.....Quote:
கோபால் சார்,
உங்களுடைய "ராஜா" நடை அற்புதம்.
1972 வின் " hero 72 " அல்லவா நம் திரை உலக சித்தர்.
ராஜா திரைப்படம் மூலம் நடிகர் திலகத்தின் மற்றொரு முகம் இந்த திரை உலகம் கண்டது. அதுவரை அவருடைய திரைப்படங்களில் மசாலா என்ற ஒரு விஷயம் இருப்பது அவ்வளவு துல்லியமாக எடைபோடபடவில்லை.
ராஜா திரைப்படத்தை பார்த்தோமேயானால் அவரின் நடை, உடை, பாவனை எல்லாமே முதல் ரகம்.
விதவிதமான உடைகள் இவை அனைத்தும் ஏனோ தானோ என்ற வண்ணத்தில் இல்லாமல் ஒரு hollywood முறையில் இருக்கும்.
அதுவும் அந்த கருப்பு நிற transparent ஷர்ட் இரண்டில் ஒன்று பாடலில் வரே...வா ..! கலைச்செல்வியும் அதற்கேற்றார்போல shorts போட்டுகொண்டு வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
ராஜாவின் வசூல் பற்றி சொல்ல தேவையே இல்லை !
குறிப்பாக DEVIPARADISE திரையரங்கு வரலாற்றில் 1972 ராஜாவிற்கு முன் வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனைகளை சர்வ சாதாரணமாக சொடுக்கு போடும் நேரத்தில் குறைவான நாட்களிலேயே "ராஜா " மிகவும் ஸ்டைலாக முறியடித்தது என்றால் அது மிகையில்லை.
ராஜான்னா ராஜாதான் !
https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY