பதிவுக்கு நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே,
யாரோ எழுத்தாளர் நா.பா. என்று போட்டிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தேடிப்பார்த்தேன். அவர் முழுப்பெயர் இல்லை. அவர் பெயர் என்ன என்பது அறிய முடியவில்லை. அவர் பெரிய எழுத்தாளரா என்றும் தெரியவில்லை. புரட்சித் தலைவரே போன் போட்டு விழாவி்ல் கலந்து கொள்ளச் சொல்லி கூப்பிடுகிறார் எனில் பெரிய எழுத்தாளராக இருப்பார் என்று நினைக்க வேண்டி உள்ளது.
இந்தப் பதிவில் படித்து நான் புரிந்து கொண்டது, கொஞ்சம் கூட ஈகோ இல்லாது அந்த எழுத்தாளருக்கு போன் போட்டு விழாவில் கலந்து கொள்ள புரட்சித் தலைவர் அழைத்திருக்கிறார். அவர் குளிக்கிறார் என்று பதில் சொல்லப்பட்டதும் குளித்த பிறகு என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று புரட்சித் தலைவர் சொல்லாமல் பத்து நிமிடங்கள் பிறகு மீண்டும் தானே மறுபடி போனில் பேசியிருக்கிறார்.
விழாவில் கலந்து கொள்ள அந்த எழுத்தாளர் கட்சி வேறுபாட்டை சொல்லி மறுத்தபோதும், நீங்கள் இலக்கியம் பேசுங்கள் என்று கூறி அன்போடு புரட்சித் தலைவர் அழைத்துள்ளார். மேடையில் பேச வந்த புரட்சித் தலைவரை மறித்து ‘நான் பேசிய பிறகு உங்களுக்கு பேசும் நேரம் வரும். அப்போது பேசுங்கள்’ என்று அந்த எழுத்தாளர் சொல்கிறார். (யார் இந்த திமிர் பிடிச்ச எழுத்தாளர்? )
அதற்கும் புரட்சித் தலைவர் அமைதியாக பேசாமல் இருந்துவிட்டு தான் பேசும்போது ‘நூலகத்துறை 200 ஆக குறைத்துவிட்ட புத்தகங்களை மீண்டும் 600 ஆக உயர்த்தி உத்தரவு இட்டுவிட்டேன்’ என்று புரட்சித் தலைவர் பெருந்தன்மையோடு கோவமே இல்லாமல் சொல்லி இருக்கிறார். (நானாக இருந்தால் ஆரம்பத்திலேயிருந்தே அவமானப்படுத்தும் எழுத்தாளன் மீது உள்ள கோவத்தில் விசயத்தை அப்படியே அமுக்கிவிட்டு கோட்டைக்குப் போய் உத்தரவை மாற்றி 200 புத்தகம் என்பதை 100 ஆக குறைத்திருப்பேன்)
செல்வாக்கு பெற்ற ஒரு முதல் அமைச்சர் எவ்வளவு தூரம் ஈகோவே இல்லாமல் செல்வாக்கு இல்லாத பிரபலம் இல்லாத எழுத்தாளருக்கெல்லாம் மரியாதை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது புரட்சித் தலைவரின் உயர்ந்த உள்ளம் தெரிகிறது.
ஆனால், அந்த எழுத்தாளருக்கு புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு விசயம் நன்றாக தெரிந்துள்ளது. ‘ஏகோபித்த மக்கள் ஆதரவு பெற்ற வெற்றியாளர்தான்’ என்று இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார்.
கொஞ்சம் கூட தலைக்கனம், கர்வம் இல்லாமல் எல்லாருக்கும் மரியாதை கொடுத்து அன்புடன் நடந்து கொண்டதால்தான் புரட்சித் தலைவர் வெற்றியாளராக இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதனால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழுகின்றார்.
தேடிப்பிடித்து எல்லாப் பத்திரிகையில் இருந்தும் புரட்சித் தலைவர் பற்றிய செய்திகளை பதிவிடும் உங்கள் தொண்டுக்கு நன்றி திரு.லோகநாதன் அவர்களே. நீங்கள் பதிவிடாவிட்டால் இந்த மாதிரி செய்திகள் எங்களைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போய்விடும். அது மட்டும் இல்லாமல், இப்ப மட்டும் இல்லை. இன்னும் 100 வருசம் கழிச்சு பார்த்தாலும் முதல் அமைச்சராக இருந்த புரட்சித் தலைவரின் பெருமையை எளிமையை ஈகோ இல்லாத அவரின் சிறப்புகளை இதைப் படிப்பவர்கள் அறிந்து ஆச்சிரியப்படுவார்கள். அதற்கு காரணமான உங்களுக்கு மறுபடியும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
http://i67.tinypic.com/jsfssj.jpg