-
http://i1170.photobucket.com/albums/...psad47a94f.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர் . மன்றப் பொதுச்செயலாளர்
அண்ணன் திருச்சி சவுந்தரராஜனை அமைச்சராக்கி ,
பொறுப்பேற்றவுடன் அலுவலகத்தில் உட்கார வைத்து
நின்று கொண்டிருக்கும் மக்கள்திலகம் எம்ஜியார் .
அருகில் கா.ராசாமுகமது ,நாஞ்சில் மனோகரன் ,பண்ருட்டி ராமச்சந்திரன் , பொன்னையன் , எஸ்.திருநாவுக்கரசு .
-
http://i1170.photobucket.com/albums/...ps2ff94b7a.jpg
தமிழக அரசியலில் மறக்க முடியாத எழுத்தாளர் சோலை!- சில நினைவுகள்
எம்ஜிஆருடன் அறிமுகம்
நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார்.
ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார். திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, "கடைசி வரை என்னுடன் இருப்பாயா?" என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.
எம்ஜிஆரின் பெருந்தன்மை
எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்து, அண்ணா பத்திரிக்கை விளம்பரத்தில் ஆசிரியர் சோலை என வெளிவந்தது. விளம்பரத்தை எடுத்துக்கொண்டு நேராக எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று, ஆசிரியர் என உங்கள் பெயர் போடுவதுதானே சரி என கேட்டார் . அதற்கு எம்.ஜி.ஆர்.,"வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐ விட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்" என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, ஆசிரியர் எம்.ஜி.ஆர்., துணை ஆசிரியர் சோலை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அனால் விளம்பரத்தில் துணை ஆசிரியருக்குப் பதில் இணையாசிரியர் சோலை என்றே போடச் சொன்னார் எம்ஜிஆர்.
வினோபா பாவேயின் சீடருக்காக
எண்பதுகளின் துவக்கத்தில், காந்தியவாதி வினோபா பாவே பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் அவர்களின் குரல் நக்சல் இயக்கத்திற்கு ஆதரவானது என கருதி தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட எனது அப்பா, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க ஆற்காடு முதலி சாலைக்குச் சென்றார். எப்பொழுது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கக்கூடிய நபராக இருந்தாலும் முன் அழைப்பு இல்லாமல் அதற்கு முன் வரை சென்றதில்லை. ‘‘அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை தகர்க்கும்,'' என தன் உள்ளக் குமுறலை வெளிபடுத்தினார்.
சோலையின் மற்றுமொரு முகத்தை கண்ட எம்.ஜி.ஆர். சாப்பிடக் கூட மனமின்றி அடுத்த நாளே தருமபுரியில் இருந்த அதிகாரிகள் அத்தனை பேரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதன் அவர்களை அழைத்து அடையாளம் காட்டச்சொன்னார். ஆனால் ஜெகநாதன் அவர்களோ, "நடவடிக்கை வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார். ஏனெனில் அடித்த அதிகாரி, ஜெகநாதன் அவர்களின் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர் என்ற தகவலையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அய்யா ஜெகநாதன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு சமீபத்தில் விஜய் தொலைகாட்சி "சிறந்த பெண்மணி" விருது கொடுத்து கௌரவித்தது.
எம்ஜிஆர் தந்த வீடு
ஒரு முறை எம்.ஜி.ஆர். எனது தந்தையை அழைத்து பெரியகுளம் தொகுதி தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியும் திட்டவட்டமாக மறுத்து, அவர் நண்பருக்கு அந்த தொகுதியைப் பரிந்துரை செய்ய, அந் நண்பரும் அத்தேர்தலில் வெற்றி கண்டார்.
அப்பாவுக்கு சொந்த ஊரில் வீடு இல்லை என அறிந்த எம்.ஜி.ஆர், பொருளுதவி செய்து, புதுமனை புகுவிழாவிற்கு தனது அமைச்சர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினார்.
எங்களது குடும்ப நபர்கள் சென்னையில் இருத்த சமயம் என்பதால், அந்த விழாவிற்கு, அவ்வூரிலிருந்த தனது தங்கையை தவிர யாருக்கும் தெரிவிக்க வில்லை. நானோ எனது உடன் பிறந்தவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை. எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்ததுண்டு , அனால் குடும்பதினர் யாரையும் எந்த ஒரு அரசியல் பிரமுகருக்கும் அறிமுகப்படுத்தியது இல்லை என் தந்தை. வார்டு கவுன்சிலர்கூட தனது அதிகார வட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தும் சூழ்நிலையில், தனது செல்வாக்கை தானும் பயன்படுத்தியதில்லை, தனது குடும்பத்தினரையும் பயன்படுத்த அனுமதித்ததில்லை.
-
சென்னை நியூ பிராட்வேயில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் "காவல்காரன் "-தினசரி 3 காட்சிகள்.
அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/2j4955f.jpg
-
-
-
இன்று காலை சன் டிவியில் கல்யாண மாலை நிகழ்ச்சியில் நடிகர் பாண்டியராஜன் பேசுகையில் தன்னுடைய திருமணத்திற்கு மக்கள் திலகம் கலந்து கொண்டு சிறப்பித்தது பற்றி கூறினார் . மேலும் திருமண வரவேற்பில்
தன்னுடய டையை சரிபடித்தியது பற்றியும் கூறினார் . தனக்கு முதல் குழந்தை பிறந்த செய்தி கேட்டு முதல் வாழ்த்து
கூறியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்று கூறினார் .வாழ்த்து கூறிவிட்டு உனக்கு திருமணம் ஆகி எத்தனை நாளாகியது என்று மக்கள் திலகம் கேட்டதற்கு பத்து மாதம் என்று பதில் கூறிய பாண்டிய ராஜனிடம் ''இந்த வேகம்
எல்லா விஷயத்திலும் இருக்க வேண்டும் என்று மக்கள் திலகம் கூறியதாக பலத்த கைதட்டலுக்கு நடுவே கூறினார் .
-
மதுரை அரவிந்தில் 26/04/2014 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நேற்று இன்று நாளை "வெளியாகி வெற்றி நடை போட்டது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
புகைபடத்தில் மதுரை பக்தர்கள் திரு. எஸ். குமார், திரு. சரவணன்,
திரு. போஸ் , திரு. மாரியப்பன் மற்றும் பலர்.
தகவல் உதவி.:திரு. எஸ். குமார்.http://i58.tinypic.com/2niyzic.jpg
-
-
மதுரை ராம் தியேட்டரில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் இரு வேடங்களில்
கலக்கலாக நடித்த "மாட்டுக்கார வேலன் " 02/05/14 முதல் வெளியாகி ரசிக பெருமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது.
அதன் சுவரொட்டி-புகைப்படம் அனுப்பியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i58.tinypic.com/27zfb12.jpg
-
http://i58.tinypic.com/2enuejt.jpg
மதுரை அலங்காநல்லூர் அ .தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குழந்தைகளுக்கு காதணி விழா கடந்த மாதம்
11/05/2014 ஞாயிறு அன்று மதுரையில் நமது ரசிகர்கள்/பக்தர்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் அனுப்பியவர்
மதுரை திரு. எஸ். குமார்.
புகைபடத்தில் திருவாளர்கள் குமார், போஸ் , சரவணன், மர்மயோகி மனோகர் மற்றும் பலர்.