Originally Posted by
rajeshkrv
புஷ்பலதா பற்றி கார்த்திக் சார் சொன்னவுடன் நான் எப்பொழுதுமே நினைப்பதும் அது தான். நிறைய புகழ் பெற்றிருக்கவேண்டிய நடிகை
குறிப்பாக கை கொடுத்த தெய்வம் என்று சொன்னால் நாமெல்லாம் நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் அதிகம் போனால் ரங்காராவையும் பாராட்டுவோம் ஆனால் அதில் மிகச்சிறப்பாக செய்தவர் புஷ்பலதா . அக்காவை கோபித்து கொள்வதாகட்டும் அதே சமயம் தாய் போல் பாசம் காட்டுவதாகட்டும், தந்தையை சமாளிப்பதாகட்டும் , அண்ணனின் செய்லகளை கண்டு குமுறுவதாகட்டும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் செய்வதாகட்டும் மிகவும் கடினமான ஒரு பாத்திர படைப்பு எவ்வளவு அழகாக செய்துள்ளார். இரண்டாம் தர நடிகையரில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை புஷ்பலதா .. சில படங்களில் சிவாஜிக்கு அம்மாவாக ( நினைத்து பார்க்க முடியவில்லை ஆனால் சினிமா உலகம் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று)