மிகவும் அருமையான நெஞ்சில் நிரந்தரமாகக் குடி கொள்ளும் பாடலை அளித்திருக்கிறீர்கள்.. சுமிதா அவர்களே. பிராப்தம் படம் தோல்வியடைந்தாலும் நடிகர் திலகம் நம் மனக்கண்முன்னே என்றும் பசுமையாக நிற்கும் பாடல் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான். கிட்டத் தட்ட மூன்று விதமான பின்னணி இசையுடன் இப்பாடல் இசைத்தட்டுகளில் வெளிவந்தது. ஒரு தட்டில் உள்ள ஒரு சரணம், மற்றோர் சரணத்தில் இடம் பெறாது. விவித் பாரதியின் நிகழ்ச்சியில் வாரா வாரம் ரசிகர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பாடல்களில் நிச்சயம் இப்பாடல் இடம் பெறும். பெரும்பாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரும். இதே படத்தில் தாலாட்டுப் பாடி பாடலின் போது சாவித்திரி அவர்களும் நடிகர் திலகமும் உள்ளத்தை உருக்கும் வகையில் நடித்திருப்பார்கள். படம் மிக மிக மெதுவாக நகர்ந்தாலும் உளவியல் ரீதியாக பல விஷயங்களை ஆராய வாய்ப்புத் தரும் படம்.
என்றும் மறக்க முடியாத பாடல்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் நிலையான புகழுக்கு இப்படத்தின் பாடல்களும் ஓர் காரணம்.