ஆஸ்கார் விருது பெற்ற நடிகன் எல்லாம் என் தலைவர் நடிப்புக்கு முன்னால் தூசுக்கு சமம்
Printable View
கலைவேந்தன் சார் உங்களுக்காக அந்த மல்யுத்த போட்டி காட்சி நாங்கள் மாமல்லனை பார்த்தது இல்லை ஆனால் எங்கள் மல்யுத்த வேந்தனை கண்டு மகிழ்ச்சி கொண்டோம் .
அழகு என்ற சொல்லலுக்கு எத்தனையோ தமிழ் பெயர்கள் உள்ளது . எம் ஜீ ஆர் என்ற வடிவத்தை பார்த்ததற்கு பிறகு அந்த பெயர்கள் எல்லாம் தங்களை தானே தற்கொலை செய்து கொண்டது
https://www.youtube.com/watch?v=l0H-dnZMO5s
1980 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக
மீண்டும் அமோக வெற்றி பெற்றது . அந்தத் தேர்தலில்
ஆண்டிபட்டி தொகுதியில் கழகத்தின் சார்பில் நின்ற
இலட்சிய நடிகர் , புரட்சித்தலைவர் எம்ஜியாரை விட
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .
தேர்தல் முடிவு வந்த அடுத்தநாள் தலைவரை
சந்திக்க ராமாவரம் தோட்டம் சென்றார் எஸ்.எஸ்.ஆர் .
அவரை அகமகிழ்ந்து வரவேற்ற தலைவர் , அவருடன்
காலை சிற்றுண்டி உண்ட படியே , " என்ன ராஜு , மந்திரி
ஆகணுமா ? என்ன இலாகா வேண்டும் சொல் " என்று கேட்க ,
" அண்ணே ,மந்திரி எல்லாம் வேண்டாம் ; நான் முதல்
மந்திரி ஆகணும் " என்று சொல்ல , தலைவர் சிரித்துக்கொண்டே
" நான் இருந்தால் என்ன , நீ இருந்தால் என்ன நீயே இருந்து
கொள் " என்று சொல்ல , எஸ்.எஸ்.ஆர் சிரித்துக்கொண்டே
" அண்ணே நீங்கள் இருந்தால் நாங்கள் இருந்த மாதிரி ,
தொடர்ந்து இரண்டாம் முறையாக நீங்கள் முதலமைச்சர்
ஆக வேண்டும் . அது மட்டுமல்ல நீங்கள் உள்ளவரை நீங்களே
முதல்வராக ஆள வேண்டும் என்ற என் விருப்பத்தை
நேரில் தெரிவிக்கவே வந்தேன் " என்று கூறினார்.
அதன் பிறகு அமைச்சருக்கு இணையான ,
' சிறு சேமிப்புத்திட்டத் துணைத்தலைவர் ' பதவியை
வழங்கி இலட்சி நடிகரை சிறப்பித்தார் புரட்சித்தலைவர்.
( இந்தப் பதவி திமுக ஆட்சியில் எம்ஜியார் வகித்த பதவி )
" எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் தெரிவதைப் பார்த்து ஆத்திரப்பட்டார் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.தியாகராஜன். காங்கிரஸின் பெரிய புள்ளியான அவர், ‘முகம் அழகாக இருந்தால்தானே சினிமாவில் நடிப்பாய் என்ன செய்கிறேன் பார்’ என்று என் முகத்தில் திராவகம் ஊற்ற ஏற்பாடு செய்தார் .
நல்லவேளையாக தப்பித்தேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தேனியில் தி.மு.க கூட்டம் நடந்தது. எப்போதும் நிதானமாகப் பேசும் எம்.ஜி.ஆர் ஆவேசமாக ஒலிபெருக்கி முன் வந்தார். ‘என் தம்பி எஸ்.எஸ்.ஆரை யாராவது தாக்க வந்தால் அவர்களின் குடும்பத்தையே அழித்துவிட்டு தூக்குமேடை ஏறுவேன்…’ என்று சினமாகப் பேச, அதைக்கேட்டு தொகுதியே உணர்ச்சிப் பிழம்பானது.
தோல்வி பயம் வந்த தியாகராஜன், சென்னைக்கு நேரு வந்தபோது, ஓடோடிப் போய் தேனி தொகுதி பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று அழைக்க, நேரு தேனி வந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க வென்றது. அப்போது நான், ‘தியாகராஜனை தோற்கடிக்கவில்லை. நேருவை தோற்கடித்தேன்’ என்று அன்று சொன்னேன்.”
- இலட்சிய நடிகரின் கடைசி பேட்டி , ஆனந்த விகடனில் .
கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.
கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.
1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.
`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.
இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:
"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.
பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.
அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.
"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.
என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.