http://i67.tinypic.com/2mwyq6v.jpg
Printable View
( 34 )
இறைவன் எழுதிய பாடலைத்
தருமி தன் பாடலென்று தமிழ்ச்
சங்கத்தில் கொண்டு போய்க்
கொடுத்து...
அதில் நக்கீரன் குறை கண்டு,பரிசு மறுக்கப்பட்டு,அவமானப்
பட்டு, கோவிலுக்குள் புலம்பி
அழுது கொண்டிருக்க...
கடவுள் தோன்றி, என்ன
நடந்ததென்று வினவ...
மிகச் சலிப்புடன் அலட்சியப்படுத்தி நகரும்
நாகேஷை கனல் விழிகளால் முறைத்து, "நில்" என்று
உரக்க ஒரு அதட்டல் போடுவார்.
நாகேஷோடு நாமும்
வெலவெலத்துப் போவோம்.
Ragavendran sir
We are eagerly waiting for a write up about THIRUVLAIYADAL GOLDENJUBLIE FUNCTION RECENTLY HELD AT MADRAS FRIM YOU.
PLEASE
செலுலாய்ட் சோழன் – 106
(From Mr.Sudhangan's Facebook)
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணத்தில் 64 படலங்கள் உண்டு.
அதாவது 64 கதைகள்!
சிவன் நடத்தின் 64 திருவிளையாடல்கள்!
எல்லா படலங்களுமே படிக்க மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கொண்ட கதைகள்.
அத்தனையுமே பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் தான் படிக்கிறவர்களுக்கு வரும்.
அதிலிருந்து ஒரு திரைப்படத்திற்கு தேவையான பகுதிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம.
அந்த வேலையை மிக அருமையாக செய்திருந்தார் ஏ.பி.நாகராஜன்.
திருவிளையாடற் புராணத்திலிருந்து விறகு விற்றல், தருமிக்கு பொற்கிழி அருளல், வலை வீசுகை என்கிற மூன்று படலத்தை மட்டுமே திருவிளையாடல் படத்திற்காக அவர் எடுத்துக்கொண்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகப் பொருத்தமான சம்பவங்களாக அது படத்தில் இருக்கும்,
படத்தின் துவக்கமே கைலாயத்தில் துவங்கும்.
கிங்கரர்கள் வாத்யம் இசைக்க!
முனிவர்கள் சங்கொலி எழுப்ப
நந்தி மிருதங்கம் வாசிக்க
நாரதருக்காக சீர்காழி குரலில் சம்போ மகாதேவ என்று கம்பீரமாக பாடத்துவங்க
தேவகன்னிகைகளின் நாட்டியமும், வீணை இசையுமாக கைலாயத்தின் காலைப்பொழுதின் ரம்மியத்தை கொட்டியபடி பிரும்மாணடமாக படம் துவங்கும்.
அப்படியே படம்பார்ப்பவர்களுக்கே திருகைலாயத்திற்கு கொண்டு போய் நிறுத்துவார் இயக்குனர் ஏ.பி.என்.
இவை முடிந்ததும், பார்வதி தேவி `நமச்சிவாய! நாதன் தாழ் வாழ்க’ என்று சிவனுக்கு திருப்பள்ளியெழுச்சி நடக்கும்!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி!
ஈசனடி போற்றி!
நேசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னடி போற்றி!
தீரா நம் துறை தேவனடி போற்றி
ஆராத இன்பமருளும் மலை போற்றி!
இப்போது புகை நடுவேயிருந்து சிவன் அமர்ந்த கோலத்தில் ஆசி வழங்குவார்.
அப்போது அங்கு இருந்த நாரதர், ` உமா மகேஸ்வரா! உலகைக் காக்கும் பரம்பொருளே! திருவருள் புரியுங்கள் சுவாமி’ என்பார்
உடனே சிவன், ` உமையவளே! என் உள்ளம் கவர்ந்த மலைமகளே!
தாய்க்குலத்தின் தலைமகளே! உலகத்தவர் போற்றும் வடிவாம்பிகையே!
வருகவே! அமர்க!’ என்றபடி மலைமகளை தன் அருகே அமர வைத்துக்கொள்வார்!
`பாசமலர்’ படத்திற்கு பிறகு சிவாஜியும் சாவித்திரியும் ஜோடி சேர்ந்து வெற்றி கண்ட படம் `திருவிளையாடல்’ அதுவும் சிவன் பார்வதியாக கண்டதும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
சமூக படங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களுக்கு அண்னன் தங்கைதான்!
`சக்தி! பூதகனங்களின் வாத்ய ஒலியும், சப்தரிஷிகளின் வேதம்!
நந்தியின் மத்தளம்!நாரத கானம்! வாணியின் வீணை! சப்தகன்னிகைகளின் ஆட்டம் கொண்ட வழிபாடு கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்! உள்ளம் குளிர்ந்திருக்கிறது வேண்டுவன கேள்!’ என்பார் சிவனான சிவாஜி கணேசன்.
`எங்கும் நிறைந்த பரம்பொருளே என் நாதா ! எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதைத் தவிர,வேறென்ன கேட்கப்போகிறேன். திருவருள் புரியுங்கள் சுவாமி ‘ என்பார் பார்வதியான சாவித்திரி
`எங்கும், எதிலும் எப்போதும் வெற்றியே பெற்று, எண்ணங்கள் யாவும் சித்தி பெற எனது இதயம் கனிந்த நல்லாசிகள்! நலமடைவீர்களாக!
`சம்போ மகாதேவா! சர்வேஸ்வரா ! சமூகத்தை நாடி ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!
சிவன் சிரித்தபடியே, ` நாரதா! புரிகிறது இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா!’
`சிவசிவா அப்படி எண்ண வேண்டாம்! உண்மையாகவே ஒரு நன்மையான காரியமாகவே வந்தேன்!
உமையவள் சிரித்தபடியே, ` நாரதனின் கலகம் நன்மையில்தானே முடியும் என்று கூறுவார்கள்! விஷயத்தைச் சொல்’
`பரமேஸ்வரா! எவருக்குமே கிடைக்காத பழமொன்று எனக்கு கிடைத்தது! இது சாதாரண பழமல்ல ஞானப்பழமென்று சான்றோர்கள் கூறினார்கள். இதை நான் அருந்துவதை விட உலகையே காத்தருளும் தங்களுக்கு கொடுக்கலாமே என்று கொண்டு வந்தேன்’
`பழத்தை கொண்டு வந்து நாடகத்தை துவங்குகிறாய் நடத்து’ இது சிவன்
`உறுதியாக சொல்லுகிறேன்! வேறு எந்த நோக்கத்தோடும் அல்ல! நீங்கள் உண்ண வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் கொண்டு வந்திருக்கிறேன்.ஏற்றுக்கொள்ளுங்கள்’ பழத்தை சிவனிடம் கொடுப்பார் நாரதர்!
`பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டாயா ? சரி உன் சார்பாக நானே அதை துவக்குகிறேன்’
`என்ன ஸ்வாமி! பாசத்தோடு நாரதன் பழத்தைக் கொண்டு வந்திருக்கிறான். அதை அருந்தாமல் அவனை பரிகாசம் செய்கீறீர்களே’
`உமா! சக்தி இல்லையேல் சிவன்ல்லை இது சான்றோர் வாக்கு! அதை நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஊரிலுள்ளோர் அம்மை அப்பன் என்று தானே சொல்கிறார்களே தவிர, அப்பன் அம்மை என்றா சொல்கிறார்கள். ஆகையால் இதை நான் சாப்பிடுவதை விட நீ சாப்பிடுவதுதான் சாலச் சிறந்தது’ என்று நாரதனை ஒரக்கண்ணால் பார்த்தபடியே பழத்தை பார்வதியிடம் கொடுப்பார் சிவன்.
பார்வதியும் சிவனின் முகத்தில் தெரியும் அந்த குறும்பை ரசித்தபடியே, ` ஸ்வாமி! தங்கள் திருவாக்கினாலேயே நம்மை அம்மை அப்பன் என்று கூறிவிட்டிர்கள், அதனால் இனி இக்கனி நமக்கெதற்கு! அத்துடன் வருங்காலம் பிள்ளைகள் கையில்! அதனால் இதை அவர்களிடமே கொடுத்துவிடலாமே!’
உமையவளின் குறும்பை ரசித்தபடியே சிவன் வாய் விட்டு சிரிப்பார்.
அப்போது முருகன், வினாயகன் இருவருமே ` அம்மா! அம்மா! என்றழைத்தபடியே அங்கு வருவார்கள்.
`பழம் எனக்கு ‘ இது வினாயகன்
`எனக்குத்தான் பழம்’ இது முருகன்
`இல்லை இல்லை நான் தான் முதல் பிள்ளை அதனால் பழம் எனக்குத்தான்!
`இல்லையம்மா ! நான் தான் செல்லப்பிள்ளை எனக்குத்தான் பழம்’
`சரி! சரி! இதற்காக சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம். பழத்தை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ளுங்கள்.’ என்பாள் பார்வதி
` இல்லை இல்லை முழுப்பழமாக சாப்பிட்டால்தான் பலன் உண்டு! என்ன நாரதா ‘ என்பார் சிவன்.
நாரதரும் அதை ஆமோதிப்பார்
`இருவரும் கேட்கிறார்கள்! பழத்தை யாருக்கென்று கொடுப்பது?’ பார்வதி பரிதாபத்தோடு கேட்பாள்.
`அப்படிக் கேள்1 இது ஞானப்பழம் இதைப் பெற நம் பிள்ளைகளுக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா ? ஆகையால் ஏதாவது ஒரு சோதனை நடத்து! அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இதை கொடுத்துவிடு!’ என்று யோசனை சொல்வார் சிவன்
`சரிதான்! இந்த சோதிப்பது, சோதனைக்குள்ளாக்குவது இதிலெல்லாம் தேர்ந்தவர் தாங்கள் தான். என்னைப் பொறுத்தவரையில் பிறர் கண்கலங்கினால் அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. இந்த பழத்தை பெறுவதற்கு ஏதாவதொரு திட்டத்தை தாங்களே சொல்லிவிடுங்கள்.’
`ம்! சரி! வினாயகா! வேலவா! உங்கள் இருவரில் இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகீறீர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்’
விளையாடல் அங்கே துவங்கும்
(தொடரும்)
(நெல்லை தினமலர் வாரமலரில் 27.12.2015 அன்று வெளியானது )
ஆதவன் ரவி,
கடுமையான வேலை நிமித்தமாக ,நான் யாரையும் பாராட்டி சொல்ல நேரமில்லை எனினும் ,பதிவுகளை ரசித்தே வருகிறேன். மற்ற திரிகளை ஒப்பிடும்போது ,நம் திரியில் எப்போதுமே அறிவு பூர்வமான,உண்மைக்கு அருகில்,அழகுணர்ச்சி,எழுத்து திறன் மிகுந்த பதிவுகள் வெளியாகி எல்லோராலும் ரசிக்க படுவது பெரூமையே. இந்த பெருமைக்கு காரணம் உலகத்தில் ஒப்புயர்வில்லா திறன் கொண்ட நடிகர்திலகம் நம் பாடு பொருளாய் இருப்பதே. அதனால் ஒருவர் போனால் ,இன்னொருவர் பணி சுமக்க முடிகிறது.உங்களுடையது ரசிக்க கூடிய/வேண்டிய பதிவுகள். நானும் உங்கள் ரசிகனே. தொடருங்கள்.
செந்தில் வேல்.
பம்மலார் இல்லாக்குறை ,உங்களால் தீர்கிறது. நன்றி.
ரவிகிரன்,
சிறிதே நேரம் கிடைத்தாலும் பெரும் பங்களிப்பு. அப்பாடா என்னவொரு உழைப்பு.
திருவிளையாடல் தொடர்கிறது.
இளைய பிள்ளை சந்திரசேகர் உலகமெல்லாம் சுற்றி உழைத்து, அனைத்து பணிகளையும் திறம்பட செய்கிறார்.
வணக்கம்.
நன்றி... திரு.கோபால் சார்.
மிக்க நன்றி.
பண்பு மிக்க தங்களைப்
போன்றவர்களின் பாராட்டுகள்,
என் போன்ற எளியவர்க்கு
வரமே.
நேரம் ஒதுக்கி வாழ்த்தியது
கண்டு உருகியிருந்த போது..
"ரசிக்கக் கூடிய/ வேண்டிய"
பதிவுகளென்று என் பதிவுகளை
குறிப்பிட்டதைப் பார்த்து மிக
நெகிழ்ந்தேன்.
மீண்டுமென் நன்றிகள்.
( 35 )
கடவுளின் கோபம் எப்படி
இருக்குமென்பதற்கு இந்தக்
காட்சி உதாரணம்.
"சபையில, உன் பாட்டை குத்தம்னு சொல்லிட்டாங்க."
என்று தருமி நாகேஷ் சொன்னதும்..
கடவுள் சிவாஜிக்கு கோபம்
வந்து, "யாரவன்? காட்டு அவனை. புறப்படு என்னோடு!"
என்று கிட்டத்தட்ட ஓட்டம்
போன்றதொரு நடையில்,
மீனாட்சி கோயிலுக்குள்
'திங்கு திங்'கென்று அவர் நடப்பதை, விபூதிப் பிள்ளையாரே வியந்திருப்பார்.
( 36 )
தமிழ்ச் சங்கத்தின் இயல்பு
தகர்த்து ஒரு புயல் போல
உட்புகுந்து, "இப்புலவன் கொண்டு வந்த பாட்டிலே
இச்சபையிலே குற்றம்
கூறியவன் எவன்?" என
நெஞ்சு நிமிர்த்தி, இடுப்பில்
கையூன்றி நிற்கும் கம்பீர
தோரணை...
மேற்கொண்டு எழுதப்பட
வேண்டிய வசனங்களைக்
குறைத்தது.