Booking status for Ayirathil Oruvan restored version, Saturday 31.5.2014
http://i125.photobucket.com/albums/p...psde6540fc.jpg
Printable View
Booking status for Ayirathil Oruvan restored version, Saturday 31.5.2014
http://i125.photobucket.com/albums/p...psde6540fc.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
அன்னையின் தவமென, ஆலயத்தில் இறைவனாய், இமயத்தின் சிகரமாய், ஈகையின் ஒளிர்வளர்,
உத்தமதலைவராக, ஊருக்கு உழைத்தவன், எங்க வீட்டு பிள்ளையென, ஏழை மக்களுக்கு ஏணியாக வாழ்ந்தவனே.
ஐக்கியமானான் மக்களின் இதயத்திலே - வான், ஒளி விளக்கென வந்தவனே. ஓங்கி உலகளந்த உத்தமனே, ஔஷதம் அருள்வானே.
ஆக்கம் - தியாகராஜன், வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்), Inspired by : மக்கள் திலகம்.
http://www.youtube.com/watch?v=AeDtG...m-upload_owner
TO DAY - THINA THANTHI PAPER
http://i62.tinypic.com/2nkorb7.jpg
மலரும் நினைவுகள் ....1.6.1972..........42 ஆண்டுகள் முன்பு ...மக்கள் திலகத்தின் ரசிகனாக ........
1972 மார்ச் மாதம் வெளியான மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் '' தமிழ் நாடெங்கும் 12 திரை அரங்கினில் 12 வாரத்தை கடந்து 100 வது நாளை நோக்கி ஓடி கொண்டிருந்தது . 1972 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான ராமன் தேடிய சீதை படம் 7 வது வாரமாக ஓடி கொண்டிருந்தது.
1.6.1972 ஆண்டு மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' படம் 9.6.1972 முதல் திரைக்கு வருவதாக விளம்பரம் வந்தது. .அன்றைய தமிழக முதல்வரின் புதல்வரின் பிள்ளையோ பிள்ளை படம் ஜூன் மாதம் வெளியீடு என்று எல்லா தினசரிகளிலும் முழு பக்க விளம்பரங்கள் வந்தது .
ஆனந்த விகடனில் மக்கள் திலகம் எழதிய நான் ஏன் பிறந்தேன் தொடர் வந்து கொண்டிருந்தது .
இதயவீணை -அன்னமிட்டகை - உலகம் சுற்றும் வாலிபன் - நினைத்தை முடிப்பவன் -நேற்று இன்று நாளை - மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் .....
சத்யா மூவிஸ் - வீனஸ் பிக்சர்ஸ் -கேசி பிலிம்ஸ் - தேவர் பிலிம்ஸ் - மற்றும் பல புதிய நிறுவனங்கள் என்று 16 படங்களில் மக்கள் திலகம் ஒப்பந்தமாகி நடித்து கொண்டு வந்தார் .
மக்கள் திலகத்தின் படங்கள் தொடர் வெற்றி மூலம் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் மன்றங்களில் தங்களுடய செயல் பாடுகளில் தீவிரம் காட்டி அவருடைய புகழை பரப்பி வந்தார்கள் . திரை உலகம் - திரைசெய்தி - காந்தம் போன்ற எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தது . மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாடு தவிர மற்ற மாநிலங்களிலும் , இலங்கையிலும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது .
அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் முசிறி பித்தனின் தலைமயில் மிகவும் சிறப்பாக நடை பெற்று வந்தது .
தொடர்வது .... இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் .. மக்கள் திலகத்திற்கு கிடைத்தது .
courtesy- srikumar
M.G.Ramachandran lovingly known as MGR by the people of Tamil Nadu scaled great heights in cinema and politics. M.G.R. had acted in 14 films in small roles and in the title cards of the films his name occupied 5th or 6th place in those days. Then came his 15th film "Raja Kumari". In it he was the hero! His first chance to do so. It came only after stiff competition.
The success of "Raja Kumari" earned great popularity for M.G.R. among people. M.G.R.'s heroic gallantry became an impetus to the Tamils whose native soil had worldwide renown for it's rare quality of bravery!
After this, in the next project "Manthri Kumari", for which Kalaignar Mu. Karunanidhi had written dialogue, M.G.R. acted in the role of 'Thalpathy'(Lieutenant).
For "Manthri Kumari" M.G.R. got the salary Rs. 12,500/- The salary was the same for the other two films of "Modern Theatres" namely "Sarvaathikaari" and "Alibabavum 40 Thirudarhalum". After having finished his acting work in these films he was returning from Ercaud to Chennai. And while returning, it is said, he was having only half the salary in his pocket! Where had gone the other half? It's said at the end of every film's acting work he used to get a list of employees who worked in that film and distribute half of his salary to those employees ! This quality of donating money by way of helping others was found in him even in those early days of his cinema life!
In "Rani Samyuktha" also people didn't accept the death of prithviraj (M.G.R.). The end of "Mathurai Veeran" is a different matter because people (audience) were already very familiar with that story as they had had seen it in the form of "Theru Kooththu" and drama.
It is true that M.G.R. couldn't come out and stand aloof from the self-made image which he himself had created in the minds of the people. Though he had acted in more than 100 films his two favourite films were "Yen Thangai" and "Petraalthaan Pillaiyaa"!
In 1953 with M.G.R., P.S.Veerappa and Kasilingam, Kalaignar Karunanidhi also joined together to produce the film "Naam". This was the first film that came out under "Megala Pictures" banner. As the film was a failure this alliance of above-said people didn't continue.
Those who see "Naam" film to-day would be astonished because that film in no way matches with the known image of M.G.R.
K.Balachander entered into cinefield through the film "Theivaththaai". Balachander had written dialogue for that film.
To-day there are actors who get lacs or crores of rupees as salary. They give 30 days, 40 days callsheet and act and then get going. That's all. But for the film "Oli Vilakku" M.G.R. had given 100 days callsheet ( a callsheet means 8 hours). For "Anbe Vaa" he had given 70 days callsheet. Like this M.G.R. won't be very particular about the number of days he has to act for. That's not all. From song recording to all shooting aspects, film-editing etc. all those works would be carefully looked into and minutely governed by M.G.R. For that he won't demand extra salary. He would be very particular in making his film good in all respects. It was this attitude that earned him bad name among producers at times.
Yet M.G.R..would get only his salary and demand nothing else. He won't demand money for car petrol and bata etc. And he won't also stop with himself getting good salary! Instead he would go all the way to help co-actors and actresses also to get handsome salary!
Without making the fans crazy, at the same time imbibing the spirit of enthusiasm into their minds is the speciality of M.G.R.'s fighting scenes. The manner in which he worshipped and elevated motherly affection in films earned him great respect. To speak dialogue with smiling face is his unique style.
His other films like Nadodi Mannan, Ulagam Sutrum Valiban, Enga Veetu pillai, Oli Vilakku, Adhimai Penn and Aayirathil Oruvan made him a hero of the common man. MGR used the medium to put a strong base for his political career. He has acted in more than 130 films. He floated his own party and he went on to become the Chief Minister of Tamil Nadu.
http://i1170.photobucket.com/albums/...psdb763ea3.jpg
'ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் வாழ்ந்த ராமாவரத்துக்குச் சென்றிருந்தோம். சென்னைப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ராமாவரத்தில், சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். தோட்டம். ''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது.
அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’, 'ஐயா மட்டும் கைகொடுத்திருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள், இப்போது யாரையும் எதற்காகவும் சந்திப்பது இல்லை.
நம்மிடம் ''யாருகிட்ட என்ன பேசினாலும் அரசியலாக்கிடுவாங்களோனு பயமா இருக்கு. எனக்கு இனி அரசியல் தேவை இல்லை. என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரே தொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான். ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுற தும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப் பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார் "
- 17 - 1 - 1993 ஆனந்த விகடன் இதழில்
ஜானகி எம்.ஜி.ஆர் . பேட்டியிலிருந்து .
http://i1170.photobucket.com/albums/...ps253b1858.jpg
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் பெரும்பாலும் யார் காலிலும் விழுந்து வணங்கியது
கிடையாது மூவரை தவிர...
1 தன் அன்னை சத்யபாமா அவர்கள்
2 பிரபல இயக்குனர் திரு சாந்தாராம்,
3 மற்றொருவர் திரு எம்.கே.ராதா.
படத்தில் திரு எம்.கே.ராதா அவர்களை வணங்குகிறார்.
courtesy - net
75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் "கடலோரக் கவிதைகள்'' மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், "வேதம் புதிது'', "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களில் மாறுபட்ட குணச்சித்திர வேடங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
படிக்கிற நாட்களில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர். ரசிகர், எப்படி நடிகரானார்?
அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"அடிப்படையில் எங்களுடையது விவசாயக் குடும்பம். கோவை டவுன் பகுதியில் எங்கள் வீடு இருந்தது. அப்பா டாக்டராக இருந்தார். என் சிறு வயதில் அப்பா -அம்மா இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டார்கள். நான் வளர்ந்ததெல்லாம் அம்மாவிடம்தான்.
சிறு வயதில் சினிமாதான் என் பொழுதுபோக்கு. அந்த வயதில் அதிகம் பார்த்தது எம்.ஜி.ஆர். படங்கள்தான். தனது வீரதீர சாகச நடிப்பால் என்னை எம்.ஜி.ஆர். வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தார்.
நான் 5-வது படிக்கும்போது எம்.ஜி.ஆர். நடித்த "வேட்டைக்காரன்'' படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்பது எனக்கே நினைவில்லை.
courtesy - malaimalar
Jai with Trisha, Nayantara and Hansika
It was legendary actor M.G.Ramachandran who created a record by acting with nine heroines in the same film. The film was aptly titled as 'Navarathinam'. After M.G.R it will be Jai who will be recreating the record.
http://www.indiaglitz.com/channels/t...le/108322.html
அன்னை' என்ற ரஷ்யக் கதையில், ஒரு தாய் துவக்கத்தில், தன் குடிகார கணவனுக்கு அடங்கியவராகவும், வெளியே சென்று, பொது காரியங்களைப் பற்றி, பேச துணிவற்றவராகவும் இருப்பார். ஆனால், கதையின் முடிவில், அந்த தாய், புரட்சிக் கொடி தாங்கி, மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு, தலைமை தாங்கி செல்வதாக இருக்கும்.
அப்படிப்பட்ட புரட்சிக் கருத்தும், துன்பத்தை எதிர்த்தொழிக்கும் துணிவும், உழைப்பிலே முழு நம்பிக்கையும், சீர்திருத்த நோக்கத்தில் உயிர் பிடிப்பும் கொண்ட மக்களை அல்லவா, அந்நாடு, தன் உறுப்பினர்களாகப் பெற்றிருக்கிறது.
எட்டாம் தேதியன்று, 'எக்ஸ்போ'வில் இப்படித் தான், எங்கள் படப்பிடிப்பு துவங்கியது.
அன்று காலையில் எழுந்ததும், இட்லி, தோசை, பூரி என, சாப்பிட்டு பழகிப் போனவர்கள் ஏதேதோ உணவுகளை எதிர்பார்த்தனர். ஆனால், அங்கு வந்திருந்தவர்கள் சொன்ன யோசனைப்படி, புட்டிப் பாலும், ரொட்டியும் தான் வாங்கி வைத்திருந்தோம். ஜானகி விடியற்காலையில் எழுந்து, மூன்று பெண்களும் தங்கியிருந்த அறைகளுக்கு சென்று, ரொட்டியில் வெண்ணெய் தடவிக் கொடுத்து, சிலருக்கு பாலையும், சிலருக்கு டீயையும் கலந்து கொடுத்து, படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்தாள்.
நாங்கள் உள்ளே சென்று படம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், எந்த அளவுக்கு அனுமதி என்று எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சில பகுதிகளை படமெடுக்க இயன்றாலே போதும் என்று தான், முதலில் எண்ணினேன். ஆனால், நாங்கள் படம் எடுக்கத் துவங்கியதும், அந்த அரங்கில் இருந்த அதிகாரிகளும், தொழிலாளர்களும் தந்த ஒத்துழைப்பு, என்னை வியக்க வைத்தது.
விளக்குகள் பொருத்துவதற்கும், எங்கள் படப்பிடிப்பிற்கு குந்தகம் வராமல், மக்களை ஆங்காங்கே ஒழுங்குபடுத்துவது என்று, எத்தனையோ வழிகளில், படப்பிடிப்புக்கு, அவர்கள் உதவி செய்தனர்.
ஒரு இடத்தில் படப்பிடிப்பு முடிந்து, வேறு இடத்திற்கு செல்லும் போதெல்லாம், விளக்குள் மற்றும் கேமரா முதலிய கருவிகளை, நாங்களே தான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அடுத்த காட்சி எடுக்க வேண்டிய இடம், ஆறு மைல் தூரம் என்றாலும், சுமந்து செல்ல வேண்டும்.
உணவு விடுதிக்கு செல்லும் போது, சொர்ணம் தலையிலிருந்த தொப்பி, காற்றில் பறந்து போய் விட்டது. அதை எடுப்பதற்காக, அவர் அது வரையில் சுமந்து வந்த, ஏரிபிளக்ஸ் கேமராவின் பேட்டரியை கீழே வைத்து விட்டு ஓடினார். இதைக் கவனித்த நான், அந்த பேட்டரியை எடுத்து, என் தோளில் மாட்டிக் கொண்டு சென்றேன். எவ்வளவு கனமான பொருளை, நாள் முழுவதும் சுமந்திருக்கிறார் என்பதை, என்னால், உணர முடிந்தது. அவர் மட்டுமா அப்படி வேலை செய்தார்... அத்தனை பேருமல்லவா கஷ்டப்பட்டனர்!
அன்று மாலை, இருப்பிடத்திற்கு திரும்பும் போது, வழி தவறி விட்டோம். அப்போது, எக்ஸ்போவில் நண்பர் முத்துவை சந்தித்தோம்.
எம்.ஜி.ஆர்., நாடக மன்ற நிறுவனத்தில், மேக் - அப் மேனாகப் பணியாற்றிவர்; நல்ல நடிகருமாவார். தனக்கென்று ஒரு அடி நிலமோ, நகைகளோ, பணமோ சேர்த்துக் கொண்டவரல்ல. உழைப்பு... உழைப்பு... உழைப்பு இது ஒன்று தான், அவருக்கு தெரியும்.
என்றுமே ஒரு கழகத் தொண்டனாக, அமரர் அண்ணாதுரையின் தம்பியாக வாழும் இந்த முத்துவை தான், எக்ஸ்போவில் சந்தித்தேன். அவர் என்னுடைய பயண நாட்களில் செய்த உதவியை, என்றும் மறக்க முடியாது. அப்படி அவர் உழைத்ததற்கு இதுவரை, ஏதாவது என்னிடம் பிரதிபலனாக எதிர்பார்த்திருக்கிறாரா என்றால், இல்லை என்று தான் சொல்ல முடியும்.
எங்களுக்கு முன்பே, அவர் எக்ஸ்போவுக்கு சென்றிருந்ததால், எங்களுக்கென ஏற்பாடு செய்திருந்த, மைக்ரோ பஸ் என்ற சிறிய பஸ்சை தேடினார். ஆனால், அது எங்குமே இல்லை. நானும், சந்திரகலாவும் பஸ்கள் வந்து போகும் இடத்திலேயே இருந்தோம்.
நடந்து நடந்து ஓய்ந்து போன சந்திரகலா, அங்கிருந்த சிறிய சிமென்ட் மேடையில், உட்கார்ந்து விட்டாள். நானோ ஒரு தூணின் மீது, சாய்ந்து நின்றேன்; இங்குமங்கும் சிறிது நடந்தேன்; டாக்சி வரவில்லை. என் அனுமதியை கேளாமலேயே, தானாகப் போய், சாய்வு மேடையில், என் உடல் உட்கார்ந்து விட்டது.
சந்திரகலாவை திரும்பிப் பார்த்தேன். எப்போதும் தன் கையில் மேக் - அப் சாமான்கள் வைத்திருக்கும் நகைப்பெட்டியை போன்ற சிறிய பெட்டி ஒன்றை, மடியில் வைத்து, அதன்மீது கை ஊன்றி, குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.
'சந்திரா... நீ இங்கே வந்து, இந்த மேடையில் சாய்ந்து உட்கார்ந்து கொள்...' என்றவாறு, நான் எழுந்தேன்.
'பரவாயில்லீங்க சார்... நீங்க காலையிலிருந்து சுத்திச் சுத்தி வேலை செய்திருக்கீங்க; நான் ஏதோ சில ஷாட்டுகளில் தானே நடிச்சேன். நீங்க உட்காருங்க...' என்றாள்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்
சந்திரகலா தான், முதல் கதாநாயகி. அப்படி இருந்தும், கேள்வி கேட்பாரற்ற மிக சாதாரணமான ஒரு பெண்ணைப் போல்,
கர்வமேயின்றி நடந்து கொள்வதை எண்ணி, வியந்தேன்.
இதே நிலையில், வேறு யாராக இருந்திருந்தாலும், (அது நானாகவே இருந்தாலும் சரி தான்.) எத்தனையோ கண்டனக் கணைகள் வீசப்பட்டிருக்கும். 'எங்கே அந்த புரொடெக் ஷன் மேனேஜர்...' என்பதே, என் முதல் கேள்வியாக இருக்கும்.
அவர் வந்தால், அவரிடம் கேட்கும் கேள்வி, இப்படியாக தான் இருக்கும்... 'ஏன்யா நீங்கள் எல்லாம் படம் எடுக்க வர்றீங்க... ஒரு பஸ் கூட இல்ல; நேரத்துக்கு சாப்பாடு இல்ல; செலவுக்கு தர பணம் இல்ல; பின்னே எதுக்காக இந்தப் படம்... எங்க உயிரை வாங்கவா...' என்று கேட்டிருந்தால் கூட, நான் வியந்திருக்க மாட்டேன்.
அன்று அப்போது மேலே குறிப்பிட்ட கேள்விகளை கேட்க அவருக்கும் உரிமையிருந்தது. அதைக் கேட்டுத் தீர வேண்டிய கடமை, எனக்கும் இருந்தது. ஆனால், அந்தப் பெண் என்னுடைய உழைப்பையும், கஷ்டத்தையும் கண்டு, அனுதாபமல்லவா கொள்கிறாள்.
எப்படியோ ஒரு டாக்சி வந்து சேர்ந்தது. முத்துவும், டாக்டரும், நாங்களும் விடுதிக்கு போய் சேர்ந்தோம்.
மகிழ்ச்சியான செய்தி காத்துக் கொண்டி ருந்தது. அது...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
courtesy dinamalar