http://i57.tinypic.com/n46rzd.jpgRAJA RAJAN
Printable View
http://i57.tinypic.com/n46rzd.jpgRAJA RAJAN
http://i58.tinypic.com/25ulf6o.jpghttp://i57.tinypic.com/24v44u0.jpgRAMN THEDIYA SEETHAI
http://i58.tinypic.com/24261z5.jpgRANI SAMYUKTHA
http://i61.tinypic.com/6tme4j.jpgRICSHAKAARAN
http://i61.tinypic.com/2rw1g1k.jpgSABASH MAPPILE
http://i61.tinypic.com/k2kzkk.jpg
காஞ்சி தலைவன் - சிறப்பு பார்வை .
--------------------------------------------------------
வெளியான தேதி : 26/10/1963.
52 ஆண்டுகள் நிறைவு ஆனது. தீபாவளி வெளியீடு.
1963 ல் வெளிவந்த மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களின்
9 படங்களில் ஒன்று.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வசனம்.
முரசொலி மாறன், இயக்குனர் காசிலிங்கம் கூட்டு தயாரிப்பாளர்கள்.
நட்சத்திர பட்டாளம் ஏராளம். அதனாலோ என்னவோ, மக்கள் திலகத்திற்கு படத்தில் முக்கியத்துவம் , சிறப்பு அம்சங்கள்
குறைந்தாற்போல் ஓர் உணர்வு.
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். நரசிம்ம பல்லவராகவும் , சமீபத்தில் மறைந்த இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர். பரஞ்சோதி ஆகவும், அசோகன் புலிகேசியாகவும் நடித்தனர்.
ராஜ்ய சபை, கோட்டை, கொத்தள அரங்க அமைப்புகள் அருமையாக அமைத்திருந்தனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜ உடையில் படு கம்பீரமாக
காட்சி. தேக்கு மர உடற்கட்டு . (இந்த படத்திற்கு முன்பு
வெளியான நீதிக்கு பின் பாசம் - மானல்லவோ பாடலில்
தேக்குமரம் உடலை தந்தது என கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதி இருப்பார்.) மன்மதன் போலிருப்பார் .
முதல் வெளியீட்டில் பார்க்க இயலவில்லை.
1975ல் தான் முதன் முறையாக பிரபாத் அரங்கில் பார்த்தேன். அதன்பின் பகல், மாலை காட்சிகளில் பல அரங்குகளில் பார்த்துள்ளேன். இந்த படத்தில் நெற்றி திலகத்துடன் தலைவர் நடந்து வரும் அழகே தனி.
திரை இசை திலகம் கே.வி. மகாதேவன் இசையில் பல பாடல்கள் இனிமையாய் இருந்தன.
1. கண் கவரும் சிலையே -மிக எளிதான சிற்பி உடையில்
மிக அழகாக ஜொலிப்பார்.
2.அவனி எல்லாம் புகழ் மணக்கும் அருமை காஞ்சி நகரம்
ரசிக்கும்படியான பாடல்.
3. நினைத்து வந்த செயல் ஒன்று -மக்கள் ஒரு தவறு செய்தால் - தலைவர் நடித்த சோக பாடல்.
4.வானத்தில் வருவது ஒரு நிலவு - மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர்.- விஜயகுமாரி நடித்த காதல் பாடல்.
5..உலகம் சுத்துது எதனாலே - எம்.ஆர். ராதா நடிக்க ஏ எல்.ராகவன் பாடிய பாடல்.
6.ஒரு கோடியில் இரு மலர்கள்: வானொலியில் அடிக்கடி
அக்காலத்தில் விரும்பி கேட்கப்பட்ட பாடல். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - விஜயகுமாரி நடித்த ஒரே பாடல்.
அண்ணன் - தங்கை பாசத்திற்கு பறைசாற்றும் இனிய பாடல்.
7.மயங்காத மனம் யாவும் மயங்கும் - நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று பெயர் வாங்கிய நடிகை பானுமதி
இப்பாடலில் தன நடன திறமைகளை அதிகம் வெளிப்படுத்தாமல் தன் முக அசைவுகளையும், பாவங்களையும் காட்டி நடித்த பாடல்.
8. உயிரை தருகின்றேன் தாயே - சோகப்பாடல்.
9.வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே -வெல்க காஞ்சி என்கிற வார்த்தைகளை நீக்கும்படி அப்போதைய தணிக்கை குழுவின் நிர்பந்தம் காரணமாக மாற்றப்பட்டது.
சமூக படங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் காஞ்சி தலைவன் -அழகு தலைவனாக மிளிரினாரே தவிர (நண்பர் திரு.கலைவேந்தன் குறிப்பிட்டது போல ) எதிர்பார்த்த வெற்றி தலைவன் ஆகவில்லை. ஆனால் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த பின் மறுவெளியீடுகளில் வெற்றி உலா வந்தது.
நண்பர்கள் திரு. வினோத் மற்றும் திரு. கலைவேந்தன் அவர்களின் விமர்சனங்கள் சூப்பர்.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் அவருக்கே உரித்தான பாணியில் மக்கள் திலகத்தின் அழகு, கம்பீரம்,
ராஜ உடை, நடை, பாவனை, தோற்றம், நடிப்பு ,கர்ஜனை,
போன்ற வர்ணனைகள் பிரமாதம். நன்றி.
ஆர். லோகநாதன்.