இந்த போஸ் - இதற்க்கு ஈடு இணை உண்டோ ? !
http://i501.photobucket.com/albums/e...ps96f403fb.jpg
Printable View
இந்த போஸ் - இதற்க்கு ஈடு இணை உண்டோ ? !
http://i501.photobucket.com/albums/e...ps96f403fb.jpg
Courtesy - NET
http://i501.photobucket.com/albums/e...ps80fbe96e.jpg
Dear Ragulram. Happy for staging your comeback with an appropriate write-up on En Thambi. As far this therukkooththu is concerned, NT has no equals. First choice goes to the Sadhaaram play in Kalvanin Kaadhali, as you can enjoy the very young NT's energetic outflow of dance steps. Number two is Navaraaththiri's rajapart kooththu that is quite unforgettable due to the transformation of an ordinary drama actor totally getting transformed into a raajaa, with style in his talk and walk! Third place goes to En Thambis 'naan porandhadhu' thanjaavooru soorakkoattaiyile! Of course one more spoof on therukkooththu was from Manorama in Thillaanaa Mohanambal! I could upload all these except the enthambi therukkooththu sequence. For the pleasure of NT fans, if anybody has that...please!
DearRKS. any briefing on Mr. Ramakrisnan's association with NT?
செந்தில் சார்,
நண்பர் ரவிகிரண் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களை எடுத்தவர் அந்த புகைப்படங்களில் நடிகர் திலகத்துடன் இணைந்து காட்சியளிக்கும் ராமகிருஷ்ணன் அவர்கள். தினமலர் நாளிதழில் மதுரை பதிப்பில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய இவர் பல திரை நட்சத்திரங்களுடன் நல்ல தொடர்பில் இருந்து அவர்கள் மதுரை வரும்போதும் அல்லது இவர் சென்னை செல்லும்போதோ அவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து பிரசுரிப்பது இவரது வழக்கம். தன்னுடைய அனுபவங்களை தினமலர் வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதியிருக்கிறார். உங்களுக்கு மிகவும் பிடித்த காதல் மன்னனின் நெருங்கிய நண்பர் இவர். அவரை பற்றி பலமுறை எழுதியிருக்கிறார். எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கி பழகியவர். நமது நடிகர் திலகத்தோடு இவருக்கு மற்ற இருவரோடு ஒப்பிடுகையில் அந்தளவிற்கு பழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் மதுரையில் வைத்து எடுக்கப்பட்டவை.
முதல் புகைப்படம் [01.02.1972] செவ்வாய்க்கிழமை மதுரையில் பாண்டியன் ஹோட்டலில் வைத்து எடுக்கப்பட்டது. ஞான ஒளி வெளிப்புற படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் வந்திருந்தார் நடிகர் திலகம். தேவனே என்னைப் பாருங்கள் பாடல் காட்சியும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் 3, 4 நாட்களில் படமாக்கப்பட்டது. ராஜா திரைக்காவியம் ஜனவரி 26 அன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நேரமிது. அதற்கு பத்து நாட்கள் முன்புதான் சரியாக சொல்ல வேண்டுமானால் ஜனவரி 19 அன்று காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் வசந்த மாளிகை ஆரம்பிக்கப்பட்டு அதன் ஒரு வார schedule முடித்து விமானப்படை வீரர் நல்வாழ்வு நிதிக்காக நடத்தப்பட்ட ராஜா திரைபடத்தின் பிரிமியர் காட்சியில் கலந்துகொண்டு விட்டு கொடைக்கானல் கிளம்பி சென்றார் நடிகர் திலகம். அதை முடித்து விட்டு மீண்டும் மதுரை வந்து சென்னை கிளம்புவதற்கு முன் எடுக்கப்பட்ட படம். மதுரையிலிருந்து சென்னை வந்து மறுநாள் அதாவது பிப்ரவரி 2-ந் தேதி அன்று அவரது புதுப் படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அது என்ன புது படம் என்று கேட்கிறீர்களா? அதுதான் நம் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான அருமை நண்பர் கோபால் அவர்களுக்கும் மாற்று முகாம் ரசிகராக இருந்த போதினும் பத்து பதிவுகள் இட்டால் அதில் எட்டு பதிவுகளிலேனும் இந்தப் படத்தின் பெயரை குறிப்பிட மறக்காத அருமை நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கும் "மிகவும் பிடித்த" ராஜ ராஜ சோழன்.
இரண்டாவது புகைப்படம் 1971 பொது தேர்தலின்போது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நடிகர் திலகம் தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரத்திற்கு மதுரை வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைதான் ராமகிருஷ்ணன் நடிகர் திலகத்திடம் காண்பிக்கிறார்.
மூன்றாவது புகைப்படமும் மதுரையில் எடுக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். இதன் பின்புலம் சரியாக தெரியவில்லை. அக்டோபர் 30 சனிக்கிழமை. அந்த வருடம் தீபாவளி அக்டோபர் 22 அன்று வந்தது. அதற்கு ஒரு எட்டு நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட படம். என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் அந்த நேரத்தில் நடிகர் திலகம் நடித்த தீபம் திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். அதன் வெளிப்புற காட்சிகள் கேரளத்தில் உள்ள மூணாறு தேக்கடி போன்ற இடங்களில் நடைபெற்றது [ராஜா யுவ ராஜா, அந்தபுரத்தில் ஒரு மகராணி மற்றும் பூவிழி வாசலில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன]. அதற்காக அந்த இடங்களுக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை வந்து தேனி கம்பம் குமுளி வழியாக சென்றார் என நினைக்கிறேன். இல்லை வேறு ஏதேனும் நிகழ்ச்சிக்காக வந்திருந்தாரா என்பது நினைவில்லை.எப்படி இருப்பினும் அழகான ஆண்மையான நடிகர் திலகம். அருமையான புகைப்படங்கள். அமிழ்தினும் இனிய அந்த பொன்னாட்களை நினைவு கூற ஒரு வாய்பளித்த நண்பர் RKS அவர்களுக்கும் அதை பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி என்னை பதிவிட வைத்த உங்களுக்கும் நன்றி.
அன்புடன்
கோபால்,
ஒரு நகைச்சுவை ரசதிற்காக குறிப்பிட்டிருக்கிறேன். இதுதான் சாக்கு என்று உங்கள் வழக்கமான அர்ச்சனையை ஆரம்பித்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் கலைவேந்தன் அவர்களே, ஜாலியாக எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
ராகுல்,
என் தம்பி அருமையாக வந்திருக்கிறது. சிறிது இடைவெளிக்கு பின் வந்ததாலோ என்னவோ உங்கள் எழுத்துக்களில் ஒரு மெருகு தெரிகிறது. படத்தின் சிறப்பம்சங்களை கோர்வையாக எழுதிய நேர்த்தி பாராட்டத்தக்கது. நீங்கள் சித்தூர் வாசுதேவன் அவர்களுக்காக எழுதினாலும் "என் தம்பி" என்று பாசத்தோடு உங்களை அழைக்கும் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். வாழ்த்துகள்!
சந்திரசேகர் சார்,
திருச்சி விழா வெற்றிகரமாக நடைபெற்றதற்கு பாராட்டுகள்! தடைபட்டு நிற்கும் பல விஷயங்கள் உங்கள் முயற்சியால் முழுமை அடையட்டும்! வாழ்த்துகள்!
அன்புடன்
முரளி சார். காலம் ஒதுக்கி என் சாதாரண கேள்விக்கு மிக விரிவான பதில் தந்தமைக்கு என் நன்றிகள். திரியை விட்டு சற்று ஒதுங்கி நின்ற ராகுல் போலவே ஏனைய நண்பர்களும் விரைந்து திரும்பி திரியின் வளர்ச்சிக்கு தங்கள் மெருகேறிய பதிவுகள் வாயிலாக உறுதுணை புரிந்திட வேண்டுகிறேன்.