-
ஹாய் ஆல்.. செளக்கியமா..
ஆரம்பத்தில்…ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி
*
நீ என்ன சொன்னாய் எனத் தெரியாது
நான் என்ன கேட்டேன் எனத் தெரியாது
ஆனால் ஏதோ நிகழ்ந்து விட்டது…
வெப்ப உணர்வு ஒருபுறம்
நடுக்கும் குளிர் மறுபுறம்
நிறையக் கனவுகள் எழும்பின
ஏதோ நிகழ்ந்து விட்டது..
என் கண்கள் தாழ்ந்தன நிமிர்ந்தன
பாதங்கள் தாளமிட்டு நடுங்கி உறைந்தன
எனக்கொரு புதிய அனுபவம்….
ஏதோ நிகழ்ந்துவிட்டது
என் கூந்தல் தோள்களிலே சுருண்டன
ஒரு வாசனை மலர்ந்து எழுந்தது
ரகசிய க் கதவுகள் திறந்தன
ஏதோ நிகழ்ந்து விட்டது..
ம்ம்
ப்யாஸா வஹீதா ரஹ்மான்…(ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்..) வெகு இனிமையான பாடல்..
http://www.youtube.com/watch?feature...&v=mLGCAGHNTJU
***
கழுதைக்கும் காதலுக்கும்முக நூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார்..அதை ஒட்டி நான் எழுதிப்பார்த்தது…
எண்ணப் பொதிசுமக்கும் ஏற்றங்கள் கண்டவுடன்
வண்ணமாய் மாற்றத்தை வாகாய் உரக்கசொலும்
கண்ணேற் படாமலே கால்தாவும் காலந்தான்
எண்ணக் கழுதையா மே
(இரண்டு தடவை எண்ணம் வந்துடுத்து)
கிட்ட வருமென்று கீழ்நோக்கிப் பார்த்தாலோ
எட்டாமல் நின்றுசெயும் ஏகடியம் – விட்டால்
பழுதாகிப் பாய்ந்தோடி பல்திசையும் ஓடுங்
கழுதைதான் கற்பனையே காண்..
*/*
ஆக.. முதல் வெண்பால சொல்லியிருக்கறா மாதிரி இந்தக் காலம் பாருங்க போறதே தெரியலை.. இங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுத்து..காரணம்.. இரண்டாம் பாட்டுல வந்த கற்பனை தான்.. எழுதவே வல்லைப்பா ஹையாங்க்க்..
*
வாசு சார்..கார் ஷெட்லாம் போட்டு முடிச்சாச்சா.. வேலை எல்லாம் முடிந்ததா.. வந்த ஜோர்ல புதுத் தொடர் வேறயா.. குட்.. நைஸ்..தன்யவாத்..தப்போ சுக்ரியா.. தாங்க்ஸ்.. நினைவுக்கு வர்ற பாட்டூஸ்.. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, தங்கங்களே நாளைத் தலைவர்களே, கடவுள் ஒரு நாள் உலகைக்காண..ஓ அது காஞ்ச்சுவோ..
ஞான ஒளி எஸ்.வாசு தேவனுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லியே தீரணும்..என்னுடைய வெகு நாள் ஆசையான பார்த்திராத ஜூலி பாட்டூஸ் போட்டதுக்கு.. அது போல ஜெயாபாதுரி யோட ப்ரேயர் சாங்க் மனம்கவர்ந்தது..
ம்ம் நிறைய எழுதணும் பேசணும் படிக்கணும்.. (கண்ணா எப்படா பண்ணப் போற நீ!)
அப்புறமேல்ட்டு வாரேன்..
-
வாசு சார்
சூப்பரோ சூப்பர்.... சமுதாயத்தில் நன்னெறி புகட்டக்கூடிய ஏராளமான நடிகர் திலகத்தின் படப்பாடல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இத்தலைப்பு மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. அருமையான தலைப்பு..
தங்களுடன் பயணம் செய்யும் வகையில் ரவியும் அமர்க்களமாய்ப் பாடல்களைக் கொண்டு வந்து விட்டார்.
இதோ அடியேனின் பங்கு..
கல்யாணியின் கணவன் (1963) படத்திலிருந்து கையிருக்கு காலிருக்கு முத்தையா..
https://www.youtube.com/watch?v=v2mZUk6vm_c
விவசாயி (1967) படத்திலிருந்து நல்ல நல்ல நிலம் பார்த்து
https://www.youtube.com/watch?v=PzBZaezGBIo
-
இனிய நண்பர்கள் திரு வாசு , திரு ரவி, திரு ராகவேந்திரன்
இரண்டு திலகங்கள் நடிப்பில் வந்த இனிமையான குழந்தைகளுடன் பாடிய பாடல்களை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் .
மென்மையான காதல் பாடல்களில் இரண்டு திலகங்களும் கலக்கிய காவிய பாடல்கள் என்றுமே மறக்க முடியாது .
ஒரு தாய் மக்கள்
http://youtu.be/2qAI__2gIc4
நெஞ்சிருக்கும் வரை .
http://youtu.be/ED0bwUuSQMg
-
அன்பின் ரவி சார், ராகவேந்திரன் சார், சின்னக் கண்ணன் சார், வினோத் சார் அனைவர்க்கும் நன்றி!
-
ரவி சார்,
பாடல் இரண்டு - பாணி ஒன்று தலைப்பில் தங்கள் பங்குக்கு அளித்த இரு திலகங்களின் பாடல்கள் ஜோர். ஒரே மாதிரியான கருத்துக்களை இருவரும் தத்தம் பாணியில் பாடி அசத்தி அளித்திருப்பார்கள். பாடல்களும் கொள்ளை இனிமைதான். நன்றி!
-
ராகவேந்திரன் சார்,
விவசாயப் பாடல்கள் அனைவரும் விரும்பி ரசித்த பாடல்கள். மக்கள் திலகம் நல்ல நல்ல நிலம் பார்த்து தர, அதில் கையிருக்கு காலிருக்கு என்று முத்தையனை உழுவதற்கு அழைக்கும் நடிகர் திலகம் என்று அசத்தலான இரு பாடல்களுக்கு நன்றி!
-
வினோத் சார்,
மென்மையான காதல் பாடல்கள். அதுவும் தமிழ்த் திரையுலகை இன்று வரை ஆண்டு கொண்டிருக்கும் இரு மாபெரும் நடிகர்களும் தந்தது. இரண்டுமே தென்றலின் வகையைச் சேர்ந்தவை. சுகமோ சுகம். நன்றி!
-
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 2
இந்த ஹிப்பி இளைஞர்களைப் பாருங்கள். அடங்காத குதிரைகளான தங்கள் மனைவியை அடக்க இருவருமே ஹிப்பி வேடம் புனைந்து நாகரீக அலங்கோலத்தை விரும்பும் தங்கள் பத்தினிக்களுக்கு பாடல்கள் மூலம் பாடம் புகட்ட கிளம்பி விட்ட தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் கட்டிளங் காளைகள். இருவருமே ஒத்த குணம் கொண்டவர்கள். இருவருமே தங்கள் மனைவியத் திருத்தப் பாடுபட்டு அதில் வெற்றி கண்டவர்கள். வாழ்க்கையில் மட்டுமல்ல. வசூலிலும்தான்
முதலாவது தமிழகத்தை தன் வசப்படுத்திய கிராமத்துப் பண்பாட்டினைக் கட்டிக் காக்கும் மூக்கையாத் தேவன். வெளிநாட்டு நாகரீக மோகம் கொண்டு பிரிந்து வாழும் மனைவியை திருத்த ஹிப்பி முகேஷ் வேடம் பூண்டு
'நல்வாழ்த்து நான் சொல்லுவேன்'
என்று பாடியபடி வார்த்தைகளால் அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் பாடல்.
'வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை'
என்று தலைமுறைகள் வாழ்த்த வாழ்ந்த, வாழுகின்ற, வாழப் போகின்ற நாயகன்.
'பட்டிக்காடா பட்டணமா'
https://www.youtube.com/watch?featur...&v=HkXXY_m6EIY
இந்த ஹிப்பி வாலிபன் அதே வேலையைத்தான் செய்கிறான். 'காலம் பொன்னானது' என்று கூறி
'கண் அவன் என்பது கணவன் என்றாகும்'
என்று அறிவுறுத்தி,
'அவன்தான் ராஜாங்கத் தலைவனடி'...
'கோதைக்குக் கணவன் கோவிலடி'
என்று கணவன் பெருமையை அவளுக்கு உயர்த்த எண்ணி சீறிப் பாடுகிறானே.
'கல்யாணமாம் கல்யாணம்'
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-V61lyegx98
-
-