Guys,
Any of NT movies will be released this week in Chennai/Madurai/Nellai?
Cheers,
Sathish
Printable View
Guys,
Any of NT movies will be released this week in Chennai/Madurai/Nellai?
Cheers,
Sathish
வரும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சிங்கை வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில் நடிப்புலக இமயத்தின் ‘உயர்ந்த மனிதன்’ 8-)
அப்போது 60 வயதிருக்கும் என் பாட்டிக்கு.
சினிமா பார்த்திராத அவரை நான் ரசிகனாயிருக்கும் நடிகர்திலகத்தின்
பட்டிக்காடா பட்டணமா படத்துக்கு அழைத்துப்போனேன்.
முழு ரசிகராய் மாறினார் என் பாட்டி.
ஆறிலிருந்து அறுபதுவரை
முழுமையான ரசிகர்களை
ஈர்த்து இறுதிவரை வைக்கும்
உலகின் ஒப்பற்ற காந்தசக்தி
நம் நடிகர்திலகம்.
பட்டிக்காடா பட்டணமா நினைவுகளை மீட்டிய பம்மலாருக்கு நன்றியும் பாராட்டும்..
( எனக்கே சாந்தி தியேட்டரா? எனப் பம்மலார் முறுவலிப்பது மனக்கண்ணில் தெரிகிறது..)
Thanks Murali, Kaveri Kannan and Pammalar
Murali, unga maadhiri ezhudha ennaala mudiyaadhu. But next time kandippaa innum alasa try pannaren
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 6
கே: வேறுபடுத்துங்கள்..... அ) இறைவன் ஆ) மனிதன் (எஸ்.ரேணுகா, நீடாமங்கலம்)
ப: அ) இறைவன் = திருவிளையாடல் ஆ) மனிதன் = அவன் தான் மனிதன்
(ஆதாரம் : தமிழன் எக்ஸ்பிரஸ், 1-7 ஆகஸ்ட் 2001)
அன்புடன்,
பம்மலார்.
YG mahendran function
http://www.sivajitv.com/events/yg.ma...tion-video.htm
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 7
கே: எத்தனை மேக்கப் மேன்கள் வந்தாலும் செவாலியே சிவாஜி போட்ட மேக்கப்பிற்கு ஈடாவதில்லையே...ஏன்? (எஸ்.காளிமுத்து, திருவாரூர்)
ப: நடிக்கவே அவதாரம் எடுத்தவர் சிவாஜி. அதனால் அரிதாரம் அவருக்கு முன்னால் கைகட்டி நிற்கிறது...!
(ஆதாரம் : பொம்மை, செப்டம்பர் 1996)
அன்புடன்,
பம்மலார்.
Hello everybody, good to see you all after a short break.
So many good things happening around !!
Hearty welcome to goldstar sathish.
Sivan sir's giant leap in the form of Parthal pasi theerum review - congrats sir !
:D
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 8
கே: நடிப்புத்துறையில் மூவேந்தர்கள் என்று போற்றப்படுபவர்களில் நடிப்பில் முதல் வேந்தன் யார்? (அ.சம்பந்தன், சென்னை)
ப: காட்டுராஜாவின் பெயரைக் குரலில் கொண்டிருப்பவர்.
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1959)
அன்புடன்,
பம்மலார்.
பாசத்திலகத்தின் பாசமலர், சமீபத்தில் சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் திரையிடப்பட்ட சமயம், ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சியின் போது, கோடம்பாக்கம் கலைப்பூங்கா சிவாஜி மன்றம் சார்பில் வழங்கப்பட்ட நோட்டீஸ்:
http://paasamalar69.webs.com/apps/ph...otoid=81585755
அன்புடன்,
பம்மலார்.
குமுதம் 28.4.2010 இதழில், நமது நடிகர் திலகம் திருவானைக்காவல் கோயிலுக்கு யானை வழங்கியுள்ள தகவல்:
http://pammalar.webs.com/apps/photos...otoid=81591790
அன்புடன்,
பம்மலார்.
Btw, who are the other 2 vendhar's he is refering to ???Quote:
Originally Posted by pammalar
Makkal Thilagam MGR & Kaadhal Mannan Gemini Ganesan.Quote:
Originally Posted by rangan_08
Regards,
Pammalar.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 9
கே: "ஆலயமணி" யில் ஓசையே இல்லையே? (என்.முருகன், திருநெல்வேலி)
ப: யார் சொன்னது? தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து ஆலயமணியின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1963)
அன்புடன்,
பம்மலார்.
‘திருவருட்செல்வர் ‘ படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘ தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….
‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.
“ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்“ என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”
ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .
வார இறுதியில் சன் தொலைக்காட்சியில் இளம் நடிகர் தனுஷின் பேட்டி ஒன்றை காண நேரிட்டது.
கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் குறிப்பிட்டது ... உங்க எல்லோருக்குமே தெரியும் சிவாஜி சார் ஒரு பல்கலைகழகம் .நான் பல பேரிடமிருந்து பல பாடங்களை கத்துகிட்டிருக்கேன் . மிகப்பெரிய பல்கலைக்கழகமான சிவாஜி சாரிடம் பல காலமா நான் எதையும் கத்துகிடல்ல .. ஆறேழு வருடங்களுக்கு முன் படப்பிடிப்புக்கு போன போது கொஞ்சம் நேர அவகாசம் கிடைக்க சிவாஜி சாரின் சில பழைய படங்களை பார்க்க ஆரம்பிச்சேன் ..பின்னர் தான் எனக்கு புரிஞ்சது .. சிவாஜி சார் கிட்ட இருந்து கத்துகிறதுக்கு கூட குறைந்த பட்சம் ஆறேழு வருடம் நடிப்பு அனுபவம் என்கிற தகுதி வேணும் .சிவாஜி சார் யுனிவர்சிட்டி . 8-)
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 10
கே: கிரிக்கெட் உலகில் சுனில் கவாஸ்கர் செய்த சாதனைகளையும், நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் செய்த சாதனைகளையும் ஒப்பிடுக? (மு.முரளிகிருஷ்ணன், சென்னை)
ப: கவாஸ்கரின் பெயர் கிரிக்கெட் புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சிவாஜி, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பொன்னாலான புத்தகம்.
(ஆதாரம் : குமுதம், 4.4.1985)
அன்புடன்,
பம்மலார்.
ஆனந்த விகடன் 5.5.2010 இதழில், பொக்கிஷம் பகுதியில், இசைக்குயில் லதா மங்கேஷ்கர் குறித்து நடிகர் திலகம்:
http://pammalar.webs.com/apps/photos...otoid=81992816 (முதல் இரண்டு பக்கங்கள்)
http://pammalar.webs.com/apps/photos...otoid=81992817 (மூன்றாவது பக்கம்)
அன்புடன்,
பம்மலார்.
குமுதம் 12.5.2010 இதழில், ஒய்ஜி விழா:
http://pammalar.webs.com/apps/photos...otoid=81994570 (முதல் இரண்டு பக்கங்கள்)
http://pammalar.webs.com/apps/photos...otoid=82005286 (மூன்றாவது பக்கம்)
http://pammalar.webs.com/apps/photos...otoid=82005287 (நான்காவது பக்கம்)
http://pammalar.webs.com/apps/photos...otoid=82005288 (ஐந்தாவது பக்கம்)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 11
கே: சிவாஜி கணேசன் தனக்கு ஜோடியாக தேவிகாவைப் போடும்படி வற்புறுத்துகிறாராமே? (வி.பி.பதி, தஞ்சமாலிம்)
ப: சேச்சே! அவர் அப்படிக் கேட்கக் கூடியவரல்லர். திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திராணி நம் தாரகையர் யாருக்கும் இல்லை.
(ஆதாரம் : சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ், ஆகஸ்ட் 1964)
அன்புடன்,
பம்மலார்.
ஒய்.ஜி. விழா - 4
விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)
கலைஞானி கமலஹாசன் அவர்களின் சிறப்புரை:
"கலைஞர் அவர்களும், நடிகர் திலகம் அவர்களும் எத்தகையதொரு நட்பைப் பாராட்டினார்கள் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்து ரசித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் என் பேரன்-பேத்திகளுக்கு பெருமையாகச் சொல்வேன். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், தான் எழுதிய வசனமொன்றை நடிகர் திலகம் பேச, அந்தத் திரைப்படத்தின் காட்சி ஒளித்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீண்ட, நெடிய வசனம் நடிகர் திலகத்தால் ஒரே ஷாட்டில் பேசப்பட்டது. கலைஞர் அவர்கள் ஒளித்திரையில் ஓடிக் கொண்டிருந்த அத்திரைப்படக் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது கண்களில் நீர்த்துளிகள்! தான் எழுதிய வசனம் என்பதையே மறந்து ஒரு ரசிகனாக, நண்பனாக அவரது கண்கள் பனித்தன. அதனைப் பார்த்த என் கண்களிலும் ஈரக்கசிவுகள்.
எனக்கும், எனது ஆருயிர் நண்பன் ஒய்ஜிக்கும் அடிக்கடி சண்டை வரும், 'யார் நடிகர் திலகத்தின் பெரிய ரசிகன்' என்று. கடைசியில், நட்பு கருதி போனால் போகட்டும் என்று பொய்யாக, 'நீதான் பெரிய ரசிகன்' என்று நான் விட்டுக் கொடுத்து விடுவேன். அது எப்பொழுதுமே, நிஜமாகவே பொய்யாக விட்டுக் கொடுத்ததுதான்."
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.
டியர் பாலா சார்,
கலையுலக மகானின் ஆன்மீக ஈடுபாட்டை, தொண்டினை அடிக்கோடிட்டு காட்டிய தங்களது பதிவுக்கு நன்றிகள் பற்பல.
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலார்,Quote:
Originally Posted by pammalar
நடிகர்திலகம் அப்படிக்கேட்டிருந்தால் கூட அதில் என்ன தவறு?. அவ்வளவு பெரிய கலைஞனுக்கு, தன் கூட யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்கக்கூட உரிமையில்லையா?. அதேசமயம் 'வேறு சிலர்' தன் படத்தில் ஒரு வேலைக்காரன் ரோலில் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையைக்கூட தன் வசம் வைத்திருந்தனர். இந்தக்கேள்வி கேட்டவர்கள் அதைப்பற்றியெல்லாம் வாய் திறந்திருக்க மாட்டார்களே. அந்தக்காலத்திலிருந்தே இதே வேலையாகப்போச்சு. இத்தனைக்கும் தேவிகா, நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த ஜோடிகளில் ஒருவர்.
'சிவாஜி படத்துக்கு மட்டும் பூதக்கண்ணாடி' என்ற எனது திரிக்கு மட்டும் மாடரேட்டர்கள் அனுமதி வழங்கட்டும். அப்புறம் நான் கிழிக்கிற கிழியில் தினமும் குருக்ஷேத்திரம்தான்.
pammalar wrote:
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 11
கே: சிவாஜி கணேசன் தனக்கு ஜோடியாக தேவிகாவைப் போடும்படி வற்புறுத்துகிறாராமே? (வி.பி.பதி, தஞ்சமாலிம்)
ப: சேச்சே! அவர் அப்படிக் கேட்கக் கூடியவரல்லர். திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திராணி நம் தாரகையர் யாருக்கும் இல்லை.
(ஆதாரம் : சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ், ஆகஸ்ட் 1964)
அன்புடன்,
பம்மலார்
திரு பம்மலார் சார்,
அந்த சமயத்தில் (1964) வேறு சிறந்த கதாநாயகி இல்லையே? பத்மினி திருமணம் ஆகி அமெரிக்கா போய் விட்டார் சாவித்திரி கர்ணன் படத்திலேயே குண்டாக தெரிவார்! மீதம் இருப்பது சரோஜா தேவி தான் அவர் வேறு சிலர் படங்களில் பிசியாக இருந்ததால் கூட இருக்கலாம்.
சகோதரி சாரதா,
நன்றி. தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது.
திரு.ஜேயார்,
மிக்க நன்றி. தாங்கள் கூறியதும் சரியே.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 12
கே: மார்லன் பிராண்டோ + ராஜ் கபூர் = நடிகர் திலகம் என்ற விடை சரியா? (க.ந.நம்பி, சத்தியமங்கலம்)
ப: சரியில்லை. கலப்படத்திற்கும், அசலுக்கும் வித்தியாசம் இல்லையா?
(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1970)
அன்புடன்,
பம்மலார்.
நாளை (14.5.2010) வெள்ளி முதல், சென்னை பிராட்வே திரையரங்கில் (இப்பொழுது இதன் பெயர் நியூபிராட்வே திரையரங்கம்), தினசரி 3 காட்சிகளாக, பாசத்திலகத்தின் "பாசமலர்" திரைக்காவியம் வெற்றிகரமாக திரையிடப்படுகிறது.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 13
கே: காதல் பாடல் காட்சிகளில் 'ஸ்டைல்' நடிப்பில் தங்களை அசத்துபவர் யார்? (ஜி.பசுபதி, திண்டுக்கல்)
ப: என்றும் சிவாஜி.
(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)
அன்புடன்,
பம்மலார்.
Thanks to : எழுதியது நெல்லை கண்ணன்
தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை
பல்கலைக் கழகமாய்
வந்து நின்றான்
நடிப்புக் கல்லூரிகள்
பின்னரே
தோன்றின
அவனுக்கு
விருது
வழங்காததால்
குடியரசுத் தலைவர்
மாளிகை
ஒரு
சிங்க நடையைத்
தரிசிக்கும்
வாய்ப்பை
இழந்தது
தேசத்திற்கே
விருதாய்
வந்தவனுக்கு
தேசம்
எப்படி
விருதளிக்க
முடியும்
அவன்
போட்ட
பிச்சையிலே தான்
பலர்
இன்று
கோடீஸ்வரர்
ஒய்.ஜி. விழா - 5
விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)
விழாத் தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையுரை:
"இந்த 'வியட்நாம் வீடு' நாடகத்தில், சிவாஜி வாழ்ந்து காட்டிய பிரஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்தை, தம்பி ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களும் சிறப்பான முறையில் செய்திருக்கிறார். கண்டிப்புக்கு பேர் போன குடும்பத்தைச் சேர்ந்தவராகத் திகழ்வதால்தான், கண்டிப்பே உருவான இப்பாத்திரத்தை, தம்பி ஒய்.ஜி.மகேந்திரன் தத்ரூபமாக நடித்துக் காட்ட முடிந்தது.
'வியட்நாம் வீடு' நாடகத்தை, ஒய்.ஜி.மகேந்திரன் மேடையேற்றி நடத்துவதே ஒரு பகீரத முயற்சி, ஒரு சவால். இதை நடித்து தமிழ்நாட்டில் பேரும், புகழும் பெற்றவர் என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்த அந்தப் பாத்திரத்தில் நடிப்பதே பெரிய சவால். 'இதனைக் குரு தட்சணையாக நடத்துகிறேன்' என்று ஒய்.ஜி.மகேந்திரன் என்னிடத்திலே சொன்னார். அந்த குரு காணிக்கையை சிறப்பான முறையிலே அவர் செலுத்தியிருக்கிறார்.
இங்கே இந்த நாடகத்தைக் காண வரும் போது, சிவாஜி நடித்த பாத்திரத்தை, அந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்போடு தான் வந்து அமர்ந்தேன். ஆனால் திருப்தியோடு தான் நான் இங்கிருந்து திரும்புகிறேன். பாதி நாடகம் பார்த்தே வியந்திருக்கிறேன். இன்று காலையிலிருந்தே எனக்குள்ள கடுமையான கண்வலியினால் மீதி நாடகத்தை கண்டு களிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். கண்வலிக்கு மருந்தாக இந்நாடகம் அமையும் என்று தான் வந்தேன். மருந்தாக அமைந்திருக்கிறது. இந்த நாடகம் உள்ளபடியே 'வியட்நாம் வீடு போல அல்ல, வியட்நாம் வீடே தான்' என்று சொல்லி விடைபெறுகிறேன்."
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 14
கே: நடிகர் திலகம் ஆங்கிலப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால்? (கே.கே.ராஜன், விம்கோ நகர்)
ப: பல ஆங்கில நடிகர்களின் மார்க்கெட் சரியும். இங்கே பலர் உயர ஏறி விடுவார்கள்.
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1966)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி திரு. காவேரிக் கண்ணன்.
ஒய்ஜி விழாவின் வீடியோ லிங்க்கை வழங்கியமைக்கு மிக்க நன்றி திரு. ஜோ.
பாலா சார், உலகப் பெரு நடிகரின் ஓவியம் அற்புதம். ஓவியர் திருமதி.மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வழங்கிய உங்களுக்கு நயமிகு நன்றிகள்! நெல்லை கண்ணன் கவிதை அருமை.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 15
கே: பொதுவாழ்வில்.... நடிகர் திலகத்தின் பலம் எது? பலவீனம் எது? (எஸ்.வி.கோவிந்தசாமி, நாகர்கோவில்)
ப: பலம்.....உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாமை! பலவீனமும்..... அதுதான்!!
(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)
அன்புடன்,
பம்மலார்.
இன்று (16.5.2010), நமது விடுதலை வேள்விக்கு முதல் முழக்கமிட்ட மாவீரன், வீரபாண்டிய கட்டபொம்மனாக, நமது தேசிய திலகம் வாழ்ந்து காட்டிய, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்திற்கு 52வது ஆண்டு தொடக்க விழா. இக்காவியம் வாழ்வியல் திலகத்தின் முதல் வண்ணத் திரைக்காவியம். வெள்ளிவிழாக் கண்ட இக்காவியம், உலகத் திரைப்பட வரலாற்றில் சாதனைகளின் உச்சம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியம் குறித்த ஓர் அரிய,அபூர்வ, அற்புதத் தகவல்:
(1959-ம் ஆண்டு 'சிங்கப்பூர் இந்தியன் மூவி நியூஸ்' என்கின்ற சிங்கப்பூர் சினிமா இதழ் வெளியிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட சிறப்பு மலரிலிருந்து)
லண்டனில் கட்டபொம்மன்
"இந்தியப் படவுலகின் சரித்திரத்திலேயே, ஒரு புதுமையாக, தமிழ்நாட்டில் தயாரான ஒரு படம், இந்தியாவில் திரையிடப்படுவதற்கு முன்னதாகவே, லண்டனில் வாழும் தமிழர்கள் முதல் தடவையாக பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். அதுவும் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரனின் முழக்கம் ஆங்கிலேயரின் நாட்டில் முதன்முதலில் ஒலித்தது வியப்பன்றோ!
வீரபாண்டிய கட்டபொம்மன் சென்ற மே மாதம் 10 ஆம் தேதி லண்டன் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் திரையிடப்பட்டது. ஏராளமான தமிழர்களும், வெள்ளையர்களும் விஜயம் செய்திருந்த இந்தக் காட்சிக்கு, லண்டனிலுள்ள இந்திய ஹைகமிஷனர் ஸ்ரீமதி. விஜயலட்சுமி பண்டிட் தலைமை தாங்கித் தனிச்சிறப்பை அளித்ததுடன், படத்தின் தரத்தையும், நடிப்பின் உயர்வையும் வெகுவாகப் புகழ்ந்தார்."
ஸ்ரீமதி. விஜயலட்சுமி பண்டிட் பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்:
http://en.wikipedia.org/wiki/Vijaya_Lakshmi_Pandit
அன்புடன்,
பம்மலார்.
nice to know about the screening of VPK in London by tamils
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 16
கே: நடிகர் திலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? (என்.வெங்கடேசன், கோவை)
ப: இன்னும் சிறப்பாக இருக்கும். திறமைக்கு தமிழ்நாட்டில் என்றுமே மதிப்பும், ஆதரவும் உண்டு.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1965)
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்
தங்களின் கேள்வி பதில் தொகுப்புகள் தகவல்களை அள்ளி அள்ளி தருகின்றன. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
சென்னையில் தற்போது நியூ பிராட்வேயில் பாசமலர் திரையிடப்பட்டுள்ளது. அங்கு கண்ட சில காட்சிகள் படங்களாக.
http://paasamalar.blogspot.com/
ராகவேந்திரன்
சிரிப்பொலி சேனல் இல் அடிக்கடி இரவு காட்சி இல் சில நல்ல திரைப்படங்கள் திரையிடபடுகின்றன சமீபத்தில் வா கண்ணா வா (என்ன ஒரு நடிப்பு) உத்தம புத்திரன் தியாகம் போன்ற நல்ல படங்கள் ஒளிபரப்பப்பட்டன ஆனால் அட்வேர்டிசெமேன்ட் ரொம்ப அதிகம்
அன்புடன் gk
thank you sir. actually, the word " nadipputhurai " sort of prompted me to raise this question :DQuote:
Originally Posted by pammalar