனித நூலாக போற்றுகிறோம்.
இதனைப் போலவே வைஷ்ணவ தர்மத்தை கடை பிடிப்பவர்கள் சிவன் கோவிலுக்கு செல்வதோ அல்லது சிவனைத் துதிப்பதோ கூடாது என்னும் கருத்தும் சம்பிரதாயங்கள் விதிமுறைப்படியே நடக்கிறது என்கின்றனர். ஒரே ரூபம் அல்லது தத்துவத்தின் பால் முழுமையான தீவிரமான பக்தி செலுத்துவது பக்தியின் மேன்மைக்கு வழி வகுக்கும். இறைவன் ஒருவன் என்ற எண்ணத்தை வலியுறுத்தவே, எந்த வடிவத்தை துதித்து போற்றுகிறோமோ அதனின் பால் பக்தியும் அன்பும் செலுத்தி அதனைத் தவிர வேறொன்றை வேறொரு தத்துவத்தை நினையாத பக்தி முக்திக்கு வழி என்பது நம்பிக்கை. இதனாலேயே ஆகமவிதிப்படி கட்டப்பட்ட சிவன் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுதல் அதே போல் விஷ்ணு கோவில்களில் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இல்லை.
அதே போல் பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடிபொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை. நம்மாழ்வாருக்கும் சடகோபன் என்று பெயர். சடாரிக்கும் சடகோபம் என்று வழங்குகிறார்கள். 'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்றும் சொல்வார்கள்.
பொய்கையாழ்வார் பாசுரத்தில்
"சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள்-என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு"
நடந்தால் குடையாகி, இருக்கும் பொழுது சிங்காசனமாகவும், நின்றால் பாதரக்ஷையாகவும், சமுத்திரத்தில் படுத்து மணிவிளக்காக பட்டாகவெல்லாம் அரவு(ஆதிசேஷன்) அலங்கரிப்பதாக கூறுகிறார்.
திருமால் கோவிலில் இராமாஜருக்கென்று சன்நிதி உண்டு, அதை உடையவர் சன்னிதி என்கின்றனர். அங்கு வழங்கப்படும் சடாஅரி 'முதலியாண்டான்' சடாரி என்று குறிப்பாகிறது.
சடாரியைப் பற்றி குறிப்பெடுக்கும் பொழுது கீழ்கண்ட சுட்டியில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன.
அருமை! மிக்க நன்றி: http://verygoodmorning.blogspot.com/...1_archive.htmlQuote:
சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்! இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற! கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்! அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது! அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி! நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்! அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்! சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு?
நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-) "தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்! என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன! இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்! அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!
கடந்த ஒரு வாரமாக அஷோக் கதாபாத்திரம் பிரம்மச்சரியத்தை முடித்துக் கொண்டு "க்ருஹஸ்தாஸ்ரம"த்தில் அடி எடுத்து வைப்பதாக கதை நகர்கிறது. சோ எழுதிய நாவலை நான் படித்ததில்லை, அதனால், தொடருக்காக ஏதேனும் மாற்றங்கள் செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
'சன்யாசம் மட்டுமே உயர்வுக்கு வழி' என்று சொல்லாமல் சம்சாரத்தில் ஈடுபட்ட போதும் அதற்குறிய கடமைகளை கர்மயோகியாக செய்தவண்ணமிருப்பவனுக்கு சன்யாசம்/சம்சாரம் என்ற வழிகளில் வித்தியாசம் இருப்பதில்லை என்பதை தொடர் வலியுறுத்தப்போகிறது போலும்.
அல்லது சமீபகாலமாக சன்யாசிகளின் பாடு கேள்விக்குறியாகி வருவதால், இப்படி கதையில் மாற்றமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நன்றி.
:ty:
had a long brake
ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகி அறுபது துவங்கும் போது போது சஷ்டி-அப்த-பூர்த்தி செய்யப்படுகிறது. சாந்தி பூஜை செய்து ஹோமம் வளர்பது வழக்கம். அறுபது வயது துவங்கும் பொழுது, கிரஹ நிலைகள் ஏறக்குறைய பிறக்கும் பொழுது இருப்பது போல் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், ஷாந்தி செய்து கொள்வது விசேஷம் என கருதப்படுகிறது. ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் இது பற்றிய குறிப்பு இல்லாவிட்டாலும், ஷாந்தி, ஹோமம், பூஜை முதலியவை செய்யப்பட வேண்டிய விசேஷ தருணமாக சஷ்டி அப்த பூர்த்தி கருதப்படுகிறது. தற்போது திருக்கடையூர் என்ற ஸ்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தியை க்ரமப்படி செய்து கொள்ளும் தம்பதியர் பலர் உண்ட ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகும் பொழுது "உக்ர ரத சாந்தி" செய்வதும், அறுபது முடியும் பொழுது "சஷ்டி அப்த பூர்த்தியும் செய்யப்படுவ தாவும் குறிப்பு இருக்கிறது. காலன் உக்ர ரதமேறி வருவதாகவும், அவனை சாந்தி செய்து குளிர்விப்பதாக ஐதீகம்.
இவற்றையெல்லாம் செய்தால் யமன் திருப்தி அடைவானா? இதெல்லாம் பகட்டுக்கென செய்யப்படும் அனாவசியங்கள் என்று அபிப்ராயம் இருந்தால் அதற்கேற்ற பலனே கிட்டும். எந்த ஒரு செயலின் விளைவு அதன் பால் உள்ள ஈடுபாட்டை பொருத்து அமையும். பக்தியும் நம்பிக்கையும் செயலின் ஊடே பின்னியிருந்தால் அந்த செயலின் மகத்துவம் தனித்து மிளிரும்.
யமனை வென்றவர்கள் ஒருவரும் இல்லை, குறைந்த பட்சம் மரண பயத்தை வென்றவர்களைக் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். மரணத்தை வெல்ல முடியாவிட்டாலும், தர்ம தேவனான யமனிடம் போராடி வெற்றி பெற்றவர்களுள் மார்கண்டேயனும் ஒருவன். பதினாறே வயது நிரம்பியவனிடம் எத்தனை நம்பிக்கை / பக்தி இருந்தால், இறைவனே கதியென்று லிங்கத்தைக் கட்டிக்கொண்டிருப்பார்! அப்படிப்பட்ட பக்தி எத்தனை தூய்மையானதாக இருந்தால் சிவனும் லிங்கதினின்று தோன்றி யமனையே வதம் செய்திருப்பார்! மார்கண்டேயன் சிவபக்தனாக மட்டுமே இல்லாமல், இறையையின் அருவத்தை, தத்துவத்தை எல்லா உருவிலும் உணர்ந்த ஞானியாக திகழ்கிறான். விஷ்ணு பக்தனாய் விஷ்ணுவைப் போற்றுகிறான். விஷ்ணுவின் யோக மஹிமையைக் காண்கிறான். ப்ரளய காலத்தைக் காண்கிறான். காணுதற்கறிய பலவற்றை தன் யோகத்தாலும் பக்தியாலும் காண்கிறான். சிவனும் பார்வதியும் அவனுக்கு ப்ரளய காலத்தில் தரிசனம் தர,
"சத்துவ குணம் பொருந்தியவன் நீ உலகை காத்து சுகமுறச் செய்கிறாய்
ரஜோ குணம் பொருந்தியவன் நீ உலகத்தை படைபதற்காக அதைக் கொண்டவன் ஆகிறாய்
தமோ குணம் பொருந்தியவன் நீ உலகத்தை அழிப்பதற்காக அதைக் கொள்கிறாய்"
என்று துதிக்கிறான்.
எல்லாபொருளிலும் எல்லா வடிவிலும், தன்னிலும் பிறவிலும் கூட 'ஒன்றை'யே காணும் பக்குவம் பெற்றாவனாகிய மார்கண்டேயன் தமக்கு பிரியமானவன் என்று அருளிச்செல்கிறார்.
நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசப்படும் பிரபலக் கதை ஒன்று இதற்கு சாலப் பொருத்தமாக அமையும்.
என்று திருவாய்மொழிவதாகக் கதை.Quote:
கங்கையில் முங்கி எழுந்தால் கர்மம் (பாபம்) தொலையும் என்று நம்பியே அனைத்து மக்களும் புனித நதி நீராடுகின்றனர். ஒரு சமயம் பரமசிவன்-பார்வதி இடையே சம்பாஷணை நடந்தது. "கங்கையில் ஸ்னானம் செய்தால் பாபங்கள் கரைந்து போகுமே, ஏன் பூவுலக மக்களின் பாபங்கள் தீர்ந்ததாகவே தெரியவில்லை" என்று பார்வதி வினவ அதற்கு "நம்பிக்கையுடன் ஒருவனும் இங்கு ஸ்னானம் செய்தான் இல்லை" என்கிறார் இறைவன். அதனை நிரூபிக்க திருவிளையாடல் புரிகின்றார். வயோதிக வேடத்தில் சிவனும் இளைய மனைவியின் வேடத்தில் பார்வதியும் கங்கையில் நீராடுகின்றனர். முதியவரை கங்கை அடித்துச் செல்கிறது. என் புருஷனைக் காப்பாற்றுவார் இல்லையா என்று புலம்புகிறாள் அந்தப் பெண். அவ்வளவு சீக்கிரம் உதவவும் யாரும் முன்வரவில்லை. கடைசியில் சிலர் முன் வந்த போது "பாபமற்ற இவரை கரைசேர்ப்பவனும் பாபமற்றவனாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் சாம்பலாகி விடுவார்கள் " என்று நிபந்தனை விதிக்கிறாள் இளம் பெண். அனைவரும் தயங்கி வந்த வழியே சென்று விட, ஒருவர் கூட தூக்கி விட முன்வரவில்லை. இறுதியில் ஒரு இளைஞன் kகாப்பாற்றுகிறான். "நீ பாபமற்றவனா" என்ற கேள்விக்கு "அதிலென்ன சந்தேகம், கங்கையில் நீராடிய நிமித்தம் என் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, ஆகவே நான் பாபமற்றவன்" என்கிறான். இறைவனும் இறைவியும் அவனுக்கு அருள் புரிந்து விட்டு, "நம்பிக்கையோடு ஸ்னானம் செய்தால் மட்டுமே பாபங்கள் விலகும்"
இந்து மதத்தில் சில நதிகளை புண்ய நதிகளாகக் கருதி தாய் வடிவில் உருவகப்படுத்தி வணங்கி வருகின்றனர். அங்கு நீராடுதல் அனைத்து பாபங்களையும் போக்க வல்லதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. முக்கியமானதாக எழு நதிகளை குறிப்பிடுவதுண்டு. கங்கை, யமுனை, ப்ரஹ்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, காவிரி, சரஸ்வதி ஆகிய ஏழும் சிறப்புற்றது. கங்கை நீராடுவதன் முக்கியத்துவத்தை நான் நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால் பலரும் அறியாத பெரும்சிறப்பு காவிரிக்கும் உள்ளது. நரகாசுரனை வதம் செய்த கண்ணனுக்கு வீர-ஹத்தி (வீரனை கொன்ற பாபம்) தோஷம் பீடித்தது. அதற்கு பரிகாரமாக காவிரியில் நீராடி பாபத்தை தொலைத்தாராம். துலா மாதத்தில் விடியல் நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரிஅ, காவிரியில் அனைத்து புனித நதிகளும் சங்கமம் ஆகின்றன எனவே துலா ஸ்னானம் காவிரியில் செய்வது மிக உத்தமம். கங்கையில் மூன்று நாள் குளித்தால் கதி மோக்ஷம், யமுனையில் ஐந்து நாள் நீராட வேண்டும். காவிரியில் துலா ஸ்னானம் செய்தல், உடனே விஷ்ணு லோகத்திற்கு இட்டு செல்ல வல்லது என்று காவீரியின் மகிமையை எடுத்துரைக்கின்றனர் சான்றோர். அதுவும் துலா /ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறைக் காவிரியில் நீராடுவது மிக்க சிறப்பு.
மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் மயூரநாதர் கோவில் ஸ்தல வரலாறு நாதசர்மா-அனவித்யா தம்பதிகள் இங்கு மோக்ஷம் அடைந்ததை நமக்கு எடுத்துறைக்கிறது. ஒரு சமயம் துலா மாதத்தின் கடைசி நாளிலும் காவிரியில் நீராட முடியாமல் போகவே நாதசர்மா-அனவித்யா தம்பதியர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். அன்று கனவில் தோன்றிய சிவன், மறுநாள் காலை சூரிய உதயம் முன்பு நீராடினாலும் பாபம் நீங்கி மொக்ஷம் கிட்டும் என்று அருள்கிறார். அதன் படியே அதிகாலை நீராடி அத்தம்பதியர் ஈசனுடன் ஐக்கியம் ஆகின்றனர். இத்தம்பதிகளுக்காக வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை "முடவன் முடக்கு" என்றும் வழங்குகின்றனர். இக்கோவிலில் இறைவியின் சன்னிதானத்திற்கு பக்கத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் ஒரு சன்னிதி காணப்படுகிறது. நாதசர்மா ஐக்கியம் ஆன லிங்கம் அவரின் பெயரிலேயே இருக்கின்றது. இவையெல்லாம் நடந்ததற்கு தகுந்த சான்றாக, காசியில் இருக்கும் ஒரு கல்வெட்டில் கூட இத்தம்பதியைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.
ஆனா, அன்புள்ள ஹப் வாசகர்களுக்கு,
I know I am not doing justice :(
முடிந்தால் என்னை மன்னியுங்கள். :oops: வீட்டில் விசேஷங்கள் ஏக விருந்தினர்கள், மறுபடியும், வெளியூர் வேறு சென்று வர இருக்கிறேன்.
சென்று வந்த பின், விட்டுப் போன விஷயங்கள் எல்லாம் திரட்டி ஒன்று விடாமல் நிச்சயம் எழுதுகிறேன்.
என்னை மன்னியுங்கள். :(
:ty: Shakthi :notworthy:
மன்னித்துவிட்டேன் :PQuote:
Originally Posted by Shakthiprabha
You are doing very good.Quote:
Originally Posted by Shakthiprabha
மன்னிப்பா?
எதற்கு ?
இதில் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றுமே இல்லயே.
இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டகவே வேண்டாம்
முதலில் சொந்த வேலை
உங்கள் எழுத்துகளுக்கு நன்றி
waiting for your updates SP :D
good to see u back shankar :) ... toooooooo many episodes (almost 60 episodes) to watch and take notes. :oops: I still AM taking notes. shortly would be updating one by one :)
thanks SP :). take your time and it is a lot of work. you have other things to attend to also. Whatever you do will suffice. :)
Shakthi ... you are doing great .... delay irundhalum .... kobam vandhaalum ;-) unga ezhuthai padikkum podhu ellam paradhu vidugiradhu :)
keep it going ! :thumbsup:
:ty: :oops: bg . very kind words :oops:
Almost done taking notes . Maximum by 2 more days I should start writing. :ashamed:
நீதிக் கதைகள்
அரசன் முதல் அடியவர் வரை, அவரவர் வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களும் சூழ்நிலைகளும் ஏராளும். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் திடமாகவும் புத்திசாலித்தனமாகவும் அணுகுவதையொட்டியே தனி மனிதனின் வெற்றி தோல்வி அமைகிறது. நீதிக் கதைகளை போதிப்பதன் மூலமாக மனிதனுக்கு உணர்த்தப்பட்ட படிப்பினை அனேகம். இன்றும் "moral stories" உணர்த்தும் ஏராளமான கதைகளை, புத்தகங்களை சிறுவர் சிறுமியர்கள் படித்து பயன் பெறுகிறார்கள். புத்தகங்கள் இல்லாத காலங்களிலும் வழிவழியாக இக்கதைகள் பறிமாறப்பட்டு வந்திருக்கின்றன.
பஞ்சதந்திர கதைகள் விஷ்ணு ஷர்மா என்பவரால், அமரஷக்தி என்ற அரசனின் புதல்வர்களுக்கு புகட்டப்பட்ட நீதிக் கதைகள். இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் மிருகங்களும் பக்ஷிகளுமே என்றாலும் ஊடே போதிக்கப்பட்ட நீதி மனிதனின் தனி வாழ்வுக்கு உகந்தது. விக்ரமாதித்தனின் வேதாளக் கதைகளைப் போலவே கதைக்குள் கிளைக்கதைகள் பலவற்றை புகுத்தி, கையாளப் பட்டிருக்கிறது. அதே போல் ஹிதோபதேசத்தில் சொல்லப்பட்டுள்ள கதைகளும் நீதி போதிப்பவையாக இருந்தாலும், இது பெரும்பாலும் ராஜ நீதியை வலியுறுத்தும் கதைகளாக அமைகிறது. இவை நாராயணர் என்பவர் தவள(dhavala)சந்திரன் என்ற அரசனுக்கு கூறப்பட்ட கதைகள். ஹிதம் என்றால் இதமானது (ஹிதமானது) என்று பொருள் கொள்ளலாம். இக்கதைகள் இருநூறுக்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கி வருகிறது. மேலும் மஹாபாரதத்தில், பீஷ்மர் தருமருக்கு கதைகள் மூலமாகவே ராஜநீதி போதித்துள்ளார்.
இப்படிப்பட்ட கதைகள் கேட்கத் திகட்டாதவை. ராஜநீதி என்றில்லாமல், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களையொட்டி அமைகின்ற படியால் இதன் படிப்பினை பண்டிதனுக்கும் பாமரனுக்கும் பொருந்தக்கூடியவை.
விசுவாசிக்கு உதாரணமாகக் கொண்ட ஹிதோபதேசக் கதையில், சூத்ரகன் என்ற அரசனின் கீழ் வீரவான் என்ற வேலையாள் மிகுந்த விசுவாசியாக உழைத்து வருகிறான். தர்ம சிந்தனையுடையவனாகவும் திகழும் அவன் தனக்கென கால் பங்கு தனத்தை வைத்துக் கொண்டு மீதத்தை தானம் செய்து மேன்மையான வாழ்வு வாழ்ந்து வருகிறான். அரசனுக்கு விதி முடிந்து மரணம் நேரப்போகிறதை அறிந்ததும் தன் மகனையே பலி கொடுக்க தயாராகிறான். இதனை விசுவாசத்தின் எடுத்துக்கட்டாக மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ராஜ-விசுவாசிகள் அதிகம் இருப்பது ராஜ்ஜியத்தின் பலத்தை கூட்டுகிறது. இவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதே அரசனின் சிறப்பும் புத்திகூர்மையும்.
(நீதிக் கதைகள் தொடரும்)
ஹிதோபதேசக் கதை (துரோகம்)
சிறு வயதில் அனைவரும் "கல்/கத்திரிக்கோல்/காகிதம்" விளையாட்டு விளையாடியிருப்போம். சைகையால்ஒரே சமையத்தில் கல் அல்லது கத்திரி அல்லது காகிதத்தை தேர்வு செய்யலாம். நம் எதிராளி என்ன தேர்வு செய்கிறார் என்பதைப் பொருத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். கத்திரி காகித்தை கத்தரித்து விடும். கல் கத்திரியை மழுங்கச் செய்து விடும். ஆனால் காகிதத்தால் கல்லை சுற்றி விடலாம். எது வல்லமை பொருந்தியது? அந்தந்த நேரத்தில் எந்த இரண்டு மோதிக்கொள்கிறதோ அதனையொட்டி வெற்றி தோல்வி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. vicious circle என்பது தான் உண்மை. மனிதனுக்கு தன்னை விட வலிமை பொருந்திய இன்னொரு ஜந்துவினால் நிகழும் இழப்பை விட சக மனிதனால் படும் துயரும் இழப்புமே அதிகம்.
'செய் நன்றி மறப்பது' மனிதனுக்கு மிகவும் எளிது. துரோகத்திற்கு எடுத்துக்கட்டாக கூறப்பட்ட கதைகளில் மிருகங்களே பாத்திரமானாலும், பல நேரங்களில் மனிதனின் குதர்க்க புத்தியின் விளைவாகவும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் நிகழும் நிகழ்வுகள் துரோகத்திற்கு நல்ல உதாரணம். இப்படிப்பட்ட மனிதர்களும் அவர்களால் விளைந்த சம்பவங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினை. ஒரு சமயம் கிணற்றிலிருந்து அபயக்குரல் கேட்டு அவ்வழியே சென்ற குடிமகன், மிகுந்த யோசனைக்குப் பின், அதில் மாட்டியிருந்த மிருகங்களை காப்பாற்றுகிறான். எம்மை காப்பாற்றினால் நாங்கள் உன்னை கொன்று விட மாட்டொம் என்று சத்தியம் செய்கின்றன. பின்னர் கிணற்றில் தவித்திருந்த மற்றொரு மனிதனையும் காப்பாற்றுகிறான். பேராசையால் இறுதியில் சக மனிதன் தான் இவனை அரசனிடம் காட்டிக் கொடுக்க, மிருகங்களோ செய் நன்றி மறவாமல் உதவுவதாகக் கதை.
ஒரு ஊரில் எலி ஒன்று பூனைக்கு பயந்து பரிதாப வாழ்வு வாழ்ந்து வந்தது. முனிவர் ஒருவரை அண்டி, தன்னை பூனையிடமிருந்து பாதுகாக்கும் படி வேண்டிக்கொண்டது. முனிவரும் பரிதாபப் பட்டு, அதனை பூனையாக மாற்றிவிடுகிறார். விட்டதா தொல்லை? உலகத்தில் தொடர்ந்து ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றாக இன்னல்களும், சவால்களும், சந்தோஷங்களும் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. இப்பொழுது பூனைக்குப் புதிய பயம், நாயைப் பற்றியது. "என்னை நாய் துரத்துகிறது, முனிவரே அபயம்". பரிதாபப்பட்டு முனிவரும், அதனை நாயாக மாற்றுகிறார். சிறுத்தையொன்று தன் வேட்டைக்கு நாயை குறிவைக்கவே, 'பயந்து ஓளிதல்' முடிவற்றதாகிறது. முனிவரும் இம்முறையும் கருணை கொண்டு அதனை சிறுத்தையாக்குகிறார். சிறுத்தையின் பலம் வந்ததும், அதன் புத்தி முனிவனுக்கு முரணாக வேலை செய்யத் துவங்குகிறது. 'தன்னைப் போலவே இன்னொரு பலசாலி சிறுத்தையை இவர் உருவாக்கினால் என்ன செய்வது!' என்றெண்ணி, முனிவரை கொன்று விட தீர்மானித்து அவரைத் தாக்குகிறது. விழித்துக் கொண்ட முனிவர் அதனை மறுபடி எலியாக்கி விடுகிறார்.
மேலே கூறப்பட்டுள்ள கதையில் எலியின் பாத்திரத்தில் நாம் சந்திக்கும் பல மனிதர்களை நிரப்பலாம்.
(நீதிக் கதைகள் தொடரும்)
தொடருங்கள்Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
நன்றி ஆனா :ty:
__________________
பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்த கதை: யார் நண்பன்?
ஒரு ஊரில் எலி ஒன்று ஆல மரப் பொந்தில் வாழ்ந்து வருகிறது. இயற்கையின் விதிப்படி பூனைக்கு அது ஆகாரமென்பதால், ஆலமரப்பொந்தின் அருகே எலியின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எலி பூனைக்கு பயந்து வளைக்குள்ளேயே இருந்து கொள்கிறது. ஒரு சமயம் அவ்வழியே சென்ற வேடன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வலை விரிக்க, பூனை அதில் அகப்பட்டுக்கொண்டது. இனி பகைவனின் பயம் ஒழிந்தே விட்டது என்று குதூகலித்த எலியும் மெதுவாக வளையை விட்டு வெளியெ வருகிறது. வெளியே வந்த நொடி, வேறு ஆபத்தான சூழ்நிலை. கோட்டான் அதன் மேல் எந்தக் கணமும் பாய்ந்து குதற தயாராய் காத்திருக்க, அப்புறமாக ஓடி ஒளியலாம் என்றால் அங்கே கீரிப்பிள்ளையின் கொடூரம். என்னதான் செய்யும் எலி? எதிரி என்றாலும் தற்போது துணிந்து அணுகக்கூடிய நிலையில் இருப்பது பூனை மட்டுமே. அதன் தலைக்கே ஆபத்து எனும் நிலையில் தவிப்பதால் பூனையே தாற்காலிகமாக நமக்கு உதவக்கூடியவன் என்று முடிவு செய்கிறது எலி.
அதனிடம் தன் நிலையைக் கூறி, அதனிடத்தில் அண்டி இடம் கொடுத்தால், கோட்டானோ, கீரியோ தன்னை ஒன்றும் செய்யாது, பதிலுக்கு தானும் வலையை கடித்து பூனையை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கிறது. சிறிது நேரம் காத்திருந்த கீரியும் கோட்டானும் எலியை ஒன்றும் செய்ய முடியாமல் அதன் வழியே சென்று விட, பூனையின் உதவியால் எலி தப்பியது. இனி வலையை அறுத்து காப்பாற்று என்று பூனை கேட்க, எலியொ மறுத்து பேசுகிறது.
"நீ உன் சத்தியத்தை அல்லவா மீறுகிறாய்" என்கிறது பூனை.
"உன்னை காப்பாற்ற மாட்டேன் என்று சொல்லவில்லை. வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து விட்டால், உயிர் காத்துக்கொள்வதே உன் தலையாய கவனமாய் இருக்க, என்னை விட்டு விடுவாய். இப்பொழுது வலையை அறுத்தால், அடுத்து உன் பசிக்கு நானல்லவோ உணவு" புத்திசாலி எலியின் பதில்.
வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து பூனையை தப்பிக்க விடுகிறது. மறுபடி தன் பொந்துக்குள் சென்று ஒளிந்து கொண்ட எலியுடன் நைச்சியமாய் பேச்சு கொடுக்கிறது பூனை. "என் உயிரைக் காத்த நீ இனி என் நண்பன், இருவரும் இனி நல்ல நண்பர்களாய் வாழலாம்"
"அது எப்படி முடியும்? நீ என் விரோதி என்பது இயற்கையின் நியது. உன் ஆகாரமே நான். ஒரு காரண காரியத்திற்காக தோன்றிய நட்பு அத்துடன் முடிந்தது. உறவும் நட்பும் கூட காரிய காரணத்திற்காகத் தான். தேவைகள் முடிந்து விட்டால் அங்கு நட்பும் உறவும் யாரும் பாராட்டுவதில்லை. இது உலக இயல்பு, நியதி"
எலியின் புத்தி சாதூர்யம் நட்பு பாராட்டும் போது பல நேரம் அவசியமாகிறது. இல்லையெனில், நைச்சியமாகப் பேசும் பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் சிக்கித் தவிக்க நேரிடும்.
(நீதிக் கதைகள் முற்றும்)
திருந்திய வாழ்வு
______________
மாரீசன் என்ற அரக்கன் மிகப் பொல்லாதவன். மாரீசன் என்று கேட்டவுடன் "மாரீச மான்" என்ற சொற்றொடர் நினைவில் தட்டும். பல முனிவர்களுக்கும் தபஸ்விகளுக்கும் இன்னல் விளைவித்தவன். யாகங்களை கெடுப்பதும், சாத்விகளை இம்சிப்பதும் அவனுக்கு இன்பம் அளிப்பன. தாடகை என்ற அரக்கிக்கு சுபாஹுவும் மாரீசனும் புதல்வர்கள். தாடகையும் அவள் புதல்வர்களுடன் கானகம் முழுவதும் சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்தனர். ஹோம குணங்களில் இரத்த மழை பொழியச் செய்தும், மாமிசங்களை விட்டெரிந்தும், இன்னும் பல்வேறு விதமாயும் இன்னல் விளைவித்தனர். இவர்களை அழிக்கவும் யாகத்தை காக்கவும் விஸ்வாமித்ரர் தசரதனிடம் விண்ணப்பித்து இராமனின் உதவியை நாடுகிறார்.
தாடகை ஒரு யக்ஷ கன்னிகை. பிரம்மதேவனின் வரத்தால் ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவள். சுந்தன் என்பவனை திருமணம் செய்து கொண்டு மாரீசன் , சுபாஹு என்ற புதல்வர்களை ஈன்றெடுத்தாள். ஒரு சமயம் சுந்தன் அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை அழிக்க முற்படுகிறான். வெகுண்ட முனிவர் அவனை பஸ்பமாக எரித்து விடுகிறார். இச்செய்தி அறிந்த தாடகை, அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை சின்னபின்னமாக்க முயல்கிறாள். அகஸ்தியர் அவளையும் அவள் புதல்வர்களையும் அரக்கர்களாகிப் போக சபிக்கிறார். என்கிறது வால்மீகி ராமாயணம்.
source: http://archives.chennaionline.com/co.../history05.asp . ( நன்றி)
விஸ்வாமித்ரருடன் தாடகை வதம் புரிந்த ராமன், சுபாஹுவையும் கொன்று விட, மாரீசனை 100 யோஜனை தூரம் அப்பால் தூக்கி எரியப்பட்டு காயப்படுத்தப் படுகிறான். விழுந்து எழுந்தவன், இனி தூய வாழ்வு வாழ வேண்டும் என பிரதிக்ஞை கொண்டு ஜடை தரித்து தவக்கோலம் பூண்கிறான். எளிமையான வாழ்வு வாழ்ந்து வந்த அவனை பழைய நட்பம் உறவும் விட்டு வைக்கவில்லை.
சூர்ப்பனகை அழுது புலம்பி இராவணனிடம் முறையிட்ட போது கரதூஷ் என்ற அரக்கனை இராமனை அழிக்க அனுப்பி வைக்கிறான் இராவணன். இராமனின் பராக்ரமத்தின் முன் கரதூஷனின் வலிமை பலிக்கவில்லை. கரதூஷனை இராமன் வதம் செய்த விஷயத்தை அகம்பனன் என்ற அரக்கன் இராவணனிடம் தெரிவிக்கிறான். "இராமனை அழிப்பது அத்தனை எளிதான காரியமாகத் தோன்றவில்லை, தந்திரத்தால் மட்டுமே வீழ்த்த இயலும். அவன் மனைவியை நீ அபகரித்து வந்தால் அவளை பிரிந்த ராமன், உயிர் வாழ மாட்டான்" என்ற துர்யோசனை சொல்கிறான் அகம்பனன்.
பழைய தொடர்பினை நினைவில் கொண்டு மாரீசனின் உதவியை நாடுகிறான் ராவணன். "பொன்மானாக வேடம் தரித்து அவள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விடு. உன்னை வெல்ல ராமன் உன்னைப் பின் தொடர்வான். அத்தருணத்தில் அவன் மனைவியை நான் அபகரித்து விடுகிறென், இதுவே அவனை வெல்லும் யுக்தி" .
மாரீசன் சொல்லும் அறிவுரையும் நல்ல உபதேசமும் ராவணனின் சிந்தைக்கு உரைக்கவில்லை. முன்னே தான் வாழ்ந்த கெடு வாழ்வின் தாக்கம் இன்னும் தொடர்கிறதே என்ற வருத்தம் மேலிட புலம்பினாலும், இராமன் கையால் உயிர் விடுவதைக் காட்டிலும் சிறந்தது ஒன்றுமில்லை என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு இறந்து விடுவோம் என்று தெரிந்தே உதவுகிறான் மாரீசன்.
மாரீசன் என்றாலே அவன் வாழ்ந்த துர்வாழ்வும், செய்த அநீதியுமே முதலில் நினைக்கத் தோன்றும். பலருக்கும் அவன் மேற்கொண்ட தவ வாழ்வும், திருந்திய தூய உள்ளமும் தெரியாமலே போய்விட்டது. சமூகத்தில் கொடிய முத்திரை வீழ்ந்து விட்டால் அதனை முற்றிலுமாய் அழிப்பதென்பது பெரிதும் இயலாமல் போகிறது.
இன்றைக்கும் என்றைக்கும் திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளியை உலகம் ஒப்புக்கொண்டதில்லை. திருந்தாமல் தவறுகளைத் தொடர்வதை விட திருந்தி வாழ்தல் நலம். திருந்தியவனை உலகம் வரவேற்கும் என்ற எதிர்பார்ப்பு அற்று விட்டாலும், உலகம் தங்களை ஒதுக்குவதே அவர்கள் செய்த தீவினைக்கு தண்டனையாய் ஏற்று வாழ்வதே ஒரே வழி. பெருந்தவறுகள் செய்யாமல் உத்தமமாய் வாழ்வது சிறப்பு. உலகம் நம்மை போற்றாவிட்டாலும் தூற்றாமல் வாழ்ந்து முடிப்பதே மேன்மையான வாழ்வு.
:D :notworthy: thanks SP.
Quote:
Originally Posted by Shakthiprabha
:ty: SP
Keep up
thankyou aana and shankar. :ty:
__________
அநித்யமானது உலகம். அப்படியெனில் அங்குள்ள பொருளும் நித்தியமில்லாதவை. அங்கு பெறப்படும் இன்பமும் துன்பமும் மாறக்கூடியவை. மாறாமல் இருப்பது சத்தியம் ஒன்றே. எனினும் நித்தியமில்லாத சுகத்தையும் இன்பத்தையும் போகத்தையும் புகழையும் மனம் நாடுகிறது. அப்படி நாடினாலும் கூட ஏதேனும் ஒரு கட்டத்தில் திருப்தி ஏற்படுமா என்பதும் சந்தேகமே. மேலும் மேலும் நாடிச் செல்வதால் திருப்தி ஏற்படுவதே இல்லை. ஆசைகளின் பசி அடங்குவதே இல்லை . இலக்கை எட்டி விட்ட நிலையில் இன்னொன்று முடிவின்றி முளைத்துக் கொண்டே இருக்கும்.
சுவர்கமும் நரகமும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. நம் மனமே நமக்கு நண்பன், மனமே நமக்குப் பகைவனும் கூட என்பது அனைவருக்கும் புரியும். எனினும் ஆசைகள் முடிவற்று நீண்டு கொண்டே இருக்க, 'இன்னும் இன்னும்' என்று மனமும் சபலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஞானம் ஒன்றே சத்தியம். சொத்தும் சுகமும் நிரம்பப் பெற்றிருந்தாலும், மன நிம்மதியை நிச்சலமில்லா அமைதியை அளிப்பது ஞானம். லோபமுத்திரை என்பவள் ராஜகுமாரி. பொன்னும் பொருளும் படைபலமும் நிரம்ப பெற்றிருந்தும், இகத்தே பணமும் பதவியும் அற்ற அகஸ்திய மாமுனிவரை திருமணம் செய்தார். காசும் பணமும் படையும் மட்டுமே சொத்து என்றால் அது அழிந்து விடக் கூடியது. அழியா கல்வியும் ஞானமும் அவர் சொத்தாக இருந்தது. தமிழ் இலக்கணம் இயம்பியவர். அசாத்யக் கல்வியறிவு நிரம்பப் பெற்றவர். அவரையே பெரும் சொத்தாக மதித்தாள் அரசகுமரி. அவர் மூலமாய் ஆயிரம் பேருக்கு சமமான கீர்த்தி பெற்ற ஒருவனை புதல்வனாகப் பெற்றாள். அழியாப் புகழ் பெற்றாள். இகத்தின் சுகத்தை காட்டிலும் பரத்தின் சுகம் நீண்ட ஆயுள் உள்ளது. அதனைக் காட்டலும் உயர்ந்தது தெளிந்த ஞானம். போதுமென்ற மனம் அதற்கு வித்து.
போதுமென்ற மனம் எவனுக்கு வரும்? இன்பம் என்னவென்று ருசித்தவனுக்கே அமையும். அறியாது பசியுடன் இருப்பவனுக்கு போதுமென்ற மனம் வருவதில்லை. யயாதியின் இளமை வெகு முன்னதாகவே சாபத்தின் பேரில் பறிக்கப்பட்டு விட்டது. ஆசைகள் அடங்காமல், அனுபவிக்கும் எண்ணம், மனம், வயது எல்லாம் இருக்க, உடல் முதுமை அடைவது எவ்வளவு கொடுமையானது! அவனால் தன் ஆசைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. தன் மகனின் இளமையை பணயமாகக் கேட்டான். தந்தை மேல் அத்தனை பற்று கொண்ட மகனும் தன் இளமையை தானமாகக் கொடுத்து முதுமையை பெற்றுக் கொண்டான். எப்பேர்பட்ட மகன்! பல காலம் இன்புற்று எல்லா சுகங்களும் அனுபவித்தான் யயாதி. இறுதியில் ஆசைகளை அனுபவித்து தணிப்பது இயலாத காரியம், விட்டொழிப்பதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்தான். தன் ராஜ்ஜியத்தையும் இளமையையும் மகனுக்கே கொடுத்து விட்டு, முதுமை ஏற்று, காற்றிலும் பனியிலும் கடும் வெப்பதிலும் தளராது கடும் தவமியற்றி, ஞான நிலையில் நற்கதி அடைகிறான்.
ஆசைகளும் அஹங்காரமும் மனிதப் பிறவியைத் தாண்டியும் நம் உடன் வருவது. சுவர்க லோகத்தில் அவரை பெரும் மதிப்பும் மரியாதையுடனும் வாழ்த்தி வரவேற்கின்றனர். இந்திரன் முதல் அனைவரும் அவரை தங்கள் வழிகாட்டியாய் மதித்து, ஞான உபதேசிக்க வேண்டுகின்றனர். யயாதியின் ஞானமும் அறிவும் அனைவரின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. "உமக்கு சமமான ஞானம் உள்ளவர்கள் எவரேனும் உண்டா?" என்று கேள்வி எழுப்ப, யயாதி "தேவர்களிலோ ரிஷிகளிலோ கந்தர்வர்களிலோ கூட எனக்கு சமமான ஒருவனை நான் கண்டதில்லை" என்று சற்றே அஹங்காரம் மேலிட பதிலளிக்கிறார். அஹங்காரம் குடி கொண்டு விட்டபடியால், மறுபடி பூலோகம் செல்ல நேரிடுகிறது. தன் தவறை உடன் உணர்ந்த யயாதி, தன்னை மேன்மையானவர்ள் அல்லது சாதுக்களின் நடுவிலும் விழச் செய்யும் மாறு வேண்டுகிறார். அங்கே ரிஷிகள் பலரின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்.
சுவர்கம் செல்ல ஏழு வழிகள் இருப்பதாக சொல்கிறார்.
தவம்
தானம்
நிதானம்
அடக்கம்
இந்திரியங்களை அடக்கி ஆளுதல்
எளிமை
போன்ற குணங்களை ஒருவன் பெற்றித்தல் அவசியமாம். சுவர்கமும் புகழும் கீர்த்தியும் கூட நித்தியம் இல்லதவை. நித்தியமானது இறைவனடி ஒன்றேயாம்.
Quote:
Originally Posted by Shakthiprabha
:ty: SP
மனம் --> எண்ணம் --> வாழ்க்கையும் அதுதானே.
பழைய பாடல்
வானத்தில் பறப்பதும் பூமியில் இருப்பதும்
அவரவர் எண்ணங்களே....
நல்லதையே கேட்போம்
நல்லதையே பார்ப்போம்
நல்லதையே செய்வோம்
[html:78d03e2369]<div align="center"><object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/fqb67w0ulxM&rel=0&color1=0xb1b1b1&color2=0xd0d0d0& hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/fqb67w0ulxM&rel=0&color1=0xb1b1b1&color2=0xd0d0d0& hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="385"></embed></object></div>[/html:78d03e2369]
முற்றும்
Can someone tell me whether I can order the CD online? I saw this continuously last year when I was working in Shifts last year. For Cho, we can watch this one if we can tolerate the bad acting from the support cast. I have few videos available online in bits and pieces. I need the complete CD