http://i1170.photobucket.com/albums/...ps4343309d.png
Printable View
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை .
ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல.
இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுபுறத்தான் ஒருவனை கூப்பிட்டு கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று?…. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? …. தெரியாது.
நமது பிரதம மந்திரி யார்? … தெரியாது.
இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது?… தெரியாது.
முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்?… தெரியாது.
எமனுக்கு வாகனம் என்ன?…. எருமைக்கடா!
இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம் கர்னாடிக் மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள்.
அயோத்தியில் தசரதன், மாளிகையைப் பற்றி அல்ல. ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள்.
அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள்.
உவமை கொடுக்கும்பொழுதும் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் சந்திக்கிழுக்கக் கூடாது. காளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்ற எழுதாதீர்கள். காளமேகத்தைப் போல ஆகவேண்டுமானால் ஒரு காளி வேண்டும். அந்த கோவிலுக்கு அவன் போகவேண்டும். பிரசன்னமானதும் வாயைத் திறக்கச் சொல்லவேண்டும். திறந்த வாயிலே ஈட்டியால் எழுதவேண்டும் இவ்வளவு சிரமத்தை. அவனுக்குக் கொடுக்காதீர்கள். ஏன் நாமக்கல் கவிஞரைப்போல அற்புதமாகப் பாடினான் என்ற எழுதுங்கள்.
ஆண்மையிலே பீமனைப் போல் எழுதவேண்டாம். அவினாசிலிங்கத்தைப்போல் ஆண்மை வேண்டும் என்று எழுதுங்கள். வியாசரைப் போல் எழுதினான் என்று எழுதாதீர்கள் – தோழர் டி.எஸ்.சொக்கலிங்கத்தைப்போல் எழுதினான் என்று எழுதுங்கள். சம்பந்தப்பட்டவன் உடனே புரிந்து கொள்ள இதுதான் சரியானவழி.
உங்கள் ஏட்டை அழுக்குத் துடைக்கும் துடைப்பம் ஆக்குங்கள் நாற்றம் எடுக்கும் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள்.
நான் சில பத்திரிக்கைகளைப் பார்க்கிறேன். பத்துப் பக்கம் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சோதிடத்தை நம்பாதீர்கள். அது சுத்தப்புரட்டு. மக்களை அஞ்ஞானக் காரிருளில் ஆழ்த்தி வைக்கும் அறியாமை. அதில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று வாசார கோசரமாய் எழுதிவிட்டு பதினோராவது பக்கத்திலே, திருத்தணி ஜோசியர் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள். அற்புதமாகக் கணித்து அனுப்புவார் என்றிருக்கும். இது வயிற்றுப் பிழைப்புக்காக என்றால், அவர்கள் வாழ்வதிலும் சாவதுமேல். "
- அறிஞர் அண்ணா , 15 - 12 - 1946 , அன்று சென்னையில் நடைபெற்ற
தமிழ் எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் .
http://i1170.photobucket.com/albums/...pse5d728fa.jpg
கோவை இடைத்தேர்தல் 1974 ல் நடந்தது எம்.ஜி.ஆர். அவர்களின் பிரசாரம் முழுவதும் நான் தினமலருக்காக படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.. பிரசார இடைவெளியில் கட்சி பிரமுகர் வீட்டில் மதிய உணவு ஏற்பாடாகி இருந்தது.
எம்.ஜி.ஆரோடு எங்களுக்கும் அங்கு தான் உணவு. அந்த வீட்டில் ஒரு டைனிங் டேபிள் தான் இருந்தது.. எல்லோரும் அமரமுடியாது.! இதை கவனித்த எம்.ஜி.ஆர். ...தரையில் அமர்ந்துகொண்டு,பத்திரிகையாளர்களையும் அருகே அமரசொன்னார்...நான் அவர் எதிரே அமர்ந்து மதிய உணவு அருந்தியது மறக்கமுடியாத நிகழ்ச்சி!!
உணவு முடிந்து ரிலாக்சாக , இருந்த எம்.ஜி.ஆர், அவர்களோடு அருகே அமர்ந்து எடுத்துக்கொண்ட படம்.
http://i1170.photobucket.com/albums/...ps3255ed5e.jpg
TODAY MURASU TV TELECAST NINAITHATHAI MUDIPPAVAN @ 1930 HRS
குமுதம் வாரபத்திரிக்கையில் வந்த கேள்வி பதில் பகுதியில் வந்தது, கேள்வி: எம்ஜிஆர் படங்களில் எந்த படம் நல்ல படம்...?
பதில்: வெல்ல கட்டியில் எந்த பகுதி இனிப்பு அதிகமாக இருக்கும்...?
http://i1170.photobucket.com/albums/...ps6a5423ce.jpg
தமிழகத்தில் அழிக்கமுடியாத "காலச்சுவடு "
இந்த மக்கள் அலையில்தான் எதிரிகள் அடித்துசெல்லபட்டனர்.